என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
இந்த ஆசனம் நீர்க்கடுப்பு, மலக்கட்டு, தலைவலி ஆகிய நோய்களை நீக்கும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறையும்.
ராஜ யோகிகள் நீண்ட நேரம் தவத்தில் ஆழ்ந்திருக்க முதுகெலும்பு, முதுகு வலுவாக நிமிர்ந்து இருக்க வேண்டும். வயிறு ஒட்டி இருக்க வேண்டும், தொந்தியை கரைத்து, முதுகெலும்பை வலுப்படுத்தும் ஆசனம் யோகமுத்திராசனம், ராஜயோக சாதகருக்கு உதவும் ஆசனமாதலால் யோகமுத்திராசனம் எனப் பெயர் பெற்றது.
செய்முறை :
தரைவிரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். இரு குதிங்கால்களையும் உள்ளங்கையால் மூடிக் கொள்ளவும். முதுகை வளைத்து குனிந்து தரைவிரிப்பை மூக்கால் தொடவும். சுவாசத்தை விட்டுக் கொண்டே நிமிரவும். இதுபோன்று மூன்று நான்கு முறை செய்யவும். இதுவே யோக முத்திராசனம் ஆகும். இந்த ஆசனத்தை பெண்களும் செய்யலாம்.
பலன்கள் :
நீர்க்கடுப்பு, மலக்கட்டு, தலைவலி ஆகிய நோய்களை நீக்கும்.
முதுகெலும்பை பாதுகாக்கும்.
தொந்தியை முழுவதுமாக கரைக்கும்.
மார்பை விரிவடையச் செய்யும்.

பால் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. அத்தியாவசிய பானமாக பருகப்படும் பாலை பெருமைப்படுத்தும் விதமாக, நாளை (ஜூன்1) உலக பால் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
* உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி தேசம் இந்தியா. 2018-ல் 176.3 மில்லியன் டன்கள் பாலை நம் நாடு உற்பத்தி செய்துள்ளது.
* இந்தியாவில் ஆண்டு தோறும் 5000 கோடி லிட்டர் பால் விவசாயிகளால் சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
* இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் 55 சதவீதம் எருமை மாடுகளிடம் இருந்து பெறப்படுகிறது.
* மனிதன் மாடுகளின் பாலை அதிகமாக நுகர்கிறான். பால் மற்றும் பால்பொருட்கள் அதிக எண்ணிக்கையில் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது.
* பாலில் இருந்து தயிர், வெண்ணை, நெய், மோர், கிரீம், பாலாடைக்கட்டி போன்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. பாலுடன் பல்வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டு எண்ணற்ற உணவுப் பொருட்கள் தயாராகின்றன.
* 240 மில்லி பாலில் 88 சதவீதம் நீர்ச்சத்து மிகுந்துள்ளது. புரதப்பொருள் 7.7 கிராமும், கார்போஹைட்ரேட் 11.7 கிராமும், சர்க்கரை 12.3 கிராமும், கொழுப்பு 8 கிராமும் உள்ளது. நார்ப்பொருட்கள் பாலில் காணப்படுவதில்லை. ஒரு கோப்பை பால் பருகுவதால் உடலுக்கு 149 கலோரி ஆற்றல் கிடைக்கிறது.
* பாலில் பல்வேறு வகை வைட்டமின்களும், தாது உப்புக்களும் உள்ளன.
* பால் எலும்புகளுக்கு சக்தி தருவதாக நம்பிக்கை உள்ளது. ஆனால் அது எந்த ஆய்விலும் நிரூபணம் செய்யப்படவில்லை.
* மாடுகளின் பால் கன்றுக்குட்டிகளுக்கானது. அதை நாம் நமது தேவைக்காக பயன்படுத்துகிறோம். பாலில் உள்ள சில சத்துப்பொருட்களை நமது உடல் ஜீரணிப்பதில்லை. கொழுப்பு உள்ளிட்ட தேவையற்ற சத்துப்பொருட்களை நீக்கி பதப்படுத்தப்பட்ட பாலையே மக்கள் பருக வேண்டும். இல்லாவிட்டால் சிலருக்கு பால் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும். சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி பேதியும் ஏற்படுவது உண்டு.
* பாலில் சில சத்துப்பொருட்கள் இருப்பது உண்மைதான். ஆனால் பால் பருகாததால் மனிதர்களுக்கு எந்தவித கேடும் விளைவதில்லை.
* கடந்த 2018-ம் ஆண்டில் அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரில் உலகின் மிகப்பெரிய பாலாடைக்கட்டி தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. 70 அடி நீளமும், 7 அடி அகலமும் இருந்த இந்த பாலாடைக்கட்டி 4 ஆயிரத்து 437 பவுண்டு எடை கொண்டிருந்தது. இதை 4 ஆயிரத்து 500 சீஸ் பிரியர்கள் துண்டு செய்து சாப்பிட்டார்கள்.
குட்டீஸ், நீங்கள் அதிகம் விரும்பும் பானம் பாலாகத்தான் இருக்கும். பாலை விரும்பாத குழந்தைகள் வெகு குறைவுதான். பால் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. உலகில் பெரும்பாலானவர்களின் விடியல் ஒரு கோப்பை பாலுடன் அல்லது பால் சேர்த்த காபி- டீ போன்ற பானங்களுடன் பொழுது புலர்கிறது என்பதே உண்மை.

அவலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அவல், காய்கறிகள் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு - அரை கப்,
வெங்காயம் - 1,
கெட்டி அவல் - 2 கப்,
தக்காளி - 2,
தேங்காய் பால் - அரை கப்,
கரம்மலாசா தூள் - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை,
மஞ்சள்தூள் - சிறிதளவு,

செய்முறை:
காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
தக்காளி சாறுடன், தேங்காய் பால் கலந்து அதில் அவலைப் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும் (அவல் மூழ்கும் அளவுக்கு தக்காளி சாறு, தேங்காய் பால் கலவையை விட்டால் போதும்).
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
காய்கறிக் கலவை வதங்கியதும், ஊறிய அவலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வித்தியாசமான சுவையில் வெரைட்டியான புலாவ் ரெடி!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பழரசம் குடிப்பதால் என்ன தீங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? பழரசம் குடிப்பதை விட, அதைக் குடிக்கும் முறையில் தான் நிறைய தீங்குகள் இருக்கிறது.
பழரசம் குடிப்பதால் என்ன தீங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? பழரசம் குடிப்பதை விட, அதைக் குடிக்கும் முறையில் தான் நிறைய தீங்குகள் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், பெரும்பாலும் நாம் பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பழரசமாக அருந்துவதால் நார்ச்சத்துகள் உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.
மற்றும் பழரசமாக பருகும் போது கூடுதலாக சேர்க்கப்படும் சர்க்கரை, செயற்கை இனிப்பூட்டிகள் மற்றும் ஃப்ளேவர்கள் போன்றவை மேலும் உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடியவை. பழரசம் பருகுவதை தவறு என்பதற்கு இது போன்ற சில தான் காரணமாக அமைகின்றன...
கடைகளில் விற்கப்படும் பழரசங்கள் அல்லது பானங்கள், உங்களது உடலியக்கத்தை சீர்குலைக்கும் பண்புடையதாக இருக்கிறது. எனவே, கடைகளில் விற்கப்படும் பானங்கள் அல்லது செயற்கை பழரசங்களை வாங்கி பருகுவதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, பழங்களை அப்படியே சாப்பிடும் முறைக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.
பெரும்பாலும் நீங்கள் கடைகளில் பழரசம் வாங்கி பருகும் போது, நீர் கலந்து தான் தருகிறார்கள். இதன் மூலம் உங்களுக்கு அந்த பழத்தின் மூலம் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமலே போகும் நிலை உருவாகிறது.

பழமாக சாப்பிடுவதை ஜீரணிக்க சிறிது நேரம் ஆகும். இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை. ஆனால், நீங்கள் பழரசமாக பருகும் போது, அது உடனடியாக உடலின் சர்க்கரை அளவை அதிகரித்துவிடுகிறது.
பழமாக உட்கொள்ளாமல், பழரசமாக பருகுவதால், நார்ச்சத்து, மினரல்ஸ், வைட்டமின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உட்பட பல சத்துகள் உடலுக்கு கிடைக்காமலேயே போய்விடுகிறது.
அதிலும், நீங்கள் கடைகளில் வாங்கி பருகும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பழரசங்கள், உண்மையில் ஃபிளேவர் சேர்க்கப்பட்ட இரசாயன நீர் தான். அதில் வேறு எந்த சத்துகளும் இருப்பது கிடையாது. எனவே, முடிந்த வரை பழங்களை வாங்கி அப்படியே சாப்பிடுவதை பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பால் அழகான உடல் சருமத்திற்கு பல பயன்பாடுகளை கொண்டுள்ளது. பாலை கொண்டு இயற்கை முறையில் பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
கோடைக்காலத்தில் பெரிதும் பாதிக்கக்கூடியது சருமம். சூரிய ஒளிக்கதிர்கள் சருமத்தில் விழும்போது, நிறங்கள் மாறுகின்றன. இதனை சன்- டான் என குறிப்பிடுவர். இதற்கான வீட்டிலேயே செய்ய கூடிய இயற்கை மருத்து குணங்கள் கொண்ட முறைகளை எளிதாக தயார் செய்யலாம். குறிப்பாக பச்சை பால், அழகான உடல் சருமத்திற்கு பல பயன்பாடுகளை கொண்டுள்ளது.
* காய்ச்சாத பால், சிறந்த ஆண்டி-டானிங் குணமுடையது. வெயில் பட்ட மேனிக்கு, கரு நிறத்தை போக்கக்கூடியது. காய்ச்சாத பால், தக்காளி சாறு ஆகியவற்றை சேர்த்து உபயோகித்து வந்தால், வீட்டிலேயே டான் பிரச்சைகளை தீர்க்கலாம்
ஆண்டி-டான் ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி?
பாதாம் - 6, பேரிச்சம்பழம் - 6 இவற்றை காய்ச்சாத பாலில் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். பிறகு, பாலில் உள்ள பொருட்களை அரைக்க வேண்டும். முகம், கழுத்து பகுதிகளில் தேய்த்துவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும். முகத்தை தண்ணீரில் நனைத்தப்படி, 2-3 நிமிடங்களுக்கு அதே கலவையை கொண்டு தேய்க்க வேண்டும். சுத்தமான நீரினால் முகம், கழுத்து பகுதிகளை கழுவ வேண்டும்
* பச்சை பால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க கூடியது. அபத்தான யூவி கதிர்களில் இருந்து முகத்தை காக்க கூடியது. அதுமட்டுமின்றி மிருதுவான சருமத்திற்கு காய்ச்சாத பால் பயன்படுகிறது.
காய்ச்சாத பால் ஃபேஸ் க்ளென்சிங் மாஸ்க்
காய்ச்சாத பாலுடன் பயத்தம் பருப்பு சேர்த்து அரைத்து வைக்க வேண்டும். முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் விடவும். 4-5 நிமிடங்களுக்கு தேய்த்த பின் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த இயற்கை முறைகள் மூலம், பளிச்சிடும், மென்மையான சருமம் பெறலாம்.

கோபத்தை ஆக்கப்பூர்வமாக எப்படி மாற்ற முடியும்... கோபத்தை எப்படிக் கையாள்வது... யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் எப்படிக் கட்டுப்படுத்துவது? என்று அறிந்து கொள்ளலாம்.
* கோபம் வரும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள். இதயத்துடிப்பு அதிகமாவது, நகங்களைக் கடிப்பது, வேகமாக சுவாசிப்பது, பற்களைக் கடிப்பது, கைகளை இறுகப் பிடிப்பது இவற்றில் ஏதேனும் சிலவற்றை நீங்கள் செய்துகொண்டிருந்தால், உடனடியாக உங்கள் மனதைச் சாந்தப்படுத்துங்கள். இதுபோன்ற செய்கைகளில் நீங்கள் ஈடுபடும்போது, உங்களுக்கு நீங்களே `அமைதியாக இரு... பொறுமையுடன் இரு... சாந்தமாக இரு’ எனத் தொடர்ந்து சொல்லுங்கள். இவை எல்லாம் தற்காலிகமாக உங்கள் கோபத்தைத் தள்ளிப்போட உதவும்.
* சுவாசிப்பதில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக, ஒன்று முதல் ஆறு வரை மனதில் எண்ணிக்கொண்டே மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள். பின்னர், அதேபோல ஒன்று முதல் ஏழு வரை எண்ணிக்கொண்டே மூச்சை அடக்க முயற்சி செய்யுங்கள். இறுதியாக, மனதில் ஒன்று முதல் எட்டு வரை எண்ணிக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். இப்படி பத்து முறை செய்து பாருங்கள்... கோபம் மட்டுமல்லாமல், பதற்றமும் பயமும்கூடக் குறைந்துவிடும்.
* சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்படும். அப்போது, வீட்டில் ஒரு தனி அறைக்குள் போய், தாழிட்டுக்கொண்டு தலையணையிடம் கோபத்தைக் காண்பிக்கலாம். ஆனால், அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற சூழலில் ஓர் அழகான கவிதையை எழுத முயற்சிப்பதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
* விரும்பத்தகாத சூழலில் கோபமான மனநிலையை மாற்றுவதற்காக, மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம். நகைச்சுவை மற்றும் செல்லப் பிராணிகளின் வீடியோக்களை பார்ப்பதால், உடனடியாக மனம் மாறும். கோபம் ஏற்படும் சூழலில் மனதில் ஒன்று முதல் பத்து வரை எண்ண ஆரம்பியுங்கள். பின்னர், அதையே மீண்டும் பத்தில் இருந்து ஒன்று வரை ரிவர்ஸாக எண்ணவும். இந்தக் கால அவகாசம், உங்கள் மனநிலையைச் சற்று மாறச் செய்யும்.
* கோபம் தணிந்ததும், அதற்கானக் காரணம் என்ன... எப்படி... எதனால்... யார் மீது தவறு என்பதை எல்லாம் நிதானமாக நினைத்துப் பாருங்கள். உங்கள் மீது தவறு இருந்தால், திருத்திக்கொள்ளுங்கள். பிறர் மீது தவறு இருந்தால், ஒரு வாரம் கழித்து அவர்களிடம் நடந்தது என்ன என்பதைத் தெளிவாக விளக்குங்கள். நீங்கள் காயப்பட்டதையும்கூட பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள். இதனால், உறவுகளிடம் சிக்கல் ஏற்படாது.

* காரணமில்லாமல் கோபம் வருவது, அந்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் முரட்டுத்தனமாகச் செயல்படுவது போன்ற அதீத உணர்ச்சி வெளிப்பாடு இருந்தால், அவசியம் மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
* கோபம் வரும்போது வெளியே போய், சிகரெட் பிடிப்பது, டீ குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், கண்களை மூடி உட்காருங்கள். அல்லது தனி இடத்துக்குச் சென்று, குறைந்தது பத்து நிமிடங்களாவது உட்கார்ந்துவிட்டு வாருங்கள். ஃபிரெஷ் ஜூஸ், ஐஸ்க்ரீம் போன்ற சுவையான உணவுகள் மனம் அமைதிபெற உதவுபவை.
* பசி, அசிடிட்டி, அல்சர், அதீதப் பசி, தலைவலி போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு அதிகக் கோபம் வரும். இவர்கள் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். அதுவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாகச் சாப்பிடுவது நல்லது.
* மகிழ்ச்சியான சூழலும் மனநிலையும் வேண்டுமெனில், நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்தெடுங்கள். சிந்திப்பது, பேசுவது, செய்வது என எல்லாவற்றையும் பாசிட்டிவ் கோணங்களில் செய்துவந்தால், மகிழ்ச்சியான சூழல் உங்களைத் தழுவிக்கொள்ளும்.
* சிலருக்குக் கோபம் நோயின் அறிகுறியாக இருக்கும். ஓவர்ஆக்டிவ் தைராய்டு, அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரைநோய், மனச்சோர்வு, மறதி நோய், ஆட்டிசம், தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளால்கூட கோபம் வரலாம். இவர்கள் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.

தர்பூசணி கோடையில் உடலை குளிர்விக்க மிக மிக அவசியமானது. இன்று தர்பூசணியுடன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து ஜூஸ் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தர்பூசணி துண்டுகள் - 2 கப்
ஆரஞ்சு - 2
உப்பு - 1 சிட்டிகை
தேன் - 2 டீஸ்பூன்
ஆப்பிள் - பாதி
ஐஸ்கட்டிகள் - சிறிதளவு
அலங்கரிக்க :
ஆப்பிள் துண்டுகள் - 1 டீஸ்பூன்

செய்முறை :
ஆரஞ்சு பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.
தர்பூசணியில் உள்ள விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக எடுத்து வைக்கவும்.
மிக்சியில் தர்பூசணி, ஆரஞ்சு சாறு, உப்பு, தேன், ஆப்பிள், ஐஸ்கட்டிகள் போட்டு நன்றாக அடிக்கவும்.
அரைத்த ஜூஸை கண்ணாடி கோப்பையில் ஊற்றி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு பருகவும்.
தர்பூசணி துண்டுகள் - 2 கப்
ஆரஞ்சு - 2
உப்பு - 1 சிட்டிகை
தேன் - 2 டீஸ்பூன்
ஆப்பிள் - பாதி
ஐஸ்கட்டிகள் - சிறிதளவு
அலங்கரிக்க :
ஆப்பிள் துண்டுகள் - 1 டீஸ்பூன்
புதினா இலைகள் - 3

செய்முறை :
ஆரஞ்சு பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.
தர்பூசணியில் உள்ள விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக எடுத்து வைக்கவும்.
மிக்சியில் தர்பூசணி, ஆரஞ்சு சாறு, உப்பு, தேன், ஆப்பிள், ஐஸ்கட்டிகள் போட்டு நன்றாக அடிக்கவும்.
அரைத்த ஜூஸை கண்ணாடி கோப்பையில் ஊற்றி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு பருகவும்.
சத்தான தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியம். பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு 10 வயதுக்குள் இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையும், 11 முதல் 20 வயதுக்குள் பூப்பெய்தல், மாதவிடாய்ப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. 21 முதல் 40 வயதுக்குள் ரத்தசோகை, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, பி.சி.ஓ.டி என்னும் சினைப்பைக் கட்டிகள், மெனோபாஸ், அதீத மாதவிடாய் ரத்தப்போக்கு, எலும்பு அடர்த்திக் குறைவு, உடல் பருமன், அதீத உடல்பருமனால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ், அதிக கொழுப்பால் ஏற்படும் இதயப் பிரச்னைகள், சர்க்கரைநோய் போன்றவை அவர்களைப் பாதிக்கின்றன. 41-ல் இருந்து 60 வயதுக்குள் இதய பாதிப்பு, சர்க்கரை நோய், கண் நோய்கள், எலும்பு அடர்த்திக் குறைவதால் ஏற்படும் எலும்பு முறிவு பிரச்னை போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள்.
இவர்களில் பலர், தங்களுக்கு ஒரு நோயின் அறிகுறி ஏற்பட்டபிறகும் நேரமின்மை அல்லது அலுவலகப் பணிச்சுமை காரணமாக மருத்துவரிடம் செல்வதில்லை. இது, அனைத்துப் பெண்களிடம் பரவலாகக் காணப்படும் மனநிலையாக இருக்கிறது. பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியம்.
பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள் குறித்துப் பார்ப்போம்.
* வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்ல, வீட்டிலிருப்பவர்களும்கூட காலை உணவைத் தவிர்ப்பது வழக்கமாக இருக்கிறது. காலை உணவுதான் அன்றைய நாளின் உற்சாகத்துக்கு அடிப்படை. காலை உணவாக, ஒரு முட்டை, இரண்டு பழங்கள்/ இட்லி, சாம்பார்/ சாண்ட்விச், ஜூஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.
* உடல்பருமன் பல்வேறு நோய்களுக்கு நுழைவுவாயிலாக இருக்கிறது. எனவே, உயரத்துக்கேற்ப உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். ஒருவருக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 கலோரி தேவை. ஒருவரின் உடலுழைப்பு, பி.எம்.ஐ அளவைப்பொறுத்து மாறுபடும் என்பதால், உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். குறிப்பாக, பெரியளவில் உடலுழைப்பு இல்லாத பணிகளைச் செய்பவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை முடிந்தஅளவு குறைக்க வேண்டும். உணவில் எப்போதும் அதிகமான காய்கறிகள் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* ஹார்மோன் சமச்சீரின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது மாதவிடாயில் தொடங்கி மகப்பேறுவரை பல்வேறு வகையில் பெண்களைப் பாதிக்கிறது. எனவே, ஹார்மோன்கள் சரியாக சுரக்கின்றனவா என்பதைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதிப்பது நல்லது. பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுக்க வேண்டும்.
* உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. தினமும் 30 நிமிடம் யோகா அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான தேகத்துக்கு வழிவகுக்கும். உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசித்து, வீட்டிலேயே எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம்.
* கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாகப் பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே, 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் மார்பகத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் `மாமோகிராம்' (Mammogram) பரிசோதனை செய்வது நல்லது. மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு மற்றும் வேறுவிதமான மாற்றங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். பொதுவாக 40-லிருந்து 50 வயதுவரையுள்ள பெண்களுக்குத்தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும். பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவை இருந்தால், இந்தப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. `பாப் ஸ்மியர் டெஸ்ட்' (pap smear test ) பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
* 40 வயதைக் கடந்த பெண்களுக்கு மெனோபாஸ் நின்றுவிடும் என்பதால், ஹார்மோன்களின் சுரப்பு குறைந்துவிடும். இதனால் `ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பின் அடர்த்தி குறையும் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் முதுகு வலி, எலும்பு முறிவு பிரச்னைகள் ஏற்படும். இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் அடர்பச்சை நிறக் கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். எலும்பு மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை உட்கொள்ளலாம்.
* உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு நீர் அருந்தவேண்டியது அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனதே. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும். இதன்மூலம் டிஹைட்ரேசன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்" என்கிறார் காவியா கிருஷ்ணன்.

முதல் கட்ட தியான முறையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து படித்து உணர்ந்த பின் தியானத்திற்கு உங்களை தயார் செய்து கொள்வது சிறப்பாகும்.
தியானம் மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை போல் கம்பீரமாகவும் சூரியனை போல் பிரகாசமாகவும் வைத்திருக்கும். தியானத்தால் விளையும் பயன்களை சொல்ல வார்த்தைகள் காணாது. அந்த அளவுக்கு பற்பல அற்புத பலன்களை உடையது. தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் மிக எளிதாக பழக முடியும்.
முதல் கட்ட தியான முறையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து படித்து உணர்ந்த பின் தியானத்திற்கு உங்களை தயார் செய்து கொள்வது சிறப்பாகும்.
நாம் வசிக்கின்ற வீட்டில் தியானம் பழகுவதற்கு நல்ல வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள். அமர்வதற்கு உடலுக்கு அச்சுறுத்தல் இல்லாதவாறு மெத்தை அல்லது போர்வையை மடித்து பயன்படுத்தலாம். தியானம் பழகும் இடத்தை அடிக்கடி மாற்ற கூடாது. அமர்வதற்கு பயன்படுத்தும் போர்வைகளையும் மாற்றுதல் கூடாது. முடிந்தால் மனதுக்கு பிடித்த வாசனையுள்ள பத்தியை கொளுத்தி வையுங்கள்.
காலை மாலை என எப்பொழுதும் தனிமையில் செய்யுங்கள். பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பித்தால் மிகவும் நன்று. தியானத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன் பேச்சை குறைத்து கொள்ளுங்கள். தியானத்தின் இடையில் தடைகள் ஏற்பட்டால் பிறர்மீது கோபம் கொள்ளாதீர்கள். தியானத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக தொடங்குங்கள்.
அதே போல் மகிழ்ச்சியாக முடியுங்கள். தியானம் பழக ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் தடங்கல்கள் நிறைய வந்து உங்களை ஈடுபடவிடாமல் தடுக்கும். அது இயற்கையின் விளையாட்டு. ஆதலால் மிகுந்த மன உறுதியுடன் பழகுங்கள். அப்படி ஒருவேளை இடையில் போக வேண்டி இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு தியானத்தை முடித்து விடுங்கள்.
காலையில் தியானம் செய்ய முடியாவிட்டால் மாலையில் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். எஜமானுக்கு விசுவாசத்தோடு இருக்கும் நாய் போல உங்கள் மனதோடு எப்போதும் விசுவாசத்தோடு இருங்கள்.

குடும்பங்கள் தம் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கும் அக்கறைக்கு ஒரு துளியும் குறைவின்றி அரசும் எல்லாத் துறைகளையும் விட கல்விக்கு அதிக நிதி அளித்துள்ளது.
2019-ம் ஆண்டின் சுட்டெரிக்கும் கோடை மெதுவாக விலக ஆரம்பிக்க, புதுக் கல்வியாண்டும் நெருங்கிவிட்டது. பல ஆயிரம் பெற்றோர்கள் தம் அரும்புக் குழந்தைகளின் கைப்பிடித்து கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் மிரட்சி கலந்து அவரவர்கள் வசதிக்கேற்ப கூட்டிச் செல்வதும் நம் கண்ணில் விரிகிறது. அந்தக் காட்சிகளில் தம் குழந்தைகள் மேல் அவர்கள் ஏற்றிய கனவுகளும் தெரிகின்றன. அந்தக் கனவுகளின் பாதை அவர்களை இட்டுச் செல்வது அவர்களின் இன்றைய கனவுப் பள்ளிகள்.
உலகில் எந்த நாட்டையும் விட தமது குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தும் மிக அதிகமான பெற்றோர்களை தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு. தனது பிள்ளைகளைத் தாண்டி, பேரன் பேத்திகளையும் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் தாத்தா பாட்டிகளும் நம்மிடையே உண்டு.
குடும்பங்கள் தம் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கும் அக்கறைக்கு ஒரு துளியும் குறைவின்றி அரசும் எல்லாத் துறைகளையும் விட கல்விக்கு அதிக நிதி அளித்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஏராளமான விற்பன்னர்களை விவசாயம் முதல் விண்வெளி வரையிலான எல்லாத்துறைகளிலும் நமது கல்விக்கூடங்கள் உருவாக்கியுள்ளன.
சுருங்கச் சொன்னால், பள்ளிக்கூட அறையிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை, அணுவிலிருந்து சந்திரனைத் தாண்டி செவ்வாய்க்கிரகம் வரை தமிழகத்தில் படித்தவர்களின் உயரங்கள் சிறப்பாகவே உள்ளன.
நாடு சுதந்திரம் பெற்ற பின், நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியம் என்றுணர்ந்து ஏராளமான பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. பெருகி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஈடுகட்டும் வகையில், கல்வி நிலையங்களை உருவாக்க முடியாத நிலை அரசுக்கும் உருவானது. அரசு உதவி பெரும் கல்வி நிலையங்களை தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தும் நிலை முதலில் உருவானது.
அதன்பின் அரசு அனுமதியுடன் சில ஆர்வலர்கள் பொருளாதார லாப நோக்கின்றி ஒரு சமுதாயத் தொண்டாய் மட்டுமே கல்வி நிலையங்களை உருவாக்கி நடத்த ஆரம்பித்தனர். இப்படி மூன்று வகையான கல்வி நிலையங்கள் இருந்தாலும் சமுதாய மற்றும் பொருளாதார அடிப்படையில் எந்த வித்தியாசத்தையும் கல்வி நிலையங்கள் ஒரு தனி மனிதனிடம் உருவாக்கவில்லை.
நாம் பார்க்கும் அந்தச் சிறப்பான இடத்தில் தமிழகமும், தமிழர்களும் இன்று வரை இருக்கக் காரணம், தேவையான அளவில், சம வாய்ப்புடன் நமக்குக் கிடைத்த பள்ளிகளும், கல்லூரிகளும், நன்கு படித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் பேராசிரியர்களும். பல ஆயிரம் குடும்பங்களில் முந்தைய தலைமுறைகளை விட அடுத்த தலை முறை தலை நிமிர்ந்து நடக்கும் ஒரு சமுதாய மாற்றத்திற்குக் காரணமான கோவில்களாகவும், கடவுள்களாகவும் எனக்கு அந்தக் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும் தெரிவது ஒரு மிகையான கற்பனை அல்ல.
இப்படிப் பார்த்தும், படித்தும் மகிழ்ந்து கொள்ளும் நமக்கு, இன்றைய சில செய்திகளைப் பார்க்கும்போது எதிர்காலம் பற்றி ஒரு பெரிய கேள்விக்குறியும் எழுகிறது.
நான் பிறந்து, வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்ற கோவையில் ஒரு தாய் தனது மகனை ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பில் சேர்ப்பதற்குத் தேவையான பணத்தை குறித்த காலத்திற்குள் கட்ட முடியாததால் மனம் வாடி தனக்குத்தானே தீயிட்டு இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு நான் எழுதியது,
இது ஒரு தனிப்பட்ட பெண்ணின் தவறான முடிவாக நான் பார்க்கவில்லை. இன்று சமுதாயத்தில் மெதுவாகப் பரவி வரும் ஒரு பதைபதைக்கக் கூடிய எதிர் மறைச் சமுதாய மாற்றமாக நான் உணர்கிறேன்.
‘நோய்நாடி நோய்முதல் நாடியது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’
என்ற வள்ளுவனின் வாக்குப்படி, இதற்கு காரணம் தெரிந்தால் பின் அதைத் தடுக்கும் வழிகளும் புலப்படலாம்.
அனைவருக்கும் கார் என்ற குறிக்கோளுடன் டாடா குழுவின் கண்டுபிடிப்புத்தான் இந்தியாவில் நானோ கார், “ஏழைகளின் கார்” என்ற விளம்பரத்துடன் வெளியிட்டதைப் பார்த்து மற்ற கார் உற்பத்தியாளர்கள் பயந்தனர். ஆனால் வர்த்தக ரீதியில் தோற்று, நானோ உற்பத்தியே மூடப்பட்டுவிட்டது. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி, காரில் ஏதும் குறையில்லை, இருப்பினும் “ஏழைகளின் கார்” என்று விளம்பரப்படுத்தியதால் தோற்றதாம்!.

பெற்றோர்க்கிடையேயும், தனது குழந்தை மற்ற குழந்தைகளைக் காட்டிலும் தேர்வுகளில் முன்னிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் போட்டியில் முன்னிற்கும் கல்வி வளாகங்களை நோக்கிய கவனம் திரும்பியது. தன் குழந்தைகளை எப்படியாவது அத்தகு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற வேட்கை பெற்றோர் மனதில் தோன்ற, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ப்பவர்கள் குறைந்தார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் சிக்கிய இன்றைய சமுதாயம் அவர்களை அறியாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட மாயையால் பல அறிஞர்களை உருவாக்கிய தனக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, தனது சக்திக்கு மீறிய தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க முயன்றார்கள். அப்படி முயன்றவர்களில் ஒருவர்தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்த்த தனக்குத்தானே தீயிட்டு மடிந்த அந்தப் பெண்.
அப்படி கஷ்ட கதியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் பலர் பள்ளியில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் தான் படிக்கும் பள்ளிக்கும் தான் வசிக்கும் வீட்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் தனது பெற்றோரிடமிருந்து மனதால் விலக ஆரம்பித்திருக்கிறார்கள். சமுதாயத்தில் ஒரு வகையான மனப் பிணி உருவாகுகிறதோ என்ற அச்சம் கலந்த ஐயம் உருவாவதை இங்கு உணர முடியும்.
இந்தப் பிணிகளையப்பட வேண்டுமானால் அவரவர் சக்திக்கேற்ற பள்ளிகளில், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தனது குழந்தைகளைச் சேர்ப்பதே சிறந்த தீர்வாகும். அரசுப்பள்ளிகளின் சிறப்பு, எல்லாப் பள்ளிகளிலும் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பணிபுரிகிறார்கள். மறு பயிற்சியும் தற்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பலப்பல ஊக்கப் பரிசுகள் மற்றும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசின் பங்கையும் தாண்டி முன்பு பள்ளிகளில் படித்து தேர்ந்து இப்போது நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் சேர்ந்து அரசுப் பள்ளிகளுக்கு உயர்தர வசதிகள் செய்து தந்து அவற்றை “கனவுப் பள்ளி”களாக்கி விட்டார்கள்.
எனவே, தமக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் சென்று தமது குழந்தைகளைச் சேர்த்தால் அவர்களின் ஆரோக்கியமான கல்விக்கும் தங்களின் மேம்பட்ட சமுதாய வாழ்வுக்கும் அது வழி வகுக்கும் என நம்புகிறேன். இங்கே உங்களிடமும் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்கள் பங்கிற்கு இந்தப் பணியில் ஏதாவது செய்யலாமே?!
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மையம்.

“நானோவை” சாலையில் ஓட்டும்போது தன்னைத்தானே ஏழை என்று பறைசாற்றுவதாய் இருக்கும் எனவே அந்தக் காரை ஒதுக்கினார்களாம். இதை மனதில் வைத்து மேலே படியுங்கள், போன தலைமுறைப் பெற்றோர்களுக்கு, அதிகமான குழந்தைகள் இருந்தன. அப்போதைய கல்வி வளாகங்களுக்கிடையே பெரிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கவில்லை. எனவே தமது குழந்தைகளை வீட்டிற்கு அருகில் இருந்த பள்ளிக்கு அனுப்பினால் போதும் என்றிருந்தார்கள். ஆனால் இப்போது, வர்த்தக ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி வளாகங்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட போட்டிகள் விளையாட்டு மைதானங்களைத் தாண்டி வகுப்பறைகளுக்குள்ளும் நுழைந்தன.

பெற்றோர்க்கிடையேயும், தனது குழந்தை மற்ற குழந்தைகளைக் காட்டிலும் தேர்வுகளில் முன்னிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் போட்டியில் முன்னிற்கும் கல்வி வளாகங்களை நோக்கிய கவனம் திரும்பியது. தன் குழந்தைகளை எப்படியாவது அத்தகு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற வேட்கை பெற்றோர் மனதில் தோன்ற, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ப்பவர்கள் குறைந்தார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் சிக்கிய இன்றைய சமுதாயம் அவர்களை அறியாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட மாயையால் பல அறிஞர்களை உருவாக்கிய தனக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, தனது சக்திக்கு மீறிய தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க முயன்றார்கள். அப்படி முயன்றவர்களில் ஒருவர்தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்த்த தனக்குத்தானே தீயிட்டு மடிந்த அந்தப் பெண்.
அப்படி கஷ்ட கதியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் பலர் பள்ளியில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் தான் படிக்கும் பள்ளிக்கும் தான் வசிக்கும் வீட்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் தனது பெற்றோரிடமிருந்து மனதால் விலக ஆரம்பித்திருக்கிறார்கள். சமுதாயத்தில் ஒரு வகையான மனப் பிணி உருவாகுகிறதோ என்ற அச்சம் கலந்த ஐயம் உருவாவதை இங்கு உணர முடியும்.
இந்தப் பிணிகளையப்பட வேண்டுமானால் அவரவர் சக்திக்கேற்ற பள்ளிகளில், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தனது குழந்தைகளைச் சேர்ப்பதே சிறந்த தீர்வாகும். அரசுப்பள்ளிகளின் சிறப்பு, எல்லாப் பள்ளிகளிலும் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பணிபுரிகிறார்கள். மறு பயிற்சியும் தற்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பலப்பல ஊக்கப் பரிசுகள் மற்றும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசின் பங்கையும் தாண்டி முன்பு பள்ளிகளில் படித்து தேர்ந்து இப்போது நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் சேர்ந்து அரசுப் பள்ளிகளுக்கு உயர்தர வசதிகள் செய்து தந்து அவற்றை “கனவுப் பள்ளி”களாக்கி விட்டார்கள்.
எனவே, தமக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் சென்று தமது குழந்தைகளைச் சேர்த்தால் அவர்களின் ஆரோக்கியமான கல்விக்கும் தங்களின் மேம்பட்ட சமுதாய வாழ்வுக்கும் அது வழி வகுக்கும் என நம்புகிறேன். இங்கே உங்களிடமும் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்கள் பங்கிற்கு இந்தப் பணியில் ஏதாவது செய்யலாமே?!
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மையம்.
குழந்தைகள் வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காராமணி சேர்த்து வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - ஒன்றரை கப்,
காராமணி - அரை கப்,
வெங்காயம் - 1 ,
தக்காளி - 1,
சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காராமணியை ஊறவைத்து குக்கரில் வேக விட்டு, வடிக்கட்டி ஆறவிடவும்.
சாதத்தை உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அதில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேகவைத்த காராமணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.
அடுத்து வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும். பிறகு மூடி 2 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும்.

உப்பு - தேவையான அளவு.

கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அனைத்து தைராய்டு வியாதிகளுக்கும் நவீன விஞ்ஞான மருத்துவ சிகிச்சை முறைகள் மூலம் பூரண குணமடையலாம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தல் அவசியம்.
என் குழந்தை பிறந்தது முதல் உடல் வளர்ச்சி சரியாக இல்லை. எங்கள் குழந்தைக்கு மூளை வளர்ச்சி சீராக இல்லை. என் மகள் பூப்பெய்வது தள்ளிப் போகிறது. என்ன செய்வது? என்று பொதுமக்கள் கூறி திகைத்து நிற்கிறார்கள். சில குடும்பத் தலைவிகளோ எனக்கு உடம்பு சோர்வாக உள்ளது. எடை கூடிக்கொண்டே போகிறது. குளிர் தாங்க முடியவில்லை, பேச்சு குளறுகிறது, மாதவிடாய் தள்ளிப் போகிறது என்ன காரணம் என்றே தெரியவில்லை என்று கூறி ஆதங்கப்படுகிறார்கள்.
இன்னும் சில ஆண்களும், பெண்களும் எனக்கு சமீபத்தில் குரல் மாறிவிட்டது. பேச்சு சரியாக வரவில்லை. படுத்தால் மூச்சு திணறுகிறது. முன் கழுத்தில் கட்டி உள்ளது. அது வளர்ந்து வருகிறது என்ன செய்வது என்றே தெரியவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பல பெண்கள் எனக்கு அடிக்கடி வியர்க்கிறது. நெஞ்சு துடிப்பு அதிகமாக உள்ளது. அடிக்கடி கோபப்படுகிறேன். கோபத்தை அடக்க முடியவில்லை. வயிற்றுப்போக்கு போகிறது, உடல் எடை குறைந்துவிட்டது இதற்கு தீர்வு என்ன? என்று கவலையுடன் கூறினர்.
இந்தக் குரல் உலகின் எல்லா நாடுகளிலும் சாதி, மத, இனம் கடந்து பல நூறு ஆண்டுகளாக ஒலித்து வந்தது. மருத்துவ உலகம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக தைராய்டு சுரப்பியில் ஏற்படுகிற பல்வேறு விதமான நோய்கள் இருக்கின்றன என கண்டறிந்து கூறியது. தைராய்டு சுரப்பி நோய்களால் உலகளவில் 150 மில்லியன் மக்களும் இந்திய அளவில் 13 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு சுரப்பி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவரை அணுகுவதில் அதிகமான கால தாமதம் ஏற்பட்டு நோய் பாதிப்பும் கடுமையாக உள்ளது என தெரிவித்தது.
மேலும் பிறவியிலேயே தைராய்டு செயல்பாடு குறைவாக பிறக்கும் குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் மூளை பாதிக்கப்படும் என தெரிவித்தது. தைராய்டு சுரப்பி நாளமில்லா சுரப்பிகள் வகையைச் சேர்ந்தது பிட்யூட்டரி சுரப்பி, அட்ரினல் சுரப்பி கணையத்தில் உள்ள வீட்டா லாங்கர்ஹன் சுரப்பி முதலியவை இந்த வகைகளை சேர்ந்தவை. இவற்றின் சுரப்புகள் ஒரு நாளத்தின் துணையில்லாமல் நேரடியாக ரத்தத்தில் கலந்து தங்கள் பணியைச் செய்வதால் இவற்றிக்கு நாளமில்லா சுரப்பிகள் என பெயர் வந்தது.
பிறந்த குழந்தைக்கு தைராய்டு சுரப்பி சரியாக இயங்குகிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது? குழந்தை பிறந்த 3-வது மாதத்தில் தாயின் முகம் பார்க்க வேண்டும். 5 முதல் 6-வது மாதத்தில் தலை ஆட்டம் நிற்க வேண்டும். 8-வது மாதத்தில் தவழ்ந்து, 1 வயதில் நடை பயில தொடங்கி, சின்ன சின்ன வார்த்தைகள் பேசத் தொடங்கினால் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்கிறது எனலாம். இதில் காலதாமதம் ஏற்பட்டால் தைராய்டு சுரப்பியில் கோளாறு இருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.
தைராய்டு சுரப்பி கழுத்தின் முன் கீழ்ப்பகுதியில் சிறகு விரித்த வண்ணத்துப் பூச்சி வடிவில் உள்ளது. இதில் சுரக்கும் தைராக்ஸின் என்னும் ஹார்மோன் உணவில் உள்ள சத்துகளை சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரித்து நாம் வேலை செய்ய தேவையான சக்தியை வழங்குகிறது. இந்த தைராக்ஸின் ஹார்மோன் தயாரிக்க அயோடின் சத்து மிக மிக அவசியமானது. இது நாம் வசிக்கும் மண்ணிலிருந்து நாம் உண்ணும் உணவு, காய்கறிகள், பால், மீன், தண்ணீர் மூலம் அயோடின் உப்பாக உடம்பிற்கு கிடைக்கிறது.

தைராய்டு சம்பந்தப்பட்ட வியாதிகள் பெரும்பாலும் 5 வகைப்படும். அவை, தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்தல், தைராய்டு சுரப்பி அதிகமாக வேலை செய்தல் முன்கழுத்து கழலை தைராய்டைட்டிஸ் என்னும் ஆட்டோ இம்யூன் வியாதி தைராய்டு கேன்சர்.
இதில் முன் கழுத்து கழலை அதிகமாக பூப்பெய்தும் பருவத்தில் உள்ள பெண் குழந்தைகளைப் பாதிக்கிறது. காரணம் அந்த வயதில் அதிகமாக தேவைப்படும் அளவு அயோடின் சத்து உடலுக்கு கிடைக்காமல் போவதாகும். தைராய்டு நோய்களில் இது தான் அதிகமானவர்களை பாதிக்கிறது. தைராய்டைட்டிஸ் நோய் தைராய்டு திசுக்களுக்கு எதிராக நமது உடம்பில் சில சுரப்புகள் சுரந்து அவற்றை அழிப்பதால் ஏற்படுகிறது.
தைராய்டு வேலைத்திறன் குறைவு நோய் அயோடின் சத்து குறைவு மற்றும் தைராக்ஸினுக்கு எதிரான ஆன்டிபாடிஸ் நம் ரத்தத்தில் இருப்பதால் ஏற்படுகிறது. பிறவியிலேயே அயோடின் சத்து குறைவான தாயாருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தைராய்டு சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. இவை தவிர தைராய்டு சுரப்பியில் புற்று நோய்களும் ஏற்படுகின்றன. அது மனிதனுக்கு ஏற்படும் மொத்த புற்றுநோய்களில் 1 சதவீதம் அளவில் உள்ளது.
இவை அனைத்திலும் முன் கழுத்து கழலை நோயின் தாக்கம் தான் இந்தியாவில் அதிகம். எனவே அதை தடுக்கும் நோக்கில் இந்திய அரசு சமையல் உணவில் அயோடின் உப்புகளை குறிப்பிட்ட அளவில் கலந்து மக்களுக்கு வழங்க சட்டமியற்றியுள்ளது. இதனால் இந்தியாவில் முன் கழுத்து கழலை அதிகமாக இருந்த உத்தரபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முன் கழுத்து கழலை 1,000 பேருக்கு 100 பேர் என்கின்ற நிலை மாறி ஆயிரத்திற்கு 18 பேர் என்ற நிலையை அடைந்துள்ளது.
மழை மறைவு பிரதேசம் மற்றும் மலை அடிவாரங்களில் வாழும் மக்களுக்கும் வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் அயோடின் கலந்த உப்பு மிக மிக அவசியம். தைராய்டு வியாதியை தடுக்க உணவில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிகள் வாரம் மூன்று முறை உணவில் கடல் மீன்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். அயோடின் சத்து மிகவும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் திரவ வடிவில் இருக்கும் அயோடின் உப்பை மருத்துவர்களின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் தைராய்டு நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ளலாம்.
அனைத்து தைராய்டு வியாதிகளுக்கும் நவீன விஞ்ஞான மருத்துவ சிகிச்சை முறைகள் மூலம் பூரண குணமடையலாம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தல் அவசியம். எனவே பொதுமக்களிடம் தைராய்டு நோய்கள் பற்றிய போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என கருதி அமெரிக்க தைராய்டு சங்கம் மற்றும் ஐரோப்பிய தைராய்டு அசோசியேஷன் இரண்டும் இணைந்து 2008-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி முதல் ஆண்டுதோறும் உலக தைராய்டு தினம் எல்லா நாடுகளிலும் விழிப்புணர்வு நாளாக கொண்டாட அறிவுறுத்தியது. நமது நாட்டிலும் உலக தைராய்டு தினம் மே 25-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் தைராய்டு நோய்கள் தடுப்பு முறைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி நோயற்ற வாழ்வு வாழ விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது தலையாய கடமை.
டாக்டர் வி.எஸ்.சுரேந்திரன்,
உதவி தலைவர்,
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்.