என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    நாகரீக மோகத்தால் இன்றைய பெண்கள் தங்களின் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள முகத்திற்கு பிளீச்சிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பிரச்சனை வருமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பெண்களின் முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள், எண்ணெய் தன்மையும் கொண்டவர்கள் பிளீச்சிங் செய்கின்றனர். இவ்வாறு பிளீச்சிங் செய்யும் பெண்கள் இதற்கென உள்ள பியூட்டி பார்லர்களுக்கு செல்லாமலும் தாங்களாகவே தரமற்ற மலிவான விலையில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி வீட்டிலேயே முகத்திற்கு பிளீச்சிங் செய்கின்றனர். இது பல்வேறு உபாதைகளுக்கு வழி வகுக்கிறது.

    பெண்கள் முகத்திற்கு பிளீச்சிங் செய்வதால் கண்டிப்பாக நிறம் மாறாது. முகத்தில் உள்ள முடியின் நிறம் மட்டுமே மாறும். அடிக்கடி முகத்திற்கு பிளீச்சிங் செய்வதால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் செய்ய வேண்டும்.

    தோல்வியாதிகள், ஜலதோஷம் உள்ளவர்கள் மற்றும் முகத்தில் பருக்கள் உள்ளவர்களும் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. சில பெண்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் செய்வதால், அவர்களின் முகத்தில் தோல் சுருங்கி, வெண்புள்ளிகள் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்து, பாதிக்கப்படுகிறார்கள். மேலும் கண்களுக்கு லேசர் சிகிச்சை லென்ஸ் பொருத்தப்பட்டு, அவர்கள் தங்களது முகத்திற்கு பிளீச்சிங் செய்வதால், கண்கள் பாதிக்கப்படுகிறது.

    சைனஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் செய்யும் போது, மூக்கில் நீர் கோர்த்து பாதிப்பு அதிகமாகும். மாநிறமாக உள்ள பெண்கள் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை முகத்திற்கு பிளீச்சிங் செய்தால் முகத்தில் மாற்றம் தெரியும். வெள்ளை நிறமுடைய பெண்கள் முகத்திற்கு பிளீச்சிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
    மாதவிடாய் காலத்தின்போது வெளியாகும் இரத்தத்தை வெளியேறவிடாமல் இந்த உறிபஞ்சுகள் உள்ளேயே உறிஞ்சுக்கொள்கிறது. இந்த உறிபஞ்சுகளை பயன்படுத்துவது தனிநபர் விருப்பம் என்பதால், தகவலுக்காக இதனை பதிவு செய்கிறோம்.
    சானிட்டரி நாப்கின்களின் நாள்பட்ட பயன்பாடும், டையாக்சினும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை கூட உண்டாக்கலாம். பொதுவாக பிளாஸ்டிக்கை அடிப்படையாக கொண்ட பல்வேறு வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு நல்லதைவிட அதிகளவில் தீங்கையே விளைவிக்கிறது. பல வருடங்களாக சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்துபவர்களுக்கே அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுகாதார பிரச்சனைகளுக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது.

    சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் மட்டுமின்றி மாதவிடாய் காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு சானிட்டரி நேப்கின் வீதம் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காலை முதல் இரவுவரை ஒரே நாப்கின்னை பயன்படுத்துவது மிக அதிகபட்சமாக புற்றுநோயை கூட உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனினும், நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களால் ஒரு நாளைக்கு இத்தனை நாப்கின்களை பயன்படுத்துவெதெல்லாம் பொருளாதாரரீதியாக சாத்தியமே இல்லை.

    மாதவிடாய் காலத்தின்போது வெளியாகும் இரத்தத்தை வெளியேறவிடாமல் இந்த உறிபஞ்சுகள் உள்ளேயே உறிஞ்சுக்கொள்கிறது. இதனால் பெண்களால் எப்போதும் போல இயல்பாக செயல்பட முடிவது இதன் சிறப்பம்சமாக கூறப்படுகிறது. இந்த உறிபஞ்சுகளை பயன்படுத்துவது தனிநபர் விருப்பம் என்பதால், தகவலுக்காக இதனை பதிவு செய்கிறோம்.



    செல்லுலோஸ் அல்லது பருத்தியை கொண்டோ அல்லது இரண்டையுமே சேர்த்தோ தயாரிக்கப்படும் இந்த மாதவிடாய் உறிபஞ்சுகள் ஒருவரது இரத்தம் வெளியேறும் அளவை பொறுத்து பல வகைகளில் சந்தைகளில் கிடைக்கின்றன.

    பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பொதுவாக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நேப்கின்களாகதான் உள்ளது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    இதற்கு மாற்றாக தற்போது (Tampon) உறிபஞ்சுகள் வந்துள்ளன. அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி எளியமுறையில் பார்க்கலாம். பெண்களுக்கு சுமார் 12 வயது முதல் 50 வயது வரை ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர்.

    ஆனால், பொதுவாக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நேப்கின்களாகதான் உள்ளது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்றாக தற்போது (Tampon) உறிபஞ்சுகள் வந்துள்ளன. அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி எளியமுறையில் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.



    முதலில் கைகளை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் மாதவிடாய்க்கு பயன்படுத்தும் உறிபஞ்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பின்னர் டாய்லெட்டுக்கு சென்று ஒரு காலை மடக்கி மற்றொரு கால்ளை விரித்து Tampon உறிபஞ்சை உங்களது வெர்ஜின் பகுதியில் உள்ளேசெலுத்த வேண்டும். இந்த உறிபஞ்சுகளை உபயோக படுத்திய பின்பு பாதுகாப்பாக அதனை அப்புறப்படுத்த வேண்டும். டாய்லெட்டில் ஃப்ளஷ் பண்ணக்கூடாது.

    Tampon உறிபஞ்சை உட்செலுத்திய பின்னர் நீங்கள் அசவுகரியமாக உணர்ந்தால், அது சரியாக உட்செலுத்தப்படவில்லை என்று அர்த்தம். அதனால் அதை உடனே அகற்றிவிட்டு புதிய உறிபஞ்சை எடுத்து சரியாக உள்ளே செலுத்த வேண்டும். இதை சரியாக செலுத்திய பின்னர் எந்தவித உறுத்தலும் அசௌகரியமும ஏற்படாது.

    ஆனாலும் சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் மாதவிடாய் உறிபஞ்சுகளுக்கு மாறுவதற்கு பெண்களிடையே இருக்கும் தயக்கத்து அவை குறித்த பிரபலமின்மையும், விழிப்புணர்வின்மையுமே காரணம்.

    இந்த பச்சடியை புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த பச்சடியை சாலட் போன்றும் சாப்பிடலாம். இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - பாதி,
    துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
    வாழைப்பழம் - ஒன்று,
    கெட்டித் தயிர் - ஒரு கப்,
    உலர்திராட்சை - ஒரு டீஸ்பூன்,
    பாதாம், முந்திரி துருவல் - ஒரு டீஸ்பூன்,
    நறுக்கிய செர்ரி பழம் - ஒரு டீஸ்பூன்,
    நறுக்கிய பேரீச்சை - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை:

    ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

    வாழைப் பழத்தை வட்டமாக நறுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கடைந்த கெட்டித் தயிரில் போட்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கலக்கினால்… மிகச் சுவையான பழப் பச்சடி ரெடி.

    சர்க்கரைக்குப் பதில் துருவிய வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பால், குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் மட்டுமின்றி முதியவர்களுக்கும் உகந்தது. பாலில் இருந்து தயாரிக்கப்படும் மோர், தயிர் ஆகியவையும் ஆரோக்கியத்திற்கு தேவையானவை.
    இன்று (ஜூன் 1-ந்தேதி) உலக பால் தினம்.

    பால் ஓர் ஆரோக்கியமான சீரான உணவு என்பதில் ஐயம் இல்லை. பாலூட்டி இனம் பூமியில் தோன்றி சுமார் 200 மில்லியன் வருடங்கள் ஆகிவிட்டது என்று கருதப்படுகிறது. பாலூட்டி இனங்கள் தோன்றிய நாளில் இருந்து மறக்காமல் தங்களது குட்டிகளுக்கு பாலூட்டி வருகின்றன.

    மகாத்மா காந்தி பசும் பாலைத் தவிர்த்துவிட்டு ஆட்டுப்பாலையே பருகினார் என்பது வரலாறு. பிறந்த குழந்தைக்கு முதல் உணவாக தாய்ப் பால் தான் கொடுக்கப்படுகிறது. முதல் சில தினங்கள் சுரக்கும் சீமப்பால் சத்துகளுடன், குழந்தைகளின் எதிர்ப்பாற்றலுக்கும் உதவுகிறது. இதற்காகத்தான் ஆகஸ்டு மாதத்தில், வருடந்தோறும் தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு, தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பாலை தொடர்ந்து ஒரு வருடம் வரை கொடுக்க வேண்டும். முதல் மூன்று மாதத்தில் பசுவின் பாலைத் தவிர்க்க வேண்டும். சிலர் இதை கேட்காமல் கொடுப்பதால், குழந்தைகளுக்கு பல்வேறு தொற்றுகளும் வர வாய்ப்பு ஏற்படுவதுடன், நீரிழிவு நோயும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ரத்த வங்கிகள் போல, தாய்ப்பால் வங்கிகள் கூட இங்கு வந்துவிட்டன. தாய்மார்கள் இதனையும் பயன்படுத்திக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர், திருச்சி, தேனி, மதுரை மருத்துவக்கல்லூரிகளில் இருப்பதைப் போல மொத்தம் 15 தாய்ப்பால் வங்கிகளை தமிழக அரசு அமைக்க இருக்கிறது. தாய்ப்பால் சுரப்பு இல்லாதவர்கள் அல்லது கொடுக்க முடியாதவர்கள் இங்கு வந்து பெற்றுக்கொள்ளலாம்.

    நாம் ஆடு, பசு, எருமை, குதிரை, கழுதை, ஒட்டகம் என பல விலங்குகளின் பாலை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம்.மேலும் சோயா, தேங்காய், கோதுமை பால், பப்பாளி பால், பாதாம் பால் என பல்வேறு பாலையும் பயன்படுத்துகிறோம். தாய்ப்பாலில் பசுவின் பாலை விட இரும்புச் சத்து அதிகமாக இருக்கும். எருமைப் பாலில் பசுவின் பாலை விட கொழுப்புச் சத்து அதிகம். அதே போன்றே செம்மறி ஆட்டின் பாலில் வெள்ளாட்டின் பாலை விட கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது.

    விலங்குகளில், குதிரைப்பாலில் தான் கொழுப்பு சத்து மிகக் குறைவு. பாலில் கால்சியம், வைட்டமின்கள், தாது உப்புகள், புரதம், லாக்டோஸ், கொழுப்பு ஆகியவை மிகுந்துள்ளன. உடல் ஆரோக்கியம் தரும் அமுதமாக பால் இருக்கிறது.உலக அளவில், பால் உற்பத்தியில், அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. நமது நாடு, இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில், 1 லட்சத்து 30 ஆயிரம் பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. அரசாங்கத்தின் ஒத்துழைப்பினால் உருவாக்கப்பட்ட ‘தேசிய பால் வளர்ச்சி அமைப்பின்’ மூலம் கிராமப்புற விவசாயிகளிடம் இருந்து பால் பெறப்பட்டு, நிலைப்படுத்தப்பட்டு, பின் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்டு பாலாக விற்பனை செய்யும் முறை வந்தது.

    தமிழகத்தில், தினந்தோறும் மொத்தம் 1.5 கோடி லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில், தனியார் பால் நிறுவனங்களின் பங்கு நாளொன்றுக்கு, 1.25 கோடி லிட்டர் ஆகும். எஞ்சியுள்ள அளவைத்தான் ஆவின் விற்பனை செய்கிறது. புல்கிரீம் பாலாகவும், சமன்படுத்தப்பட்ட பாலாகவும் தற்சமயம் பால் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட பால் உற்பத்தி, மொத்தமாக கொள்முதல் செய்தல், பதப்படுத்துதல், விற்பனை செய்தல் என்ற நடைமுறை சிறப்பாக நமது நாட்டில் உருவாக காரணமாக இருந்தவர் டாக்டர் வர்க்கீஸ் குரியன் ஆவார்.

    இதனால் தான் இந்தியாவில் ஏற்பட்ட பால் உற்பத்தியை, ‘வெண்மை புரட்சி’ என்கிறார்கள். இதற்காக அவருக்கு உலக உணவு பரிசு 1989-ம் ஆண்டு வழங்கப்பட்டது. பாலில் கலப்படம் செய்வது காலம் காலமாய் தொடர்கிறது. பாலின் அளவை அதிகரிக்க அதிக அளவு தண்ணீர் சேர்த்து விற்பார்கள். இதனைக் கண்டுபிடிக்க பால்மானி உள்ளது. அதிக நுரை ஏற்பட சில ரசாயன பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இதனையும் ஆய்வுக்கூடப் பரிசோதனையில் கண்டுபிடிக்கலாம். வீட்டில் கறந்து வந்து பாத்திரத்தில் பால் கொடுக்கும் காலம் எல்லாம் போய்விட்டது. தற்சமயம் மக்கள் பெரும்பாலும் ஆவின் பாலையே பயன்படுத்துகின்றனர்.

    நாம் அனைவரும் பருகும் ஆவின் பாலில், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவற்றுடன் கால்சியம், பொட்டாஷியம், சோடியம், மெக்னிஷியம், பாஸ்பேட், சிட்ரேட், குளோரைடு, பை கார்பனேட், சல்பேட், வைட்டமின் ஏ ஆகிய சத்துகளும் இருக்கும். இதில் கொழுப்புச்சத்து 3 கிராம் தான் இருக்கும். இது பதப்படுத்தப்பட்ட, பாலாடை நீக்கப்பட்ட பாலாகும்.

    பால், குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் மட்டுமின்றி முதியவர்களுக்கும் உகந்தது. குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் உடல் வளர்ச்சி, எலும்பு, பற்களின் பாதுகாப்பு, எதிர்ப்பாற்றல் ஆகியவற்றிற்கு பயன்படுவது போல, பெரியவர்களுக்கு எலும்பு தேய்மானம், மூட்டு அழற்சியை குறைக்க பயன்படுவதுடன் உணவு போதுமான அளவு உண்ண முடியாதபோது, சிறந்த உணவாகவும் பயன்படுகிறது.

    பாலில் இருந்து தயாரிக்கப்படும் மோர், தயிர் ஆகியவையும் ஆரோக்கியத்திற்கு தேவையானவை. கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பாலாடை கட்டிகளையும் பயன்படுத்தலாம். பாலில் கொழுப்புச்சத்து உள்ளதால் பெரியவர்கள் பலரும், இது இதய நோயை ஏற்படுத்தும் என்று நினைத்து பாலை தவிர்க்கிறார்கள். கொழுப்புச்சத்து மிகுந்த பால், பாலாடை கட்டிகள், வெண்ணெய், நெய் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். பலருக்கும் பயன்படும் பால் சிலருக்கு சில பிரச்சினைகளை உண்டாக்கலாம். பால் ஒத்துக்கொள்ளாமை அபூர்வமாக சில குழந்தைகளுக்கு ஏற்படும்.

    பாலில் உள்ள லாக்டோஸ் என்ற சர்க்கரை சத்தை ஜீரணிக்க முடியாததால் இந்த பாதிப்பு ஏற்படலாம். வயிற்று பொருமல், பேதி ஆகிய தொந்தரவுகள் ஏற்படும். இவர்களுக்கு இந்த சத்து இல்லாத பிற ஊட்ட பானங்களை கொடுக்க வேண்டும். அதாவது, லாக்டோஸ் நீக்கப்பட்ட பாலை கொடுக்க வேண்டும். அரசாங்கம் தயாரிக்கும், ஆவின் பால் தரமானது. இதனை பெரும்பாலான மக்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள். பாலினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இதன் காரணமாக, இவர்கள் பால் உணவை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும்.

    டாக்டர் சு.முத்து செல்லக்குமார், மருத்துவ துறை தலைவர்,

    தனியார் பல்கலைக்கழகம்,சென்னை.
    நகர்ப்புற சூழலில் வீட்டுமனை அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஆகியவற்றை வாங்குவதற்கு முன்னர் எந்தெந்த ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் பற்றி கவனம் கொள்ள வேண்டும் என்பது பற்றி ரியல் எஸ்டேட் நிபுணர்கள் குறிப்பிடுவதை கீழே காணலாம்.
    மலிவு விலை வீடுகள் (Affordable Homes) என்ற நடுத்தர மக்களுக்கான குடியிருப்பு திட்டம் மூலம், அனைவருக்கும் வீடு என்ற பொது நிலையை நோக்கி இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தனிப்பட்ட வீடுகளை ஒப்பிடும்போது அடுக்குமாடி குடியிருப்புகள் நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இருப்பதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, மலிவு விலை வீடுகள் வாங்க சுலபமான வங்கி கடன், எளிய மாதாந்திர தவணைகளில் உடனடியாக கிடைப்பது நடுத்தர மக்களுக்கு சாதகமாக உள்ளது.

    மேலும், மாதாமாதம் கொடுக்கும் வீட்டு வாடகைத் தொகையை, மாதாந்திரத் தவணையாக செலுத்தினால் சொந்த வீடே வாங்கலாம் என்ற திட்டத்தில் புதிய குடியிருப்பு திட்டங்கள் பலரது கவனத்தை கவர்ந்துள்ளன. இன்றைய நகர்ப்புற சூழலில் வீட்டுமனை அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஆகியவற்றை வாங்குவதற்கு முன்னர் எந்தெந்த ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் பற்றி கவனம் கொள்ள வேண்டும் என்பது பற்றி ரியல் எஸ்டேட் நிபுணர்கள் குறிப்பிடுவதை கீழே காணலாம்.

    * சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) அல்லது நகர் ஊரமைப்பு (DTCP) இயக்ககம் ஆகியவற்றுக்கு செலுத்தப்பட்ட கட்டணங்களுக்கான ரசீதுகள்.

    * கட்டிடத்திற்கான வரைபடம், கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி ஆகியவை.

    * சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட்ட கட்டிட வளர்ச்சி மற்றும் அது தொடர்பான கட்டண ரசீதுகள்.

    * நிலம் அல்லது மனையின் ஆவணங்கள், அவற்றின் தாய்ப் பத்திரங்கள் மற்றும் சமீபத்திய காலகட்டம் வரையிலான வில்லங்க சான்றிதழ்.

    * மின்சாரம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டண ரசீதுகள்.

    * குடிநீர் மற்றும் வடிகால் துறை குழாய் இணைப்புகள் தெருவின் எந்த முனைகளில் இருந்து எத்தனை அடி கீழே பதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான வரைபடம்.

    * வீட்டின் ‘ஸ்ட்ரக்சுரல் வரைபடம்’ (Structural Drawing) மற்றும் மின் சாதன அமைப்புகளுக்கான (Electrical Drawing) வரைபடம்.

    * கட்டுமான அமைப்பில் கார் பார்க்கிங் இடம், அதன் அளவு, அதன் வரிசை எண் என்ன என்பதை காட்டும் வரைபடம்.

    * கட்டிட வலிமையை உறுதி செய்யும் தர நிர்ணய சான்றிதழ் (Stability Certificate) .

    * வீடுகளில் உள்ள லிப்ட், மோட்டார், சி.சி.டி.வி கேமரா, சோலார் பவர் ஹீட்டர் ஆகியவற்றுக்கு உரிய ரசீதுகள், வாரண்டி கார்டு, சம்பந்தப்பட்ட உபகரணங்களை ரிப்பேர் பார்க்கும் மெக்கானிக்குகள் மற்றும் சர்வீஸ் சென்டர் தொலைபேசி எண்கள். 
    நமது பிள்ளைகளுக்கும் சாகசம் செய்ய ஆர்வம் உண்டு. எனவே அவர்களை விளையாட அனுமதியுங்கள். பிள்ளைகளை தைரியசாலிகளாகவும், சாதனையாளர்களாகவும், சாகசம் புரிபவர்களாகவும் வளருங்கள்.
    சென்னையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி லோகிதா 5 கி.மீட்டர் தூரம் மெரினா கடலில் நீந்தி சாதனை படைத்தார். கடலில் நீந்திய சிறுமியையும், நீந்த வைத்த தந்தையையும், தாயையும், பயிற்சியாளரையும் பாராட்ட வேண்டும். இவரது தந்தை மகிமைதாஸ் சென்னை நகர போலீஸ் காவலர், தேசிய நீச்சல் வீரர் சென்ற ஆண்டு என்னுடன் இலங்கையிலிருந்து ராமேசுவரத்திற்கு கடலில் நீந்தியவர்.

    பயமறியாத லோகிதா இன்று சிறுவர்களின் கதாநாயகி. ஆனால் இந்த சாதனை பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி கவலையும் நமக்கு இல்லை. இது ஒரு உண்மையான சாகசம். ஆனால் சாகசத்திற்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. கிரிக்கெட் வீரர்களின் சாதனை மட்டும் தெரிந்தால் போதும் என்ற நிலைதான் இன்று.

    விளையாட்டில் சாதித்தவர்கள் கூட அவர்களது பிள்ளைகளை விளையாட அனுமதிப்பது இல்லை. அந்த அளவுக்கு விளையாட்டு மீது அக்கறையில்லாமல் போய்விட்டது. எனவே இன்று பிள்ளைகளிடம் சாதனை உணர்வு வளர்க்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். அது நமது கடமையாகவும் இருக்கிறது. முன்பெல்லாம் நீச்சல் அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆற்றிலும், குளத்திலும், கிணற்றிலும் நீந்தினார்கள். ஆறுகளும், குளங்களும் வற்றிய பிறகு அதிலும் சில ஆறுகள் சாக்கடையான பிறகு நீந்த முடியவில்லை. இளைஞர்களுக்கு நீந்தத் தெரியாத நிலை இன்று உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டும் நீச்சல் குளங்களில் நீச்சல் கற்றுக்கொள்ள முடிகிறது.

    தமிழ்நாட்டில் மட்டும் 1,000 கி.மீட்டர் தூரம் கடற்கரை இருக்கிறது. கடற்கரை மாவட்டத்து மக்கள் கூட கடலில் நீந்துவதில்லை. நீந்திப் பழக்கமில்லை. பெற்றோரும் அனுமதிப்பது இல்லை. அவ்வளவு பயம். கடலில் கால் நனைக்க போகிறவர்கள் கூட நீச்சல் தெரியாததால் கடல் நீரில் மூழ்கி இறக்கும் நிலைதான் உள்ளது. ஆனால் நமது ஊரில் வேலை செய்யும் வெளிநாட்டினர் இங்கே தினமும் கடலில் நீந்துகிறார்கள். அவர்களுக்கு பயமில்லையா? உயிர் மீது அக்கறை இல்லையா? இருக்கும். ஆனால் அவர்களுக்கு உயிரைவிட சாகசம் செய்வது பெரியதாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் உயர் தொழில்நுட்ப வேலை செய்ய சாதனை படைத்த அவர்களை நாம் இங்கு அழைத்து வந்திருக்கிறோம்.

    இப்படி வெளிநாட்டவர்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு சாகச பயிற்சி தரும்போது நாம் மட்டும் பிள்ளைகளை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைப்பது நல்லதா? இமயமலையின் எவரெஸ்டு சிகரம் 8,848 மீட்டர். இன்று இதில் ஏற வரிசையில் மலையேறும் வீரர்கள் காத்து நிற்பதாக ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். கடந்த சில நாட்களில் ஏறச் சென்ற ஏழு பேர் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. அந்த அளவுக்கு உயிரை துச்சமாக மதித்து உலக மக்கள் சாகச செயல்கள் புரிய விழையும் போது நாம் மட்டும் பாதுகாப்பாக இருக்க நினைத்தால் என்னவாகும்.

    சாகசம் புரிபவர்கள் ஆபத்தை எதிர்கொள்வார்கள். அவர்கள் ஆராய்ச்சியிலும், தொழிலிலும், வணிகத்திலும், விளையாட்டிலும், போரிலும் துணிந்து இறங்குவார்கள். எனவேதான் ஆப்பிள் ஐ போன், மைக்ரோசாப்ட், அமேசான் என்று உலக நிறுவனங்களை சாகசக்காரர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். சோம்பியிருக்கும் மக்களால் அதெல்லாம் முடியாது. அவர்கள் முற்கால பெருமைகளை பேசிக்கொண்டிருப்பார்கள்.

    சாகச விளையாட்டுகளுக்கும், சாதனை விளையாட்டுகளுக்கும் ஏன் இன்னும் நம்மிடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது என்று புரியவில்லை. ஓட்டப்பந்தயம், கையுந்து பந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகள் நம் நாட்டில் மிகவும் சிறப்பாக இருந்திருக்கின்றன. ஆனால் இப்போது அதற்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. 1956-ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்து அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    பின்னர் யுகோஸ்லாவாகியா அணியுடன் மோதி தோல்வி கண்டது. அது போல 1951-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு கையுந்து பந்து போட்டியில் நாம் தங்கப்பதக்கம் பெற்றுள்ளோம். ஆனால் இன்று நாம் உலககோப்பை போட்டியிலும் விளையாடக்கூட தகுதி இல்லாமல் போய்விட்டோம்.

    ஒலிம்பிக் போட்டிகள் உலக விளையாட்டுத் திருவிழா அதில் விளையாடி பதக்கம் பெறுவது ஒரு நாட்டிற்கு பெருமை சேர்க்கும். ஆனால் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடான இந்தியாவிற்கு 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கப்பதக்கம் கூட கிடைக்கவில்லை.

    கையுந்து பந்து, கால்பந்து, ஓடுவது போன்றவை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள். ஆனால் சில பெற்றோர்கள் ஒலிம்பிக் அல்லாத விளையாட்டில் தங்களது பிள்ளைகளை உற்சாகமாக ஈடுபடுத்துகிறார்கள். இது கூட ஒரு வீண்வேலை என்றே தோன்றுகிறது. அதற்கு பதில் ஒலிம்பிக்கில் விளையாடும் விளையாட்டில் ஈடுபட வைத்தால் அந்த குழந்தைக்கும் உலக அரங்கில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கும், இந்தியாவிற்கும் ஒரு பதக்கம் கிடைத்திருக்கும்.

    காவல்துறையில் இப்போது சேரும் காவலர்களிடம் விளையாடுவீர்களா என்று கேட்டால் விளையாடுகிறோம் என்கிறார்கள். என்ன விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்கிறார்கள். கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இல்லவே இல்லை. அந்த விளையாட்டு விளையாடி என்ன பயன்? ஆனால் இதே காவல் துறையில் ஹாக்கி விளையாடிய வீரர்கள் பிரான்சிஸ், லட்சுமணன் ஆகியோர் 1956-ம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய தேசிய அணியில் விளையாடியவர்கள். இதில் லட்சுமணன் இந்திய அணியின் கோல் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் ஓடிய சுப்பிரமணியன் தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியாற்றியவர். அவருக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவித்தார் அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆனால் அவர் காவல்துறையிலிருந்து விலகி ரெயில்வே துறைக்கு சென்றுவிட்டார் என்பது வேறுகதை.

    சாகச தன்மையுள்ள விளையாட்டுகளை நமது பிள்ளைகள் விளையாடவில்லை என்றால் நமக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைக்குமா என்பது மட்டுமல்ல, சாகச குணம் கொண்ட உலக மக்களுடன் நமது பிள்ளைகள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வர்த்தகத்திலும் எப்படி போட்டியிட முடியும் என்பதுதான் முதல் கேள்வி. உலக மக்கள் ஓடி, சைக்கிள் ஓட்டி, நீச்சலடித்து, உடல்நலம் காத்து ஆரோக்கியமாக இருக்கும்போது அவர்களுடன் உடல் நலம் குறைந்த நமது பிள்ளைகள் எப்படி விளையாட்டில் போட்டியிட முடியும் என்பது இரண்டாவது கேள்வி. இப்படி விளையாடாத பிள்ளைகள் நோய்கள் பல வந்த பிறகு அவற்றை குணமாக்க நம்மிடம் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பது மூன்றாவது கேள்வி.

    நமது பிள்ளைகளுக்கும் சாகசம் செய்ய ஆர்வம் உண்டு. எனவே அவர்களை விளையாட அனுமதியுங்கள். ஒலிம்பிக் விளையாட்டுகள் மேலானவை. குறிப்பாக நீச்சல் பழக்கிவிடுங்கள். வேடிக்கை விளையாட்டுகளையும், சோம்பேறி விளையாட்டுகளையும், சூதாட்ட விளையாட்டுகளையும், கம்ப்யூட்டர் விளையாட்டுகளையும் புறந்தள்ளுங்கள். பிள்ளைகளை தைரியசாலிகளாகவும், சாதனையாளர்களாகவும், சாகசம் புரிபவர்களாகவும் வளருங்கள்.

    பள்ளிக்கூடங்கள் திறக்கும் தருவாயில் உலக மக்கள் விளையாடும் உண்மையான விளையாட்டுகளை நமது பிள்ளைகள் விளையாடட்டும். விளையாடிக்கொண்டே படிக்கட்டும். படித்துக்கொண்டே விளையாடட்டும். இன்றைய சூழ்நிலையில் உண்மையான கல்வி என்பதும் அதுதான்.

    முனைவர் செ.சைலேந்திரபாபு,

    ஐ.பி.எஸ். காவல்துறை இயக்குனர்.
    வாழைப்பழம் சேர்த்து செய்யும் பாயாசம் சூப்பராக இருக்கும். இன்று இந்த பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பழத் துண்டுகள் - 1 கப்
    பாசிப்பருப்பு - 1 கப்
    பால் - 1/2 கப்
    தேங்காய் பால் - 2 கப்
    வெல்லம் - முக்கால் கப்
    ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு
    நெய் - ஒரு ஸ்பூன்



    செய்முறை :

    பாசிப் பருப்பை நன்றாக குழைய வேக வைத்து மசித்த கொள்ளவும்.

    முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும்.

    வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும்

    வேக வைத்து மசித்த பாசிப்பருப்பில் வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    வாழைப்பழத் துண்டுகளை நெய்யில் நன்றாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.

    பிறகு வேக வைத்த பாசிப்பருப்புடன் வதக்கிய வாழைப்பழம், தேங்காய் பால் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

    பிறகு ஏலக்காய், திராட்சை, வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான வாழைப்பழ பருப்பு பாயாசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைத்து இடங்களிலும் தங்கள் தடத்தை பதித்த பெண்களால் மாநில சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் மட்டும் உரிய பிரதிநிதித்துவத்தை பெறமுடியவில்லை.
    கல்வியில், வேலைவாய்ப்பில் பெண்கள் நிறைய முன்னேறிவிட்டார்கள். பிளஸ்-2 தேர்வை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் மாணவர்களைவிட, மாணவிகளே அதிகம் தேறி வருகிறார்கள். சிவில் சர்வீசஸ் தேர்வில்கூட இப்போதெல்லாம் கணிசமான அளவு தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடு முழுவதும் அகில இந்திய பணிகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    அனைத்து இடங்களிலும் தங்கள் தடத்தை பதித்த பெண்களால் மாநில சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் மட்டும் உரிய பிரதிநிதித்துவத்தை பெறமுடியவில்லை. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற மசோதாவை தேவகவுடா 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி தாக்கல் செய்தார். அதன்பிறகு ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில், அரசில் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் நலனுக்கும், மேம்பாட்டுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அரசியல் சட்டத்திருத்தம் மூலமாக நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியோடு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படவேண்டும் என்ற முயற்சியை பெண்கள் மேற்கொண்டால் நடக்கும். பெண்கள் பிரச்சினை, குழந்தைகள் நலன் தொடர்பாக பெண்கள்தான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.

    பெண் உரிமைக்காக முழக்கமிடும் அரசியல் கட்சிகள்கூட தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களில் பெண்களுக்கு அதிக இடங்கள் கொடுப்பதில்லை. முதல் நாடாளுமன்றத்தில் 24 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் 66 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். தற்போது நடந்த 17-வது நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    222 பெண்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர். இதில் 78 பெண் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14.4 சதவீதமாகும். 33 சதவீதம் எங்கே இருக்கிறது?, 14.4 சதவீதம் எங்கே இருக்கிறது? என்று விமர்சனங்கள் வருகின்றன. ஆனாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல, இந்த 78 பேரும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 27 பெண்கள் மீண்டும் எம்.பி.க்களாகி இருக்கிறார்கள்.

    மீதமுள்ள நிறைய பெண்கள் படித்தவர்கள், நாட்டு நிலைமையை நன்றாக தெரிந்தவர்கள். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி ஏற்கனவே நாடாளுமன்ற அனுபவம் கொண்டவர். தமிழச்சி தங்கபாண்டியன் ஆங்கில பேராசிரியையாக இருந்தவர். இருவருமே நல்ல எழுத்தாளர்கள், பேச்சாற்றல் கொண்டவர்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஜோதிமணியும் நல்ல சமூக சிந்தனையாளர், பேச்சாற்றல் மிக்கவர்.

    எனவே தமிழகத்தின் சார்பிலும் இந்த மூவரின் குரலும் ஓங்கி ஒலிக்கும். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற முயற்சியை தமிழக பெண் எம்.பி.க்கள் தொடங்கவேண்டும். 78 பெண் எம்.பி.க்களும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்குபெறும் பாங்கு மிகுந்த பலனை அளிக்கப்போகிறது. இந்தமுறை பெண்கள் இடஒதுக்கீட்டிற்காக இந்த 78 பேரும் ஒலிக்கப்போகும் குரல் நாடாளுமன்றத்தை அதிர வைக்கப்போகிறது.
    உங்கள் குழந்தைகளை சிப்ஸ், நொறுக்குத்தீனிகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள். ஏனெனில், இவற்றில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
    வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமெனில் சிறுவயதிலிருந்தே நாம் மேற்கொள்ளும் உணவுகளில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.

    வரைமுறையே இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுத்து வந்தால் இதன் தாக்கம் அவர்கள் வளர ஆரம்பிக்கும்போது தெரியவரும்.
    குறிப்பாக, உங்கள் குழந்தைகளை சிப்ஸ், பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள்.

    ஏனெனில், இவற்றில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் ஒரு நாளைக்கு, 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை உப்பினை எடுத்துக்கொள்ளலாம்.

    அளவுக்கதிகமான சோடியம் சேருவதால், செல்களில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் இடையூறு ஏற்பட்டு அதிகம் தாகம் ஏற்படும். வயிற்று உப்புசம் ஏற்பட்டு உங்கள் குழந்தைகளால் சாப்பிட முடியாமல் போகலாம்.

    சோடியம் அதிகமானால், கை கால்களில் வீக்கம் ஏற்படும், எனவே உங்கள் குழந்தைகளின் கை கால்கள் வீங்கியிருந்தால், அவன் குண்டாக இருக்கிறான் என நினைத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.



    அளவுக்கு அதிகமான சோடியம் எலும்புகளில் கால்சிய அளவை குறையச் செய்து, சிறுநீர் வழியே வெளியேற்றும். இதனால் எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடும்.

    மேலும், இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்து, அதனால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாக்கப்படும். அப்படி சிறுநீரகங்கள் ஓய்வின்றி வேலை செய்ய நேர்ந்தால், எலும்புகளில் இருந்து வெளியேறும் கால்சியம் சிறுநீரங்களில் அதிகம் படிந்து, கற்களாக உருவாகிவிடும். எனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, அதிகளவு உப்பும் ஓர் காரணம் ஆகும்.

    அதிகளவு உப்பினால் உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்தத்தின் கன அளவு அதிகரித்து, அதனால் இதயம், மூளை, சிறுநீரகங்கள் போன்றவற்றில் அழுத்தம் அதிகரிக்கும். இப்படி தமனிகளில் அழுத்தம் அதிகரித்தால், வாழ்நாள் முழுவதும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

    குழந்தைகளுக்கு கீரை பருப்பு மசியல், வெஜிடபிள் சூப். தேங்காய் அவல். வெஜிடபிள் சாண்ட்விச், பயறு வகைகள், கோதுமை அடை, சோள உணவுகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு கொடுங்கள்.
    கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் பலருக்கு ஏற்படுகிறது. அதற்கான தீர்வை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது என்பது வழி வழியாக இருந்து வரும் நம்பிக்கை. கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ, பெண்ணுறுப்பில் அளவுக்கு அதிகமான இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தாலோ, பனிக்குடலில் நீர் கசிவு ஏற்பட்டிருந்தாலோ அல்லது தகுதியற்ற கர்ப்பவாய் இருந்தாலோ, உங்கள் மருத்துவர் உடலுறவு கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துவார். மேலும் கர்ப்பம் தரித்த ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவு, மரபுத்திரி அசாதாரண அமைப்புகள் அல்லது குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகளால் தான் ஏற்படும்.

    பொதுவாக கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு உடலுறவில் அதிக ஈடுபாடு ஏற்படும். இந்த பாலுணர்ச்சி உந்துதலுக்கு ஹார்மோன்கள் தான் காரணம். கர்ப்ப காலத்தின் போது ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். அதுவே பாலுணர்ச்சியை தூண்ட காரணமாக அமையும்.

    விலங்குகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே பாலுறவு கொள்ளக் கூடியவை. ஆனால் மனிதர்கள் எல்லா நாள்களிலும் பாலுறவு கொள்ளும் திறன் பெற்று இருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பாலுணர்வு கூடலாம் அல்லது குறையலாம். அதேபோல் கணவன் தனது மனைவியின் மேல் இருந்து பாலுறவு கொள்ள சிரமமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் கிருமிகள் அதிகம் இருக்கலாம். அதனால் பாலுறவின் போது கிருமிகள் உள்ளே நுழைய வாய்ப்புகள் அதிகம்.



    உடலுறவு மூலமாக பரவும் நோய்களில் இருந்து கர்ப்பம் உங்களை பாதுகாக்காது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. கர்ப்ப காலத்தில் இவ்வகை நோய் உங்களை தாக்கினால், அது உங்கள் குழந்தையையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் இவ்வகை வியாதியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, இந்த வியாதி இல்லாத ஒருவருடனே உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடலுறவின் போது ஆணுறை பயன்படுத்துவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.

    இதன் காரணமாக கருப்பை நோய் தொற்று ஏற்படலாம். எனவே பாதுகாப்பான முறையில் பாலுறவு கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பல நேரங்களில் பாதுகாப்பானதே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலுறவு மற்றும் பாலுணர்வு கண்டிப்பாக கருச்சிதைவை ஏற்படுத்தாது. சொல்லப்போனால், பாலுணர்ச்சியால் ஏற்படும் சுருங்குதலுக்கும், பிரசவத்தால் ஏற்படும் சுருங்குதலுக்கும் வித்தியாசம் உள்ளது. இருப்பினும் மறுபடியும் மருத்துவரை அணுகி, உடலுறவு கொள்வது ஆபத்தை விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    நினைவு திறனை அதிகப்படுத்தும் முக்கிய பங்கு வல்லாரை கீரைக்கு உண்டு. இன்று சத்தான வல்லாரை கீரை சம்பல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வல்லாரை கீரை - 1 கப்
    சின்ன வெங்காயம் - 10
    பச்சை மிளகாய் - 1
    எலுமிச்சம் பழம் - 1 / 2 மூடி
    மிளகு தூள் - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வல்லாரை கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வல்லாரை கீரையை போட்டு அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அதில் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும்.

    கடைசியாக அதில் உப்பு, மிளகு தூள் தூவி 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.

    சத்தான வல்லாரை கீரை சம்பல் ரெடி.

    குறிப்பு:

    உங்களுக்கு பிடித்தமான கீரை வகைகளையும் இது போல சாலட் ஆக செய்து உண்ணலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம். முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்திருக்க உதவும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    வழுக்கைத் தேங்காயை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழிருந்து மேல்நோக்கிப் பூசி, உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம்
    செய்ய வேண்டும். இப்படித் தினமும் செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும், கரும்புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல்
    போய்விடும்.

    வெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால் கூட இதுபோன்ற நிலை ஏற்படும். தேங்காய்ப் பால் இரண்டு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசைபோலாக்க வேண்டும். இந்தப் பசையை முகத்தில் பூசிக் கொண்டு உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்தால் முகம் பிரகாசமாகும்.

    ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்துப் பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும்.

    தேன் ஒரு டீஸ்பூன், தக்காளிச்சாறு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூச, கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும்.

    பால் பவுடர் - ஒரு டீஸ்பூன்,
    தேன் - ஒரு டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்,
    பாதாம் எண்ணெய் - அரை டீஸ்பூன்

    இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். முகத்தை நன்றாகக் கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து, பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.

    வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.
    ×