என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சருமத்திற்கு வறட்சி தன்மையையும், நீரிழப்பு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும்.
குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சருமத்திற்கு வறட்சி தன்மையையும், நீரிழப்பு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும். இல்லாவிட்டால் சளி, காய்ச்சல் போன்ற நோய் பாதிப்புகள் உருவாகக்கூடும்.
இதனை தவிர்க்க அடிக்கடி தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து சீராக தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் வெப்பநிலையை சீராக பராமரிக்கலாம். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் தண்ணீர் பருகுவது அவசியமானது. அது தேவையற்ற கொழுப்பையும் கட்டுப்படுத்தும்.
சரும ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் தண்ணீர் பருகுவது அவசியமானது. தண்ணீர் அதிகம் பருகினால் சரும சுருக்கம் ஏற்படாது. சருமமும் வறண்டு போகாது. குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை பருகுவதே நல்லது.
மது குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். அது உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சி விடும். பழங்கள், காய்கறிகளில் நீர்ச்சத்து கலந்திருப்பதால் அவை உடலில் நீரிழப்பை கட்டுப்படுத்த துணைபுரியும்.
குளிர்காலத்தில் சூடான டீ, காபி பருகுவது இதமாக இருக்கும். உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவும். ஆனாலும் அதில் கலந்திருக்கும் ‘காபின்’ உடலில் இருக்கும் நீர்ச்சத்தின் அளவை குறைத்து விடும். அவற்றுக்கு பதிலாக சாலட், சூப் வகைகளை பருகலாம். அவை உடலுக்கு ஆரோக்கியம் சேர்ப்பதோடு உடலில் நீரின் அளவையும், வெப்பநிலையையும் சீராக பராமரிக்க உதவும்.

மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றும் போது உடல் ஆரோக்கியம் அதிகரித்து, ஆயுளும் நீடிக்கும், என்கிறார்கள் மருத்துவர்கள்.
உண்ணும் உணவு உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் தருவதாக இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் இதனை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். பருவத்திற்கேற்ற உணவுகளை உண்டு ஆரோக்கியமாக இருந்தனர். சுவாமி சிவானந்தர் அந்த வகையில் நூறாண்டு வாழ்வது எப்படி? என்ற ஒரு நூலில் பயனுள்ள சில வாழ்வு முறைகளை குறிப்பிட்டிருந்தார்.
எதற்கும் கவலைப்படாதீர்கள். ஒரு பொழுதும் அவசரப்படாதீர்கள். துரித உணவுகளை உண்ணாதீர்கள். நல்ல சத்துள்ள உணவுகளையே உட்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரம் உறங்குங்கள். எதற்கெடுத்தாலும் மருந்து கடை பக்கம் சென்று, சிறிய உடல் உபாதைகளுக்கும் மருந்துகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள். தளர்ச்சியான கழுத்துப்பட்டி கொண்ட ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான கழுத்துப்பட்டி வைத்துள்ள ஆடைகள் கழுத்தில் உள்ள தைராய்டு கோளத்தை இறுக்கி ரத்த ஓட்டத்தைத் தடுத்து உடலில் பல பிரச்சினைகளை உண்டு பண்ணும்.
முடிந்தவரை சூரிய ஒளியில் இருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உடலுக்கு சூரிய ஒளி மிகவும் முக்கியம். நன்கு ஆழமாக சுவாசியுங்கள். தினந்தோறும் நீராடுங்கள். வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மது வகையை விலக்குங்கள். அளவுக்கு மீறி வெப்பம் நிறைந்த இடத்தில் நீண்ட நேரம் இருக்காதீர்கள். நல்ல காற்றோட்டமில்லாத இடத்திலும் இருக்காதீர்கள்.

குளிர்காலத்தில் அரிசி, கோதுமை, பார்லி, வாழை, தக்காளி, தேங்காய், ஆப்பிள், பேரிக்காய் உண்ணுங்கள். இந்த பருவத்தில் இந்த உணவுகள் உடலுக்கு நலன் தருபவை.
மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் உடலில் வாயு அதிகரிக்கும். இந்த வாயுவை நீக்க ஒரு தேக்கரண்டியளவு திரிகடுகம் சூரணத்தை பாலில் கலந்து உண்ணுஙகள்.
இது உடலில் உள்ள வாயுவை நீக்கி பசியைத் தூண்டும். குளிர்காலத்தில் உடலில் லேசாக நல்லெண்ணெய் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். இது உடலுக்கு இதம் தரும். இரவு உணவுக்கு பின் சிறிது பால் அருந்துங்கள். இது மலச்சிக்கலை நீக்கும்.
இதுபோன்ற உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றும் போது உடல் ஆரோக்கியம் அதிகரித்து, ஆயுளும் நீடிக்கும், என்கிறார்கள் மருத்துவர்கள்.
குழந்தைகளுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
பச்சை மிளகாய் - 8
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
பால் - கால் லிட்டர்
தயிர் - 100 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
நெய் - 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர் நன்கு கொதிக்கவிடவும்.
நன்றாக கொதி வந்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.
அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.
கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.
சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பிரியாணி ரெடி.
சிக்கன் - அரை கிலோ
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
பச்சை மிளகாய் - 8
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
பால் - கால் லிட்டர்
தயிர் - 100 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
நெய் - 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர் நன்கு கொதிக்கவிடவும்.
நன்றாக கொதி வந்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.
அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.
கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.
சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளை முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.
காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். உடல் குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும், ஒல்லியானவர்கள் பருக்கவும் வைக்கும்.
5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.
நீரிழிவு நோய் கண்டவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும். பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் செய்ய வேண்டும். நீரிழிவு குறையும். இனிப்பை இநநேரம் தவிர்க்க வேண்டும். தினமும் காகற்காய் உணவில் சேர்க்கலாம்.
எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது என்று விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் கிடைக்கும் நன்மைகளை காண்போம்.
சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது
எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.
கொழுப்பின் அளவை குறைக்கிறது
இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது
இத்தகைய நன்மைகளைக் கொண்ட எள்ளை நாம் ஏதாவது ஒரு பக்குவத்தில் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
எள்ளின் மருத்துவ பயன்கள்:
வைட்டமின் பி1.,பி6,நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அபரிதமான அளவில் உள்ளது. இது நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தேவையோ அதில் 25 சதவித தேவையை பூர்த்தி செய்கிறது.
ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.
எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது. மாதவிடாய் வந்த 15 நாட்களுக்கு பின் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த மாதவிடாய் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
எள்ளில் Phytpsterol என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. அதாவது 400 - 413 மி.கி அளவு 100 கிராம் எள்ளில் உள்ளது. இது மற்ற எந்த விதைகள் கொட்டைகளின் அளவை விட அதிகம். இவை இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. மேலும் பல விதமான புற்று நோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.
அசைவ உணவில் உள்ளதைக் காட்டிலும் சைவ உணவில் இரும்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்து எள்ளில் அதிக அளவு கிடைக்கிறது.
100 கிராம் எள் 573 கலோரி சக்தியை கொடுக்கிறது. 100 கிராம் எள்ளில் 18 கிராம் புரதச்சத்து உள்ளது. குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்து அதிகம் உள்ளது.

குழந்தைகள் தானாக சாப்பிடுவது எப்படி, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுத் தரவேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

குழந்தைகள் தானாக சாப்பிடுவது எப்படி, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுத் தரவேண்டியது மிகவும் அவசியமானதாகும். குழந்தைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக நாம் அவர்களுக்கு தண்ணீர் முதல் ஆடை, உணவு, மருந்து என சின்னச் சின்னதாக
அத்தனை விஷயங்களிலும் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். அதனால் குழந்தை கொஞ்சம் வளர ஆரம்பித்ததும் அவர்களுக்கு எது தேவையோ அதை அவர்களாகவே புரிந்து கொண்டு, செய்து கொள்ள முயற்சி செய்யும் அளவுக்கு பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும்.
அதேசமயம் அவற்றை ஆரோக்கியமான முறையில் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுப்பது அவசியம். குறிப்பாக, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று குழந்தைகளுக்குக் கற்றுத் தருவது மிக அவசியம்…
குழந்தைகள் தங்களுக்குப் பிடித்ததையோ ஏதாவது விளையாட்டுப் பொருட்களையோ தொட்டு, எடுப்பதுண்டு. அதனால் எப்போது சாப்பிடுகிற பொருட்களைத் தொட நேர்ந்தாலும் அதற்கு முன்பாக கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று சொல்லிப் பழக்க வேண்டும்.
அதைவிட வீட்டில் குழந்தைகள் உள்ள வீடாக இருந்தால் எனாமல் போர்டு கொண்ட வெஜிடபிள் கட்டர்களைத் தவிர்க்க வேண்டும். அவை காய்கறியோடு கலந்து குழந்தைகளின் வயிற்றுக்குள் போய்விடும்.
வண்ணத்தாள்களில் சுற்றப்படுகிற, அல்லது வண்ணங்கள் சேர்க்கப்படுகிற உணவுகளை முற்றிலும் தவிர்க்கக வேண்டும். அவற்றில் உள்ள குறைபாடுகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது மிக அவசியம்.
சாப்பிடும்பொழுது வேறு விடியோ கேம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது. இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

இளம்வயது நரைக்கு என்ன செய்ய வேண்டும்? ஹேர் டையைத் தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்…
சிகிச்சையினால் குணப்படுத்த முடியாத இளநரைக்கும் மற்றும் வயதானால் இயற்கையாக ஏற்படும் நரைத்த முடிக்கும் ஹேர் டை உபயோகத்தை தவிர்க்க முடியாத கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிக இளம் வயதிலேயே ஸ்டைலுக்காக கலர் கலராக ‘டை’ அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது சரிதானா? இளம்வயது நரைக்கு என்ன செய்ய வேண்டும்? ஹேர் டையைத் தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்…
ஹேர் டையைத் தேர்ந்தெடுக்கும் முன் அவற்றை வகைப்படுத்தி இனம் கண்டுகொள்வது அவசியம். Para phenylene diamine என்பதின் சுருக்கம்தான் PPD. டை உபயோகிப்பவர்களுக்கு பொதுவாக அலர்ஜி ஏற்படுத்தும் காரணியாக இருப்பது இதுதான். பொதுவாக பாதுகாப்பு கருதி PPD-யின் அளவு டையில் 2% க்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், நடைமுறையில் இது எந்தளவுக்கு எல்லா நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் பின்பற்றுகிறார்கள் என்பது சந்தேகமே.
2002ல் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வில் 1-64% சதவீதம் வரை ஹேர் டைகளில் PPD இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் விலை மலிவான, தரமில்லாத டையை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
காதுக்கு பின்பு அல்லது முன்னங்கையில் இந்த ‘டை’ கலவையை பஞ்சினால் கொஞ்சமாக தடவி விட்டு காய விட வேண்டும். 2-3 நாட்கள் வரை எந்தவித பக்கவிளைவும் ஏற்படாவிட்டால் பின்பு அந்த ‘டையை’ தலையில் தைரியமாக உபயோகப்படுத்தலாம்.
இந்தியா முழுவதும் பல்வேறு ஹெர்பல் மற்றும் ஆயுர்வேதிக் டைகள் விற்கப்படுகின்றன. Para dyes அலர்ஜி உள்ளவர்களுக்கு இது உதவும். இவை மருதாணி இலையை பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. 2- Hydroxy 4-Napthaquinone என்னும் வேதிப்பொருட்கள் மருதாணியில் உள்ளது. அதுதான் நமக்கு நிறத்தை கொடுக்கிறது.
இவ்வகை பவுடர்களோடு டீ டிகாஷன் அல்லது காபி டிகாஷன் கலந்து 2-3 மணி நேரம் ஊற வைக்கும்போது ஒரு கருஞ்சிவப்பு நிறம் கிடைக்கிறது. அதனை தலையில் 2-3 மணி நேரம் வைக்க வேண்டும். இது செய்வது கொஞ்சம் சிரமம். மற்றும் ஸ்ட்ராங்கான வாசனை சிலருக்கு ஏற்றுக் கொள்ளாது. டை-அலர்ஜி இருப்பவர்கள், அதை தவிர்த்துவிட்டு இந்த மருதாணி இலை துகள்களை (ஹென்னா) பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. கால்சியச் சத்து நிறைந்த எள்ளில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - ஒரு கப்,
தக்காளி - ஒன்று,
புளி - நெல்லிக்காய் அளவு,
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2,
எள், தேங்காய் துருவல், மிளகு, சீரகம், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
நெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,

செய்முறை:
எள்ளை வெறும் வாணலியில் வறுத்து, தேங்காய் துருவல், மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துவரம்பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இதனுடன் அரைத்து வைத்த விழுது, வெந்த பருப்பு சேர்த்து, நுரைத்து வரும்போது இறக்கவும்.
நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, ரசத்தில் சேர்க்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

உப்பு - தேவையான அளவு.

‘கமகமக’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார்!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த முத்திரை முகம், கை, கால் என்பவற்றில் ஏற்படும் வீக்கங்களை குறைகிறது. உடலில் நீர் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களில் இருந்து விடுபட பொருத்தமான முத்திரையாகவுள்ளது.
உடலில் நீர் எனும் பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும்,.
செய்முறை :
சுண்டுவிரலை கட்டைவிரலின் அடியில் வைத்து அழுத்தி ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடித்து இதனை செயற்படுத்த முடியும்.
பலன்கள் :
இம்முத்திரையானது வயிறு எரிவை குணப்படுத்துவதோடு முகம், கை, கால் என்பவற்றில் ஏற்படும் வீக்கங்களை குறைகிறது, உடலில் நீர் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தி தடிமல், மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிலிருந்து விடுபட பொருத்தமான முத்திரையாகவுள்ளது.

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மகிழ்ச்சியான காலக்கட்டம். எனவே கர்ப்ப காலத்தில் பெண் எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி பல்வேறு மருத்துவ தகவல்கள் கூறுகின்றன.
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மகிழ்ச்சியான காலக்கட்டம். எனவே கர்ப்ப காலத்தில் பெண் எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி பல்வேறு மருத்துவ தகவல்கள் கூறுகின்றன. அவற்றில் ஒன்று இது...
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நலன், தாயின் மகிழ்ச்சியோடு நேரடித் தொடர்பில் உள்ளது. அதனால் தாய் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தால், கருவில் இருக்கும் குழந்தையும் வளத்தோடு இருக்கும். மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மன அழுத்தம் தரும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவுகளையும் தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.
தண்ணீரும் முக்கியமானது. அதனை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தோடு இருக்க வேண்டியதும் அவசியம். கர்ப்ப காலத்தில் பல மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் தாமாகவே எந்த மருந்தையும் வாங்கி சாப்பிடக்கூடாது. எப்போதும் மருந்தை உட்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.
நடைபோன்ற எளிதான உடற்பயிற்சி, குழந்தைக்கு நன்மை தரும். ஆனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

தொலைந்துபோன டெபிட் கார்டை தடைசெய்ய, நெட் பேங்கிங் எனப்படும் இணைய வங்கிச்சேவையை பயன்படுத்தலாம். இம்முறையை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்...
இன்று நமது பணப் பரிவர்த்தனைக்கு பிரதான கருவியாக ‘டெபிட் கார்டு’ உள்ளது.
வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பது, இணைய தளம் வாயிலாக பணப் பரிமாற்றம் செய்வது போன்ற வங்கிச் சேவைகளை டெபிட் கார்டு மிகச் சுலபமாக்கிவிட்டது.
இந்நிலையில், வங்கி டெபிட் கார்டை தொலைக்க நேர்ந்தால், தடுமாறிப் போய்விடுவோம்.
வங்கியில் இருந்து உங்களது புதிய டெபிட் கார்டை பெறுவதற்கு முன்பு, தொலைந்த அட்டையை ‘பிளாக்’, அதாவது தடைசெய்வது சற்றுக் கடினமான செயல்.
உங்களது டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்றால், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். அப்போது, தொலைபேசியில் காத்திருக்கும் நேரம் மற்றும் வங்கிக் கணக்கு எண், டெபிட் கார்டு தொலைந்ததற்கான காரணம், முகவரி போன்ற தகவல்களைத் தருவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் நம்மைப் பொறுமையிழக்க வைக்கும்.
இதற்கு மாற்றாக, தொலைந்துபோன டெபிட் கார்டை தடைசெய்ய, நெட் பேங்கிங் எனப்படும் இணைய வங்கிச்சேவையை பயன்படுத்தலாம். இம்முறையை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்...

‘ஈ- சர்வீசஸ்’ எனும் பிரிவில், ஏடிஎம் கார்டு சேவைகள் என்பதற்குக் கீழே ‘பிளாக் ஏடிஎம் கார்டு’ என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
பின்னர் எந்த வங்கிக்கணக்குக்கான டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். உங்களின் ஏடிஎம் கார்டு எண்ணின் முதல் மற்றும் கடைசி 4 இலக்க எண்கள் காண்பிக்கப்படும். அத்துடன் செயல்பாட்டில் உள்ள, தடை செய்யப்பட்ட அனைத்து டெபிட் கார்டுகளும் காண்பிக்கப்படும்.
நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் டெபிட் கார்டை தேர்வு செய்து, அதைச் சரிபார்த்த பின்னர் சமர்ப்பிக்கவும்.
அதை உறுதிசெய்யும் வகையில், வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு அல்லது எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி எனும் அங்கீகாரத்தை தேர்வு செய்யவும்.
வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு அல்லது குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி-ஐ என்டர் செய்த பின்னர், அதை உறுதி செய்ய (கன்பர்ம்) வேண்டும்.
கடைசியாக ஏடிஎம் கார்டை பிளாக் செய்யக்கோரும் உங்களின் சேவை கோரிக்கையை வெற்றிகரமாகச் சமர்பித்த பின்னர் வழங்கப்படும் சேவை எண்ணை, எதிர்கால தேவைக்காகவும் மீண்டும் அதுதொடர்பாக விளக்கங்களை வங்கியில் கோரவும் குறித்து வைத்துக்கொள்ளவும்.
டெபிட் கார்டை பிளாக் செய்வதற்கான சேவை எண்ணை குறித்து வைத்துக்கொண்டு, வங்கிக்குச் சென்று அந்த எண்ணை வழங்கி புதிய டெபிட் கார்டை பெற்றுக்கொள்ளலாம்.
அந்தச் சமயத்தில் வங்கிகள் உடனடியாக கையில் டெபிட் கார்டை உங்களுக்கு வழங்கும். அது உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் அல்லது அதிகபட்சமாக 2 வேலை நாட்களுக்குள் செயல்பட ஆரம்பிக்கும்.

உங்களது ‘யூசர் ஐடி’ மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி இணைய வங்கிக்கணக்கில் உள்நுழையுங்கள்.

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகள் மாலையில் சாப்பிட நூடுல்ஸ், காய்கறிகள் சேர்த்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் -1
பீன்ஸ் - 5
பச்சை பட்டாணி - கொஞ்சம்
உருளைக்கிழங்கு - கொஞ்சம்
எண்ணெய் - தேவையான அளவு
மேகி நூடுல்ஸ் - சின்ன பாக்கெட்
கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.
வேகவைத்த மேகி நூடுல்ஸ்சுடன், வதங்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறிது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.
கடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்சில் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் நுடுல்ஸ் உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் வெஜிடபிள் போண்டா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்களை அதிகம் தாக்கும் பிசிஓடி என்றால் என்ன… அதன் அறிகுறிகள், அது ஏற்படுத்தும் பாதிப்புகள், பரிசோதனைகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் அறிந்து கொள்ளலாம்.
`பிசிஓடி’ எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிற `பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’தான் இன்று பெரும்பான்மை பெண்களின் பிரச்சனையாக இருக்கிறது. முறை தவறிய மாதவிலக்கு, முகமெல்லாம் ரோம வளர்ச்சி, பயமுறுத்தும் பருமன், குழந்தையின்மை… இப்படிப் பல பிரச்சனைகளின் பின்னணியிலும் `பிசிஓடி’யைக் காரணம் காட்டுகிறார்கள் மருத்துவர்கள். பிசிஓடி என்றால் என்ன… அதன் அறிகுறிகள், அது ஏற்படுத்தும் பாதிப்புகள், பரிசோதனைகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் அறிந்து கொள்ளலாம்.
இது ஒருவகையான ஹார்மோன் தொந்தரவு. பிறவிக்குறைபாடாகப் பெண்களைப் பாதிக்கிற பிரச்சனை. 14 வயது முதல் 40 வயது வரை எப்போது வேண்டுமானாலும் இதற்கான அறிகுறிகள் தோன்றலாம். சினைப்பைகளின் செயல் திறனில் பிரச்சனை ஏற்படுவதைத்தான் `பாசிஸ்டிக் ஓவரிஸ்’ என்கிறோம். அதாவது சினைப்பைகளை இயங்கச்செய்கிற ஹார்மோன்கள் சரியாக வேலை செய்யாததுதான் காரணம்.
சினைப்பையில் குட்டிக்குட்டி கொப்புளங்கள் போன்று இருக்கும். இந்தக் கொப்புளங்களைக்கண்டு பயப்படத் தேவையில்லை. ஆனால், இவர்களுக்கு ஹார்மோன் கோளாறுகள் இருக்கும் என்பதால், அதில் கவனம் அவசியம். பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஆகிய பெண் ஹார்மோன்களும் டெஸ்டோஸ்டீரான் என்கிற ஆண் ஹார்மோனும் இருக்கும். இவற்றின் சமநிலையில் பிரச்சனை வருவதைத் தான் `ஹார்மோனல் இம்பேலன்ஸ்’ என்கிறோம். சிலருக்கு ஆண் ஹார்மோன் அதிகமிருக்கும். அதற்கேற்ற அறிகுறிகளை உணர்வார்கள்.
அறிகுறிகள்
* முறையற்ற மாதவிலக்கு சுழற்சி (40, 50 நாள்களுக்கொரு முறை வரும் அல்லது மாத்திரைகள் எடுத்துக்கொண்டால்தான் மாதவிலக்கு வரும்).
* அதிகளவில் பருக்கள் வரும்.
* முடி உதிரும்.
* எடை அதிகரிக்கும்.

* குழந்தை பிறக்கும்போதே இந்தப் பிரச்சனை இருந்தாலும், அவர்கள் பூப்பெய்தும் வயதில்கூட இதை உறுதிபடுத்த முடியாது. சாதாரணப் பெண்களுக்கே அந்தப் பருவத்தில் மாதவிடாய் முறைதவறி வரும். 20 வயதுக்கு மேலும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் முறையின்றித் தொடர்ந்தால் பிசிஓடி இருக்கிறதா எனப் பார்க்கலாம்.
* முறையற்ற மாதவிடாய், குழந்தையின்மைப் பிரச்சனை, அதிகரித்துக்கொண்டே போகும் எடை என குறிப்பிட்ட பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு பிசிஓடி இருக்கிறதா எனப் பரிசோதிக்க வேண்டும். எந்த வயதில் பூப்பெய்தினார்கள், எத்தனை நாள்களுக்கொரு முறை மாதவிடாய் வருகிறது என்கிற தகவல்களைக் கேட்டறிய வேண்டும்.
* கழுத்துக்குப் பின்பகுதியிலும் முழங்கைகளிலும் கருமை இருக்கிறதா எனப் பார்ப்போம். Acanthosis nigricans எனப்படுகிற அது ஹார்மோன் தொந்தரவின் அறிகுறி.
* அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தால் சினைப்பைகளில் கொப்புளங்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஹார்மோன்களின் அளவுகளை அறியும் ரத்தப் பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படும். இது மாதவிலக்கான இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் செய்யப்படும்.
* அல்ட்ரா சவுண்டில் பிசிஓடி இருப்பது, உடல்ரீதியான அறிகுறிகள் இருப்பது, ரத்தப் பரிசோதனையில் அசாதாரணம் என இந்த மூன்றில் இரண்டு இருந்தால் அதை `பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்’ என்கிறோம்.
தீர்வுகள்?
முறையற்ற மாதவிலக்கு, பருக்கள், குழந்தையின்மை என எந்தப் பிரச்சனைக்காக சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது தீர்வு. எடை அதிகரிக்க, அதிகரிக்க, ஹார்மோன் தொந்தரவுகள் தீவிரமாகும். அதனால் சினைப்பைகளின் செயல்திறன் பாதிக்கப்படும். பிசிஓடி உள்ளவர்களுக்கு மிக எளிதில் எடை அதிகரிக்கும். எனவே, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வீட்டுவேலைகளைச் செய்வது, சாக்லேட், இனிப்பு போன்ற அதிக கலோரி உணவுகளைத் தவிர்ப்பது எனத் தீவிர முயற்சிகளில் இறங்க வேண்டும்.
பிசிஓடி இருந்தால் கர்ப்பம் தரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். குழந்தையின்மைக்கான பிரத்யேக சிகிச்சையிலும் எடைக் குறைப்புதான் பிரதானமாக இருக்கும். பிறகு கருமுட்டை உருவாக மாத்திரைகள் தரப்படும். அவை உதவாதபட்சத்தில் ஊசிகள் போடவேண்டியிருக்கும். அதிலும் முட்டை வளர்ச்சி இல்லாவிட்டால் லேப்ராஸ்கோப்பி செய்ய வேண்டும். கடைசித் தீர்வாக ஐவிஎஃப் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். மற்றபடி பிசிஓடி பிரச்சனையும் சர்க்கரை நோய் மாதிரிதான் இதுவும். முற்றிலும் குணப்படுத்த முடியாது. கட்டுப்பாட்டில் மட்டுமே வைக்க முடியும்.
மெனோபாஸை நெருங்கும்போது பிசிஓடி பிரச்சனையின் அறிகுறிகள் குறையத் தொடங்கும். மெனோபாஸை நெருங்கும்போது சிலருக்கு அதீத ரத்தப்போக்கு இருக்கும். அவர்களுக்கு டி அண்டு சி செய்து புற்றுநோய் அபாயம் ஏதுமிருக்கிறதா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
டைப் 2 டயாபடிஸ், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவற்றுக்கும் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
சரியான எடையைப் பராமரிக்க வேண்டும். பிசிஓடி இருக்கும் சிலர் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மூலம் எடையைக் குறைத்து விடுவதால் கர்ப்பம் தரித்துவிடுவார்கள். அதே நபர் மீண்டும் எடை அதிகரித்தால் மறுபடி மாதவிலக்கு சுழற்சி முறைதவறிப் போகும்.

எப்படி உறுதிபடுத்துவது?