search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுப்த மச்சேந்திராசனம்
    X
    சுப்த மச்சேந்திராசனம்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சுப்த மச்சேந்திராசனம்

    இந்த ஆசனம் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்க செய்யும். அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஆசனம் உகந்தது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை

    விரிப்பில் இரண்டு கால்களையும் நீட்டி மல்லாக்கப்படுக்க வேண்டும். வலது காலை மட்டும் மடக்கி நெஞ்சுக்கு நேராக (இடதுபுறமாக) நீட்ட வேண்டும். அதன் பிறகு வலது காலை இடது கையால் பிடிக்க வேண்டும்.

    அதே வேளையில் வலது கையை நேராக நீட்டி வைக்கவும். தலையை வலதுபுறமாக சாய்க்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவேண்டும். பின்னர் கால்களை மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

    பயன்கள்

    இந்த ஆசனம் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்க செய்யும். அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஆசனம் உகந்தது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கும். சிறுநீரகப்பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும்.
    Next Story
    ×