என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - கால் கிலோ
    பூண்டு - 6 பல்
    காய்ந்த மிளகாய் - 6
    வெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    நல்லெண்ணெய், - தேவையான அளவு
    புளி - சிறிதளவு
    பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளுங்கள்.

    மிளகாய் ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைத்து, பூண்டு, புளி, தக்காளியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக சுருண்டு வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெந்தயப் பொடியைத் தூவி இறக்கிவையுங்கள்.

    இந்தத் தக்காளி ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உங்கள் காதலியைக் கவர்வது எப்படி? அதாவது, எப்படியோ ஒரு லவ்வர் செட் செய்துவிட்ட புது லவ்வர் பாய்ஸுக்கான ஜில்ஜில் டிப்ஸ்கள் இவை.
    இந்த மாதிரியான கட்டுரையை இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எழுதினாலும் அதன் தன்மை மாறாது. ஏனென்றால், இதெல்லாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே வள்ளுவர் எழுதியதுதான். உங்கள் காதலியைக் கவர்வது எப்படி? அதாவது, எப்படியோ ஒரு லவ்வர் செட் செய்துவிட்ட புது லவ்வர் பாய்ஸுக்கான ஜில்ஜில் டிப்ஸ்கள் இவை.

    நம்பர் 1:

    குத்திக்காட்டாதீர்கள். அவர்கள் தப்பே செய்திருந்தாலும் எடுத்தவுடனே `எனக்குத் தெரியும் நீ இப்படித்தான் செய்வே'ன்னு என ஆரம்பிக்காதீர்கள். வேறு ஒருவர் குத்திக்காட்டுவதைவிட, நீங்கள் குத்திக்காட்டுவதுதான் அவருக்கு அதிகம் வலிக்கும். உங்களைக் காதலிக்கத் தொடங்கிய பெண், இந்த உலகத்தில் வேறு யாரைவிடவும் உங்களைத்தான் அதிகம் நம்புவார்.

    நம்பர் 2:

    அதிகமாக வழியாதீர்கள். உலகத்திலேயே உங்களுக்கு அதிகம் பிடித்த நபர் உங்கள் காதலியாகத்தான் இருப்பார். அதுவும் உங்கள் லவ் `சைவக் காதலா'க இருந்தால் சொல்லவே வேண்டாம். கல்யாணம் வரை அநியாயத்துக்கு ஜொள்ளின் உச்சத்துக்குப் போய் புகழ்ந்துகொண்டே இருப்பீர்கள். இப்படி இருப்பது, உங்களின் காதல் வாழ்க்கைக்கு நிச்சயமாக ஒருநாள் இடைஞ்சலைக் கொண்டுவரும்.

    முடிந்தவரை இயல்பாக இருங்கள். குறிப்பாக, உங்கள் காதலியுடன் இருக்கும்போது நீங்கள் நீங்களாகவே இருங்கள். இம்ப்ரெஸ் செய்வதாக நினைத்து அளவுக்கு அதிகமாக வழிந்துவைத்தால், இதுதான் உங்கள் குணம் என நினைத்துக்கொள்வார். என்றாவது ஒருநாள் உங்களின் நிஜ முகம் தெரியவரும்போது அதிர்ச்சியடைவார். நீங்கள் நீங்களாக இருப்பதைத்தான் எந்தப் பெண்ணும் விரும்புவார்.



    நம்பர் 3:

    அக்கறை. சுயமான முடிவுகளை எடுப்பதைப் பெண்கள் விரும்பினாலும், தன் மீது அக்கறையுள்ள ஆணைத்தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவார். காதலி என்பவர், உங்களின் நிரந்தரத் தோழி; பிரியவே கூடாது என நீங்கள் நினைக்கும் வாழ்க்கைத்துணை. மேற்சொன்னது உண்மையாக இருக்கும்பட்சத்தில் உங்களைப் பற்றிய விஷயங்களைவிட அவர் குறித்த விஷயங்களை நீங்கள் அதிகம் அறிந்துவைத்திருக்கவேண்டும்.

    அவரின் பிறந்த நாள் தொடங்கி அனைத்து விவரங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என விரும்புவார். அதை சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். "தெருவில் விற்றுக்கொண்டு போனது. உனக்குப் பிடிக்கும்னு வாங்கிட்டு வந்தேன்" என்பது, எழுதும்போது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அதுதான் அவருக்கு 'க்ளவுட் இடைவெளி. உங்கள் காதலி மீதான அக்கறை எப்படி உங்கள் காதலுக்கு ஆக்ஸிஜனோ, அதேபோல் உங்களுக்குள் போதுமான இடைவெளி இருப்பதையும் அவர் விரும்புவார்.

    இருவரும் இருக்கிறீர்கள் அப்போது ஒரு கால் வருகிறது. அவர் பேசி முடித்தவுடனே க்யூரியாசிட்டி உந்தித்தள்ள "போனில் யார்?" என்று கேட்பது உங்கள் காதலிக்கு சர்வநிச்சயமாகக் கோபம் வரவழைக்கும் கேள்வி. உங்களிடம் சொல்லவேண்டியதாக இருந்தால் அவரே சொல்வார். அந்த இடைவெளியை அவருக்கு வழங்காமல் 'யார்... என்ன?' என்பது போன்ற கேள்விகளை நீங்கள் எழுப்பினால், அதுதான் உங்கள் காதலுக்கு நீங்களே வைக்கும் டைம்பாம். உங்கள் மொபைலின் பேட்டன் லாக் முதல் மெயில் பாஸ்வேர்டு வரை காதலிக்குத் தெரிந்திருந்தாலும், அவருக்கான ஸ்பேஸை நீங்கள் கொடுத்தே ஆகவேண்டும்.
    உண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்..? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    “நோய்களை முன்னரே கண்டறிவதன் மூலம் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ளலாம். அந்த வகையில் முழு உடல் பரிசோதனை (Master Health Check-up) அதற்குப் பெரிதும் உதவும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக, உடல்நலனில் அக்கறை செலுத்த பலருக்கும் நேரமிருப்பதில்லை. `நோய் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மனநிலையே இன்றைய தலைமுறையினரிடம் மேலோங்கி நிற்கிறது.

    இதனால், நோய் அறிகுறிகள் வெளிப்படும் வரை பலரும் கண்டுகொள்வதில்லை. நோய் முற்றிய பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல லட்ச ரூபாய்களை இழந்தும் பலன் கிடைக்காமல் போய்விடவும் அது காரணமாகிறது. இருந்தாலும், எல்லோரும் இந்த பரிசோதனை செய்து கொண்டுதான் ஆகவேண்டும் என்பதில்லை.

    என்னென்ன பரிசோதனைகள்?

    கண், பல், காது, மூக்கு, தொண்டைப் பரிசோதனைகள், மார்பக எக்ஸ்-ரே, இ.சி.ஜி ரத்த வகை, ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பு,  யூரியா, கிரியேட்டினின் போன்ற அளவுகள், வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, தைராய்டு சுரப்புப் பரிசோதனை, கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பரிசோதனை போன்ற அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனைகள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் வசூலிக்கப்படும் கட்டணத்தைப் பொறுத்து மாறுபாடு இருக்கும்.

    யாரெல்லாம் செய்துகொள்ள வேண்டும்?

    பொதுவாக, 35 வயதுக்குமேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற ஏதாவது மரபு வழி நோய்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 35 வயதுக்கு முன்பாக இந்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.



    புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், போதிய உடலுழைப்பு  இல்லாமல் உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுபவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

    நன்மைகள் என்னென்ன?

    பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.

    இதயம், சிறுநீரகம், கல்லீரல், மார்பகம், பெண்களுக்கு கர்ப்பப்பை போன்ற உறுப்புகளில் ஏற்பட இருக்கும் நோய்களை இதன்மூலம் கண்டறிய முடியும்.

    சர்க்கரைநோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், இதன்மூலம் எச்சரிக்கையாக இருந்து, சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளைக் கடைப்பிடித்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

    இது மட்டுமல்லாமல், புற்றுநோய் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் நோயைக் குணப்படுத்து எளிமையாகும்.
    குழந்தைகளுக்கு அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிட கொடுப்பது நல்லது. இந்த சீசனில் கிடைக்கும் நுங்கை வைத்து பலூடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நுங்குத் துண்டுகள் - 10
    சப்ஜா விதைகள் - 2 டீஸ்பூன்,
    விருப்பமான பழக்கலவை - கால் கப்,
    விருப்பமான நட்ஸ் கலவை - 4 டீஸ்பூன்,
    பதநீர் - கால் கப்,
    நுங்கு புட்டிங் - ஒரு கப்.



    செய்முறை :

    நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைக்கவும்.

    உயரமான கண்ணாடி டம்பளர்களில் முதலில் சிறிதளவு ஊறிய சப்ஜா விதைகளை சேர்க்கவும். அதன் மீது சிறிதளவு பழக்கலவை சேர்க்கவும். பிறகு பதநீர், நுங்கு புட்டிங்கை சேர்க்கவும். அதன் மீது மீண்டும் பழக் கலவை சிறிதளவு தூவவும். அதன் மீது நுங்குத் துண்டுகள் சேர்க்கவும். இறுதியாக நட்ஸ் வகைகளை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

    குளுகுளு நுங்கு பலூடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு நல்ல மாறுதலை தரும். இந்த நாட்களில் குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பது நல்லது.
    பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் PreMenstrual Syndrome (PMS) ஏற்படும். அந்நேரத்தில் மார்பகத்தில் வலி, உடல் வலி போன்றவற்றுடன் பதற்றம், எரிச்சல் என உணர்வு ரீதியாகவும் பெண்கள் பலவீனமாக உணர்வார்கள். அப்போது உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு நல்ல மாறுதலை தரும். உடற்பயிற்சியின் போது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளியாகும் ஒரு வகை ரசாயனமான Endorphins வலிகளை குறைத்து மகிழ்ச்சி ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால், PMS நாட்களில் அவசியம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

    மாதவிடாயின் போது குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பது நல்லது. ஹார்மோன்களின் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வயிறு மற்றும் உடல் வலி இருக்கும். மனமும் உடலும் சோர்ந்து காணப்படும். அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் செய்தால் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாகலாம்.

    குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் கூட ரத்தப்போக்கு அதிகரிக்கும். இப்படிப்பட்டவர்கள்
    இந்நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.

    உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் மெதுவான நடைப்பயிற்சி, எளிய வகை ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். யோகாசனம் செய்பவர்கள் மாதவிடாய் நாட்களில் பத்மாசனம் போன்று தரையில் அமர்ந்து செய்யக்கூடிய எளிய ஆசனங்களைச் செய்யலாம். தலைகீழாக நிற்கும் யோகாசனங்கள் செய்யக்கூடாது. கர்ப்பப்பைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் மாறுபடும்.

    மாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது, சிலருக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சில பெண்கள் கருத்தரிக்க வேண்டி காத்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதவிடாய் கொஞ்சம் வந்திருக்கும். அதனால் கர்ப்பம் இல்லை என நினைத்து தவறுதலாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். அதில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புண்டு. குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்பவர்கள் மாதவிடாய் வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை செய்து கர்ப்பம் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம். அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். 
    கடலை எண்ணெயில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. கர்ப்பிணிகள் தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் மகப்பேறில் சிரமம் இருக்காது.
    பொதுவாக ‘கடலை எண்ணெய்’ எனப்படும் வேர்க்கடலை எண்ணெயில் கணக்கற்ற நன்மைகள் அடங்கி இருக்கின்றன. போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. அவர்கள் தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் மகப்பேறில் சிரமம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

    கடலை எண்ணெய், நீரிழிவு நோயைத் தடுக்கும். நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்கனீஸ் முக்கியப் பங்காற்றுகிறது.

    நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருக்கிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது.



    நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நமக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன், இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள வைட்டமின் 3 நியாசின், மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா 6 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

    பெண்களுக்கு மார்பகக் கட்டி உண்டாவதை வேர்க்கடலை தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் போன்றவை இதில் நிறைந்துள்ளன. பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் வேர்க்கடலை தடுக்கிறது. 
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பாகற்காயை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பெரிய பாகற்காய் - 1
    எலுமிச்சம்பழம் - பாதி
    காய்ச்சிய பால் - 1/2 கப்
    எண்ணெய் - 1 தேக்க‌ர‌ண்டி
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 1
    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    தாளிக்க :

    சோம்பு - கால் தேக்க‌ர‌ண்டி
    உளுத்தம்பருப்பு - அரை தேக்க‌ர‌ண்டி
    பட்டை - 1
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விட வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    தக்காளி நன்றாக வெந்ததும் வெந்த பாகற்காய் போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.

    கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெரும்பாலானோரின் விருப்ப தேர்வு பெண் குழந்தைகளாகவே இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெரும்பாலானோரின் விருப்ப தேர்வு பெண் குழந்தைகளாகவே இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஆண் குழந்தைகளை காட்டிலும் 60 சதவீதம் அதிகமாக பெண் குழந்தைகளே தத்தெடுக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    அதிலும் மகாராஷ்டிராதான் குழந்தைகள் தத்தெடுப்பில் முன்னணியில் இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டு 642 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 35 பெண் குழந்தைகளாகும். கர்நாடகா மாநிலத்தில் தத்து கொடுக்கப்பட்ட 286 குழந்தைகளில் 167 பெண் குழந்தைகள். 2017-18-ம் ஆண்டில் இந்தியாவில் 3276 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 1858 பெண் குழந்தைகள். ஆண் குழந்தைகள் 1418. 2016-2017-ம் ஆண்டு தத்தெடுக்கப்பட்ட 3210 குழந்தைகளில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை 1915.

    இதுகுறித்து குழந்தைகள் தத்தெடுப்பு ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி லெப்டினென்ட் கர்னல் தீபக்குமார் கூறுகையில், ‘‘தத்தெடுக்கும் பெற்றோர் பெண் குழந்தைகளையே அதிகமாக விரும்புகிறார்கள். பெண்-ஆண் குழந்தைகள் தேர்ந்தெடுப்பு சதவீதம் 55:45 என்ற அளவில் இருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் அதிகமாக இந்திய குழந்தைகளை தத்தெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

    அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களிலும் குழந்தையை அதிகமாக தத்தெடுக்க விரும்புகிறார்கள். ஆண் குழந்தையை காட்டிலும் பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்குவதும், கையாளுவதும் எளிதாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதுவே பெண் குழந்தைகள் அதிகம் தத்தெடுக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது’’ என்கிறார்.
    ஆரோக்கியம் கருதி பழங்களை சாப்பிட்டு வரும் பெண்கள், அழகுக்காகவும் அதனை தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பழங்களால் கிடைக்கும் அழகு எந்த பக்கவிளைவும் இல்லாதது.
    ஆரோக்கியம் கருதி பழங்களை சாப்பிட்டு வரும் பெண்கள், அழகுக்காகவும் அதனை தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்கள் வழக்கமாக பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் ரசாயனம் கலந்திருக்கிறது. அது சிலரது சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பழங்களால் கிடைக்கும் அழகு எந்த பக்கவிளைவும் இல்லாததாக இருக்கிறது.

    பழங்கள் அழகுக்காக எப்படி பயன்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

    ஆப்பிள்: இது சருமத்திற்கு பொலிவு தரும் ‘ஸ்கின் டோனர்’. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். ஆப்பிளை கூழ்போல் ஆக்கி, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.

    மாம்பழம்: எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தரும். நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூச வேண்டும். சருமத்தின் சுருக்கங்களை இது போக்கும்.



    ஆரஞ்ச்: வைட்டமின் சி நிறைந்திருக்கும் பழம் இது. இரண்டாக வெட்டி, ஒரு பகுதியால் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் சருமம் பிரஷ் ஆகிவிடும். பழத்தோலை நகங்களில் தேய்த்தால் கறை நீங்கும். தோலை வெயிலில் காயவைத்து தூளாக்கி பாதுகாத்திடுங்கள். அதில் முல்தானிமெட்டியும், தண்ணீரும் கலந்து குழைத்து முகத்தில் ‘பேக்’ செய்யலாம். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவி விட்டால் முகம் பளிச் சிடும்.

    நேந்திரன் பழம்: பழத்தின் உள்ளே கறுப்பாக இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு கூழாக்கி முகத்தில் பூச வேண்டும். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சருமத்திற்கு புத் துணர்ச்சியை தரும்.

    திராட்சை: எண்ணெய் தன்மை கொண்ட, பருக்கள் உருவாகும் சருமத்திற்கு இது மிகவும் ஏற்றது. தினமும் திராட்சை சாறு பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.

    மாதுளை: சுருக்கத்தையும், கருப்பு படையையும் போக்கும் தன்மைகொண்டது. மாதுளையை அரைத்து முகத்தில் பூசி கழுவி விட்டால் முகமும் மாதுளை போல் பளிச்சிடும். செயலிழந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கும் திறன் இதற்கு உண்டு.

    பப்பாளி: பப்பாளி பழக்கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினிமினுப்பும் கிடைக்கும். பப்பாளி கூழ், ஓட்ஸ், தேன் போன்றவைகளை கலந்து ‘பேஸ் பேக்’காக பயன்படுத்தலாம். பழங்கள் பெண்களின் சருமத்தை பளிச்சிடவைக்கிறது. 
    கவுட் எனப்படுவதும் ஒருவகை ஆர்த்தரைட்டிஸ், வாத நோய்தான். இந்த நோய்க்கு ஆயுர்வேதத்தில் என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    கவுட் எனப்படுவதும் ஒருவகை ஆர்த்தரைட்டிஸ், வாத நோய்தான். இது திடீரென வரும். பாதிக்கப்பட்ட இடத்தில் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும். அந்த இடம் சிவந்து போகும். பெரும்பாலும் பாதத்தில் கால் பெருவிரல் அடியில் வரும். சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மீண்டும், மீண்டும் வரும். காலப்போக்கில் மூட்டுக்கள், பிடி திசுக்கள், டென்டன்ஸ் எனப்படும் ஜவ்வு ஆகியவற்றையும் பாதிக்கும்.

    இந்நோய், ரத்தத்தில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாகும்போது வரும். யூரிக் அமிலம் படிகங்களாகி அவை மூட்டுக்கள், ஜவ்வு மற்றும் சுற்றியுள்ள திசுக்களையும் பாதிக்கும். ஆண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவர். பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நின்ற பின் இந்நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

    அறிகுறிகள் :

    * இரவில் திடீரென வரும்.
    * வந்து 24 மணிநேரம் வரை வலி மிகக்கடுமையாக இருக்கும்.
    * பெரும்பாலும் பாதத்தில் பெருவிரல் அடியில் வந்தாலும், பாதம், கணிக்கால், முழங்கால், கை, மணிக்கட்டு ஆகிய இடங்களிலும் வரலாம்.
    * கடுமையான வலி குறைந்தபின்னும், ஒ
    ருவித சவுகரியம் இருந்து கொண்டே இருக்கும். அவை நீண்ட நாட்கள் இருப்பதோடு, பிற மூட்டுக்களையும் பாதிக்கும்.
    * பாதித்த இடம் சிவந்து உப்பி விடும்.

    கவுட் தீவிரமாகும்போது, யூரிக் அமில படிகங்கள் (டோபி) உடலின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் மென்மையான திசுக்களை பாதிக்கும். பெரும்பாலும் விரல்களில் முடிச்சு முடிச்சாக காணப்பட்டாலும், நோய் தீவிரமாகும்போது, தோள் பட்டை துனி, காது ஆகிய இடங்களிலும் வரலாம். சில சமயம் குரல்வளை, முதுகுத்தண்டு ஆகிய இடங்களில் வரவாய்ப்பு இருக்கிறது. சிறுநீரகம், இதயம் ஆகியவற்றில் கூட யூரிக் அமிலப்படிகங்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

    அதிக யூரியா தான் கவுட் நோய்க்கு காரணம் என்றாலும் வேறுசில காரணங்களாலும் இந்நோய் வரலாம். உணவு முறை பரம்பரை, யூரிக் அமில உப்பான யூரேட் குறைவாக சுரப்பது ஆகியன அவற்றுள் சில மதுப்பழக்கம், இளமையிலேயே அதிக உடல் எடை, அதிக இரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாட்டில் குறைபாடு, செயற்கை ரசாயனங்கள் சேர்ந்து வளர்ந்த உணவை உண்டு வளர்த்த இறைச்சி, மீன் ஆகியவற்றை அதிகம் உண்பது ஆகியனவும் சில காரணங்கள்.

    வழக்கமாக யூரிக் அமிலம் ரத்தத்தில் கலந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும். யூரிக் அமிலம் குறைவாக சுரப்பதன் காரணமாக 90 சதவீத கவுட் நோய் வருகிறது. அதிக உற்பத்தியால் 10 சதவீத கவுட் நோய் வருகிறது. மூட்டுக்களை சுற்றியுள்ள திரவத்தில் யூரிக் அமில படிகங்கள் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.

    * ரத்தத்தில் யூரியாவின் அளவு எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.
    * ரத்தத்தில் எலக்ட்ரோலைட், எரித்ரோசைட் அளவு பார்க்க வேண்டும்.
    * வெள்ளை அணு எண்ணிக்கை எவ்வளவு என்று அறிய வேண்டும்.
    * சிறுநீரக செயல்பாடு பற்றி அறிய வேண்டும்.
    * எக்ஸ்ரே மூலம் யூரேட் படிகங்கள் எவ்வாறு இருக்கிறது என்பதையும், எலும்பின் பாதிப்பு அளவையும் அறியலாம்.

    ஆயுர்வேத சிகிச்சை முறை

    வாத ரக்தம், ஆத்ய வாதம் என்பது தான் ஆயுர்வேதத்தில் கவுட் நோய்க்கான பெயர். வாததோஷம், பித்த தோஷம் ரக்ததாது ஆகியவை நிலைப்பாடு மாறுவதே இந்நோய்க்கான காரணம். ஆயுர்வேத கூற்றுப்படி, அதிக உப்பு, புளிப்பு, கசப்பு கார சுவையுள்ள உணவுகள், அதிக எண்ணெய் உணவுகள், அதிக சூடான உணவுகள், உலர்ந்த, பாதுகாக்கப்பட்ட, கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள், கொள்ளு, உளுந்து, புளித்த மோர், தயிர், மது, பகல் தூக்கம், இரவில் தூங்காமை, கோபம் சேர்க்கக்கூடாத முறைகளில் சேர்த்த உணவுகள் (எ.காட்டு: பாலுடன் அல்லது பால் பொருட்களுடன் மீன் சேர்க்கக்கூடாது) ஆகியன கவுட் நோயை அதிகமாக்கும்.

    உள்ளே சாப்பிடும் மருந்துகள்

    * நீர்முள்ளி கஷாயம் எனப்படும் (கோகிலாஜகம் கஷாயம்). 15 மீ. கஷாயம் + 60 மீ. தண்ணீர் சேர்த்து காலை மாலை வெறும் வயிறில் உணவுக்கு ஒரிரு மணிநேரம் முன்பு

    * சீந்தில்கொடி எனப்படும் குடூச்சி கஷாயம் மேற்சொன்னவாறே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * பால் முதுக்கன் கிழங்கு எனப்படும் விதாரி கஷாயம் மேற்சொன்னபடியே எடுக்கலாம்.

    * நெருஞ்சில் முள் + சதாவரி (தண்ணீர் விட்டான் கிழங்கு) இரண்டையும் 1 டம்ளர் பால், 4 டம்ளர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆக குறைந்தவுடன் இறக்கி, அதை காலை, மாலை இருவேளையும் அல்லது இரவு படுக்கு முன் எடுக்கலாம். சந்திரபிரபா வடி, கைஷேநர குக்குலு எனப்படும் மாத்திரைகள் வலியை கட்டுப்படுத்தும்.

    மேலே பூசுவதற்கு

    பிண்டத்தைலம் மேலே பூசி, 1 மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். காஞ்சிரை வேரை கஷாயமாக்கி, வலி உள்ள இடங்களில் தாரா செய்வதுபோல ஊற்ற வேண்டும். (அரை மணிநேரம்) அத்தி, ஆல், அரசு, இத்தி ஆகிய மரப்பட்டைகளை கஷாயம் வைத்து மேற்சொன்னபடி செய்ய வேண்டும்.
    கழிவு வெளியேற்றம்

    திரிபலாசூரணம் உள்ளே சாப்பிடவும்

    கழிவுகளை வெளியேற்றி, தோஷங்களை சமனப்படுத்தி ரசாயனம் ஆக செயல்படும்.

    யூரிக் அமிலம் நீண்ட காலம் உடலில் தங்கும்போது, அவை படிகங்களாகி விடுகின்றன. உடலில் பிற கழிவுகள் தேங்கி விடுவது தான் நோய்க்கு முக்கிய காரணம். ஆகவே கழிவுகளை வெளியேற்றுவதுதான் சிகிச்சையின் முதற்படி ஆகும். தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் விரையேச்சனம் (பேதி) எடுப்பது நல்லது.

    உள்ளே மருந்து சாப்பிடுவது, பாதிக்கப்பட்ட இடங்களில் தைலம், கஷாயம் பூசுவது இவற்றோடு சரியான உணவு முறை மாற்றம், சரியான வாழ்க்கை முறை மாற்றம் ஆகியன மிகவும் அவசியமாகும்.

    -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422&2367200, 2313188, 2313194)
    தயிர் வடை அல்லது வட இந்திய ஸ்டைல் தகி வடை மிகவும் புகழ் பெற்ற வாய்க்கு ருசியான ரெசிபி. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உளுந்து - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்
    வறுத்த சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி இலை - 1 கப்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    தண்ணீர் - 1 டம்ளர்
    கெட்டித் தயிர் - 400 கிராம்
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டேபிள்
    ஸ்பூன் சாட் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்  
    கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
    மாங்காய் சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
    மாதுளை பழ விதைகள் - அலங்கரிக்க



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வறுத்த சீரகத்தை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    உளுந்தம் பருப்பை 4 மணிநேரம் ஊற வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும். அதனுடன் உப்பு, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் போன்றவற்றையும் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    இந்த மாவுக் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வறுத்து பொடித்த சீரகம், சிறிதளவு கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு வடைகளாக தட்டி சூடான எண்ணெய் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.

    வடை ரெடியானதும் அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். வடை மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும். வடை நன்றாக மென்மையாக ஊறியவுடன் அதில் உள்ள தண்ணீரை பிழிந்து விட்டு தனியாக வைக்கவும்.

    தயிரில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்.  

    ஊறிய வடையை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மேல் மேல் இனிப்பு தயிரை ஊற்றவும்.

    அடுத்து அதன் மேல் சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு, மாங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி இவற்றை தூவவும்.

    கடைசியாக மாதுளை விதைகள், கொத்தமல்லி இலைகளை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான தகி வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெருங்காயத்தை உணவில் சிறிது சேர்க்கும்போது, வாயுவை வெளியேற்றும். வயிறு உப்புசம், மாந்தம், செரியாமை, வயிற்று வலி பிரச்சனை குணமாகும்.
    உணவுக்கு வாசனை, சுவை சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுவது பெருங்காயம். இதை உணவில் சிறிது சேர்க்கும்போது, வாயுவை வெளியேற்றும். வீக்கத்தை கரைத்து வலியை குறைக்க கூடியதாக விளங்குகிறது. நுண்கிருமிகளை போக்கும் தன்மை உடையது. தலைவலி, உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க கூடிய அற்புத மருந்தாக பெருங்காயம் விளங்குகிறது. நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ளும். இருமலை போக்க கூடியது.

    பெருங்காயத்தை பயன்படுத்தி மாந்தத்தை சரிசெய்து பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்: பெருங்காயம், மிளகு, திப்பிலி, சுக்குப்பொடி, சீரகம், உப்பு.

    செய்முறை: ஒரு பாத்திரத்தில் 10 மிளகு, 5 திப்பிலி, சிறிது சீரகம் எடுத்து தட்டி போடவும். இதனுடன் சிறிது பெருங்காய தூள், சுக்குப்பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி உணவுக்கு பின் குடித்துவர வாயு தொல்லை நீங்கும். வயிறு உப்புசம், மாந்தம், செரியாமை, வயிற்று வலி பிரச்சனை குணமாகும்.



    பெருங்காயத்தை கொண்டு ஒற்றை தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு டம்ளரில் வெந்நீர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் பெருங்காயம், உப்பு, அரை எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும். இவற்றை கலந்து உணவுக்கு பின் குடித்துவர ஒற்றை தலைவலி சரியாகும். கடுமையான தலைவலி, வாந்தி, நடுக்கம், எரிச்சல் போன்றவற்றுக்கு காரணமான ஒற்றை தலைவலி இல்லாமல் போகும்.

    குழந்தைபெற்ற தாய்மார்களின் வயிற்றில் அழுக்குள் தங்காமல் இருப்பதற்கான மருந்து தயாரிக்கலாம். 2 பல் பூண்டு நசுக்கி எடுக்கவும். கால் ஸ்பூன் பெருங்காயம், நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து காலையில் சாப்பிட்டுவர கருப்பையில் அழுக்குகள் சேராமல் வெளியேறும். அழுக்கள் வெளியேறாமல் இருந்தால் காய்ச்சல் ஏற்படும். பாதுகாப்பான மருந்தாக இது விளங்குகிறது.

    பல் வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். லவங்கம் ஒரு ஸ்பூன் எடுத்து பொடித்து நீரில் இட்டு காய்ச்சி அதிலிருந்து வரும் புகையை பற்களில் படும்படி காட்டுவதால் பல் வலி விலகிப்போகும். இந்த நீரில் உப்பிட்டு வாய்கொப்பளித்தால் பல் சொத்தை, ஈறு வீக்கம், ரத்தகசிவு சரியாகும்.
    ×