என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
சிறுநீரகங்கள் சரியாக செயல்படுவதற்கு போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியமானது. சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள் என்வென்று அறிந்து கொள்ளலாம்.
உடலில் உள்ள நச்சுக்கள், கழிவு பொருட்களை வெளியேற்றுவதில் சிறுநீரகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் மேற்கொள்கிறது. சிறுநீரகங்கள் சரியாக செயல்படுவதற்கு போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியமானது. உடலில் உள்ள கழிவுகளில் பெரும்பகுதி சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றப்படுவதால் அதன் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சிறுநீரகங்களில் நச்சுகள் படிந்து நோய்தொற்று ஏற்படக் கூடும். அதன் காரணமாக சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாகி ஒட்டுமொத்த உடல் இயக்கமும் தடை பட்டுவிடும்.
சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?
* காலையில் தேநீர் பருகினால்தான் பெரும்பாலானோருக்கு சோம்பல் நீங்கி புத்துணர்வு ஏற்படும். தலைவலியை போக்கும் பானமாகவும் நிறைய பேர் கருதுகிறார்கள். சிறுநீரகங்களை சுத்தப்படுத்தவும் தேநீர் உதவுகிறது. தினமும் ஒரு கப் தேநீர் பருகுவது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குப்பைமேனி இலை, துளசி போன்ற மூலிகைகளை கொண்டு தேநீர் தயாரித்து பருகுவது நல்லது.
* செர்ரி பழ வகைகளை சாப்பிட்டு வருவதும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் செர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்று குறைய தொடங்கும். இதனை உலர்ந்த பழமாகவும் உட்கொள்ளலாம். சாலட்டுகளாக தயார் செய்தும் சாப்பிடலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும்.
* எலுமிச்சை, ஆரஞ்சு, முலாம் பழங்களில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. அதனை ஜூஸாக பருகிவந்தால் சிறுநீரகத்தில் கலந்திருக்கும் நச்சுக்கள் வெளியேறும். சிறுநீரக கற்கள் படியாமலும் பாதுகாக்கலாம். இவற்றில் ஏதாவது ஒரு ஜூஸை தினமும் பருகுவது நல்லது. உப்போ, சர்க்கரையோ சேர்க்காமல் பருக வேண்டும்.
* கீரை வகைகளையும் தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்சிடெண்ட், வைட்டமின், தாதுக்கள் போன்றவை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். எனினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுத்துவிடும்.

திடீர் இதய நிறுத்தம் ஏற்பட்டு சரிந்து விழும் நபருக்கு நாம் உடனே முன்வந்து இந்த உயிர்காக்கும் முதலுதவியை அளித்தால் அவர் உயிர் பிழைக்கும் சாத்தியம் இரண்டு, மூன்று மடங்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை.
திடீர் இதய நிறுத்தம் என்பது உலக அளவில் குறிப்பிடும் அளவுக்கு நடந்து வருகிறது. வளர்ந்த நாடான அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் திடீர் இதய நிறுத்தம் காரணமாக மரணமடைந்து வருகின்றனர். இங்கிலாந்தில் மருத்துவமனைக்கு வெளியே நடக்கும் ‘இதய நிறுத்தம்’ அடைந்த நபர்களில் பத்தில் ஒருவரே மருத்துவமனையில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு உள்ளது. நமது இந்தியாவில் இதுபோன்ற புள்ளி விவரங்கள் இல்லாத போதும் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மாரடைப்பு என்பதும் இதய நிறுத்தம் என்பதும் வேறுவேறு. இரண்டும் ஒன்றல்ல. மாரடைப்பு என்பது இதயத்திற்கான ரத்த ஓட்டம் அதன் ரத்த நாளங்களில் தடைபடுவதால் ஏற்படுவதாகும். மாரடைப்பில் நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறி தோன்றி பாதிக்கப்பட்ட நபரே மற்றவர்களிடம் கூறுவர். அவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படாவிட்டால் மரணம் நிகழக் கூடும்.
ஆனால் இதய நிறுத்தம் என்பது இதய மின் ஓட்டம் திடீர் என்று தடைபடுவதாகும் அப்போது சரிந்து விழுவர். உடன் முதலுதவியை தொடங்காவிட்டால் ஒவ்வொரு நிமிடமும் 7முதல்10 சதவீதம் வரை மரணம் நிகழ வாய்ப்புண்டு. 10 நிமிடங்களுக்கு மேற்பட்டு மருத்துவ உபகரணங்களை கொண்டு மருத்துவ உதவியை தொடங்கி, இதய துடிப்பை மீண்டும் கொண்டு வந்தாலும் மூளைசாவு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.எனவே வீட்டிற்கு ஒருவர் உயிர்காக்கும் முதலுதவியைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
இந்த உயிர்காக்கும் முதலுதவிக்கு சி.பி.ஆர். என்று அழைக்கப்படும் “இதய நுரையீரல் இயக்க மீட்பு” என்று பெயர். இதற்கு எந்த மருத்துவ உபகரணமும் தேவையில்லை. இரண்டு கைகளும் உடனே செயல்படுத்த மனம் மட்டுமே போதும். நமது வீட்டிலோ அல்லது வெளியிலோ ஒருவர் திடீரென்று மயக்கமடைந்து சரிந்து தரையில் விழுந்தால், அந்த நபரை மல்லாக்கப்படுக்க வைத்து அவரது இரண்டு தோள்களை பலமாக தட்டி “நீங்கள் ஓகே வா” என்று சத்தமாக கேட்க வேண்டும்.
அந்த நபர் எந்தவித செய்கையும் இல்லாமல் இருந்தால் அருகில் இருப்பவர்களை உடனே உதவிக்கு கூவி அழைக்க வேண்டும். உதவிக்கு வரும் நபரை உடனே கைப்பேசியில் 108-ஐ அழைத்து ஆம்புலன்சை வரச்சொல்ல வேண்டும். பயிற்சி எடுத்திருந்தால் கழுத்தில் நாடி துடிப்பு உள்ளதா என்பதையும், மார்பு சுவாசத்தால் விரிவடைகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கு 5 முதல் 10 வினாடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது.

அமெரிக்க இதய சங்கத்தின் வழிகாட்டுதல் படி, 30 நெஞ்சு அழுத்ததிற்கு பிறகு இரண்டு “மீட்பு மூச்சு காற்று” வழங்க வேண்டும். இதற்கு அந்த நபரின் தாடையை உயர்த்தி, முன் தலையை பின்புறம் நகர்த்தி நமது வாயை அவரது வாயில் பொருத்தி நமது உள் இழுத்த மூச்சை இரண்டு முறை செலுத்த வேண்டும். இந்த செயலானது பயிற்சி பெற்றவர்களுக்கே பெரும்பாலும் கடினம் என்பதாலும், நமது இந்திய கலாசாரத்திற்கு பொருந்தி வராது என்பதாலும் மீட்பு மூச்சு கொடுப்பது கைவிடப்பட்டு, நெஞ்சு அழுத்தம் மட்டுமே 30, 30 ஆக ஆம்புலன்ஸ் வரும் வரை கொடுத்து வர வேண்டும் கொடுப்பவருக்கு கஷ்டமேற்பட்டு ஓய்வு தேவைப்பட்டால், அருகில் உள்ள மற்றவர் ஒருவர் நெஞ்சு அழுத்தத்தை தொடர வேண்டும்.
நெஞ்சு அழுத்தம் தொடர்ந்து கொடுப்பதால் ஒவ்வொரு அழுத்தத்தின் போதும் இதயம் அழுத்தப்பட்டு ரத்தம்மூளை மற்றும் மற்ற உறுப்புகளுக்கு செலுத்தப்படும். ஒரு அழுத்தத்திற்கும் அடுத்த அழுத்தத்திற்கும் உள்ள இடைவெளியில் இதயம் விரிவடைந்து கை, கால், மார்பு, வயிறு ஆகிய பாகங்களில் இருந்து ரத்தம் இதயத்திற்கு வந்து சேரும். மேலே விவரிக்கப்பட்ட இதய செயல் மீட்பு முறை புரிந்துகொள்வதற்கு சற்று சிரமாக தோன்றினால் இந்திய மருத்துவ சங்கத்தின் சஞ்சீவன் கமிட்டியின் “உயிர்காக்கும் முதலுதவி” என்ற 4 நிமிட விழிப்புணர்வு குறும் படத்தை யூ டியூப்பில் பார்த்து நன்கு புரிந்து கொள்ளலாம்.
இதில் திரைபட நடிகர்கள் விஜய் சேதுபதி, சத்யராஜ் ஆகிய இருவரும் இலவசமாக தோன்றி இதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்கள். இது தமிழில் எடுக்கப்பட்டு இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திடீர் இதய நிறுத்தம் ஏற்பட்டு சரிந்து விழும் நபருக்கு நாம் உடனே முன்வந்து இந்த உயிர்காக்கும் முதலுதவியை அளித்தால் அவர் உயிர் பிழைக்கும் சாத்தியம் இரண்டு, மூன்று மடங்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை. நின்ற இதயத்தை மீண்டும் துடிக்க வைப்போம். நன்மை பயக்கும் விலை மதிப்பற்ற ஆயுளை நீடிக்க செய்வோம். ஒவ்வொரு உயிரும் வீட்டிற்கும், நாட்டிற்கும் அவசியம். முதலுதவி அளிக்கும் நமக்கும் ஆத்ம திருப்தி ஏற்படும்.
மரு. எம்.பாலசுப்பிரமணியன் தலைவர், சஞ்சீவன் கமிட்டி, இந்திய மருத்துவ சங்கம்,புதுடெல்லி

அந்த நபர் பேச்சு மூச்சு இன்றி தொடர்ந்து இருந்தால் அவரின் அருகில் மண்டியிட்டு இதய இயக்க மீட்பை தொடங்க வேண்டும். இதற்கு அவரது நெஞ்சு குழியில் நமது வலது கை இரண்டு விரல்களை செங்குத்தாக வைத்து இடது கையை அதற்கு மேல் விரல்களை அகட்டி வைக்க வேண்டும். கையின் அடிபாகம் மயக்கமடைந்தவரின் நெஞ்சு தட்டை எலும்பில் இருப்பதை உணர முடியும். நமது வலது கையை எடுத்து இடது கையின் மேல் வைத்து விரல்களை கீழ் உள்ள விரல்களின் உள்ளே நுழைத்து இறுக்கிப் பிடிக்க வேண்டும். முழங்கையை மடிக்காமல், நமது தோள்பட்டையிலிருந்து அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அவரது நெஞ்சு 2 அங்குலம் வரை சுருங்குமாறு அழுத்த வேண்டும். இவ்வாறு 30 தடவை செய்ய வேண்டும்.

அமெரிக்க இதய சங்கத்தின் வழிகாட்டுதல் படி, 30 நெஞ்சு அழுத்ததிற்கு பிறகு இரண்டு “மீட்பு மூச்சு காற்று” வழங்க வேண்டும். இதற்கு அந்த நபரின் தாடையை உயர்த்தி, முன் தலையை பின்புறம் நகர்த்தி நமது வாயை அவரது வாயில் பொருத்தி நமது உள் இழுத்த மூச்சை இரண்டு முறை செலுத்த வேண்டும். இந்த செயலானது பயிற்சி பெற்றவர்களுக்கே பெரும்பாலும் கடினம் என்பதாலும், நமது இந்திய கலாசாரத்திற்கு பொருந்தி வராது என்பதாலும் மீட்பு மூச்சு கொடுப்பது கைவிடப்பட்டு, நெஞ்சு அழுத்தம் மட்டுமே 30, 30 ஆக ஆம்புலன்ஸ் வரும் வரை கொடுத்து வர வேண்டும் கொடுப்பவருக்கு கஷ்டமேற்பட்டு ஓய்வு தேவைப்பட்டால், அருகில் உள்ள மற்றவர் ஒருவர் நெஞ்சு அழுத்தத்தை தொடர வேண்டும்.
நெஞ்சு அழுத்தம் தொடர்ந்து கொடுப்பதால் ஒவ்வொரு அழுத்தத்தின் போதும் இதயம் அழுத்தப்பட்டு ரத்தம்மூளை மற்றும் மற்ற உறுப்புகளுக்கு செலுத்தப்படும். ஒரு அழுத்தத்திற்கும் அடுத்த அழுத்தத்திற்கும் உள்ள இடைவெளியில் இதயம் விரிவடைந்து கை, கால், மார்பு, வயிறு ஆகிய பாகங்களில் இருந்து ரத்தம் இதயத்திற்கு வந்து சேரும். மேலே விவரிக்கப்பட்ட இதய செயல் மீட்பு முறை புரிந்துகொள்வதற்கு சற்று சிரமாக தோன்றினால் இந்திய மருத்துவ சங்கத்தின் சஞ்சீவன் கமிட்டியின் “உயிர்காக்கும் முதலுதவி” என்ற 4 நிமிட விழிப்புணர்வு குறும் படத்தை யூ டியூப்பில் பார்த்து நன்கு புரிந்து கொள்ளலாம்.
இதில் திரைபட நடிகர்கள் விஜய் சேதுபதி, சத்யராஜ் ஆகிய இருவரும் இலவசமாக தோன்றி இதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்கள். இது தமிழில் எடுக்கப்பட்டு இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திடீர் இதய நிறுத்தம் ஏற்பட்டு சரிந்து விழும் நபருக்கு நாம் உடனே முன்வந்து இந்த உயிர்காக்கும் முதலுதவியை அளித்தால் அவர் உயிர் பிழைக்கும் சாத்தியம் இரண்டு, மூன்று மடங்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை. நின்ற இதயத்தை மீண்டும் துடிக்க வைப்போம். நன்மை பயக்கும் விலை மதிப்பற்ற ஆயுளை நீடிக்க செய்வோம். ஒவ்வொரு உயிரும் வீட்டிற்கும், நாட்டிற்கும் அவசியம். முதலுதவி அளிக்கும் நமக்கும் ஆத்ம திருப்தி ஏற்படும்.
மரு. எம்.பாலசுப்பிரமணியன் தலைவர், சஞ்சீவன் கமிட்டி, இந்திய மருத்துவ சங்கம்,புதுடெல்லி
கூந்தலை உரிய பராமரிப்பு செய்து பாதுகாத்தாலே, கூந்தல் சார்ந்த பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம். கூந்தல் அழகை எப்படிப் பாதுகாப்பது என்று அறிந்து கொள்ளலாம்.
விதவிதமாக ஹேர்ஸ்டைல் செய்துகொண்டு டிரெண்டில் அசத்தும் பெண்களுக்கு இளநரை, கூந்தல் வறட்சி, பொடுகுப் பிரச்னை போன்றவை தலையாய பிரச்சனையாக இருக்கிறது. இவற்றிலிருந்து எப்படி விடுபடுவது? கூந்தல் அழகை எப்படிப் பாதுகாப்பது என்று அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் கூந்தலின் தன்மை, கூந்தல் சார்ந்த பிரச்னைகள் வேறுபடும். கூந்தல் பிரச்னைகளைட் தடுக்க நாம் அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் இருந்து ஷாம்பு வரை எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். கூந்தலை உரிய பராமரிப்பு செய்து பாதுகாத்தாலே, கூந்தல் சார்ந்த பிரச்னைகளுக்கு குட்பை சொல்லலாம்.
கூந்தல் நரைப்பதற்கும் நாம் பயன்படுத்தும் ஷாம்பிற்கும் சம்பந்தம் உண்டு. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பில் பாராஃபைன் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அது உங்கள் கூந்தலில் உள்ள மெலனின் அளவைக் குறைத்து, கூந்தலை நரைக்கச்செய்யும். எனவே, ரசாயனம் இல்லாத ஷாம்பைத் தேர்வுசெய்து பயன்படுத்துவது ஆரோக்கியமானது. தினமும் ஷாம்பு பயன்படுத்தி ஹேர் வாஷ் செய்யாமல், வாரம் 3 முறை மட்டும் ஷாம்பு உபயோகிக்கும்பட்சத்தில் நரை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
யூ கட் அல்லது வி கட், ஸ்ட்ரெய்ட் கட் செய்திருக்கிறீர்கள் எனில் பிரச்னையில்லை. கூந்தல் வளரத்தொடங்கும்போது ஒரே நீளத்தில்தான் வளரும். சில மாதங்கள் கழித்து மீண்டும் கட் செய்துகொள்ளலாம். ஃபெதர் கட், ஸ்டெப் கட் செய்கிறீர்கள் எனில், கூந்தல் வளரத்தொடங்கும்போது, ஒரு முடி நீளமாகவும் ஒரு முடி குட்டையாகவும் வளரும் என்பதால், 2 மாதத்திற்கு ஒரு முறை கூந்தலின் நுனிப்பகுதியை ட்ரிம் செய்துகொள்வது நல்லது.
காய்ந்த நெல்லிக்காய் மற்றும் வெந்தயத்தை சரிசமமாக எடுத்துப் பொடித்து, தயிர் கலந்து பேக்காக அப்ளை செய்து, ஒரு மணிநேரம் கழித்து கூந்தலை அலச, பொடுக்கு பை பை சொல்லலாம்.
கூந்தல் வறட்சியை போக்க தினமும் ஷாம்பு பயன்படுத்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். pH மதிப்பு குறைந்த ஷாம்புகளைத் தேர்வுசெய்து பயன்படுத்த வேண்டும்.
அதிக வறட்சி உள்ளது எனில், தயிர் மற்றும் முல்தானிமெட்டியை சம அளவில் எடுத்து, ஒன்றாகக் கலந்து பேக் போட்டு கூந்தலை அலசவும். வாரம் ஒரு முறை இதனைச் செய்து வர கூந்தல் வறட்சி நீங்கும்.
பாதாம், காய்கறிகள், கீரைகள் எனப் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு மால்ட். இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 5 டேபிள் ஸ்பூன்
பால் - 2 கப்
தண்ணீர் - அரை கப்
நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

செய்முறை :
கேழ்வரகு மாவை வாணலியில் போட்டு 5 நிமிடம் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
1/2 கப் பாலில் ராகி மாவை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மீதமுள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கலந்து வைத்துள்ள கேழ்வரகு கலவையை சேர்த்து கட்டிகள் சேராதவாறு கைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
இறுதியில் அதில் ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து கிளறி இறக்கி, பாதாம் பொடியை சேர்த்து பரிமாறவும்.

பாதாம் பொடி/நறுக்கிய பாதாம் - 3 டேபிள் ஸ்பூன்

சுவையான சத்தான ராகி மால்ட் ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதனால், இதை நினைத்துப் பயந்துவிட வேண்டாம். அதேநேரம், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை கன்சல்ட் செய்துவிடுவது நல்லது."
50-களிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிப்பது நல்லது.
மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோபாஸ் நேரத்திலும் வரும்.
ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரத்துத் தலைவலி வரும். அவர்கள் தாராளமாக மாத்திரை எடுக்கலாம், தப்பில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் இப்படி தலைவலி வந்து, மாத்திரை சாப்பிட்டும், தலைவலி சரியாகவில்லை என்றால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
பத்துப் பெண்களில் 2 அல்லது 3 பெண்களுக்கு இப்படி 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வரலாம். முக்கால்வாசிப் பெண்களுக்கு 50-க்கு முன்னாடியே நின்றுவிடுகிறது. இது சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்வாகைப் பொறுத்தது.
அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வரும் என்று சிலர் சொல்வார்கள். அப்படி கிடையவே கிடையாது. நிறைய பேர் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.
இந்தக் காலத்தில் காலதாமதமான திருமணம் காரணமாக, நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாமெல்லாரும் பார்த்தும் வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக, சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது.

இந்த ஆசனம் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்க செய்யும். அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஆசனம் உகந்தது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை
விரிப்பில் இரண்டு கால்களையும் நீட்டி மல்லாக்கப்படுக்க வேண்டும். வலது காலை மட்டும் மடக்கி நெஞ்சுக்கு நேராக (இடதுபுறமாக) நீட்ட வேண்டும். அதன் பிறகு வலது காலை இடது கையால் பிடிக்க வேண்டும்.
அதே வேளையில் வலது கையை நேராக நீட்டி வைக்கவும். தலையை வலதுபுறமாக சாய்க்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவேண்டும். பின்னர் கால்களை மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.
பயன்கள்
இந்த ஆசனம் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்க செய்யும். அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஆசனம் உகந்தது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கும். சிறுநீரகப்பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும்.

வெளியில் விளையாடக் கூடாது, மண்ணில் கால்படக் கூடாது என குழந்தைகளை பொத்திப்பொத்தி வளர்க்கும் பெற்றோர்கள்தான், அவர்களுக்கு ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்’ என்ற பிரச்சினை உண்டாக காரணமாகிறார்கள்.

சுத்தமும் சுகாதாரமும் அவசியம். ஆனால், அதீத சுத்த உணர்வு தேவையற்றது. குறிப்பாக, வெளியில் விளையாடக் கூடாது, மண்ணில் கால்படக் கூடாது என குழந்தைகளை பொத்திப்பொத்தி வளர்க்கும் பெற்றோர்கள்தான், அவர்களுக்கு ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்’ என்ற பிரச்சினை உண்டாக காரணமாகிறார்கள். பிறந்தது முதல் ஒரு வயது வரை குழந்தைகளை கவனத்துடன் சுகாதாரம் பேணி வளர்க்க வேண்டும்.
1 முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, ‘குப்பையை தொடாதே, மழையில் நனையாதே, தரையில் விழுந்த உணவை சாப்பிடாதே’ என அவர்களின் புரிந்துகொள்ளும் தன்மைக்கேற்ற விஷயங்களை சொல்லிக்கொடுத்து வீட்டுக்குள்ளேயே சுதந்திரமாக விளையாட அனுமதிக்கலாம். 3 வயதுக்குப் பிறகு குழந்தைகள் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் ஓடியாடி விளையாடவேண்டிய காலகட்டம். அப்போது, ‘விளையாட வெளியே போகக் கூடாது’, ‘மற்ற குழந்தைகளை தொட்டு விளையாடக் கூடாது’, ‘செடி, மரம் பக்கம் செல்லக் கூடாது’ என கட்டுப்பாடுகளை அடுக்கக் கூடாது.
அதீத சுகாதார உணர்வின் ஓர் அங்கமாக சிலர் குழந்தைகளை அடிக்கடி கைகழுவ வைப்பது, குளிக்க வைப்பது என்றிருப்பார்கள். இதனால் அவர்கள் உடலில் இருக்கும் ப்ரோபயாட்டிக்ஸ் எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பலவீனமடைந்துவிடும். தேவைக்கும் அதிகமான சுகாதார பேணலால் குழந்தைகளின் சுதந்திரமும் பல நேரங்களில் பாதிக்கப்படுவது உண்டு. அவர்களின் சுய நோய் எதிர்ப்புத் திறன் குறையும். இதுதான் ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்‘.
இதன் விளைவாக எளிதில் வயிற்றுப்போக்கு, மூச்சு வாங்குதல், காய்ச்சல், சளி, தும்மல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதேசமயம் அவர்களின் உடலில் சுய நோய் எதிர்ப்புத் திறனும் குறையக்கூடாது. இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. அதற்கு, தினமும் காலை தூங்கி எழுந்ததும் பல் துலக்குவது, மலம், சிறுநீர் கழித்ததும் கைகளை சோப்புப் போட்டு நன்றாக கழுவுவது, இருவேளை குளிப்பது, சாப்பிடும் முன் நன்றாகக் கை கழுவுவது, ஆசன வாயை எப்போதும் உலர்வாக வைத்திருப்பது, கை மற்றும் கால்களில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வது, 20, 30 நாட்களுக்கு ஒருமுறை முடிவெட்டிவிடுவது, வாரத்துக்கு குறைந்தபட்சம் 3 நாட்களாவது தலைக்கு குளிக்க வைப்பது, வாரம் ஒருமுறை நகங்களை வெட்டிவிடுவது, விரல்களை வாயில் வைக்காமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்ட இந்த அடிப்படை சுகாதார பழக்கங்களை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

காளானில் கிரேவி, 65, செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காளான், குடைமிளகாய் வைத்து டிக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் - 10
குடைமிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் - 2
பூண்டு - 5 பல்
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
சோம்பு - சிறிதளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கடுகு - சிறிதளவு

செய்முறை :
காளானை சுத்தம் செய்து வைக்கவும்.
குடைமிளாய், வெங்காயத்தை வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயத்துடன் மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
பூண்டு, மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
சோம்பு, வெந்தயம், தனியா, கடுகு போன்றவற்றை வறுத்து பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வறுத்து பொடித்த கலவையை கொட்டி கிளறவும்.
பச்சை வாசனை போனதும் இறக்கி அதனுடன் குடை மிளகாய், காளான் துண்டுகளை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய காளான், குடை மிளகாயை டிக்கா குச்சியில் குத்தி எண்ணெயில் போட்டு பொரித்து பரிமாறவும்.
சூப்பரான காளான் டிக்கா ரெடி.
காளான் - 10
குடைமிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் - 2
பூண்டு - 5 பல்
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
சோம்பு - சிறிதளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கடுகு - சிறிதளவு
தனியா - சிறிதளவு

செய்முறை :
காளானை சுத்தம் செய்து வைக்கவும்.
குடைமிளாய், வெங்காயத்தை வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயத்துடன் மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
பூண்டு, மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
சோம்பு, வெந்தயம், தனியா, கடுகு போன்றவற்றை வறுத்து பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வறுத்து பொடித்த கலவையை கொட்டி கிளறவும்.
பச்சை வாசனை போனதும் இறக்கி அதனுடன் குடை மிளகாய், காளான் துண்டுகளை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய காளான், குடை மிளகாயை டிக்கா குச்சியில் குத்தி எண்ணெயில் போட்டு பொரித்து பரிமாறவும்.
சூப்பரான காளான் டிக்கா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உலகத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் உணவை ஒவ்வொரு நாட்டினரும் எப்படி கையாளுகிறார்கள்? உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? என்பதை பார்க்கலாம்.
நாம் நிறைய புத்தகங்கள் படிக்கிறோம். ‘படித்து’ நிறைய கற்றுகொள்ள முடியும் என்பதால், அதை செய்துகொண்டிருக்கிறோம். புத்தகங்களில் படித்து கற்றுக்கொள்வதுபோல் வெளிநாட்டு பயணங்களில் நாம் ‘பார்த்து’ நிறைய கற்றுக்கொள்ள முடியும். அதற்காக வெளிநாடுகளில் உள்ள உணவகங்களுக்கு செல்லவேண்டும். உலகத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் உணவை ஒவ்வொரு நாட்டினரும் எப்படி கையாளுகிறார்கள்? உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? என்பதை பார்க்கும்போது சில நேரங்களில் நாம் வெட்கித்தலைகுனிய வேண்டியதாகிவிடுகிறது.
தினமும் பல ஆயிரம் டன் உணவை திருமணம் போன்ற விழா நிகழ்ச்சிகளிலும், ஓட்டல்களிலும், வீடுகளிலும் வீணடித்துக்கொண்டிருக்கும் நம் நாட்டில் இருந்து ரஷியாவிற்கு சென்றிருந்தபோது கற்ற பாடம் என் மனதைவிட்டு அகலாதது.
ரஷியா பரந்துவிரிந்து கிடக்கும் மிகப்பெரிய துருவ பிரதேசம் என்பதும், நாம் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு குளிரைக்கொண்ட நாடு என்பதும் பலருக்கும் தெரிந்த விஷயம். செப்டம்பர் மாதத்தில் மட்டும்தான் நம்மால் அங்குள்ள குளிரைத் தாங்கிக்கொள்ள முடியும். மற்ற மாதங்களில் தாங்க முடியாத அளவுக்கு குளிர் என்பதால் அதற்கு ஏற்ற உணவுப்பழக்க வழக்கங்களை ரஷியர்கள் கடைப்பிடிக்கிறார்கள். உடலுக்கு அதிக உஷ்ணத்தை தரக்கூடிய கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு கலந்த உணவுகளையே அவர்கள் அதிகம் உண்கிறார்கள்.
மாஸ்கோ நகரில் உள்ள ஒரு உணவகத்தில் நான் உட்கார்ந்திருந்தபோது, இரண்டு இளம் பெண்களையும் அவர்களது தாய், தந்தையையும் கொண்ட ரஷிய குடும்பம் ஒன்று எதிர்மேஜையில் வந்து அமர்ந்தது. நான் சாண்ட்விச், பிரெட் ரோஸ்ட், ஈமுகோழி முட்டை, முட்டைக்கோசில் தயார் செய்த ‘கிவானேயா கபூஸ்தா’ போன்றவைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
வாங்கிய உணவுகளில் ஒரு பகுதியை என்னால் சாப்பிட முடியவில்லை. என் கண்களுக்கு எட்டிய தூரத்தில் உள்ள மேஜைகளில் இடம் பிடித்திருந்த எல்லா ரஷியர்களுமே ‘அப்படைசர்’ எனப்படும் ஸ்டார்ட்டர்களில் ஆரம்பித்து உருளைக்கிழங்கில் விதவிதமாக தயார் செய்த உணவுகளையும், மாடு மற்றும் பன்றி இறைச்சி வகைகளையும் மிக குறைந்த அளவில் வாங்கி, நிதானமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இறுதியில் ‘போர்ச்’ என்ற ஒருவகை சூப்பை பருகினார்கள்.
கிட்டத்தட்ட ஒருமணி நேரத்தில் சாப்பிட்டு முடிக்கும்போது அந்த உணவகத்தில் எனது தட்டை தவிர வேறு எதிலும் ஒரு பிசிறு உணவுகூட மிச்சம் இல்லை. கழுவித் துடைத்தது போல் ரஷியர்களின் உணவுத்தட்டுகள் இருக்க, எனது சிந்தனை நம் ஊரில் நடக்கும் திருமண விருந்துகளை நினைத்துப்பார்த்தது. எட்டு வகை கூட்டு, ஐந்துவகை இனிப்பு என்று இலைகளில் வரிசையாக அடுக்கப்படும் உணவுகளில் எதையுமே சாப்பிடாமல் அப்படியே சுருட்டி வைத்துவிட்டு எழுந்து போகிறவர்களை பார்த்து நொந்துபோன காட்சி நினைவுக்கு வந்தது.
விஷயத்திற்கு வருவோம்! மாஸ்கோ உணவகத்தில் அனைவருமே துடைத்து சுத்தம் செய்ததுபோல் எதையும் மிச்சம் வைக்காது அளவோடு சாப்பிட்டுவிட்டு எழுந்ததும், ‘ஒரு துளி உணவைக்கூட வீணாக்காத இந்த நல்ல கலாசாரத்தை அவர்கள் அனைவருமே பின்பற்ற என்ன காரணம்?’ என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மேலோங்கியது. அதையே கேள்வியாக்கி என் அருகில் இருந்த ரஷ்ய தம்பதியிடம் கேட்டேன். அவர்கள் அந்த மாற்றத்திற்கு காரணமான ஒரு நூறாண்டு கால சரித்திரத்தை சொன்னார்கள்.
1916-ம் ஆண்டுவரை ரஷ்யர்களும் உணவு விஷயத்தில் நம்மைப்போன்றுதான் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். இஷ்டத்திற்கு சாப்பிட்டு, கண்டபடி வீணாக்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். 1917-ம் ஆண்டு ரஷிய புரட்சி நடந்தது. லெனின் ஆட்சியை பிடித்தார். அவர் அனைத்து விளைநிலங்களையும், உணவு உற்பத்தி மையங்களையும் அரசுடமையாக்கினார். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கொள்கையுடன் உணவு வினியோகத்தையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்து, உணவுப்பொருட்களை அளந்து, கணக்கிட்டு ஒவ்வொருவருக்கும் வழங்கினார். அப்போது குறைவாக கிடைத்ததால் அளவோடு சாப்பிடும் பழக்கம் ரஷியர்களிடம் உருவாகியிருக்கிறது. முதலில் கோபம் கொண்டாலும், பின்பு ‘அதை தவிர வேறு வழியில்லை’ என்பதை உணர்ந்து அவர்கள் அளவோடு, சாப்பிட பழகிக்கொண்டார்கள்.
1991-ம் ஆண்டு சுதந்திரதாகம் ஏற்பட்டு சோவியத்யூனியன் உடைந்து சிதறியது. அதை தொடர்ந்து ரஷ்யாவை ஏழ்மை வாட்டியது. அன்றாட உணவுக்கு கஷ்டப்பட்டார்கள். பின்பு படிப்படியாக முன்னேறினார்கள். ஆனாலும் உணவு கிடைக்காமல் அலைந்த காலம் அவர்கள் மனத்திரையில் இருந்து மறையவில்லை. அதனால் அளவோடு, வீணாக்காமல் சாப்பிட கற்றுக்கொண்டார்கள்.
என்னிடம் பேசிய ரஷிய குடும்பத்தில் இடம் பெற்றிருந்த பெண். “தேவையான அளவு மட்டுமே நாங்கள் உணவுப் பொருட்களை கடைகளில் இருந்து வாங்குகிறோம். அவை மலிவாக கிடைத்தாலும் அளவுக்கு அதிகமாக வாங்குவதில்லை. அதுபோல் எத்தனை பேருக்கு உணவு தேவை என்பதை உறுதி செய்துவிட்டு, அதற்குரிய அளவில்தான் சமைப்போம். சாப்பிடும்போது ஒருதுளிகூட தரையில் விழாது. ஒரு பிசிறுகூட உணவுத் தட்டில் இல்லாத அளவுக்கு வழித்து சாப்பிட்டுவிடுவோம் எங்கள் குழந்தைகளும் அப்படித்தான்” என்றார்.

இதுதான் நாம் ரஷியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்.
நம் நாட்டில் தண்ணீர் இல்லை. விளைச்சல் பற்றாக்குறை. தனி நபர்களிடம் பணப்புழக்கமும் குறைந்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் வாழ்க்கை திண்டாட்டமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் நமது உணவுக் கலாசாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படவே இல்லை.
தேவைக்கு அதிகமாக (கடன் வாங்கியாவது) உணவுப் பொருட்களை வாங்குகிறோம். தேவைக்கு அதிகமாக சமைத்து வீணாக்குகிறோம். அதை சாப்பிடும்போதும் வீணாக்குகிறோம். நாம் வீணாக்கும் ஒவ்வொரு பருக்கையும் விலை மதிப்பற்றது என்பதை நாம் புரிந்தால்தானே நமது தலை முறைக்கு புரியவைக்க முடியும்.
சீன மக்களிடம் இருந்து உணவு விஷயத்தில் நாம் எதை கற்றுக்கொள்ளலாம்?
சீனாவுக்கு தொழில்ரீதியாக செல்லும் இந்தியர்களுக்கு, அங்குள்ள உணவுப்பழக்கம் திகைக்கவைக்கும் அளவுக்கு இருக்கும். நத்தை சூப், குரங்குசூப், பாம்பு சூப் என்றெல்லாம் கேள்விப்பட்டுவிட்டு, அங்குபோய் எந்த உணவைப் பார்த்தாலும் அடிவயிறு கொஞ்சம் கலங்கத்தான் செய்யும். ஆனால் அங்கும் நாம் விரும்பி சாப்பிடக்கூடிய உலகப்புகழ்பெற்ற உணவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்று ஆரஞ்சு டோப்பு. சோயா பீன்சில் இருந்து இதனை தயாரிக்கிறார்கள். இந்த டோப்புவை மிளகாய்த்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, பிரவுன் சுகர் போன்றவை கலந்து அற்புதமாக தயாரித்து ஆரஞ்சு சாறும் சேர்க்கிறார்கள். பின்பு அதனை அளவான ஆலிவ் எண்ணெய்யில் வறுத்து தருகிறார்கள். இது சைவ உணவு, நம்பி சாப்பிடலாம்.
சீனர்கள் எந்த உணவாக இருந்தாலும் ‘சாப் ஸ்டிக்’ பயன்படுத்திதான் சாப்பிடுகிறார்கள். டிரம்ஸ் வாசிக்க பயன்படுவதுபோன்ற ஒல்லியான அந்த இரண்டு குச்சிகளை அவர்கள் லாவகமாக கையாண்டு சாப்பிடுகிறார்கள். ‘சாப்ஸ்டிக்’ பயன்படுத்துவதன் சிறப்பம்சம் பற்றி சீன நண்பர்கள் சொல்வதை கேளுங்கள்.
“நாங்கள் சாப்பிடும்போது கவனச்சிதறல் இல்லாமல் முழு கவனமும் சாப்பிடும் உணவு மீது இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம். சாப் ஸ்டிக்குகளை கையில் எடுத்தாலே கவனம் உணவு மீது பதிந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவைகளை பயன்படுத்தி சாப்பிட முடியாது. குச்சியில் குறைந்த அளவே உணவை எடுக்க முடியும். அதையும் நன்றாக மென்று சாப்பிடுவோம்.
அதிக நேரம் எடுத்து சாப்பிட்டாலும், குறைந்த அளவு உணவே உட்கொள்ள முடிவதால் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியாது. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட எந்த அளவுக்கு ருசித்து ரசித்து சாப்பிடுகிறோம் என்பதுதான் எங்களுக்கு முக்கியம். சரியான நேரத்துக்கு சாப்பிடுவது, அதுவும் முக்கால் வயிறு மட்டுமே சாப்பிடுவது போன்றவை எங்கள் வழக்கம். அதனால் எங்கள் நாட்டு மக்களை தொப்பையுடன் பார்ப்பது கடினம்” என்றார்கள்.
அவர்கள் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்து காலியான தட்டுகளையும், கிண்ணங்களையும் பார்த்தேன். சீனர்களும் உணவை சிந்துவதில்லை. வீணாக்குவதில்லை. நாம் ரஷியர்களிடமிருந்தும், சீனர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் விஷயம், அவர்களது உணவுக் கலாசாரம்தான்! இந்த அடிப்படை கலாசாரத்தை நாம் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் இருந்து தொடங்குவோம்!
கட்டுரை: முனைவர் ஜே.தேவதாஸ்,
உணவியல் எழுத்தாளர், சென்னை.

பெண்கள் தான் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது வரவாகவும், புது டிசைன்களிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான்.
தான் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது வரவாகவும், புது டிசைன்களிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நாம் அணிந்து செல்லும் உடைகளை வைத்தே நமக்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆகவே மற்றவர்களின் முன் நம்மை பெருமையாகவும், அடுத்தவர்களை திரும்பி பார்க்க வைப்பதும் நம்முடைய ஆடைகள் தான்.
ஒரு சிலர் அதிக ஆடம்பர டிசைன்களை விரும்பமாட்டார்கள். தான் உடுத்தும் சுடிதார் மற்றவர்களை கவர வேண்டும். ஆனால் நிறைய டிசைன்கள் இருக்க கூடாது என்று தான் எண்ணுவார்கள். ஒரு சிலர் அதிக வேலைப்பாடுகள் இருந்தால் தான் பிடிக்கும். முதலில் நாம் எடுக்கும் சுடிதார் கலர் நம்முடைய டிசைன்களுக்கு ஒத்துவருமா “? என்று பாருங்கள்.
அதை விட்டுட்டு, தேவையில்லாமல் டிசைன்களுக்கு ஆசைப்பட்டால், என்னதான் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்தாலும், மற்றவர்களின் முன் உங்களை ” டல்லாக ” தான் காட்டும். எனவே அதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். முதலில் கருப்பு நிறமாக உள்ளவர்கள், ” லைட் நிறத்தில் உள்ள ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்த சுடிதாரை தேர்ந்தெடுக்கலாம்.
லைட் கிரீன், எலுமிச்சை நிறத்தில் உள்ள மஞ்சள் கலர், லைட் வைலட், லைட் சாண்டில், ஒயில் அல்லது ஏதாவது காமினேஷன் கலர் இது மாதிரி ” லைட் நிறத்தில் உள்ள சுடிதார்களை தேர்வு செய்யுங்கள். கொஞ்சம் கலராகவோ அல்லது மாநிறமாகவோ உள்ளவர்கள் மெரூன், இங்க் புளூ, பிங்க் கலர், ஆஷ் கலர், ஒயிட் அல்லது ஏதாவது காமினேஷன் கலரை தேர்வு செய்யலாம்.
கலராக உள்ளவர்களுக்கு ” டார்க் கலரில் எந்த நிறவகையான சுடிதார்கள் போட்டாலும் அழகாக தெரியும். பெரும்பாலும் நிறத்திற்கு ஏற்றார்போல் தேர்வு செய்வதை காட்டிலும், அவரவர் உடல் வாகுக்கு தகுந்தாற்போல் சுடிதார்களை எடுக்க வேண்டும். குண்டாக உள்ளவர்கள் காட்டன் சுடிதார் அணிந்தால், அது மேலும் அவர்களை குண்டாகத்தான் காட்டும்.
அதற்கு பதில், அவர்கள் நிறைய ஆடம்பர வேலைப்பாடுகள் செய்யாத சிம்பிளாக உள்ள சல்வார்களை போட்டாலே அழகாக தெரியும். ஒல்லியாக உள்ளவர்கள் கொஞ்சம் அதிக வேலைபாடுகள் செய்த காட்டன் அல்லது சில்க் காட்டன் சுடிதார் தேர்வு செய்யலாம். அது அவர்களை சற்று குண்டாக காட்டும்.
வெயில் காலத்தில், சிந்தடிக் வகை சுடிதார்களை உபயோகிக்க வேண்டாம். அதுமட்டுமல்ல, என்னதான் சுடிதார்களை தேர்வு செய்தாலும், அவர்கள் தைக்கும் முறை அந்த துணியின் அழகை கெடுத்து விடுகிறது. முடிந்தவரையில், சுடிதார்களை அம்பர்லா மாடலில் தைத்தால், பார்ப்பதற்கு பூக்கள் விரிந்திருப்பது போன்று அழகாக தெரியும். தேர்வு செய்யும் சுடிதாரை, நாம் அழகாக தெரிய தைக்கும் முறையும் மிக மிக அவசியம்.

கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவை மட்டுமே எடுத்துக்கொண்டாலும், 9ஆவது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவை மட்டுமே எடுத்துக்கொண்டாலும், 9ஆவது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
* தானியங்கள் அடங்கிய பிரெட்டில் போலிக் அமிலம் அடங்கியிருக்கிறது. அதாவது போலிக் அமிலம் என்பது வைட்டமின் - பி தான். வேறு எதுவுமல்ல... இந்த முழு தானியங்கள் அடங்கிய ப்ரெட் வகைகளை ஒன்பதாவது மாத கர்ப்பிணி பெண் உண்பதால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. எனவே, ஒரு நாளைக்கு 6 முதல் 11 முறை இந்த பிரெட் வகை உணவை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
* கர்ப்பமாக இருக்கும்போது பெண்களுக்கு தேவையான உணவுகளுள் ஒன்று பழ வகை உணவு. இந்த பழங்கள் எல்லாவித ஊட்டச்சத்துக்களையும் தர, தாய் மற்றும் சேய் இருவருக்கும் பிரசவ காலத்திற்கு பெரிதும் உதவுகிறது. அத்துடன் பிரசவக்காலம் நெருங்க மலச்சிக்கல் பிரச்சனை என்பது அதிகமாக காணக்கூடும். அதனால் மலச்சிக்கலை போக்க பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
* பொதுவாக காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து அதிகமிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாக, 9ஆவது மாதத்தில் எண்ணெய் உணவுகளை தவிர்த்து காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் வேண்டும். இதனால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடும்.
* சீஸ் மற்றும் தயிர் போன்றவற்றில் அதிகளவில் கால்சியம் மற்றும் புரதச்சத்து அடங்கி உள்ளது. இது கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான சத்துக்களையும் தரவல்லது. கர்ப்பிணி பெண்கள் சோயா பால், சோயா தயிர், சோயா சீஸ் போன்றவற்றை தங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ள சர்க்கரை அளவு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
* புரதம் அடங்கிய உணவுகளில் அமினோ அமிலம் நிறைந்திருக்க உடல் செல் கட்டமைப்பு பணிக்கும் பெரிதும் உதவுகிறது. ஆனால், புரத உணவை நீங்கள் கர்ப்ப காலத்தின் 2ஆவது மற்றும் 3ஆவது மூன்று மாதத்தில் எடுத்துக்கொள்ளும்போது மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும். நீங்கள் உண்ணும் உணவை பொறுத்தே குழந்தையின் வளர்ச்சி என்பது கர்ப்ப காலத்தில் அமைகிறது.
* கர்ப்பிணி பெண்கள் மிகவும் முக்கியத்துவம் தரவேண்டிய விஷயங்களுள் ஒன்று தண்ணீர். ஆம், உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதே அளவுக்கு உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு தண்ணீர் தேவைப்பட, இதனால் கருவை சுற்றி காணப்படும் பனிக்குட நீர் குறையாமல் பார்த்துக்கொள்ளவும் செய்கிறது. உங்களுடைய 9ஆவது மாதத்தில் நீங்கள் 2 லிட்டர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டியது அவசியமாகும்.
கர்ப்பமாக இருக்கும்போது முடிந்தளவுக்கு வெளியில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். நீங்கள் வாங்கும் ஒரு பொருளின் மீது பல வித கேள்விகள் எழ வேண்டும். அப்போது தான் 90 சதவிகித சிறந்த உணவாவது உங்களுக்கு கிடைக்கும். மருத்துவரின் பரிந்துரையை அடிக்கடி பெற வேண்டியது மிகவும் முக்கியம்.

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி உணவில் கம்பு சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
கம்பு மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
முட்டை கோஸ் - 100 கிராம்
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 1
கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, கேரட்டை துருவிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு அதில் உப்பு, துருவிய காய்கறிகள், கரம்மசாலா தூள், பால், ப.மிளகாய், போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
பிரைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுங்கள்.
கம்பு மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
முட்டை கோஸ் - 100 கிராம்
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 1
கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பால் - அரை கப்

செய்முறை :
முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, கேரட்டை துருவிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு அதில் உப்பு, துருவிய காய்கறிகள், கரம்மசாலா தூள், பால், ப.மிளகாய், போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
பிரைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுங்கள்.
ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.