என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sesame seeds rasam"

    ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. கால்சியச் சத்து நிறைந்த எள்ளில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம்பருப்பு - ஒரு கப்,
    தக்காளி - ஒன்று,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2,
    எள், தேங்காய் துருவல், மிளகு, சீரகம், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
    நெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    எள்ளை வெறும் வாணலியில் வறுத்து, தேங்காய் துருவல், மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம்பருப்பை வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    இதனுடன் அரைத்து வைத்த விழுது, வெந்த பருப்பு சேர்த்து, நுரைத்து வரும்போது இறக்கவும்.

    நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, ரசத்தில் சேர்க்கவும்.

    கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    ‘கமகமக’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார்!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×