என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
ஆசனங்களில் அரசி என்று போற்றப்படும் இந்த யோகாசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் இரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவை நீங்கி இரத்தம் சீராக பாயும்.
செய்முறை :
கைகால்களை தளர்த்திய நிலையில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரு கால்களை நீட்டிய நிலையில் மடித்து இரு பாதங்களை பின்னியவாறு தலையணையாக்கி அதன் மேல் தலையை கிடத்தி கழுத்தின் பின்புறம் நன்கு பதியும்படி வைக்கவும். இரு தொடைகளின் இடையே உள்ளிருந்து கைகளை வெளியே கொண்டு வரவும்.
பின் விரல்களை கோர்த்து பின்னிய கைகளின் உள்ளே உட்காரும் பாகத்தை தாங்கிய படி ஆசனம் அமைக்கவும். ஆரம்பத்தில் 3 முதல் 10 நிமிடங்களும், பின் படிப்படியாக கால அளவைக் கூட்டியவாறு விரும்பு காலம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம். கால்களை மூடிய நிலையில் மிக இயல்பாக மூச்சை இழுத்து விடவும். இது ஒரு கிடந்த நிலை தியான ஆசனமாகும். மருந்துகளில் சஞ்சீவி போல, ஆசனங்களில் இது சஞ்சீவி ஆகும்.
பயிற்சியாளரின் நேரடி கண்காணிப்பின்றி இந்த ஆசனத்தை செய்ய முயற்சி செய்ய கூடாது.
பலன்கள் :
உடலில் உள்ள ஒட்டு மொத்த சுரப்பிகளை ஒரு சேர சீராக இயக்கும். அடைபட்ட வியர்வைக் கண்கள் திறக்கப்பட்டு, உடலின் கெட்ட நீர் வெளியேற்றப்படும். இரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவை நீங்கி இரத்தம் சீராக பாயும். மனதை அமைதி அடைய செய்யும். ஆசனங்களில் அரசி என இது புகழப்படுகிறது.

குழந்தைகள் நல்ல மனிதர்களாக மாற அவர்களுடன் பெற்றோர் நேரத்தை செலவு செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மாணவர்களின் சிந்தனை
பள்ளிக்கூடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரம், சமூக சூழல் உள்ளிட்ட அம்சங்கள் வேறுபட்டதாக இருக்கும். அதுபோல் குழந்தைகள் பழக்க, வழக்கங்களும் வேறுபட்டதாகவே இருக்கும். ஆனாலும் குழந்தைகள் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அப்போது அவர்களிடம் வேறுபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை வழங்கப்படுகிறது.
ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.
பெற்றோரின் பெரிய கடமை
அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வுகள் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
தொடக்க கல்வி முக்கியம்
நல்ல வார்த்தைகள்

குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும்.
அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலாங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும்.
தொடக்க கல்வி முக்கியம்
பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுங்கிவிடக்கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதற்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்கு புதிய சமூகசூழலில் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப்புத்தகத்தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்த நாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.
நல்ல வார்த்தைகள்
குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக்கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன.
எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகளை நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும்.
ஒருபுறம் வேலை கிடைக்கவில்லை என்கிற கூக்குரல்கள். மற்றொருபுறம் வேலையைச் செய்யத்தக்க சரியான நபர்கள் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம்.
இன்றைக்கு படிக்கும் வாய்ப்புகளுக்கு குறைவில்லை. படித்து முடித்து வெளிவரும் இளையோர்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. ஆனால், எல்லோருக்கும் திருப்தியான வேலைகள் கிடைக்கவில்லை.
ஏன் இந்த நிலை?
நாட்டில் நிலவும் பொருளாதார சுணக்கம், பெரிய அளவுகளில் உருவாகாத புதிய வேலைவாய்ப்புகள் என்று இதற்கு பலவற்றை காரணங்களாக சொல்லலாம். அவையெல்லாம் நிச்சயமாக சரி செய்யப்பட வேண்டும். அரசாங்கங்கள் இன்னும் பல முயற்சிகள் எடுக்க வேண்டும்.
சரி, அவை மட்டும்தான் காரணம் என்று விட்டுவிடலாமா?
நான்கு ஆண்டுகள் தொழில்முறை படிப்பான பி.இ. அதன்பின் இரண்டு ஆண்டுகள் மேல் எம்.எஸ்சி., எம்.இ. படிப்பெல்லாம் படித்துவிட்டு, கலாசி, பாயிண்ட்ஸ்மேன், உதவியாளர் போன்ற படிப்புக்கு தொடர்பில்லாத வேலைகளுக்கு முயற்சிக்கும் நிலை வந்திருப்பதற்கு வேறு எவை காரணங்களாக இருக்கக்கூடும் என்றும் ஆராய வேண்டும் அல்லவா?
படித்து முடித்த எவருக்குமே வேலை கிடைக்கவில்லை என்பதல்ல நிலை என்பதும் எப்படிப்பட்ட சுமாரான சூழ்நிலையிலும் நல்ல வேலைகளை பெறுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதும், பல்வேறு நிறுவனங்கள், அவர்களுக்கு தேவைப்படும் திறன்வாய்ந்த ஊழியர்கள் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பனவும் கூட உண்மைதான்.
ஆம், வேலைக்கு தேர்வு செய்யும் நிறுவனங்களின் அதிகாரிகள், “கல்லூரி படிப்பு முடித்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்தான். ஆனால், அவர்களில் வேலை செய்ய பொருத்தமானவர்களாக நூற்றுக்கு 20 பேர் கூட இல்லை” என்று தெரிவிக்கிறார்கள்.
ஆக, ஒருபுறம் வேலை கிடைக்கவில்லை என்கிற கூக்குரல்கள். மற்றொருபுறம் வேலையைச் செய்யத்தக்க சரியான நபர்கள் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம்.
‘படிப்பு முடித்து வெளிவரும் பலரும் வேலைக்கு தகுதியானவர்களாக, அதாவது ‘எம்ப்ளாய்பிள்’ ஆக இல்லை’ என்று சொல்லப்படுவது ஏன்?
வேலைக்கு தகுதியானவர்கள் என்றால் என்ன? அதென்ன தனி தகுதி? அதென்ன ‘எம்பிளாய்பிள்’? அதுதான் பட்டப்படிப்பில் அல்லது முதுகலையில் பெற்ற உயர் மதிப்பெண்கள் இருக்கிறதே. அந்த தகுதி போதாதா? என்று திருப்பிக்கேட்கலாம்.
இங்கே ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்க வேண்டும். உயர்ந்த மதிப்பெண் என்பது மட்டுமே வேலைக்கான தகுதி அல்ல. கல்லூரியில் படித்து, உயர்ந்த மதிப்பெண் பெற்று வெளிவரும் பலரும் செய்திருப்பது என்ன?
குறிப்பிட்ட பாடத்திட்டத்தை படித்து, அவற்றை தேர்வுகளில் சரியாக எழுதியதுதான். அதை மட்டும்தான் மதிப்பெண்கள் பிரதிபலிக்கின்றன. வேலைகளை செய்வதற்கு அது மட்டுமே போதுமா என்ன?
எதைக் கற்றுக்கொள்வதிலும் ஆறு நிலைகள் இருக்கின்றன.
ஆரம்ப நிலை நினைவில் வைத்து கொள்வது. இரண்டாவது நிலை, புரிந்துகொள்வது. மூன்றாம் நிலை, தெரிந்துகொண்டதை பயன்படுத்த முடிவது. நான்காம் நிலை, அதை அலசி ஆராய முடிவது. ஐந்தாம் நிலை, அப்படிப்பட்டவற்றை எடைபோட, மதிப்பீடு செய்ய முடிவது. ஆறாம் நிலை, அப்படிப்பட்ட புதியவைகளை உருவாக்க முடிவது.
உதாரணத்திற்கு, திரை இசை கற்றுக்கொள்ளும் ஒரு மாணவரால் பாடல்களை மனப்பாடமாக சொல்லமுடிந்தால் அது, இசையமைப்பில் ஆரம்ப நிலை. அவரே மெட்டுகள் உருவாக்கினால் அது ஆறாம் நிலை.
இதை ‘டேக்சோனமி ஆப் லேர்னிங்’ என்கிறார்கள். கீழிருந்து மேல் படிநிலைகளாக இதைப் பார்த்தால் இப்படி இருக்கும்.
மாணவர்களால் படித்ததை நினைவில் வைத்துக்கொண்டு தேர்வுகள் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட முடியும்.
ஆனால், கற்றலில் அது வெறும் தொடக்க நிலைதான். மதிப்பெண் பெற இந்த ஆரம்ப நிலையே போதும். ஆனால், சிறப்பாக பணியாற்ற இது போதாது.
குறிபிட்ட வேலையைச் செய்து முடிக்க, ஒருவர் அதில் குறைந்தபட்சம் மூன்றாவது நிலையையாவது எட்டியிருக்க வேண்டும்.
பல கல்லூரிகளின் தேர்வு முறைகள் முதல் அல்லது இரண்டாம் நிலை வரை மட்டுமே சோதிப்பனவாக இருக்கின்றன. அதனால்தான் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றும் சிலர் வேலை செய்ய தகுதி பெறாதவர்களாக வேலை கொடுப்பவர்களால் கணிக்கப்படுகிறார்கள், நிராகரிக்கப்படுகிறார்கள்.
ஆக, மாணவர்கள் தேர்வு செய்திருக்கும் பாடங்களில், அடுத்தடுத்த நிலைகளுக்கு போகவேண்டும். அப்படி நகர்ந்தால், உயர் நிலைகளை அடைந்தால் அது பல்வேறு அற்புதமான வேலைகளை, வாய்ப்புகளை அவர்கள் வசம் இழுத்து வந்து சேர்க்கும். அதை கல்லூரிகளே செய்யவேண்டும். இல்லையேல் மாணவர்கள் அவர்கள் சுயமுயற்சியிலாவது அந்த நிலையை அடைய வேண்டும்.
வேலைக்கான தகுதியில் படிப்பும், மதிப்பெண்களும் மட்டுமே போதாது என்பதை இன்னொரு விதமாகவும் உணர்ந்துகொள்ள முடியும்.
எந்த வேலையை சரியாக செய்வதற்கும் சில தகுதிகள் தேவை. அதை ஆங்கிலத்தில் ‘காம்பிடென்ஸ்’ என்கிறார்கள்.
உதாரணத்திற்கு ஒரு பெரிய சிமெண்டு தொழிற்சாலையில் லாரி ஓட்டுனர் வேலை. லாரியை ஓட்டும் தகுதி யாருக்கு இருக்கிறது, எவர் ஓட்டலாம்? என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? அதற்குரிய லைசென்ஸ் பெற்ற எவரும் ஓட்டலாம் என்றுதானே.
அந்த நிறுவனம் தேர்வுக்கு வரும் ஓட்டுனர்களிடம் என்ன தகுதிகளை எதிர்பாக்கும்?
1. பல்வேறு வகை லாரிகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஓட்டவேண்டிய ஊர் பற்றி தெரிந்திருக்க வேண்டும். சாலைவிதிகள் மற்றும் வண்டி ஓட்டுவது தொடர்பான சட்ட விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
2. பல்வேறு விதமான லாரிகளை ஓட்ட இயல வேண்டும். உயர்ந்த ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. எரிச்சல் படாமல், கோபம் கொள்ளாமல், நெரிசல்களில், சிக்கலான நேரங்களில் ஓட்ட முடிய வேண்டும். சாலை விதிகளை அலட்சியம் செய்யாமல் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.
கவனித்திருக்கலாம். தேவைப்படும் தகுதியில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. முதலாவது செய்ய வேண்டிய வேலை குறித்த அறிவு, ‘நாலெட்ஜ்’. அடுத்தது செய்யும் திறன், ‘ஸ்கில்’. மூன்றாவது அந்த வேலையைச் செய்ய பொருத்தமான மனோபாவம் எனப்படும் ‘ஆட்டிடூட்’.
பத்தாவது மட்டுமே படித்த ஒருவரும், எம்.இ. படித்த ஒருவரும் இந்த வேலைக்கு முயற்சித்தால், கூடுதல் படிப்பு என்பதற்காக எம்.இ. படித்தவருக்கு இந்த வேலையைக் கொடுப்பார்களா அல்லது இருவரில் எவருக்கு மேற்சொன்ன மூன்று தகுதிகளும் இருக்கிறதா என்று பார்ப்பார்களா?
ஆக, படிப்பு, மதிப்பெண்கள் ஆகியவை தேவைதான். ஓரளவிற்கு. அவை மட்டுமே போதாது.
லாரி ஒட்டுவதற்கு மட்டுமல்ல. இந்த தகுதி தேவை என்பது எல்லாவிதமான வேலைகளுக்கும் உண்டு. போலீஸ் வேலை, கணக்காளர், மேலாளர், மேற்பார்வையாளர், மென் பொறியாளர், வங்கிப் பணியாளர், ஆசிரியர், பேராசிரியர் என்று எந்த வேலைக்கும் வேறுபடும் தகுதிகள் உண்டு.
எந்த வேலைக்கு ஆளெடுக்கும் போதும் மூன்றையும் பார்ப்பார்கள். படிப்பு, ‘நாலெட்ஜ்’ என்ற முதலாவதைக் கொடுக்கும். பயிற்சி, திறன் என்ற இரண்டாவதைக் கொடுக்கும். மூன்றாவதான மனோபாவம் இயல்பிலேயே இருக்கும். தனது மனோபாவத்திற்கு பொருத்தமான வேலைகளுக்கு முயற்சிப்பதும், சேர்வதும் உதவும். அல்லது முயற்சிக்கும் விரும்பும் வேலைக்கு உரிய மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
டாக்டர் சோம வள்ளியப்பன்

இன்றைய நவீன உலகில் மாரடைப்பு என்பது மிகச் சாதாரணமாக வரக்கூடிய ஒரு நோய் போல் உள்ளது. இருதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்துள்ளது.
இன்றைய நவீன உலகில் மாரடைப்பு என்பது மிகச் சாதாரணமாக வரக்கூடிய ஒரு நோய் போல் உள்ளது. இருதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்துள்ளது. 80% உயிரிழப்புகள் இதய நோயினால் ஏற்படுகிறது. இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேரில் 272 என்ற விகிதத்தில் உள்ளது. முக்கியமாக இந்தியாவில் இதய நோய் இறப்பு விகிதம் அதிகம் இருப்பது தமிழ்நாடு, பஞ்சாப், கர்நாடகா என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 23.2 மில்லியன் (1990களில்) இருந்த இறப்பு விகிதம், 37 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
மாரடைப்பு
பெரும்பாலும் மாரடைப்பு உடலில் உள்ள கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு அதிகமாவதால், அது ரத்த குழாய்களில் சென்று சிறிது சிறிதாக படியத் தொடங்குகிறது, அதிக உடல் எடையினால், இதயநோய் குடும்ப பிண்ணணி இருந்தால் இதய நோய்களும், மாரடைப்பும் வரும். உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு, அதிக கொழுப்பு சத்து உள்ள உணவுகளை சிறு வயது முதல் உட்கொண்டுவருதல், புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு, காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்களுக்கும், இதய பிரச்சனைகள் வரும். இதய செயல்பாடுகளின் குறைபாட்டினால், மற்றும் ரத்த அழுத்ததினாலும் தமனிக்களின் நோய்களாலும், இருதய செயலிழப்பினாலும் பெரும்பாலும் இறக்கிறார்கள். பிறப்பிலிருந்தே சிலருக்கு இருதய கோளாறுகள் இருக்கும்.
இதயம்
மனித இதயம் கருத்தரித்த 18-19 நாட்களில் உருவாகிறது, துடிக்க தொடங்குவது சரியாக 21 நாட்கள் அல்லது இறுதி மாதவிடாய் நாள் இருந்து சரியாக 5 வாரங்களில் தான். நம் பிறப்பிலிருந்து நாம் இறக்கும் வரை இதயம் துடித்துக் கொண்டிருக்கும். நமது இதயமானது 3 மில்லியன் முறைகள் சுருங்கி விரிகிறது. ஓய்வு இல்லாமல் இயங்குகிறது.
இதற்கு நெஞ்சு, நெஞ்சாங்குலை, என்பது குருதிச் சுற்றோட்டத் தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் மூலம் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் ஊட்டப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது.
முதுகெலும்புகளில் இதயமானது இதயத்தசை என்னும் தானே இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 துடிப்புகள் ஆகும். 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இதயம் பெண்களில் சராசரியாக 250-350 கிராமும் 9-11 அவுன்சு. ஆண்களில் 300-350 கிராம் (11-12 அவுன்சு) எடை கொண்டுள்ளது.
நம்முடைய இதயம் கைமுட்டியளவு என்பது நாம் அறிந்ததே. இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள், சிரைகள் அல்லது நாளங்கள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் அல்லது நாடிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது ஒரு பாதுகாப்புப் பையினுள் அமைந்துள்ளது.
இது இதய வெளியுறைப்பையுள் காணப்படும் நீர்மமானது இதயத்ததை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேல் இதயவுறைப்படை (இதய வெளியுறையின் ஒரு பகுதி) இதயத்தசைப்படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின் கடத்துகை ஒருங்கியம் உதவுகின்றது.
இதயத்தின் அமைவிடம் மற்றும் வடிவம்
முதுகெலும்புகளில் உடலின் முன் பகுதியில் சமிபாட்டுத் தொகுதிக்குப் பின்புறத்தில் இருதயம் அமைந்துள்ளது. எப்பொழுதும் இதய வெளியுறை சுற்றுச்சவ்வினால் சூழப்பட்டிருக்கும்
இதயச் சுவர்கள்
வெளியில் இதயவுறைப் படை, நடுவில் - இதயத்தசைப்படை, உள்ளே இதய அகவுறைப்படை ஆகிய 3 படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின்கடத்துகை ஒருங்கியம் உதவுகின்றது.
இதயம் கூம்பு வடிவானது இதயமுனை எனப்படும் இதயத்தின் கீழ் முனைப்பகுதி மார்புப்பட்டையின் இடப்புறத்தே அமைந்துள்ளது. இதயத்தின் பெரும்பான்மைப் பகுதி இடது மார்பில் அமைந்துள்ளது (உள்ளுறுப்பு இடப்பிறழ்வில் வலதுபுறம் அமைந்திருக்கும்) நுரையீரல் தவிர்த்து உடலின் அனைத்துப் பகுதிக்கும் குருதியைச் செலுத்துவதற்காக இதயத்தின் இடது பகுதி வலிமை மிக்கதாக அமைந்துள்ளது. இதயம் இடது வலது நுரையீரல்களின் இடையே காணப்படுவதால் இடது நுரையீரலில் இதயம் அமையக்கூடியவாறு ஒரு பள்ளம் உள்ளது. இதனால் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கிறது. இதயமானது இதயத்தசை என்னும் தன் விருப்பில்லாது தானே இயங்கும் வரித்தசையால் ஆனது.
இதயவறை
இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. குருதியைப் பெற்றுக் கொள்ளும் இரண்டு மேலறைகள், குருதியை வெளியேற்றும் இரண்டு கீழறைகள். இதய மேலறை இதயக் கீழறையுடன் மேற்கீழறை அடைப்பிதழ்கள் மூலம் தொடர்புற்று உள்ளது. இவை மேற்கீழறைப் பிரிசுவரில் அமைந்துள்ளது. இடதுபுறத்தில் காணப்படுவது இருகூர் அடைப்பிதழ் என்றும், வலது புறத்தில் காணப்படுவது முக்கூர் அடைப்பிதழ் என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்கீழறைப் பிரிசுவரால் இதயம் பிரிக்கப்படுவது இதயத்தின் வெளிப்புறத்தில் முடியுரு வரிப்பள்ளம் எனும் வெட்டாகத் தென்படுகிறது. இடது மற்றும் வலது இதய மேலறையில் காது போன்ற அமைப்புடைய நீட்டம் ஒன்று காணப்படும். இதுவும் ஒரு சிறிய அறை போன்ற அமைப்பிலேயே காணப்படுகின்றது. இது இதய மேலறை நீட்டம் அல்லது இதய மேலறைச் சோனை எனப்படும்.
இடது மேல் மற்றும் கீழ் இதய வறைகள் சேர்ந்து இடது இதயம் என்று அழைக்கப்படுகின்றது. இதே போன்று வலது இதயவறைகள் சேர்ந்து வலது இதயம் என்று அழைக்கப்படுகின்றது. இதயக் கீழ் அறைகள் இரண்டும் கீழறைப் பிரிசுவர் மூலம் பிரிக்கப்படுகின்றன. இதயத்தின் கீழறைகள் மேலறைகளை விட தடிப்பாக இருக்கின்றன. அதிலும் இடது கீழறையானது குருதியை உடல் முழுவதும் செலுத்துவதற்கு அதிக வேகம் தேவைப்படுவதால் அது வலது கீழறையை விட தடிப்பாக உள்ளது.
இதய அடைப்பிதழ்
மனிதன் உட்பட முலையூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன. இதய மேலறைகளுக்கும் இதயக் கீழறைகளுக்கும் இடையே குருதியோட்டத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு அடைப்பிதழ்கள், இடது புறத்தில் இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் மற்றும் வலது புறத்தில் மூன்று இதழ்களைக் கொண்ட முக்கூர் அடைப்பிதழ் ஆகியனவாகும். இவற்றின் இதழ்கள் இதயவாயினாண்கள் நுண்காம்புத்தசை மூலம் கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழ்களும் ஒவ்வொரு நுண்காம்புத்தசையுடன் பிணைக்கபட்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் மூலம் இடது கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளன.
இதயக் கீழறைகளுக்கும் வெளியேறும் தமனிகளுக்கும் இடையே உள்ள அடைப்பிதழ்கள் அரைமதி அடைப்பிதழ்கள் ஆகும். பெருநாடி அடைப்பிதழ் இடது கீழ் இதயவறைக்கும் பெருநாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. நுரையீரல் அடைப்பிதழ் வலது கீழ் இதயவறைக்கும் நுரையீரல் நாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. இவை நுண்காம்புத்தசையுடன் தொடுக்கப்பட்டிருப்பது இல்லை.
முடியுருக் குருதிச்சுற்றோட்டம்
தசை உட்பட்ட இதயத்தின் பகுதிகள் உயிர்வளியையும் ஊட்டக் கூறுகளையும் பெற்று கழிவுப்பொருட்களை நீக்குவதற்கு முடியுருக் குருதிச்சுற்றோட்டம் உதவுகின்றது. நாடிகள், நாளங்கள், நிணநீர்க் குழல்கள் இதில் அடங்குகின்றது. இதயத்தசைக்கு உயிர்வளி செறிந்த குருதியை வழங்கும் குருதிக்குழாய்கள் முடியுருத்தமனிகளாகும்.
இதயத்தசையில் இருந்து உயிர்வளி அகற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும். முடியுருத்தமனிகள் இடது, வலது என இரண்டாக உள்ளது. இவை பெருநாடியில் இருந்து தோன்றுகின்றன. இவற்றில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்பை ஏற்படுத்துகின்றது.
நரம்பு விநியோகம்:
துணைப்பரிவு இயக்கத்தைக் கொண்ட அலையு நரம்பு மூலமும் பிரிவு நரம்பியக்கம் மூலமும் இதயம் நரம்பு விநியோகத்தைப் பெற்றுக் கொள்கின்றது. பரிவு, துணைப்பரிவு நரம்பியக்கம் மூலமும் இதயம் நரம்பு விநியோகத்தைப் பெற்றுக்கொள்கின்றது. பரிவு, துணைப்பரிவு நரம்புகளை நீள்வளையமை விழையம் கட்டுப்படுத்துகின்றது. இந்த நரம்புகளின் தொழிற் பாட்டினால் இதயத்துடிப்பு வீதம் மாறுபடுகின்றது. உடற்பயிற்சி, மன அழுத்தம், குருதியிழப்பு, உடல் வறட்சி ஆகியவற்றின் போது பரிவு நரம்புத்தொகுதி செயற்படுத்தப்படுகின்றது. இது இதயத் துடிப்பை அதிகரிக்க வைக்கின்றது.
இதற்கு மாறாக துணைப்பிரிவு நரம்பு செயற்படுத்தப்பட்டால் இதயத்துடிப்பு குறைக்கின்றது. இந்த நரம்புகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பின்னலை ஏற்படுத்துகின்றது. இது இதய நரம்புப்பின்னல் எனப்படும். துணைப்பிரிவு நரம்பியக்கம் இதயத்தின்; செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. பரிவு நரம்பியக்கம் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
குருதி ஓட்டம்
குருதியின் தொடர்ச்சியான சுற்றோட்டத்திற்கு இதயம் ஒரு பாய்வு எக்கி போன்று தொடர்ச்சியாகச் செயல்படுகின்றது. தொகுதிச் சுற்றோட்டம் மற்றும் நுரையீரல் சுற்றோட்டம் என்று இருவகையாக இதயத்தில் இருந்து வெளியேறும் குருதியின் ஓட்டம் வகைப்படுத்தப்படுகின்றது. இடது இதயக் கீழறையில் இருந்து உடலின் அனைத்துப் பாகங்களில் உள்ள உயிரணுக்களுக்கு நாடிகள் மூலம் ஊட்டக்கூறும் உயிர்வளியும் செறிந்த குருதி கொண்டு செல்லப்படுகின்றது. அங்கிருந்து நாளங்கள் வழியாகக் கொண்டுவரப்படும் உயிர்வளி நீங்கிய குருதி மேற்பெருநாளம், கீழ்ப்பெருநாளம் வழியாக வலது இதய மேலறையை அடைக்கின்றது. இது தொகுதிச் சுற்றோட்டம் எனப்படுகின்றது. வலது இதயக் கீழறையில் இருந்து உயிர்வளி நீங்கிய குருதி நரையீரலை அடைந்து அங்கு சுத்திகரிக்கப்பட்டு உயிர்வளி செறிந்த குருதியாக இடது இதய மேலறையை அடைகின்றது. இது நுரையீரற் சுற்றோட்டம் எனப்படுகின்றது.
ஒவ்வொரு இதயத் துடிப்பின் போது இதயம் சுருங்கி விரிதலும் அப்போது உண்டாகும் மின்னிய நிகழ்வுகளும் இதய வட்டம் எனப்படும். இதில் இதயம் சுருங்கும் அவற்றை இதயச் சுருக்கம் எனவும் இதயம் விரியும் அவற்றை இதய விரிவு எனவும் அழைக்கப்படுகிறது.
நிமிடமொன்றிற்கு இதய சுருக்கத்தின் போது இடது வலது கீழ் இதயவறைகளினால் வெளியேற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு இதய வெளியேற்றக் கொள்ளளவு எனப்படுகின்றது. பொதுவாக இதய வெளியேற்ற நிமிடத்திற்கு ஐந்து லிட்டராகக் கருதப்படுகறிது. துடிப்புக் கொள்ளளவு என்பது ஒரு தடவை இதயம் சுருங்கும்போது இடது கீழ் இதயவறையால் வெளியேற்றப்படும். குருதியின் கொள்ளளவு. இது ஒரு ஆரோக்கியமான 70 கிலோகிராம் எடையுள்ள மனிதனுக்கு 70 மில்லிலிட்டர் ஆகும்.
இதய வெளியேற்றக் கொள்ளளவு = துடிப்புக் கொள்ளளவு ஜ் இதயத்துடிப்பு வீதம் (எ.காட்டு)
இதய வெளியேற்றக் கொள்ளளவு= 70 மில்லிலிட்டர் ஜ் 72 = 5040 மில்லிலிட்டர்.
மின் கடத்துகை
சிரைப்பைச் சீரத்துடிப்பு (ளுவீரௌ சாலவாஅ) என்பது இதயத்தின் துடிப்புச் சீராக்கியாகிய சிரைப்பைச் சோணைக் கனுவில் தொடங்கும் சீரான பழுதற்ற இதயத்துடிப்பு. இதயத்தின் சுருங்கலையும் விரிவடைதலையும் சீரான நிலையில் பேணுவதற்கு இதயத்தின் தசைப்பகுதிகளுக்கு மின்னோட்டம் மூலம் சமிக்ஞை அனுப்பப்படல் அவசியமாகின்றது, சிரைப்பைச் சோணைக் கணு, மேற்கீழறைக் கணு, கிசுவின் கட்டு மற்றும் அதனது கிளைகள், பேர்கிஞ்சி இழைகள் ஆகிய சிறப்பு இதயத்தசை உயிரணுத் தொகுதிகள் ஒன்று சேர்ந்து இதய மின்கடத்துகை ஒருங்கியம் என அழைக்கப்படுகின்றது. வலது மேலிதயவறையின் மேற்பகுதியில் மேற்பெருநாளத்தின் அருகாமையில் சிரைப்பைச் சோணைக் கணு, அமைந்துள்ளது.
இதய ஒலி
பொதுவாக ஆரோக்கியமான இதயத்தில் இருவகை இதய ஒலிகளைக் கேட்கலாம். இவற்றின் ஒலிகள் பொதுவாக “லப்-டப்” என்று விவரிக்கப்படுகின்றது. இவை முதலாம் (ஷி1) இரண்டாம் (ஷி2) இதய ஒலிப்புகள் என அழைக்கப்படுகின்றன. ‘லப்’ எனப்படும் முதலாம் இதய ஒலிப்பு இருகூர் அடைப்பிதழ் மற்றும் முக்கூர் அடைப்பிதழ் ஆகியனவை மூடும்போது ஏற்படும் ஒலியாகும். ‘டப்’ என அழைக்கப்படும் இரண்டாவது இதய ஒலிப்பு பெருநாடி அடைப்பிதழ் மற்றும் நுரையீரல் அடைப்பிதழ் ஆகியனவற்றின் மூடுகையால் ஏற்படுகின்றது.
இரண்டாம் இதய ஒலிப்பு இயல்பான நிலையில் உட்சுவாசத்தின் போது பிரிகையடையும் எனினும் இவற்றின் ஒலிப்பிரிகைக்கு இடையேயான இடைவெளி கூடுமாயின் அது நோய்களுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும். இவை தவிர மூன்றாம் (ஷி3-லப்-டப்-டா) நான்காம் (ஷி4-ட-லப்-டப்) இதய ஒலிப்புகள் உள்ளன. இவை பொதுவாக நாற்கால் பாய்ச்சலோட்டம் என அழைக்கப்படுகின்றன.
குதிரை ஒன்று ஓடும்போது ஏற்படக்கூடிய ட-ட-ட எனும் சந்தம் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகின்றது. மூன்றாம் இதய ஒலிப்பு இளவயதினர், விளையாட்டு வீரர், சில வேளைகளில் கர்ப்பிணிகள் ஆகியோரில் இயல்பாகக் காணப்படலாம். ஆனால் பிந்தைய காலப் பகுதியில் மீண்டும் இவ்வொலிப்பு தோன்றினால் அது இதயச் செயலிழப்பின் காரணமாக இருக்கக்கூடும். உயர் குருதியழுத்தம், இதயத்தசை மிகை வளர்ச்சியில் முதலாம் இதய ஒலிப்பின் சற்று முன்னர் கேட்கக்கூடிய ஒலி நான்காம் இதய ஒலிப்பாகும்.
குருதி ஊட்டக்குறை இதய நோய்
இதயத் தசைக்குக் குருதியோட்டம் குறைவாகச் செல்வதால் குருதியூட்டக்குறை இதயநோய் உண்டாவதற்கான மிக முக்கியமான காரணி முடியுறு நாடி கூழ்மத்தடிப்பு ஆகும். வயது, புகைப்பிடித்தல், உயர் இரத்த அழுத்தம் கொலஸ்ட்ரால், நீரிழிவு போன்றவைகளால் இந்நோயின் இடற்பாடு அதிகரிக்கின்றது. குருதியூட்டக்குறையால் மார்பு நெரிப்பு, மாரடைப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.
மாரடைப்பு
இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு ஏற்படுகின்றது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத்தமனிகளின் சுவர்களில் கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெளளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாகுவதால் தமனி குறுகிவிடுகிறது. தமனியில் உள்ள இத்தகைய நிலை தமனிக் கூழ்மைத் தடிப்பு என அழைக்கப்படுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்கு குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். ஓய்வு எடுக்கும்போது நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும்போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை மார்பு நெரிப்பு என்கிறோம்.
இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும்.
இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசை பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத்தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இது இதயத்தசை இறப்பு ஆகும்.
நண்டு சூப்பை சாப்பிட்டால் தெரியும் அதன் ருசி. இந்த நண்டு சூப்பை செய்வது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
நண்டு - அரை கிலோ
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 துண்டு
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயத் தாள் - 3
கான்ப்ளார் பவுடர் - ஒன்றரை தேக்கரண்டி

செய்முறை :
வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆறவிட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும்.
பாலில் கான்ப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும்.
கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, கான்ப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத்தாள் தூவினால் சுவை மிகுந்த நண்டு சூப் தயார்.
நண்டு - அரை கிலோ
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 துண்டு
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயத் தாள் - 3
கான்ப்ளார் பவுடர் - ஒன்றரை தேக்கரண்டி
பால் - கால் கப்

செய்முறை :
வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆறவிட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும்.
பாலில் கான்ப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும்.
கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, கான்ப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத்தாள் தூவினால் சுவை மிகுந்த நண்டு சூப் தயார்.
ஜலதோஷம் பிடித்தால் அதை துரத்துவதற்கு நல்ல மருந்து.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினமும் சிறிதளவு மது அருந்தினால் அது உடல்நலனுக்கு நல்லது என்பவர்களுக்கு இது பொய்யான நம்பிக்கை என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் பற்றிய பல மூட நம்பிக்கைகள் காலம், காலமாக உண்டு. சாதாரண மனிதர்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளை தாண்டி, மருத்துவ உலகிலும் சில நம்பிக்கைகள் நிலவி வருவதை பார்க்கிறோம். அதில் ஒன்று தான் தினமும் சிறிதளவு மது அருந்தினால் அது உடல்நலனுக்கு நல்லது என்பதும். ஆனால், இது பொய்யான நம்பிக்கை என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவினால் நன்மை உண்டு. அதனை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று சொல்லி வந்தார்கள். இதனை கண்டறியும் பொருட்டு ஆராய்ச்சியில் இறங்கியது ‘குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் இஞ்சுரிஸ் அண்ட் ரிஸ்க் பேக்ட்டர்ஸ் ஸ்டெடி‘ என்ற அமைப்பு.
இதற்காக உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உலகமெங்கும் உள்ள முக்கியமான 195 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஆண், பெண் இருபாலருமாக 7 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள். 1990-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட முயற்சியில், இறுதியாக 694 தகவல் அறிக்கைகள் தயாரானது. இவற்றில் இருந்து கிடைத்த முடிவுகள் அதிர்ச்சி தரும் வகையிலேயே இருந்தது. மது அருந்துகிறவர்களுக்கு புற்றுநோய் மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகம் என்பதையே அந்த ஆய்வுகள் புரிய வைத்தது.
ஒரு துளி மதுவாக இருப்பினும், ஒரு கோப்பை மதுவாக இருப்பினும் அதன் தீய விளைவுகள் ஒன்றுதான். சம்பந்தப்பட்டவரின் மரபியல் காரணிகள், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றின் காரணமாக பாதிப்பின் விகிதத்தில் மாறுபாடு ஏற்படலாமே தவிர, பாதிப்பே ஏற்படாது என்று கூறமுடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
மதப் புனித நூல்கள் சிலவற்றில் கூட ஒயின் அருந்துவது உடலுக்கு நல்லது என்று சொல்கின்றன. இந்த கருத்துக்கும் விளக்கமளித்திருக்கிறது இந்த ஆய்வு. அதன்படி, ஒயின் வகை மதுக்கள் திராட்சைப் பழங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுபவை.
எனவே, திராட்சையில் இருக்கும் ‘ஆன்ட்டி ஆக்சிடென்டுகள்‘ உடலுக்கு நன்மை செய்யும் என்ற கோணத்தில் மது ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை பரவி இருக்கிறது. அதில் உண்மையில்லை. அதற்கு பதிலாக நேரடியாகவே திராட்சையை உண்டு வந்தால் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும். மதுவால் ஏற்படும் பாதிப்புகளும் நம்மை அண்டாது என்று பரிந்துரைத்திருக்கிறது ‘குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் இஞ்சுரிஸ் அண்ட் ரிஸ்க் பேக்ட்டர்ஸ் ஸ்டெடி‘.
மிக முக்கியமான இந்த ஆய்வு முடிவு ‘லான்செட்‘ மருத்துவ இதழில் வெளியாகி இருக்கிறது. ஆக, எந்தவகையில் மது நம் உடலுக்குள் சென்றாலும் கெடுதி தான். உலக வர்த்தக நிறுவனங்கள் மதுவை தனது லாபத்திற்காக ஊக்குவிக்கின்றன. அந்த வலையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதே இளைஞர்களுக்கு ஆரோக்கியம் என்று மேலும் கூறுகிறது.

குழந்தைக்கு தூளி, மெத்தை, பாய், நவீன தொட்டில் ஆகியவற்றில் எது சிறந்தது, எது குழந்தைக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தன் தாயின் வயிற்றில் 9 மாதத்துக்கும் மேல் இருந்த குழந்தை, பிறந்த பின் படுக்கையிலோ தாயின் மடியிலோ தூளியிலோ சரியாக தூங்குமா? தன் படுக்கை நிலையைக் குழந்தை எப்படி பழகி கொள்ளும்? குழந்தைக்கு தூளி, மெத்தை, பாய், நவீன தொட்டில் ஆகியவற்றில் எது சிறந்தது. எது குழந்தைக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக, குழந்தை தன் தாயின் வயிற்றை விட்டு வெளியே வந்ததும், தன் படுக்கை நிலையை மாற்றிக் கொள்ளவும் பழகிக்கொள்ளவும் சிரமப்படும். நம் முதுகு எலும்புகள் லேசான வளைவுத்தன்மையுடன் இருக்கும். தாயின் வயிற்றில் பனிக்குட நீரில் இருந்த குழந்தை, பந்து போல சுருண்டிக்கொண்டு 9 மாதங்கள் இருந்து பழகி இருக்கும். திடீரென்று தன் படுக்கை நிலை மாறவே குழந்தைக்கு புதிதாகவும் இயல்பற்றதாகவும் இருக்கும். பிறந்த குழந்தைகளை சமதளமான தொட்டிலில் படுக்க வைக்கும் போது, குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நமது பாரம்பர்ய தொட்டில் (தூளி) தான் குழந்தைக்கு ஏற்றது. ஏன் என்றால் குழந்தை வயிற்றில் இருக்கும் போது இருக்கும் நிலையில் நம் பாரம்பர்ய தொட்டிலான தூளியே அதைக் கொடுக்கும். கட்டில் போன்ற சமதளமான தொட்டில் குழந்தைக்கு அவ்வளவாகப் பொருந்தாது. நம் பாரம்பர்ய தொட்டில் முறையான தூளியில் குழந்தையை போட்டால், குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். தூளியில் போட்டு வளர வைக்க கூடிய குழந்தைகளுக்கு முதுகில் வலி குறைவாக காணப்படும்.

தூளி, படுக்கும் குழந்தைகளுக்கு தாயின் மார்ப்போடு ஒட்டி இருப்பது போன்ற உணர்வு இருக்கும். ஒருவித கதகதப்பான உணர்வு அவர்களுக்கு கிடைக்கும். குழந்தையின் முதுகு எலும்பு வளைவுகள், சரியாகத் தூளியில் பதிவதால் குழந்தைக்கு சௌகரியமாக இருக்கும். தூளியில் படுத்திருந்தால் நெருக்கமான ஒரு உணர்வு குழந்தைக்கு கிடைக்க, குழந்தை நன்கு தூங்கும்.
தூளி முன்னும் பின்னும் ஆடுவதால் குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும். குழந்தை தூளியில் சிறுநீர் கழித்துவிட்டால், தூளியிலிருந்து சிறுநீர் வடிந்து, தரைக்கு வந்துவிடுவதால் குழந்தையின் உடலில் ஈரம் தங்காமல் தடுக்கப்படுகிறது. புரண்டாலும் குழந்தை கீழே விழ வாய்ப்பில்லை. குழந்தைக்கு தூளி பெஸ்ட். குழந்தையை தூளியில் படுப்பதால் காலும் தலையும் சற்று உயர்ந்தும் வயிறும் முதுகும் பள்ளமான இடத்தில் இருப்பதால் குழந்தை உண்ட உணவை வாந்தி எடுக்காமல், குழந்தையால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது. தாயோ, தூளியை ஆட்டுபவரோ தூளியை ஆட்ட குழந்தையால் தன் நேர் கண்ணால் பார்க்க முடியும். இதனால் மாறு கண் பிரச்னை வராமல் தடுக்கப்படுகிறது.
தூளியில் தூங்கும் குழந்தைக்கு மன அமைதி கிடைக்கும். நவீன தொட்டில் முறை, மெத்தையைவிட தூளியே குழந்தைக்கு ஆரோக்கியத்தைத் தரும். இதனுடன் பாதுகாப்பானதும்கூட.

அறுவைசிகிச்சை பிரசவம் நிச்சயம் சில பிரச்சனைகள் நிறைந்தது என்பதில் சந்தேகம் வேண்டாம். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இயற்கையான முறைக்கு மாறாக சில சூழல்களில் அறுவைசிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது.அறுவைசிகிச்சை பிரசவம் பல நன்மைகளைத் தந்தாலும், இதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.அறுவைசிகிச்சை பிரசவத்தைப் பற்றி இன்று பெண்கள் தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.சுகப் பிரசவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதனால் ஏற்படும் பிரச்சனைகளும், உபாதைகளும் நிச்சயம் அதிகமே. அதனால் இந்த அறுவைசிகிச்சை பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் அதனால் ஏற்பட உள்ள பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவது நல்லது.
புணர் புழை வாயிலாகப் பிறக்காமல் தாயின் கருப்பையிலிருந்து நேரடியாக அறுவைசிகிச்சை மூலம் பல குழந்தைகள் பிறக்கின்றன. இதையே அறுவைசிகிச்சை பிரசவம் என்று கூறுகின்றோம்.
தற்போது அறுவை சிகிச்சை பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றாலும், அறுவைசிகிச்சை பிரசவத்தை சில சமயங்களில் கருவுற்றிருக்கும் சில தாய்மார்கள் தாங்களாகவே முன் வந்து தேர்ந்து எடுக்கின்றனர். வேறு சமயங்களில் சிகிச்சை தரும் மருத்துவர்களால் சில மருத்துவ காரணங்களை முன்னிட்டு இந்த சிகிச்சை தேர்ந்தெடுக்கப்படுகிறது. எனினும் இதனால் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் உடல் நலமும் காக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள் ஆகும். அதாவது தாய் அல்லது சேய்க்கு மருத்துவ அவசர உதவி வேண்டும் என்ற நிலை ஏற்படும் போது இந்த அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், இதனால் உடல் ரீதியான பல உபாதைகளும் பிரச்சனைகளும் நாளடைவில் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது
அறுவைசிகிச்சை பிரசவத்தின் போது முதலில் வால் பகுதி தண்டுவடம் அல்லது முதுகுத் தண்டில் மயக்க மருந்து செலுத்தப்படுகிறது. இந்த முறையில் தாய்க்கு முழுமையான மயக்க மருந்தும் தரப்படுகிறது. சில சமயங்களில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படுகிறது. இதனால் அந்த இடம் மரத்துப் போய் வலியை உணருவதில்லை. தாய்க்குச் சுயநினைவு இருந்தபடியே இருக்கும்.

இந்த அறுவைசிகிச்சை முறையில் தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதி வெட்டப்படுகிறது. அதனால் வயிற்றுத் தசைகள் பிரிக்கப்படுகிறது. பின்னர் கருப்பையில் கீறல் போடப்படுகிறது. இதனால் கருப்பையைத் திறக்கலாம். அதன் பின் தொப்புள் தண்டு வெட்டப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. அதன் பின் கர்ப்பப்பையில் தையல் போடப்படுகிறது. இந்த அறுவைசிகிச்சை சுமார் 20 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நடைபெறுகிறது
அறுவைசிகிச்சை பிரசவம் நிச்சயம் சில பிரச்சனைகள் நிறைந்தது என்பதில் சந்தேகம் வேண்டாம். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும்,
அறுவைசிகிச்சை செய்யும் போது நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதிக இரத்த போக்கு தாய்க்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கர்ப்பப்பை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் தாய் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
கால்களில் இரத்த உறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தாய் அதிக கவனத்தோடும் இருக்க வேண்டிய சூழல் இருக்கும்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுவது தனி நபரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து நடக்கும். எனினும், பொதுவாக இந்த முறை சிகிச்சையில் உடல் முன்னேற்றம் பெற சுகப்பிரசவத்தை விட அதிக நாட்கள் எடுக்கும்.

கருப்பு உளுந்து, புரதச் சத்துமிக்க தானியம் ஆகும். எலும்புகள் வலுவடைய இது உதவும். எனவே… துவையல், அடை, இட்லி மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தயாரிக்கும்போது கருப்பு உளுந்து சேர்ப்பது நல்லது.
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - 250 கிராம்,
கருப்பு உளுந்து - 100 கிராம்,
துவரம்பருப்பு - 1 கப்,
வெங்காயம் - 3,
காய்ந்த மிளகாய் - 5,
இஞ்சி - சிறு துண்டு,

செய்முறை:
வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
புழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, துவரம்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும்.
அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைத்து கொள்ளவும்.
உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.
இந்த மாவில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
புழுங்கல் அரிசி - 250 கிராம்,
கருப்பு உளுந்து - 100 கிராம்,
துவரம்பருப்பு - 1 கப்,
வெங்காயம் - 3,
காய்ந்த மிளகாய் - 5,
இஞ்சி - சிறு துண்டு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
புழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, துவரம்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும்.
அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைத்து கொள்ளவும்.
உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.
இந்த மாவில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
சத்தான கருப்பு உளுந்து அடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதற்கு சீரான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும் அவசியமாகிறது.
நோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதற்கு சீரான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும் அவசியமாகிறது. செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கங்களுக்கு உட்பட அனைத்திற்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன.
நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் இயக்கம் கொடுப்பதாக இருக்க வேண்டும், எனவே ஒருநாளைக்கு 30 முதல் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
வியர்த்தால் தான் கொழுப்பு குறையும் என்பதற்காக வியர்க்க, வியர்க்க உடற்பயிற்சி செய்வதில் பலனில்லை. எனவே நல்ல காற்றோட்ட வசதி இருக்கும் இடத்தில் உடற்பயிற்சி செய்யலாம், அதேபோல் உடற்பயிற்சி செய்யும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஏனெனில் அவ்வாறான சமயங்களில் உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, அதை சமன்படுத்த போதுமான அளவில் தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது.
அதேவேளை குளிர்ச்சியான நீரை அருந்த கூடாது, அது உஷ்ணத்தை மேலும் அதிகரித்துவிடும். எவ்வாறாயினும் தவறாமலும், ஒழுங்காகவும் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.

இன்றைய டீன் ஏஜ் ஆண்கள் வித விதமான ஆடைகள் அணிவதுடன் அதற்கேற்றாற்போல் தலையலங்காரம் மற்றும் ஷுக்கள், கைக்கடிகாரம், காதில் கடுக்கண் என்று மிகவும் நவநாகரீகமாக இருப்பதையே விரும்புகிறார்கள்.
இன்றைய டீன் ஏஜ் ஆண்கள் வித விதமான ஆடைகள் அணிவதுடன் அதற்கேற்றாற்போல் தலையலங்காரம் மற்றும் ஷுக்கள், கைக்கடிகாரம், காதில் கடுக்கண் என்று மிகவும் நவநாகரீகமாக இருப்பதையே விரும்புகிறார்கள். ஆண் பிள்ளைகளுக்கு ஆடைகளில் என்ன டிசைன் இருக்கப் போகிறது என்ற காலம் மாறி கேஷுவல் ஷர்ட்ஸ், ஃபார்மல் ஷர்ட்ஸ் என்று எடுத்துக் கொண்டால் அதில் எத்தனையோ வகை வந்து விட்டது.
கேஷுவல் ஷர்ட்களில் ஃப்ளோரல் டிசைன்களை பெரிதும் ஆண்கள் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். ஜயாமெட்ரிகல் டிசைன்கள் ஷர்ட்டின் முன்புறம் அல்லது பக்கவாட்டில் வருவதுபோல் இருப்பது, ப்ரிண்டட், ஷர்ட்டுகள், காட்டன் லினென் ஷர்ட்டுகள் ஓவர்லேப் ஷர்ட்டுகல், எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் கூடியஸ்ட்ரைப்டு ஷர்ட்டுகள், ஸ்டென்சில் பிரிண்ட்டட் ஷர்ட்டுகள் என்று எத்தனையோ டிசைன்கள், வகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஷர்ட்டுகளில் ரெகுலர் மற்றும் ஸ்லிம் ஃபிட் என இரண்டு வகை உள்ளது. சிலர் உடலோடு கச்சிதமாகப் பொருந்தும் ஸ்லிம் ஃபிட் ஷர்ட்டுகளையே எப்பொழுதும் அணிவார்கள். மற்றும் சிலர் கொஞ்சம் லூசாக இருக்கும் ரெகுலர் பிட் ஷர்ட்டுகளை அணிவதையே விரும்புவார்கள். ஸ்லிம் ஃபிட் ஷர்ட்டுகள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் ஒல்லியான உடல் வாகு உடையவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஃபார்மல் ஷர்ட்டுகளில் பிரிண்டட், ஸ்ட்ரைட்ஸ், செக்ட், லூப் மற்றும் ப்ளெயின் காலர் ஷர்ட்டுகள், க்ளாஸிக் மற்றும் ஸ்டாண்டு காலர் ஷர்ட்டுகள், சைனீஸ் காலர் ஷர்ட்டுகள், ஹேண்டுலூம் காட்டன் ஷர்ட்டுகள் என எத்தனையோ வகைகள் உள்ளன.
மேலும், டிஜிட்டல் ப்ரிண்ட் பேண்ட் மற்றும் சட்டைக்கு மேல் ஜாக்கெட்டுகளை அணிந்து கொள்வதை இன்றைய இளைஞர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
ஜாக்கெட்டும் பேண்ட்டும் ஒரே விதமான நிறம் மற்றும் துணியால் தைக்கப்பட்டு உள்ளே அணியும் ஸர்ட்டானது கான்ட்ராஸ் நிறத்தில் அணிவதையும் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள்.
ஷர்ட், பேண்ட் மற்றும் ஜாக்கெட் என மூன்றுமே வெவ்வேறு நிறத்தில் அணிந்து கொள்வதும் இப்பொழுது பேஷனாகவே உள்ளது.

சில்க் மற்றும் சந்தேரி காட்டனில் அறிமுகமாகியிருக்கும் குர்த்தாக்களில் உடலின் முன்புறம் முட்டி வரை உயரமும், உடலின் பின்புறம் மிக நீண்டும் இருக்கும். குர்த்தாக்கள் சந்தையில் புது வரவு என்றே சொல்லலாம். ப்ரிண்டட், எம்ப்ராய்டரி மற்றும் ப்ளெயின் குர்த்தாக்களை வடஇந்தியாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய இளைஞர்களும் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம்.
பேண்ட்டுகளில் காட்டன் ட்ரவுச்சர்கள், கொசுவம் வைத்தாற்போல் இருக்கும் ட்ரேப்டு பேண்ட்டுகள், சுடிதார் மற்றும் டோத்தி பேண்டுகள் இவை அனைத்துமே குர்த்தாக்களுடன் அணிவதற்கு ஏற்றவை என்றே சொல்லலாம். இவை மட்டுமல்லாமல் மிகவும் லூசான பேண்ட் மற்றும் மிகவும் டைட்டான கணுக்கால் வரையிலான பேண்ட்டுகளையும் அணிவதற்கு இன்றைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ட்ராப் வெயிஸ்ட் பேண்டுகளை கலைத் துறையில் இருப்பவர்கள் அதிலும் மேற்கத்திய நடனத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் விரும்பி அணிகிறார்கள் என்றே சொல்லலாம்.
ஜோத்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட பந்த்கலாஸ் ஆடைகள் இன்றைய தலைமுறை விரும்பும் நவநாகரீக ஆடை என்றே சொல்லலாம். இது மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்ள ஏற்றவை.
ஜாக்கெட் வகைகளில் இப் பொழுது மோடி ஜாக்கெட் என்பதும் மிகப் பிரபலம்.
ஷர்ட்ஸ்களை அணிந்து கொள்வது என்பது இளைஞர்களிடம் மட்டுமல்லாது முதியவர்களிடமும் வேரூன்றி விட்டது என்றே சொல்லலாம். பிரிண்ட்ட் ஷர்ட்ஸ்களை அணிந்து ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட்ஸ் அல்லது பிளையின் நிற டி -ஷர்ட்ஸ் அணிவது இப்பொழுது ட்ரெண்டாக உள்ளது.
முக்கால் பேண்டுகள் மற்றும் கார்கோ பேண்டுகளும் மறுபடியும் இளைஞர்களின் ட்ரெண்டி ஆடைகளின் வரிசையில் தங்களை முன்நிறுத்திக் கொள்ளத் தயாராகக் காத்துக் கிடக்கின்றன.

மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை எளிய முறையில் எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.
மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோ அவன், ஏசி, டிவி என்று எந்த வீட்டு உபகரணங்களையும் எவ்வளவு உபயோகப்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வதும் அவசியம். இது போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை எளிய முறையில் எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.
ஃபிரிட்ஜ்
365 நாட்களும் 24 மணி நேரமும் வேலை செய்யும் ஒரு பொருள் என்றால் அது ஃபிரிட்ஜ் ஆகத்தான் இருக்கும். பல பேர் வீடுகளில் இந்தப் பொருளானது சுத்தம் செய்யப்படாமல் மிகவும் மோசமாக இருப்பதைப் பார்க்கலாம்.
ஒரு மென்மையான நன்கு பிழியப்பட்ட ஈரத்துணியால் ஃபிரிட்ஜின் வெளிப்பாகத்தைத் துடைக்க வேண்டும். உட்புறத்தை மிகவும் மைல்டான டிடர்ஜெண்ட் பவுடரை உபயோகப்படுத்தி உள்ளே படிந்திருக்கும் உணவுப் பொருள், கறைகளைத் துடைக்கலாம். மேலும், உள்ளிருக்கும் கண்ணாடி, பிளாஸ்டிக் ட்ரேகளை கவனமாக அகற்றி குழாய் நீரில் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல், வேக்யூம் கிளனரை கொண்டு ஃபிரிட்ஜின் பின்புறம் படிந்திருக்கும் ஒட்டடை, தும்பு தூசுகளை வருடம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
ஃபிரிட்ஜை சுத்தம் செய்த பிறகு அறிந்த எலுமிச்சை அல்லது சிறிய கரித்துண்டை உள்ளே வைத்தால் அவை தேவையற்ற நாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும். அதை நேரத்தில் ஃப்ரீஸர் பகுதியையும் துடைத்து சுத்தம் செய்து பின்பு இயக்கலாம். எந்தப் பொருளையும் வாரம் ஒருமுறை சுத்தம் செய்யும் பொழுது, அதிக அழுக்குகள் சேராது, சுத்தம் செய்யும் வேலையும் எளிதாகி விடும்.
மிக்ஸி

மிக்ஸி ஜாருக்குள் இருக்கும் கறைகளை நீக்க கல் உப்பை சிறிது போட்டு அடித்து பின்பு ஜாரைக்கழுவும் பொழுது அதில் ஒட்டியிருக்கும் தேவையற்ற துகள்கள் வந்துவிடும். அதேபோல் இஞ்சி பூண்டு விழுது அரைத்த பிறகு ஏற்படும் வாசத்தைப் போக்க எலுமிச்சை தோலை மிக்ஸியில் அரைத்து 15-20 நிமிடம் கழித்து அந்த ஜாரைக் கழுவும் பொழுது அதிலிருக்கும் தேவையற்ற நாற்றம் நீங்குவதோடு ஜாரும் பளிச்சென்றிருக்கும்.
மைக்ரோவேவ் அவன்
மைக்ரோவேவ் அவனைச் சுத்தப்படுத்துவதற்கு முன், அதன் கையேட்டில் குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் படித்து பின்னர் சுத்தம் செய்யத் தொடங்கவும். ஒரு கிண்ணம் நீரில் சிறிது வினிகரைக் கலந்து, அதை மைக்ரோ அவனில் 2 நிமிடங்கள் வைத்து சூடாக்கவும். அதை 15-20 நிமிடங்கள் அதனுள்ளேயே வைத்து மூடி விடவும். பின்பு ஒரு ஈரமான துணியால் அதனுள்ளே துடைக்கும் பொழுது அங்கிருக்கும் பிசுக்கு மற்றும் உணவுப் பொருள் படிவுகள் மிக எளிதாக நீங்குகின்றது.
வாஷிங் மெஷின்
ஒரு ஈரமான துணியால் வாஷிங் மெஷினின் உள்ளிருக்கும் சில்வர் டிரம்மை துடைப்பதால் அதில் படிந்திருக்கும் சோப்பு, அழுக்கு மற்றும் நூல்களானது அகற்றப்படுகின்றது. அதிலிருக்கும் ஃபில்டரை வாரம் ஒரு முறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை துணி துவைத்து முடிந்த பிறகும் வாஷிங்மெஷின் மூடியைத் திறந்து வைத்து அதன் ஈரப்பதம் காய்ந்த பிறகு மூடியை மூடலாம்.
ஏசி
ஏசி-யின் ஃபில்டரை அகற்றி பிரஷ் அல்லது வேக்யூம் கிளனர் உதவியால் அதில் படிந்திருக்கும் தூசுகளை அகற்றலாம். காயில்கள் மற்றும் பில்டர்களை சுத்தப்படுத்த ப்ளோயர் மற்றும் வேக்யூம் கிளனரானது மிகவும் உதவிகரமாக இருக்கும். வருடம் ஒருமுறை கட்டாயம் ஏசி மெக்கானிக்குகளை அழைத்து ஏசியைச் சர்வீஸ் செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் அதன் பயனை முழுமையாக அடைய முடியும்.
எலுமிச்சை, வினிகர், கல் உப்பு இவற்றைக் கொண்டு அதனுடன் பேக்கிங் சோடாவையும் கலந்து வீட்டிலேயே எப்பேர்ப்பட்ட கறைகளையும் அகற்றக்கூடிய லிக்விடை தயாரித்து வைத்துக் கொண்டு அவற்றை கேஸ் ஸ்டவ், பாத்ரூம் குழாய், பாத்ரூம் டைல்ஸ், அடுப்பு மேடை இன்னும் பலவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம்.

எல்லோர் வீட்டிலும் உழைத்துப் பலவித கறைகளையும் தாங்கி நிற்கும் ஒரு போர்வீரன் என்றால் அது மிக்ஸிதான். மிக்ஸியின் வெளிப்புறக் கறைகளை பேக்கிங் பவுடர் மற்றும் வினிகர் கலந்த கரைகளைக் கொண்டு துடைத்து 15-லிருந்து 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு துடைக்கலாம்.