என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
உடல் பருமனை குறைக்கவும் கலோரிகளை எரிக்கவும் அன்றாடம் யோகா செய்தால் போதும். கீழே கூறப்பட்டுள்ள யோகாக்கள் கலோரிகளை கரைத்து உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள உதவுபவை.
உடலின் சகல பிரச்சனைகளுக்கும் காரண கர்த்தா உடல்பருமன். உடல் பருமனை குறைக்கவும் கலோரிகளை எரிக்கவும் அன்றாடம் யோகா செய்தால் போதும். கீழே கூறப்பட்டுள்ள யோகாக்கள் கலோரிகளை கரைத்து உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள உதவுபவை. எல்லாம் செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு எது முடிகிறதோ அதை தவறாமல் தினமும் செய்து பாருங்கள். பலன் கிடைக்கும்.
மகர அதோ முக ஸ்வனாசனம் : இது பலகை போன்று தட்டையாக செய்யப்படுவதாகும். உங்கள் தசைகள் அதிக பயிற்சி பெற்று கலோரிகளை கரைக்கும். இந்த நிலையில் 30- 5 நிமிடம் வரை இருக்கலாம். எவ்வளவு தாக்குபிடிக்க முடியுமோ அவ்வளவு தூரம் நிற்கலாம்.
சதுரங்க தண்டாசனம் : இது பார்ப்பதற்கு எளியதாக இருந்தாலும் தம் பிடித்து செய்யப்படவேண்டிய யோகா. உங்கள் கால்கள் இறுக்கமடைந்து முழங்கைகள் 9-0 டிகிரி கோணத்தில் இருப்பதால் வேகமக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
அர்த்த பிஞ்ச மயுராசனம் : டால்பின் போன்ற தோற்றத்தில் செய்யப்படுவதால் இந்த பெயர் பெற்றது. இந்த ஆசனத்தால் வயிறு, தொடை பகுதிகளுக்கு அழுத்தம் தரப்படுகிறது. இதனால் கொழுப்புகள் அந்த பகுதிகளில் கரையும். இது உடல் பருமனானவர்கல் செய்யும்போது நல்லபலன் தரும்.

கொழுப்புக் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான காரணங்கள் இல்லை. இந்த கொழுப்பு கட்டியால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
கொழுப்பு செல்களின் அதிகப்படியான வளர்ச்சியே கொழுப்புக் கட்டிகள். இந்தக் கட்டிகள் மென்மையாக உருண்டையாக, நகரக்கூடியதாக இருக்கும். கை விரலால் அழுத்தும்போது, நகர்வது போல தெரியும். வலி இருக்காது.
தசை மற்றும் தோலுக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்படும். உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் வரலாம். பெரும்பாலும் கழுத்து, மேல் கை, தோள்கள், முதுகு, அடிவயிறு, தொடை, தலை, நெற்றி போன்ற இடங்களில் ஏற்படும். சிலருக்கு மூளை, சிறுநீரகம், மார்பகம் போன்ற உள் உறுப்புக்களில்கூட ஏற்படலாம். ஒரு கட்டிதான் வளரும் என்று இல்லை. பல கட்டிகள்கூட வரலாம்.
கொழுப்புக் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான காரணங்கள் இல்லை. இருப்பினும், உடல் பருமன், சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாதது, மது அருந்துதல், மரபியல் ரீதியான காரணங்களால் இது ஏற்படலாம்.

இந்த வயதினருக்குதான் கொழுப்புக்கட்டி வரும் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. பெரும்பாலும் 25 முதல் 50 வயதில் இந்தக் கட்டிகள் ஏற்படலாம். கொழுப்புக் கட்டிகள் புற்றுநோயாக மாற வாய்ப்பு இல்லை.
எனினும் கட்டி வளர்கிறதா, வலி இருக்கிறதா, சருமத்தின் நிறம் மாறுகிறதா என்று கவனிக்க வேண்டும். ஒருமுறை கட்டி வந்துவிட்டதை அறிந்தால், அது கொழுப்புக் கட்டிதானா என உரிய பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்திக் கொண்டு, டாக்டர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.
கட்டி உள்ள பகுதியில் வலி, எரிச்சல், கட்டி மேல் தொற்று, துர்நாற்றம், கட்டியின் வளர்ச்சி அதிகரித்தல், தோற்றத்தைக் கெடுப்பது போன்ற காரணங்கள் இருந்தால் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும். உடலுக்குத் தொந்தரவு தராத ஒன்றை, தேவை இன்றி அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டாம். சிலருக்கு கட்டியை அகற்றினாலும் கூட மீண்டும் உருவாக வாய்ப்பு உண்டு. இது அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும்.

குழந்தைகளுக்கு மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீன், தேங்காய் சேர்த்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வஞ்சிர மீன் - 500 கிராம்
சோளமாவு - 4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு விழுது - அரை ஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
மிளகு பொடி - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - தேவையான அளவு

செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.
அடுத்து ஊற வைத்த மீனை பிரிடஜில் இருந்தது எடுத்து தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
வஞ்சிர மீன் - 500 கிராம்
சோளமாவு - 4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு விழுது - அரை ஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
மிளகு பொடி - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.
அடுத்து ஊற வைத்த மீனை பிரிடஜில் இருந்தது எடுத்து தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால் அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில் வெப்பநிலை இருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். இதனால் உணவுப் பொருட்கள் நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்த தகவல் இதோ.
பழங்கள்:
ஆப்பிள் இதை குளிர்சாதன பெட்டியில் 2 வாரங்கள் வரை வைத்திருக்கலாம்.
வாழைப்பழம் வெளியில் வைத்திருக்கலாம். பச்சை நிறம் நீங்கி 3 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
திராட்சை இதனை பிரிட்ஜில் கழுவாமல் வைத்திருந்து 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
ஆரஞ்சு, கமலா, கிரேப் ஃபுரூட் இதனை 2 வாரங்கள் பிரிட்ஜில் வைக்கலாம்.
பைனாப்பிள் - நன்கு பழுத்த பிறகு பிரிட்ஜில் 3 - 5 நாட்கள்.
தர்பூசணி துண்டு - பிரிட்ஜில் 6 - 8 நாட்கள் வைக்கலாம்.
எலுமிச்சை- இரண்டு வாரம் வைக்கலாம்.
பெர்ரி பழ வகைகள்- பிளாஸ்டிக் பையில் போட்டு 2-3 நாட்கள் வைக்கலாம்.
பேரிக்காய், சப்போட்டா, கொய்யா போன்றவைகள் - பழுக்கும்வரை வெளியில் வைத்திருந்து பிறகு பிரிட்ஜில் 3 -5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்.
காய்கறிகள்:
பீன்ஸ்- இதை நன்கு கழுவி, பிரிட்ஜில் வைத்திருந்து 3 - 5 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும்.
கத்தரிகாய்- இதை வெளியிலும் வைக்கலாம், பிரிட்ஜில் வைப்பதானால் பிளாஸ்டிக் பையில் போட்டு 3 - 4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
தக்காளி- வெளியில், பிரிட்ஜ் இரண்டு இடத்திலும் வைக்கலாம் ஆனால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
கேரட்- நன்கு கழுவி, தலைப்பாகத்தை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.
பீட்ருட்- இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.
காலிபிளவர், முள்ளங்கி- இரண்டு வாரம் பிரிட்ஜில் வைத்திருக்கலாம்.
வெண்டைக்காய்- 5 - 7 நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம் உருளைக்கிழங்கு-
வெளியில் காற்றோட்டமான இடத்தில் இரண்டு மாதம் வைக்கலாம்
வெங்காயம்- வெளியில் காற்றோட்டமான இடத்தில் ஒரு மாதம் வைக்கலாம்.
குடமிளகாய்- நன்கு கழுவி உலர்த்திய பிறகு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு வாரம் வைக்கலாம்.
கீரைவகைகள்- பிளாஸ்டிக் பையில் 3 - 5 நாட்கள் வைக்கலாம்.
முட்டகோஸ், செல்லரி,- பிளாஸ்டிக் பையில் 2 வாரங்கள் வைக்கலாம்.
புரோக்லி, மஷ்ரும் - அதிகபட்சம் 2 -3 நாட்கள் வைக்கலாம்.
பூசனிக்காய், வெள்ளரிக்காய் - ஒரு வாரம் வைக்கலாம்.

அசைவ உணவுகள்:
முட்டை- பிரிட்ஜில் 3 -5 வாரங்கள் வைக்கலாம் அல்லது காலாவதியாகும் நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
வேக வைத்த முட்டை- பிரிட்ஜில் 5 -6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
முட்டை வெள்ளைகரு- பிரிட்ஜில் 2 -3- நாட்களுக்குள் முட்டையின் மஞ்சள் கரு- 2 -4 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
பிரஷ் சிக்கன், தோல் நீக்காதது - 1 - 2 நாட்கள் வைத்திருக்கலாம்.
பிரஷ் மட்டன், பீஃப் - 1 -3 நாட்கள் வைக்கலாம்.
மீன்- 1 - 2 நாட்கள் வைக்கலாம்.
இறால், நண்டு - பிரிட்ஜில் இரண்டு நாட்கள் வைக்கலாம்.
சமைத்த இறைச்சி- நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்.
சமைத்த மீன் 3-4 நாட்கள் பிரஷ் மீன் 1-2 நாட்கள்.
ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்.
பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்.
பால் பொருட்கள்:
மற்றபடி பால். தயிர், வெண்ணெய் போன்ற டெயிரி/dairy பொருட்களை அவைகள் காலாவதியாகும் நாட்களை கவனித்து வாங்கி அதற்குள் பயன்படுத்திடுவது நல்லது. மேலும் அவைகளை நமது குடும்பத்தின் தேவைக்கேற்ற அளவில் வாங்குவது பண விரயத்தையும் தடுக்கும்.
பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம் பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள் மோர் 2 வாரங்கள் தயிர் 7-10 நாட்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.

எண்ணெய் தடவுவதாலோ, விதம் விதமான எண்ணெய் தடவுவதாலோ கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற எண்ணம் தவறானது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கூந்தல் வளர்ச்சிக்கும் எண்ணெய்க்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லை. எண்ணெய் தடவுவதாலோ, விதம் விதமான எண்ணெய் தடவுவதாலோ கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் எனப் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எண்ணெய் எந்த விதத்திலும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவுவதில்லை.
எந்த எண்ணெயும் கூந்தலை வளரச் செய்யாது. எண்ணெய் தடவுவதன் மூலம் மண்டைப் பகுதியில் ஒருவித வழுவழுப்புத் தன்மை ஏற்படும். சிறிது நேரத்துக்கு கூந்தலை மென்மையாக வைக்கும். அவ்வளவுதான்.ஆயில் மசாஜ் செய்யும் போது நீங்கள் ரிலாக்ஸ்டாக உணர்வீர்கள். அந்த எண்ணெய் உங்கள் மண்டைப் பகுதிக்குள் இறங்கி வேலை செய்வதாக நினைப்பீர்கள். உண்மையில் எண்ணெய் என்பது மண்டைக்குள் இறங்காது. அது ஒருவித வெளிப்பூச்சு. அவ்வளவே!
ஆயில் மசாஜ் செய்ததும் கட்டாயம் தலைக்குக் குளிக்க வேண்டும். அதனால் மசாஜ் செய்த எண்ணெய் தவிர, மண்டைப் பகுதியில் இயற்கையாக உள்ள எண்ணெய் பசையும் சேர்ந்து போவதால், கூந்தல் இன்னும் அதிகம் வறண்டுதான் போகும். கூந்தல் வளர்ச்சி என்பது எண்ணெய், ஷாம்பு போன்ற வெளிப்புற சிகிச்சைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது உள்ளே போகிற ஊட்டத்தைப் பொறுத்தது.

நாம் ஆரோக்கியமான உணவுகளையும், இயற்கை உணவுகளையும் சாப்பிட்டு வந்தால் நமது கூந்தல் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் நீண்டு வளரும்.
முடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும்.
தியானம் - யோகா, இவையிரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் என்னென்ன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
யோகா என்றால் பெருவாரியான மக்கள் யோகாசனங்களை யோகா என்று நினைக்கிறார்கள். அடிப்படையில் யோகாவிற்கு எட்டு அங்கங்கள் உண்டு அவை,
இயமம்.
நியமம்.
ஆசனம்.
பிராணாயாமம்.
பிரத்யாஹரம்.
தாரனை.
தியானம்.
சமாதி.
தியானம் என்பது யோகத்தின் எட்டு அங்கங்களில் ஒன்று.
தியானம்,
தியானம், இந்தக் கருவியின் மூலம் நிதர்சனமான உண்மை தன்மையை நாம் உணரலாம்.
யோகா,
யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள்.[1]
தியானம் யோகம் இவற்றில் உள்ள ஒற்றுமை என்றால் இவை அனைத்தும் அகமுக தொழில்களை சார்ந்தவைகள் உடலை பயன்படுத்தி செய்யப்படுவை.
தியானம் மட்டுமே பயில முடியும். உதாரணம் ரமண மகரிஷி புத்தர் போன்றவர்கள் தியானத்தின் மூலமே ஞானத்தின் உச்சத்தை அடைந்தவர்கள்.
யோகா, என்பது முன்பே பார்த்தது போல் அது ஒரு முழுமையான பயிற்சி தியானம் உட்பட அதனின் அங்கங்கள்.
யோகா முழுமையாக நீங்கள் பயின்றிருந்தால் உங்கள் உடலை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
உதாரணமாக ரமண மகரிஷி மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் ஆன்மீக வாழ்வில் ஒரு கட்டத்தில் உடல் நோயால் பாதிக்கப் பட்டார்கள்.
நீங்கள் யோகத்தை முழுமையாக பயின்றிருந்தால் உங்கள் உடலுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து நீங்களாகவே சரி செய்து கொள்ள முடியும்.

முருங்கைக் கீரையில் இரும்பு சத்து, கால்சியம் அதிகம் உள்ளது. 46 வகையான இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கிறது. இன்று இந்த கீரையை வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக் கீரை - 1 கட்டு
நறுக்கிய சின்னவெங்காயம் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு - ½ டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - ½ கப்

செய்முறை:
கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கீரையை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
கீரை நன்கு வெந்ததும் துருவிய தேங்காயை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
சூப்பரான சத்தான முருங்கைக் கீரை பொரியல் ரெடி.
முருங்கைக் கீரை - 1 கட்டு
நறுக்கிய சின்னவெங்காயம் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு - ½ டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - ½ கப்
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்

செய்முறை:
கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கீரையை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
கீரை நன்கு வெந்ததும் துருவிய தேங்காயை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
சூப்பரான சத்தான முருங்கைக் கீரை பொரியல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள் எவ்வாறெல்லாம் மாதவிடாய் காலத்தில் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு.
பெண்கள் அந்த நாட்களில் தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்வதும் அவசியம். இருப்பினும் சிலர் பாதுகாப்பாக இருப்பதில்லை. பெண்கள் எவ்வாறெல்லாம் மாதவிடாய் காலத்தில் அந்த மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு.
* சிலர் ஒரு பேடையே ஒரு நாள் முழுவதும் பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு நான்கு அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை பேடை மாற்றுவது அவசியம். குறைவான இரத்தப்போக்கு நாட்களிலும் அவ்வாறு மாற்றுவது அவசியம். பயன்படுத்தப்பட்ட பேடை பாலிதீன் பைகளில் கட்டி குப்பைத் தொட்டியில் போடுவதும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.
* இரத்தப்போக்கு வரும் பகுதியை சுத்தமாகக் கழுவுவது அவசியம். அங்கு வெதுவெதுப்பான நீரால் சுத்தம் செய்துக் கழுவினால் வலி சற்று குறையும். இரத்தப் போக்கும் சீராக வரும்.
* இரத்தப் போக்கு வரும் இடத்தை சுத்தமாகக் கழுவுகிறேன் என்ற பெயரில் சோப்பு, வாசனைக் கலந்த கெமிக்கல் திரவியங்களைப் பயன்படுத்தாதீர்கள். அது வெஜினாவின் வழியாக உள்ளே சென்று பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம். உடலே அதன் அசுத்தத்தை சுத்தப்படுத்திக் கொள்ள இயற்கை முறையைக் கையாளும். நீங்கள் வெறும் வெதுவெதுப்பான நீரால் கழுவுவதே போதுமானது.

* பேட் மாற்றுவது போல் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் டவலைக் கூட சுத்தமாகப் பயன்படுத்துவது அவசியம். வெஜினா போன்ற இடங்களைத் துடைக்கும்போது டவல் மூலமாக கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தினமும் துடைப்பதற்கு துவைத்த, சுத்தமான டவலைப் பயன்படுத்துங்கள்.
* அந்த மூன்று நாட்கள் பயன்படுத்திய ஆடைகளை சுத்தமாக துவைத்துப் பயன்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளை நன்கு வாஷ் செய்து வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். நன்கு வெயில் படும்படி காய வையுங்கள். முடிந்தால் டெட்டால் பயன்படுத்தி அலசலாம்.
* கைகளை பேட் மாற்றுவதற்கு முன்னும், பின்னும் சுத்தமாகக் கழுவுவது அவசியம். உங்கள் கைகளில் இருக்கும் பாக்டீரியாவால் தொற்றுகள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் கேட்டு செல்லும் போதுதான், விண்ணப்பித்தவரின் ‘கிரெடிட் ஸ்கோர்’ எப்படி என்று பார்க்கப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வீடு, வாகனம், படிப்பு என எந்த கனவாக இருந்தாலும் கடன் வாங்கித்தான் நிறைவேற்ற முடியும் என்ற நிலையில் நடுத்தர மக்கள் உள்ளனர்.
வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் கேட்டு செல்லும் போதுதான், விண்ணப்பித்தவரின் ‘கிரெடிட் ஸ்கோர்’ எப்படி என்று பார்க்கப்படுகிறது. கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், கடன் தர தாராளமாக முன்வருவார்கள். இல்லாவிட்டால் முடியவே முடியாது என்று விண்ணப்பத்தை ஒதுக்கி வைத்து விடுவார்கள். கடன் வாங்க விண்ணப்பிக்கும் வரை நிறைய பேருக்கு ‘கிரெடிட் ஸ்கோர்’ பற்றியே தெரிந்திருக்காது. இதற்கு முன்பு வாங்கி கடன்களை ஒழுங்காக செலுத்தியிருக்கிறார்களா, வில்லங்கம் பிடித்த ஆசாமியா என்பதை ‘கிரெடிட் ஸ்கோர்’ ஜாதகம் அப்பட்டமாக விளக்கிவிடும்.
ஆனால், சிலர் ஒழுங்காக கடனை திருப்பி செலுத்தியும்கூட ‘கிரெடிட் ஸ்கோர்’ குறைந்து விடுவது உண்டு. இதற்கு சில காரணங்களை சொல்கின்றனர், அனுபவம் வாய்ந்தவர்கள். அதாவது, வாங்கிய கடனை திருப்பி செலுத்தியிருந்தாலும், சில சமயம் கடன் கணக்கு மூடப்பட்டதாக இருக்காது. அல்லது மூடப்பட்டது என்பதற்கு பதிலாக, செட்டில் செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அப்படி இருந்தால், கடனை முழுமையாகவும் முறையாகவும் செலுத்தவில்லை என்று கடன் வழங்கும் வங்கிகள், நிறுவனங்கள் கருதி மீண்டும் கடன் அளிக்க மறுத்து விடுவார்கள். கிரெடிட் கார்டு தவணைகளை முறையாக திருப்பி செலுத்தியிருக்கலாம். சில சமயம், அப்போதைக்கு பணம் இல்லையே என குறைந்த பட்சம் செலுத்த வேண்டிய தொகையை மட்டும் செலுத்தி விட்டு பாக்கியை பின்பு கொடுத்திருக்கலாம். கிரெடிட் கார்டு நிலுவையை கட்ட தவறியது, குறைந்த பட்சம் செலுத்த வேண்டிய தொகை என எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய தகவல் தரும்.
பின்னர் அந்த நிறுவனம் தொகையை கட்டி முடித்த பின்பும் சரிவர பதிவு செய்யாமல் விட்டிருந்தாலும் கிரெடிட் ஸ்கோர் குறைந்து விட வாய்ப்பு உள்ளது. சில சமயம், ‘பான்’ எண் தவறாக குறிப்பிட்டு விடுவதும் உண்டு. அவ்வாறு தவறு நேர்ந்து விட்டால், கிரெடிட் ஸ்கோர் பார்க்கும்போது பான் எண், பெயர் இரண்டும் பொருந்தாது. இதனால் கிரெடிட் ஸ்கோர் குறைந்து விடும். அந்த பான் எண்ணுக்கு சொந்தமானவர் கடன்களை முறையாக கட்டாவிட்டாலும் ஆபத்துதான்.
எனவே, சிறு தவறுகள் கூட கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம் என்பதால் கவனமாக செயல்பட வேண்டும். எனவே கட்டி முடித்த கடன்களுக்கு முடிக்கப்பட்ட கணக்கு என்பதற்கான சான்று வாங்கி வைக்க வேண்டும் என்கின்றனர், வங்கித் துறையினர்.

ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தினசரி கடைப்பிடிக்கவேண்டியது என்ன என்பதை இங்கு காண்போம்...

பள்ளிக்கு உரிய நேரத்தில் வருதல் வேண்டும்.
பள்ளிக்கு நாள்தோறும் தவறாமல் சீருடையில் வர வேண்டும்.
காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
மாணவர்கள் வகுப்பு அறை மற்றும் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
மாணவர்கள் புத்தகங்களை நாள்தோறும் தவறாமல் பள்ளிக்குக் கொண்டு வருதல் வேண்டும்.
தினந்தோறும் கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை மாணவர்கள் கையேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்.
அமைதியாகவும், பணிவாகவும், ஒழுக்கத் துடன் நடந்துகொள்ள வேண்டும்.
பேச்சு, செயல், எண்ணம் இவற்றில் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், வயதில் மூத்தவர்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.
பள்ளியில் பாடம் நடத்தத் தொடங்கும் முதல் நாளிலிருந்தே நாம் கவனத்துடன் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வது மட்டுமே படிக்கும் முறை என்று நினைக்க வேண்டாம்.
உங்கள் கவனம் முழுவதும் தினந்தோறும் வகுப்பில் நடத்தும் பாடங்களை நன்கு புரிந்துகொண்டு மீண்டும் படிப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் பட்சத்தில் பள்ளித்தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.
ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை அன்றைய நாளே, அன்றைய இரவே, புரிந்து, எழுதி படித்தால் ஆழ்மனதில் பதிந்து விடும்.
அறிவுப் பெட்டகமாக திகழும் ஆசிரியர்கள் சொல்வதை கடைப்பிடித்து, அவர்களை மதித்து அதன்படி நடந்து வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து, நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
பள்ளிக் கல்வித்துறையினர் இந்த விதிமுறைகளை பின்பற்ற மாணவர்களை அறிவுறுத்தி உள்ளனர். அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமான குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.
பழத்தைக் கொண்டாடியவர்கள் நம் பழந்தமிழர்கள். ‘முக்கனியே...‘ என கொஞ்சிப்பேசியவர்கள் நாம். இன்றைய பீட்சா, பர்கர் யுகத்தில் இருக்கிறோம். ஆனால் பழங்களை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் அள்ளித் தருபவை கனிகள். பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமான குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.
கோடையின் வெப்பத்தை தணிக்க தர்ப்பூசணி, கிர்ணி என அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது.

பழங்களில் பொட்டாசியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. வயிறு நிரம்பிய உணர்வைத் தந்தாலும் இதில் கலோரி மிகமிகக் குறைவாகவே உள்ளது. இதனால் பழம் சாப்பிட்டால் பருமன் என்ற கவலை இல்லை.
பருக்கள் வருவதைத் தடுக்க நினைப்பவர்கள், வைட்டமின் ஏ சத்து நிறைந்த காய்கறி பழங்களை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின் சி உள்ள காய்கறி பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இதனைச் சூடுபடுத்தும்போது வைட்டமின் சி குறைந்துவிடும் அல்லது அழிந்துவிடும். சூரிய வெளிச்சம், காற்று கூட வைட்டமின்-சி சத்துக்கு எதிராக செயல்படக்கூடியவை. எனவே, வைட்டமின் சி நிறைவாக உள்ள பழங்களை உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. பழங்களை தினமும் சேர்த்துக்கொள்வோம். நல்ல ஆரோக்கியம் பெறுவோம்.

ஒரு நாளைக்கு 5 கப் அளவுக்கு காய்கறி பழங்கள் கொண்ட சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒருவரின் வயது, பாலினம் மற்றும் அவரது உடல் உழைப்பைப் பொறுத்து பழங்கள் எடுத்துக்கொள்ளும் அளவு வேறுபடும். மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள், பக்கவாதம், சில வகை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் குறைக்கிறது.

பழங்களில் பொட்டாசியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. வயிறு நிரம்பிய உணர்வைத் தந்தாலும் இதில் கலோரி மிகமிகக் குறைவாகவே உள்ளது. இதனால் பழம் சாப்பிட்டால் பருமன் என்ற கவலை இல்லை.
பருக்கள் வருவதைத் தடுக்க நினைப்பவர்கள், வைட்டமின் ஏ சத்து நிறைந்த காய்கறி பழங்களை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின் சி உள்ள காய்கறி பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இதனைச் சூடுபடுத்தும்போது வைட்டமின் சி குறைந்துவிடும் அல்லது அழிந்துவிடும். சூரிய வெளிச்சம், காற்று கூட வைட்டமின்-சி சத்துக்கு எதிராக செயல்படக்கூடியவை. எனவே, வைட்டமின் சி நிறைவாக உள்ள பழங்களை உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. பழங்களை தினமும் சேர்த்துக்கொள்வோம். நல்ல ஆரோக்கியம் பெறுவோம்.
குழந்தைகளுக்கு போளி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சுவையான போல் போளியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா - 1/2 கப்
ரவை - 1/2 டீஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - பொறிப்பதற்கு ஏற்ப
பால் செய்வதற்கு
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
கற்பூரம் - ஒரு சிட்டிகை
பாதாம், முந்திரி - கை அளவு

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, நெய், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் அதை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
பின் ஏலக்காய் பொடி, கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும்.
அந்த பால் நன்கு கெட்டிப் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
ஊற வைத்த மாவை குறைந்த மாவு எடுத்து சிறிது சிறிதாக திரட்டி கொள்ளவும். பூரி செய்ய திரட்டுவது போல் திரட்டுங்கள்.
அதை எண்ணெயில் போட்டு பூரி போல் சூட்டு கொள்ளவும்.
இந்த பூரியை காய்ச்சி வைத்திருக்கும் பாலில் போட்டு விடவும்.
இறுதியாக பாதாம், முந்திரிகளை நெய்யில் வறுத்தி அதில் போடவும். பிறகு குங்குமப்பூவும் சேர்த்துக் கொள்ளவும்.
சுவையான பால் போளி ரெடி.
மைதா - 1/2 கப்
ரவை - 1/2 டீஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - பொறிப்பதற்கு ஏற்ப
பால் செய்வதற்கு
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
கற்பூரம் - ஒரு சிட்டிகை
பாதாம், முந்திரி - கை அளவு
குங்குமப் பூ - கொஞ்சம் (இருந்தால்)