search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women reservation bill"

    • கேரளாவில் பா.ஜ.க. சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மகளிர் சக்தி பற்றி உரையாடினார்.

    திருவனந்தபுரம்:

    பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பல மாநிலங்களில் பா.ஜ.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கேரளாவில் மகளிர் சங்கமம் நிகழ்ச்சி திருச்சூர் தேக்கங்காடு மைதானத்தில் இன்று நடைபெற்றது. சுமார் 2 லட்சம் பெண்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். திருச்சூர் வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


    இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, கிரிக்கெட் வீராங்கனை மின்னுமணி, சமூக ஆர்வலர் உமா பிரேமன், நடிகை சோபனா, முதியோர் ஓய்வூதியத்தைப் போராடி பெற்ற 88 வயது மூதாட்டி மரியக்குட்டி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

    மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது:

    சுதந்திரத்திற்குப் பிறகு, எல்.டி.எஃப் மற்றும் யூ.டி.எஃப் அரசுகள் மகளிர் சக்தியை பலவீனமாகக் கருதின. இதனால் மக்களவை மற்றும் விதான சபாவிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கிடப்பில் போட்டன. அதை நிறைவேற்றியது பா.ஜ.க. நாட்டில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி அரசு இருக்கும் வரை முத்தலாக் காரணமாக முஸ்லிம் சகோதரிகள் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் அதிலிருந்து விடுதலை அளிப்பதாக உத்தரவாதம் அளித்து அதை உண்மையாக நிறைவேற்றினோம் என தெரிவித்தார்.

    • மக்கள் இதை கண்டு கொள்ளாததால், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.
    • பா.ஜ.க. தற்போது புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கேள்விகளால் துளைத்து எடுத்தார். மகளிர் இடஒதுக்கீடு ஏன் நிறைவேற்றப்பட்டது, பா.ஜ.க. ஏன் இதில் இத்தனை அவசரம் காட்டியது என்பது பற்றியும் அவர் பேசியுள்ளார்.

    இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மத்திய அரசு சார்பில் எந்த விதமான தகவல்களும் வழங்கப்படவே இல்லை. பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் இந்தியா vs பாரத் பற்றிய விவாதத்திற்கு தான் என்று அவர்கள் முதலில் சொன்னார்கள். ஆனால், மக்கள் இதை கண்டுக்கொள்ளாததால், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். மேலும் சிறப்புக் கூட்டம் அறிவிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்தனர்."

    "நாங்கள் இந்த மசோதாவை ஆதரித்தோம். பா.ஜ.க. தற்போது புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் முறையாக எல்லைகளை கட்டமைத்த பிறகே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமலுக்கு கொண்டுவருவோம் என்று அறிவித்து இருக்கிறது. உண்மையில், 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனே அமலுக்கு கொண்டுவர முடியும்."

    "ஆனால், பா.ஜ.க. இடஒதுக்கீட்டை பத்து ஆண்டுகளுக்கு தாமதப்படுத்த நினைக்கிறது. மேலும் இந்த இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினர் பயன்பெறக் கூடாது என்றும் பா.ஜ.க. நினைக்கிறது," என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

    • மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இம்மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று தொடங்கிய சிறப்புக் கூட்டத்தில், பாராளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து விவாதிக்கப்ட்டது. நாளை முதல் புதிய கட்டிடத்தில் நடைபெறும் பாராளுமன்ற கூட்டங்களில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலே மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அனைத்து இடங்களிலும் தங்கள் தடத்தை பதித்த பெண்களால் மாநில சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் மட்டும் உரிய பிரதிநிதித்துவத்தை பெறமுடியவில்லை.
    கல்வியில், வேலைவாய்ப்பில் பெண்கள் நிறைய முன்னேறிவிட்டார்கள். பிளஸ்-2 தேர்வை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் மாணவர்களைவிட, மாணவிகளே அதிகம் தேறி வருகிறார்கள். சிவில் சர்வீசஸ் தேர்வில்கூட இப்போதெல்லாம் கணிசமான அளவு தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடு முழுவதும் அகில இந்திய பணிகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    அனைத்து இடங்களிலும் தங்கள் தடத்தை பதித்த பெண்களால் மாநில சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் மட்டும் உரிய பிரதிநிதித்துவத்தை பெறமுடியவில்லை. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற மசோதாவை தேவகவுடா 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி தாக்கல் செய்தார். அதன்பிறகு ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில், அரசில் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் நலனுக்கும், மேம்பாட்டுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அரசியல் சட்டத்திருத்தம் மூலமாக நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியோடு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படவேண்டும் என்ற முயற்சியை பெண்கள் மேற்கொண்டால் நடக்கும். பெண்கள் பிரச்சினை, குழந்தைகள் நலன் தொடர்பாக பெண்கள்தான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.

    பெண் உரிமைக்காக முழக்கமிடும் அரசியல் கட்சிகள்கூட தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களில் பெண்களுக்கு அதிக இடங்கள் கொடுப்பதில்லை. முதல் நாடாளுமன்றத்தில் 24 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் 66 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். தற்போது நடந்த 17-வது நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    222 பெண்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர். இதில் 78 பெண் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14.4 சதவீதமாகும். 33 சதவீதம் எங்கே இருக்கிறது?, 14.4 சதவீதம் எங்கே இருக்கிறது? என்று விமர்சனங்கள் வருகின்றன. ஆனாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல, இந்த 78 பேரும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 27 பெண்கள் மீண்டும் எம்.பி.க்களாகி இருக்கிறார்கள்.

    மீதமுள்ள நிறைய பெண்கள் படித்தவர்கள், நாட்டு நிலைமையை நன்றாக தெரிந்தவர்கள். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி ஏற்கனவே நாடாளுமன்ற அனுபவம் கொண்டவர். தமிழச்சி தங்கபாண்டியன் ஆங்கில பேராசிரியையாக இருந்தவர். இருவருமே நல்ல எழுத்தாளர்கள், பேச்சாற்றல் கொண்டவர்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஜோதிமணியும் நல்ல சமூக சிந்தனையாளர், பேச்சாற்றல் மிக்கவர்.

    எனவே தமிழகத்தின் சார்பிலும் இந்த மூவரின் குரலும் ஓங்கி ஒலிக்கும். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற முயற்சியை தமிழக பெண் எம்.பி.க்கள் தொடங்கவேண்டும். 78 பெண் எம்.பி.க்களும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்குபெறும் பாங்கு மிகுந்த பலனை அளிக்கப்போகிறது. இந்தமுறை பெண்கள் இடஒதுக்கீட்டிற்காக இந்த 78 பேரும் ஒலிக்கப்போகும் குரல் நாடாளுமன்றத்தை அதிர வைக்கப்போகிறது.
    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பிரதமருக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்துக்கு ஸ்டாலின் ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். #MKStalin #RahulGandhi
    புதுடெல்லி:

    மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் , கடந்த 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

    இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரும் நாடாளுமன்ற தொடரில் நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசி வரும் பிரதமர் மோடி, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்திலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.



    ராகுல் காந்தியின் கடிதத்துக்கு வரவேற்பு தெரிவித்திருந்த திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளில் மகளிர் இடம்பெற கருணாநிதி எப்போதும் ஆதரவாக இருப்பார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் உங்களது முயற்சிக்கு எனது கட்சி சார்பில் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்’ என ட்வீட் செய்திருந்தார்.

    ஸ்டாலினின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ‘நன்றி ஸ்டாலின். தமிழகத்தின் சிறந்த மகன் மற்றும் உண்மையான தலைவர் போல பேசியுள்ளீர்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்கள் உந்துசக்தியாக இருக்கின்றனர். இதனை, இடஒதுக்கீடு மசோதா உறுதி செய்கிறது. இம்மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டிய நேரம் இது’ என பதில் ட்வீட் செய்துள்ளார். 
    ×