என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
மாலையில் டீ, காபியுடன் சாப்பிட வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா அருமையாக இருக்கும். இன்று இந்த போண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 2,
தோசை அல்லது இட்லி மாவு - 2 கப்,
பச்சை மிளகாய் - 2,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
இஞ்சி - சிறிய துண்டு,

செய்முறை:
வாழைக்காயை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
தோசை அல்லது இட்லி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும்.
பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும்.
கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுவையான வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா தயார்!
வாழைக்காய் - 2,
தோசை அல்லது இட்லி மாவு - 2 கப்,
பச்சை மிளகாய் - 2,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
இஞ்சி - சிறிய துண்டு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
வாழைக்காயை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
தோசை அல்லது இட்லி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும்.
பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும்.
கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுவையான வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா தயார்!
இதற்கு, தக்காளி சட்னி சரியான ஜோடி!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், விளையும் கெடுதல்களே பலவிதங்களில் விஸ்வரூபம் எடுத்தபடி உள்ளன.
குழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை இப்போது செல்போனுடன்தான் பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், விளையும் கெடுதல்களே பலவிதங்களில் விஸ்வரூபம் எடுத்தபடி உள்ளன. அதிக அளவில் செல்போனை பயன்படுத்துகிறவர்களின் உடல்நலமும், மன நலமும் பாதிக்கப்படுகிறது. அதுபற்றி பல்வேறு விதமான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இது தொடர்பான முக்கியமான ஆய்வு ஒன்றில், செல்போனை அதிகம் பயன்படுத்துகிறவர்களின் காதுகேட்கும் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ஆய்வில் ஈடுபட்ட காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களின் காதுகேட்கும் திறனை ஆய்வுசெய்தனர். ஆய்வுக் குட்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் இளைஞர்கள். அவர்களில் பெண்களும் அடக்கம்.
ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் 52 சதவீதத்தினர் செல்போனில் அளவுக்கு அதிகமாகப் பேசி, தங்கள் காது கேட்கும் திறனை ஓரளவு இழந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. செல்போனில் பேசுபவர்கள் மட்டுமின்றி, அதை பயன் படுத்தி காது கருவிகளை மாட்டிக்கொண்டு அதிக நேரம் பாட்டுகேட்பவர்களுக்கும் காதுகேட்கும் திறன் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வருடக்கணக்கில் செல்போனை பயன்படுத்தியவர்கள். வலது காதில் வைத்து பெரும்பாலும் பேசியதால், வலது காது வலியால் பாதிக்கப்பட்டிருக்கவும் செய்கிறார்கள் என்று அந்த டாக்டர்கள் கூறுகிறார்கள்.
ஆய்வுக்கு உள்ளானவர்களில் 51 சதவீதத்தினர் இடது காதில்வைத்து செல்போனை பயன்படுத்துகிறவர்கள். 40 சதவீதத்தினர் வலது காதில்வைத்து பேசியவர்கள். மீதி 9 சதவீதத்தினர் இரண்டு காதுகளிலும் மாறிமாறி வைத்து பேசியவர்கள்.
இவர்களில் பெரும்பகுதியினர் காது வலியாலும், காது அடைப்பினாலும், காது சரியாகக் கேட்காமலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சிலர் காதில் வித்தியாசமான சத்தம் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தால் என்னவாகும்? என்பது குறித்து ஆண்களுக்கு அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.
பெண்கள், தங்கள் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காத ஆணைத்தான் விரும்புகிறார்கள். அப்படி ஒரு கணவராக கிடைத்தால் அதை தங்கள் வெற்றியாக கருதுகிறார்கள். தன் கணவர் பெரிய புத்திசாலியாக இருப்பதைவிடவும், தன் பேச்சை மதிப்பவராக இருந்தாலே போதும் என்றுதான் பெண்கள் நினைக்கிறார்கள். இது நாள்வரை யார் என்றே தெரியாத ஒருவரை கணவராக அடைந்தாலும், அவர் தன் சொல்லுக்கு கட்டுப்படுபவராக இருந்தால், அவரைவைத்து வாழ்க்கையை வெற்றிகரமாக ஓட்டிவிடலாம் என்று பெண்கள் நம்புகிறார்கள்.
ஒவ்வொரு பெண்ணும், தன் கணவரை சரியான பாதையில் வழிநடத்தத் தெரிந்தவராகவே தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் சில ஆண்களோ மனைவி சொல்வதை கேட்டால் அது தனக்கு மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள். அதனால் தனது சுதந்திரம் பறிபோய்விடும் என்றும் கருதுகிறார்கள். ஒருசிலர் மனைவி சொல்லுக்கு கட்டுப்படுவதுபோல பாவனை செய்துகொண்டு, மனைவியிடம் நல்ல பெயர் வாங்கி, தான் விரும்பும் காரியங்களை எளிதாக சாதித்துக்கொள்கிறார்கள்.
‘தனது பேச்சுக்கு கணவர் மறுபேச்சு பேசக்கூடாது’ என்று நினைக்கும் பெண்களின் மனோபாவம் சரிதானா என்று கேட்டால், ‘ஆமாம்.. சரிதான்!’ என்று சொல்கிறார்கள், மனநல ஆராய்ச்சியாளர்கள்.
“கணவர் தன் பேச்சை கேட்கவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்ப்பதை தவறு என்று கூறமுடியாது. சிந்தனை என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. நல்ல கருத்துகள் எங்கிருந்தும் வரலாம் என்றிருக்கும்போது அது மனைவியிடம் இருந்து வந்தால் என்ன? நல்ல கருத்து என்றால் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். பெண்கள் கருத்துச்சொல்ல முன்வருவது அவர்களது பொறுப் புணர்ச்சியையும், கடமையையும் வெளிக்காட்டுகிறது.
தனது கணவரை இந்த சமூகம் மதிக்க வேண்டும் என்ற அக்கறை எல்லா மனைவிகளிடமும் இருக்கிறது. உறவுகள் பாராட்டவேண்டும் என்ற எண்ணமும் மனைவிகளுக்கு உண்டு. மேலும் கணவன் தன் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும்போது, மனைவிக்கு குடும்ப வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்படுகிறது. தவறு செய்யும் கணவர் களிடம் பெண்கள் அதிகமாக பேசுவார்கள். அந்த பேச்சுக்கள் ஆண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது போலிருக்கும். ஆனாலும் இதை ஆண்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஏன்என்றால் தவறு செய்யும் கணவரை ஒதுக்கிவிடாமல், அவரை திருத்தி நல்லவர்களாக வாழவைக்கும் பொறுப்பும் மனைவிக்கு இருக்கிறது.
ஆனால் மனைவி, கணவரின் விஷயங்களில் அதிகமாக தலையீடு செய்யும்போது அது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு சற்று வித்தியாசமாகத் தோன்றும். அது மற்றவர்களுக்கு தெரியவரும்போது, மனைவிகளில் சிலர் அடக்கிவாசிப்பார்கள். சிலர் ‘தனது கட்டுப்பாட்டிற்குள்தான் கணவர் இருக்கிறார்’ என்பதை நாலுபேர் மத்தியில் வெளிப்படுத்த விரும்புவார்கள். அடக்கி வாசிக்கும்போது அங்கே பிரச்சினை உருவாகாது. வெளியே தெரியட்டும் என்று பெண்கள் நினைக்கும்போது நிலைமை தலைகீழாக மாறலாம். விமர்சனத்திற்கும் உள்ளாகலாம்.
கணவர் தன் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று பல பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன் மூலம் தனது பலத்தை நிரூபிக்க முடியும் என்றும் கருதுகிறார்கள். பழைய சினிமாவில், அலாவுதீன் மோதிரத்தை தேய்த்தால் வந்து நிற்கும் பூதம் போன்று தன் கணவரும் தன் முன்னே ஓடிவந்து நின்று சேவகம் புரியவேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அப்படிப்பட்ட கணவன் தனக்கு கிடைத்துவிட்டால் தங்களை அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறார்கள்.
அடுத்தகட்டமாக கணவன் தன்னை பற்றி எப்போதும் புகழ்ந்துபேச வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவும் அடுத்தவர்கள் முன்புவைத்து புகழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படி புகழும்போது பெண்கள் அதிக மகிழ்ச்சிகொள்கிறார்கள்.

இத்தனைக்கும் மேலாக கணவன் தங்களை முழுமையாக நம்பவேண்டும் என்பது அனைத்து மனைவிமார்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தேகப்பட்டு கேள்வி கேட்கும் கணவனை பெண்களுக்கு பிடிக்காது. ஆண்களிடம் இருக்கும் அதிக கோபமும், டென்ஷனும்கூட பெண்களுக்கு பிடிக்காததாகவே இருக்கிறது.
‘கணவரின் கோபம் ஏன் உங்களுக்கு பிடிக்காததாக இருக்கிறது?’ என்ற கேள்வியை கவுன்சலிங்குக்கு வந்த பெண்கள் பலரிடம் கேட்டபோது, ‘கோபம், இயலாமையின் வெளிப்பாடு. எதிர்பார்க்கும் விஷயத்தை சரிவர செய்து முடிக்க முடியாதபோதுதான் கோபம் வரும். அதனால் அடிக்கடி கோபம் கொள்கிறவரை நாங்கள் (பெண்கள்) செயலாற்றல் குறைந்தவர்களாகவே கருதுவோம்’ என்று பதில்சொல்கிறார்கள். அதுவும் பலர் முன்பு வைத்து கோபத்தைக்காட்டினால், அதிக அளவில் அவரது தரம் குறைந்துவிடுகிறது என்றும் சொல் கிறார்கள்.
எல்லா பெண்களுமே தங்களுக்கென்று ஒரு ‘இமேஜை’ உருவாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். அந்த இமேஜை எல்லா நேரங்களிலும் காப்பாற்றிக்கொள்வதிலும் மிகுந்த கவனம் செலுத்து கிறார்கள். அந்த இமேஜை கணவர் உடைத்தால் எந்த பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதனால்தான் மூன்றாம் மனிதர் களிடம் தன்னைப் பற்றி தவறான கருத்து வரும்படி பேசுவதை பெண்கள் விரும்புவதில்லை. அதனால் ஆண்கள் தங்கள் நெருக்கமான நண்பர்களிடம்கூட, தங்கள் மனைவிகளை பற்றி வெளிப்படையாக எந்த விமர்சனமும்வைக்கக்கூடாது.
தங்களை பற்றிய விளையாட்டுத்தனமான விமர்சனங்கள்கூட வெளிப்படையாக இருக்கக்கூடாது என்றே பெண்கள் கருதுகிறார்கள். ஆனாலும் சில ஆண்களுக்கு, தேவையற்ற பேச்சுகள் தங்கள் குடும்ப வாழ்க்கையையே பாதித்துவிடும் என்பதெல்லாம் தெரிவதில்லை. அதனால் அடிக்கடி அவர்கள் அப்பாவித்தனமாக நடந்து மனைவிகளின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகிறார்கள்” என்றும் மனநல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
‘இதுவரை நீங்கள் எப்படி நடந்திருந்தாலும் அது பற்றி கவலையில்லை. இனி நான் சொல்வதை கேட்டு நடந்துகொள்ளவேண்டும்’ என்று மனைவிகள் சொல்வது கணவர்களை அடிமைப்படுத்த அல்ல.. அவர்களை சிறப்புப்படுத்தத்தான் என்பதை ஆண்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். தன் வார்த்தைக்கு மரியாதை கொடுக்கும் கணவன் மிகவும் நல்லவன் என்று பெண்கள் நம்பு கிறார்கள்.
ஆனால் பெண்கள் சொல்வதை எல்லாம், எல்லா நேரங்களிலும் கேட்டு அதன்படி நடக்க முடியாது என்பது உண்மைதான். அது வாழ்க்கைக்கு அசவுகரியமாகவும் அமைந்துவிடும். அப்படிப்பட்ட தருணங்களில் அந்த நேரத்தில் ‘ஆமாம்’ சொல்லி விட்டுக்கொடுத்து விட்டு, பிறகு சூழ்நிலையை பக்குவமாக எடுத்துக்கூறி புரியவைக்கலாம். ஆனால் அதற்காக பொய் சொல்லக்கூடாது.
அம்மாவிடம் பொய் சொல்லி தப்பித்திருக்கலாம். ஆனால் மனைவி யிடம் பொய் சொன்னால் தப்பிக்க முடியாது. ஒரு பெண் மனைவியாகி, தனது வாழ்க்கையை ஆண் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்ட பின்பு, தனது வாழ்க்கையை காலம் முழுக்க பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்த பெண்ணுக்கு இருக்கிறது. அதற்காக அவர்கள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றுதான், தனது கணவரை கட்டுப்பாட்டில் வைப்பது. இது உலகமயமாக்கப்பட்ட ஒரு விஷயம். இதை ஆண்கள் கவனத்தில்கொண்டுதான் ஆக வேண்டும்.

சன் ஸ்கிரீன் சருமத்தைக் காக்கும். சன் ஸ்கிரீன் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
கத்தரி வெயில் முடிந்தும் வெயில் இரக்கம் காட்டுவதாகத் தெரியவில்லை. வெயிலின் உக்கிரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. அதைக் காரணம் காட்டி யாரும் எந்த வேலையிலிருந்தும் விலகியிருக்க முடியாது. குளிர்ச்சியான, நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலைக் காக்கும். சன் ஸ்கிரீன் சருமத்தைக் காக்கும். சன் ஸ்கிரீன் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
“வெயில் காலத்தில் மட்டுமே உபயோகிக்க வேண்டியதல்ல சன் ஸ்கிரீன். குளிர்காலத்திலும் சூரியக் கதிர்களின் தாக்கம் இருக்கும் என்பதால் அந்த நாள்களிலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம். காருக்குள் பயணம் செய்வோருக்கும் வெளியிலேயே வராமல் வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களுக்கும்கூட சன் ஸ்கிரீன் அவசியம்.
சன் ஸ்கிரீன் உபயோகிப்பது மட்டுமே வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தைக் காப்பாற்றும் என நினைக்க வேண்டாம். அது ஓரளவுக்கு சருமத்துக்குக் கேடயம்போலச் செயல்படும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தினமும் மேக்கப் செய்துகொள்ளும் பழக்க முள்ள பெண்கள் பெரும்பாலும் சன் ஸ்கிரீன் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் மேக்கப் போடுவதற்கு முன் சன் ஸ்கிரீன் பயன் படுத்துவது பாதுகாப்பானது.
முகத்துக்கு மட்டுமன்றி, கழுத்து, கைகால்கள், முதுகு என வெயில் படும் எல்லாப் பகுதிகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக்கொள்ள வேண்டும். இவ்வளவு ஏன்… உதடுகளுக்குக்கூட சன் ஸ்கிரீன் தேவை. வெயில் பட்டால் உதடுகளும் கறுத்துப்போகலாம். எனவே, அல்ட்ரா வயலட் பாதுகாப்புள்ள லிப் பாம் பயன்படுத்துங்கள்.
நீச்சல் பழக்கமுள்ளவர்களுக்கு தண்ணீரில் உள்ள குளோரினும், நேரடியாக அடிக்கிற வெயிலும் சருமத்தைக் கறுத்துப்போகச் செய்யும். அவர்கள் வாட்டர் ரெசிஸ்டன்ட் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதன் மூலம் சரும ஆரோக்கியத்தைக் காக்கலாம். பெரியவர்களுக்கு உபயோகிக்கிற அதே சன் ஸ்கிரீனையே குழந்தைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு ‘பாரா அமினோ பென்ஸாயிக் ஆஸிட்’, `ஆக்ஸிபென்ஸோன்’ போன்ற ரசாயனங்கள் உள்ள சன் ஸ்கிரீன் வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

‘சிக்’கென்ற உடல் வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவாக இந்த சாலட்டை சாப்பிடலாம். இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு - பெரிய துண்டு,
வெள்ளரிக்காய் - 1 சிறியது,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
கடுகு - கால் டீஸ்பூன்,

செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடங்கள் வேக வைத்த கொள்ளவும்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, வாழைத்தண்டு கலவையில் கொட்டி, மீண்டும் ஒருமுறை கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

சத்தான வாழைத்தண்டு - வெள்ளரிக்காய் சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தரமற்ற நாப்கினைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, ஒவ்வாமை முதல் கருப்பைப் பிரச்சனைகள் வரை ஏற்பட வாய்ப்புண்டாகிறது. எனவே, கீழ்க்காணும் விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
ரசாயனங்களால் உருவான நாப்கினைத் தொடர்ந்து பயன்படுத்தும்போதும், மாதவிடாய் நாள்களில் கவனக்குறைபாட்டால் மேற்கொள்ளும் ஆரோக்கியத்துக்கு எதிரான பழக்கங்களாலும் ஒவ்வாமை முதல் கருப்பைப் பிரச்சனைகள் வரை ஏற்பட வாய்ப்புண்டாகிறது. எனவே, கீழ்க்காணும் விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
1. நாப்கின்கள் பளிச் வெண்மை நிறத்தில் இருக்க, அதில் பிளீச்சிங் ஏஜென்ட் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு பிளீச் செய்யப்பட்ட நாப்கினைப் பயன்படுத்தும்போது அலர்ஜி, அரிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, நாப்கின் வாங்கும்போது அதன் பேக்கிங் கவரில் ‘அன்பிளீச்டு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
2. பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப் படுகின்றன. மேலும் ஈரத்தை உறிஞ்சுவதற்கான ரசாயனங்கள், நறுமணத்துக்காகச் சேர்க்கப்படும் வாசனைத் திரவியங்கள் என நாப்கின் தயாரிப்பில் சேர்க்கப்படும் பொருள்கள் பல. இந்த நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது கருப்பை பாதிப்பு, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விலையுயர்ந்த ‘அல்ட்ரா தின்’, ‘ஜெல் டெக்னாலஜி’, ‘லீக்கேஜ் ப்ரூஃப்’ ரக நாப்கின்களைவிட, விலை மலிவான காட்டன் பேடுகளே பாதுகாப்பானவை.
3. நாப்கின் வாங்கும்போது, அது வாலன்டரி தரக்கட்டுப்பாடு ஐஎஸ்ஐ தரச் சான்றிதழ் 5405 பெற்றிருப்பதை உறுதிசெய்த பின்னர் வாங்கவும். அதேபோல, உற்பத்தி தேதி, காலாவதி தேதி போன்ற அடிப்படை விவரங்களையும் செக் செய்துகொள்ளவும்.
4. ஒவ்வொரு முறை நாப்கின் மாற்றும்போதும் பிறப்புறுப்பை வெதுவெதுப்பான நீர் கொண்டு சுத்தம்செய்வது நல்லது. எக்காரணம் கொண்டும் பிறப்புறுப்பில் ஆன்டி செப்டிக் லோஷன், சோப் ஆகியற்றைப் பயன்படுத்தக்கூடாது.

6. மாதவிடாய் நாள்களுக்கெனத் தனி உள்ளாடைகளைப் பயன்படுத்தலாம். அவற்றை ஆன்டிசெப்டிக் லோஷனில் அலசி, வெயிலில் நன்கு காயவைத்துப் பயன்படுத்தலாம்.
7. ஈரம்பட்டுவிடக்கூடாது என்பதற்காகச் சில பெண்கள் இரண்டு பேடுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது உண்டு. இது சில நேரங்களில் வலியை ஏற்படுத்தும். மேலும், பிறப்புறுப்பில் ஒவ்வாமை, சிறு கொப்புளங்கள் போன்ற பிரச்னைகளும் உண்டாகலாம்.
8. பயன்படுத்தவிருக்கும் நாப்கினை, பேக்கிங் பிரித்தபடி கைப்பை, டிரெஸ்ஸிங் டேபிள் எனப் போட்டுவைக்கும்போது, அங்கெல்லாம் உள்ள அழுக்கும் கிருமிகளும் நாப்கினில் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது. மேலும் நாப்கின் மாற்றக் கழிப்பறைக்குச் செல்லும்போது, கழிப்பறையின் ஜன்னல், கதவு, ஃபிளஷ் டாங்க் எனப் தூசு படிந்துள்ள இடங்களில் புதிய நாப்கினை வைக்கக்கூடாது. பிறகு, அதை அங்கிருந்து எடுத்துப் பயன்படுத்தும்போது, கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பாகிவிடும். பயன்படுத்தவிருக்கும் நாப்கின், பேக்கிங் பிரிக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். பேப்பரில் சுற்றிச் சுத்தமான பாலிதீன் பைகளில் வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தவும்.
9. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கைகளை சோப்பு பயன்படுத்திக் கழுவவும். பயன்படுத்திய நாப்கினை அப்புறப்படுத்திய பின் கைகளைக் கழுவாமல் பாக்கெட்டில் இருந்து புதிய நாப்கினை எடுக்கும்பட்சத்தில், பாக்டீரியாக்கள் கைகளின் மூலம் பரவி நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், அதைத் தவிர்க்கவும்.
10. நாப்கினை அப்புறப்படுத்துவதில் சமூக அக்கறை வேண்டும். ஃபிளஷ் செய்வது, கழிப்பறையிலேயே ஓர் ஓரத்தில் வீசிவிட்டு வருவது போன்ற பழக்கங்கள் தவறு. இது கழிப்பறையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு அருவருப்புடன் நோய்த்தொற்றையும் தரும். பயன்படுத்திய நாப்கினை பேப்பரில் சுற்றி, குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.

5. நாப்கின்கள் அல்ட்ரா தின், ரெகுலர், மேக்ஸி, ஓவர் நைட், சூப்பர் எனப் பல ரகங்களில் கிடைக்கின்றன. ‘நீண்ட நேரம் ஈரத்தைத் தக்கவைக்க வல்லது’ என்று அவை விளம்பரப் படுத்தப்பட்டாலும், எந்த ரக நாப்கினைப் பயன்படுத்தினாலும், நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றிக்கொள்வது அவசியம். நாப்கின் ஈரத்தை உறிஞ்சியிருந்தாலும், அல்லது அதிகமாக உதிரப்போக்கு இல்லையென்றாலும்கூட, நாள் முழுக்க ஒரே நாப்கினைப் பயன்படுத்துவது தவறான பழக்கம். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் நாப்கின் மாற்றுவது நல்லது.

6. மாதவிடாய் நாள்களுக்கெனத் தனி உள்ளாடைகளைப் பயன்படுத்தலாம். அவற்றை ஆன்டிசெப்டிக் லோஷனில் அலசி, வெயிலில் நன்கு காயவைத்துப் பயன்படுத்தலாம்.
7. ஈரம்பட்டுவிடக்கூடாது என்பதற்காகச் சில பெண்கள் இரண்டு பேடுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது உண்டு. இது சில நேரங்களில் வலியை ஏற்படுத்தும். மேலும், பிறப்புறுப்பில் ஒவ்வாமை, சிறு கொப்புளங்கள் போன்ற பிரச்னைகளும் உண்டாகலாம்.
8. பயன்படுத்தவிருக்கும் நாப்கினை, பேக்கிங் பிரித்தபடி கைப்பை, டிரெஸ்ஸிங் டேபிள் எனப் போட்டுவைக்கும்போது, அங்கெல்லாம் உள்ள அழுக்கும் கிருமிகளும் நாப்கினில் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது. மேலும் நாப்கின் மாற்றக் கழிப்பறைக்குச் செல்லும்போது, கழிப்பறையின் ஜன்னல், கதவு, ஃபிளஷ் டாங்க் எனப் தூசு படிந்துள்ள இடங்களில் புதிய நாப்கினை வைக்கக்கூடாது. பிறகு, அதை அங்கிருந்து எடுத்துப் பயன்படுத்தும்போது, கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பாகிவிடும். பயன்படுத்தவிருக்கும் நாப்கின், பேக்கிங் பிரிக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். பேப்பரில் சுற்றிச் சுத்தமான பாலிதீன் பைகளில் வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தவும்.
9. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கைகளை சோப்பு பயன்படுத்திக் கழுவவும். பயன்படுத்திய நாப்கினை அப்புறப்படுத்திய பின் கைகளைக் கழுவாமல் பாக்கெட்டில் இருந்து புதிய நாப்கினை எடுக்கும்பட்சத்தில், பாக்டீரியாக்கள் கைகளின் மூலம் பரவி நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், அதைத் தவிர்க்கவும்.
10. நாப்கினை அப்புறப்படுத்துவதில் சமூக அக்கறை வேண்டும். ஃபிளஷ் செய்வது, கழிப்பறையிலேயே ஓர் ஓரத்தில் வீசிவிட்டு வருவது போன்ற பழக்கங்கள் தவறு. இது கழிப்பறையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு அருவருப்புடன் நோய்த்தொற்றையும் தரும். பயன்படுத்திய நாப்கினை பேப்பரில் சுற்றி, குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.
உடல் எடையைக் குறைக்க, உணவுக் கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. கூடவே, தினமும் எளிய உடற்பயிற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால், உடல் முழுவதும் ஒரே சீராக எடை குறையும்.
உடல் எடையைக் குறைக்க, உணவுக் கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. கூடவே, தினமும் 10 முதல் 15 நிமிடங்கள், எளிய பயிற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால், உடல் முழுவதும் ஒரே சீராக எடை குறையும். உடற்பயிற்சியைச் செய்வதற்கு முன்பு, சிறிது நடைப்பயிற்சி, தசைகளைப் பயிற்சிக்குத் தயார் செய்யும், வார்ம்-அப் பயிற்சிகள் செய்துவிட்டு, இந்தப் பயிற்சிகளைச் செய்யவேண்டும்.
லாஞ்சஸ் (Lunges)
வலது காலை லேசாக மடித்து, முன்புறம் வைக்க வேண்டும். இடது காலை முடிந்த வரை பின்னால் நீட்டி, ஓடுவதற்குத் தயாராவதுபோல், கைகளை மடித்து முன்னால் நீட்ட வேண்டும். இப்போது, இடது கால் முட்டியை மடித்து, தரையில் பதிப்பதுபோல கொண்டுசென்று, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல, வலது காலுக்கும் செய்ய வேண்டும்.
பலன்கள்: இடுப்பு, கால், முன்பக்கத் தொடை, பின்பகுதித் தசையை வலிமைப்படுத்துகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு, இந்தப் பயிற்சி மிகவும் நல்லது.
ஸ்குவாட்ஸ் (Squats)
கால்களைச் சற்று அகட்டி, நேராக நிற்க வேண்டும். கைகளை, முன்பக்கமாக நீட்டி, கோத்துக்கொள்ள வேண்டும். இப்போது, ஒரு நாற்காலியில் உட்காருவதுபோல அமர்ந்து எழுந்திருக்க வேண்டும்.
பலன்கள்: தொடை, கால், கைத் தசைப் பகுதியில் உள்ள கொழுப்புகள் கரையும். தசைகள் உறுதியடையும். கலோரிகள் எரிக்கப்படும்.
ஜம்பிங் ஜாக் (Jumping jack)
கால்களைச் சேர்த்து நேராக நிற்க வேண்டும். கைகளைப் பக்கவாட்டில் வைத்துக்கொள்ளவும். இப்போது, குதித்தபடி காலை சற்று அகட்டி, கையைத் தலைக்கு மேல் உயர்த்தி, பின் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். (30 விநாடிகள் செய்துவிட்டு, ஒரு நிமிடம் ஸ்கிப்பிங், ஒரு நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு அடுத்த பயிற்சி.)
பலன்கள்: இந்தப் பயிற்சியின்போது, உடல் முழுவதும் செயல்படுகிறது. மூச்சு ஆழமாகிறது. இதனால், அதிக கலோரி எரிக்கப்படுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

குழந்தைகள் பள்ளி செல்லும் இளம் பருவத்தில் உணவு பாதுகாப்பில் அக்கறை செலுத்தினால் எதிர்காலத்தில் சிறந்த ஆரோக்கியமானவர்களாக வாழ்வீர்கள். உணவு பாதுகாப்பு பற்றிய சில வழிகளை தெரிந்து கொள்வோமா...
குட்டீஸ், சாப்பிடும் முன்பு கைகழுவ வேண்டும் என்று அம்மா சொல்லியிருக்கிறார்களா? கழிவறையை பயன்படுத்தினாலும் கைகால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுத்தந்திருக்கிறார்களா? நிஜம்தான், நாம் சுத்தமாக இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஏராளமான நோய்கள், கைகள் மற்றும் உணவுகள் மூலமாக நம் உடலில் தொற்றுகின்றன. உண்ணும் உணவை பாதுகாப்பாக கையாளுவது நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் சிறந்த வழியாகும். பள்ளி செல்லும் இளம் பருவத்தில் உணவு பாதுகாப்பில் அக்கறை செலுத்தினால் எதிர்காலத்தில் சிறந்த ஆரோக்கியமானவர்களாக வாழ்வீர்கள். உணவு பாதுகாப்பு பற்றிய சில வழிகளை தெரிந்து கொள்வோமா...
* சமைத்த உணவில் கிருமிகள் தொற்றும் வாய்ப்பு கைகளில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே கழிவறை சென்று திரும்பியதும் கை கழுவுவது, சாப்பிடும் முன்பு கை கழுவுவது போன்ற சுகாதார பழக்க வழக்கங்கள் மூலம் உணவுடன் கலந்து கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்கலாம். சாதாரண நேரத்தில் உடலில் சொறிவது, மூக்கு, காதுகளில் விரல்களால் குடைவது, அசுத்தமான இடங்களில் கைகளால் விளையாடமல் இருப்பது சுத்தத்திற்கான சிறந்த வழியாகும்.
* இந்த பழக்க வழக்கத்தால் தொற்றும் கிருமிகளை தவிர்க்கவே கைகளை நன்கு கழுவிய பின்பு உணவருந்த பெற்றோரும், பெரியோரும் சொல்கிறார்கள். நீங்கள் பள்ளி சென்றாலும், வேறு எங்கு சென்றாலும் தவறாமல் இந்த நல்ல பழக்கங்களை பின் பற்ற வேண்டும். கைகளை கழுவும் “குழாய்” உயரமாக இருந்தால், உங்களுக்கு கைகழுவ தனியே தண்ணீர் வைக்கச் சொல்லுங்கள் அல்லது குழாய் உயரத்திற்கேற்ற ஒரு இருக்கையை அதன் அருகே போட்டு வைத்துக் கொண்டு கைகழுவி பழகுங்கள்.
* கைகழுவ குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும். 20 விநாடிகளுக்கு குறையாமல் கை கழுவுவது அவசியமாகும். “அம்மா இங்கே வா...வா” அல்லது “ஜானி ஜானி எஸ் பாப்பா” போன்ற ஏதாவது ஒரு பாடலை பாடிக்கொண்டு சுமார் 20 விநாடிகளுக்கு குறையாத நேரத்தை கைழுவ பயன்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமான சோப்பை கைகழுவ பயன் படுத்தலாம்.
* குளிர்ந்த இடத்தில் உணவுப் பொருளை பராமரிப்பது எளிதில் கிருமிகள் தொற்றுவதையும், உணவுகள் கெட்டுப்போவதையும் தடுக்கும். குளிர்வூட்டி “லஞ்ச் பாக்ஸ்”கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதை பயன்படுத்த முடியாதவர்கள் உலோக பாத்திரங்களை பயன்படுத்தலாம். அதுவும் கிருமித் தொற்றை தடுக்கும். முடிந்தவரை பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். அதிலும் சூடான உணவுகளை பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்க வேண்டாம்.
* உணவுப்பொருட்கள் சூடாகவே இருக்க வேண்டுமென்றால் அதற்காக வெப்பத்தை வெளியிடாத உலோக பாத்திரங்களை பயன்படுத்தலாம். தெர்மாகோல் மூடி பராமரித்தாலும் உணவுகள் சூடு குறையாமல் இருக்கும்.

* குழந்தைகளிடையே எளிதில் நோய்பரவ நொறுக்குத் தீனிகளும் ஒரு காரணமாகும். நீங்கள் தின்பண்டங்களை கொடுத்தால் போட்டிபோட்டு சாப்பிடுவீர்கள்தானே. ஆனால் அனைவரது கைகளும் ஒரே மாதிரியாக சுத்தம் பராமரிக்கப்பட்டிருக்காது என்பதால் நீங்கள் நண்பர்கள் அல்லது சகோதர சகோதரிகளுடன் தின்பண்டங்களை சேர்ந்து சாப்பிடுவதாக இருந்தால் அவற்றை பகிர்ந்து தனித்தனியே சாப்பிடுங்கள். அல்லது கிருமித்தொற்றுகள் ஏற்படலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
* குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழு வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் எளிதில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகலாம். எனவே உணவு சமைக்கும் இடம் மற்றும் “லஞ்ச் பாக்ஸ்” மற்றும் பைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இது பொறுப்புள்ள பெற்றோரின் கடமையாகும். குட்டீஸ் நீங்கள் குழம்புகள், உணவுப் பொருட்களை சிந்துவதை தவிர்த்தால் கிருமித் தொற்று ஏற்படுவதையும், நோய் பரவுவதையும் தடுக்கலாம்.
* அதுபோலவே திறந்த வெளியில் வைத்து விற்கும் பண்டங்களை சாப்பிடுவதை தடுக்க வேண்டும். வெளியில் கிடைக்கும் அவித்த முட்டைகள், பாதுகாப்பானதல்ல. அதை வாங்கினால் குளிர்பதன பெட்டியில் 2 மணி நேரம் வைத்திருந்து பின்னர் சாப்பிடலாம்.
* பெரிய உணவுத் துண்டுகள், கடினமான உணவுப் பொருட்களை துண்டாக்கி சாப்பிடுங்கள். நன்கு மென்று சாப்பிடுங்கள். வேர்க்கடலை, மக்காச்சோளம், மிட்டாய்கள், தக்காளி, உருளை போன்றவை பெரிய துண்டுகளாக இருந்தால் கவனமாக சாப்பிட வேண்டும்.
* சாப்பிடும்போது அமர்ந்து நிதானமாக சாப்பிட வேண்டும். நடக்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும் பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். படுத்துக்கொண்டும் சாப்பிடக் கூடாது.
* ஒமேகா-3 கொழுப்புச்சத்துள்ள கடல்மீன் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.சுகாதாரமான பழக்க வழக்கங்களும், உணவுப் பாதுகாப்பு முறைகளும் உங்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கட்டும்.

பொதுவாக பிரியாணி அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. இதில் பல வகைகள் உண்டு. அதில் மீன் பிரியாணியும் ஒன்று. அதை செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ
மீன் - 3/4 கிலோ (பெரிய வகை துண்டு மீன்)
வெங்காயம் - 3
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை - தலா 2
தயிர் - ஒன்றரை கப்
மிளகாய் தூள் - 2+1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 + 1/2 தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேசைக் கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்த மசாலாவில் பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மசாலாவில் பிரட்டி வைத்த மீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்தெடுக்க வேண்டும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் தக்காளி மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பின் புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு, தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு 2 நிமிடம் வேக விட வேண்டும்.
பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு கொதிக்க விட்டு, மீனை தனியாக எடுத்து வைக்கவும்.

எண்ணெய் புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு

பின் அரிசியை களைந்து போட்டு, மூடி போட்டு 15 நிமிடம் சிம்மில் வேக வைத்ததும் நன்கு கிளறிவிட்டு, தனியாக எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு இறக்கினால் கமகமக்கும் மீன் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோவை இலைக்கும், கோவைக்காய்க்கும் மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. இவை பல்வேறு நோய்களுக்கான சித்த மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். கோவை இலை சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும். கோவைக்காய் மலிவான விலையில் கிடைக்கும். கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.
கோவை மூலிகையானது சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மிகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மை உடையது. மேலும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வல்லது. கோவைக் கிழங்கு சாறு 10 மி.லி. அளவில் காலையில் மட்டும் குடித்து வந்தால் இரைப்பு இருமல், கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும். கோவைக்காயை நறுக்கி, வெயிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கோவைக்காய் பச்சடி செய்து, வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். நிறையப் பேர் கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுங்கி விடுகிறார்கள். நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்பம் உடையதாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.
வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம். கோவைக்காயை பீன்ஸ் போல பொரியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். முக்கியமாக முற்றின கோவைக்காய் வாங்கக்கூடாது. பிஞ்சு காயாக பார்த்து வாங்க வேண்டும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது எதுபோன்ற அடிப்படைக் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
* சிலர் ஜிம்மில் அணிவதற்கென்றே ஒரு உடையை வாங்கி இருப்பார்கள். அதைத் துவைக்காமலேயே தினமும் ஜிம்முக்கு அணிந்து வருவார்கள். ‘எப்படியும் வியர்க்கத்தானே போகிறது’ என்ற ஒரு வியாக்கியானத்தை வேறு சொல்வார்கள். அதற்காக உங்கள் உடைகளின் நாற்றத்தைப் பிறர் பொறுத்துக்கொள்ள வேண்டுமா, என்ன? துவைத்து அணியுங்கள். ஜிம்முக்காக இரண்டு செட் உடைகளை வைத்திருங்கள்.
* பொதுவாக, நண்பர்கள் ஜிம்மில் நுழைந்து பயிற்சி செய்யும்போது பேசிக் கொள்வதில்லை. சிலர் ரேடியோ, மினி சி.டி.பிளேயர் போன்றவற்றைக் கொண்டுவந்து அதை அதிக வால்யூமில் ஒலிக்கவிட்டு உடற்பயிற்சி செய்வார்கள். இது அவர்களுக்குச் சுக அனுபவமாக இருக்கலாம். ஆனால், அமைதியான சூழலில் உடற்பயிற்சி செய்ய வருபவர்களுக்கு இது தலைவலி. பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படை விதி ஜிம்முக்கும் பொருந்தும்.

* சில கருவிகளில் அதைப் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச நேரத்தைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதிக நேரம் அதில் பயிற்சி செய்வது உங்கள் இஷ்டம். ஆனால் அடுத்தவர்கள் காத்திருக்கும்போது அதிக நேரம் பயிற்சியில் ஈடுபடுவது நியாயம் அல்ல. இப்படி அடிக்கடி நேர்ந்தால் ஜிம்முக்கு நீங்கள் வரும் நேரத்தைக் கொஞ்சம் மாற்றியமைத்துக் கொள்ள முடியுமா என்று பாருங்கள்.
* சிலர் அதிக அளவில் டியோடரண்டையோ சென்ட்டையோ தங்கள் உடைகளின்மீது தெளித்துக் கொண்டு ஜிம்முக்கு வருவார்கள். பயிற்சி செய்யும்போது இந்த மணம் அறை எங்கும் பரவும் (வியர்வை மணமும் கலந்து!). அதைவிட ஒருபடி அதிகமாக அவர்கள் ஜிம்மை விட்டு வெளியேறிய பிறகும் அந்த நறுமணக் கலவை ஜிம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். சிலருக்கு இந்த மணம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே பர்ஃப்யூம் பயன்படுத்தும்போது நினைவில் கொள்ளுங்கள்.
* நகரக்கூடிய பொருட்களைக் கொண்டு நீங்கள் பயிற்சி செய்ய வாய்ப்பு உண்டு. யோகாசனம் செய்வதற்கான பாய், டம்பிள் (Dumbell) போன்றவை. அவற்றை எடுத்த இடத்திலேயே சரியாக மீண்டும் வைக்க வேண்டியது அவசியம். முக்கியமாகப் பிறருக்கு ஆபத்து உண்டாகக் கூடும் வகையில் (தடுக்கி விழுதல், மேலிருந்து விழுதல்) அவற்றை வைக்கக் கூடாது.
* ஜிம்முக்குச் செல்லும்போது ஒரு டர்க்கி டவலை எடுத்துச் செல்லுங்கள். உங்கள் முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொள்வதோடு மட்டுமல்ல நீங்கள் பயன்படுத்திய - நீங்கள் கைகளால் பற்றிய கருவிகளின் பகுதிகளை - இறுதியில் துடைத்துவிட்டுக் கிளம்புவதுதான் நாகரிகம்.

* அழுக்கடைந்த காலணிகளோடு ஜிம்முக்குள் நுழைந்து அங்கே உங்கள் தடங்களைப் பதிப்பது தவறு. அதுவும் டிரெட் மில், ஸ்டாடிக் சைக்ளிங் போன்றவற்றில் உங்கள் காலணிகள் பல நிமிடங்கள் கருவிகளில் பதிந்திருக்கும். உரிய மிதியடிகளை ஜிம்மின் வாசற்புறம் போட்டு வைக்க ஏற்பாடு செய்யுங்கள். மறக்காமல் அவற்றில் உங்கள் ஷூக்களை நன்கு தட்டிவிட்டுக் கொண்டு பிறகு உள்ளே நுழையுங்கள்.

* சில கருவிகளில் அதைப் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச நேரத்தைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதிக நேரம் அதில் பயிற்சி செய்வது உங்கள் இஷ்டம். ஆனால் அடுத்தவர்கள் காத்திருக்கும்போது அதிக நேரம் பயிற்சியில் ஈடுபடுவது நியாயம் அல்ல. இப்படி அடிக்கடி நேர்ந்தால் ஜிம்முக்கு நீங்கள் வரும் நேரத்தைக் கொஞ்சம் மாற்றியமைத்துக் கொள்ள முடியுமா என்று பாருங்கள்.
* சிலர் அதிக அளவில் டியோடரண்டையோ சென்ட்டையோ தங்கள் உடைகளின்மீது தெளித்துக் கொண்டு ஜிம்முக்கு வருவார்கள். பயிற்சி செய்யும்போது இந்த மணம் அறை எங்கும் பரவும் (வியர்வை மணமும் கலந்து!). அதைவிட ஒருபடி அதிகமாக அவர்கள் ஜிம்மை விட்டு வெளியேறிய பிறகும் அந்த நறுமணக் கலவை ஜிம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். சிலருக்கு இந்த மணம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே பர்ஃப்யூம் பயன்படுத்தும்போது நினைவில் கொள்ளுங்கள்.
* நகரக்கூடிய பொருட்களைக் கொண்டு நீங்கள் பயிற்சி செய்ய வாய்ப்பு உண்டு. யோகாசனம் செய்வதற்கான பாய், டம்பிள் (Dumbell) போன்றவை. அவற்றை எடுத்த இடத்திலேயே சரியாக மீண்டும் வைக்க வேண்டியது அவசியம். முக்கியமாகப் பிறருக்கு ஆபத்து உண்டாகக் கூடும் வகையில் (தடுக்கி விழுதல், மேலிருந்து விழுதல்) அவற்றை வைக்கக் கூடாது.
* ஜிம்முக்குச் செல்லும்போது ஒரு டர்க்கி டவலை எடுத்துச் செல்லுங்கள். உங்கள் முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொள்வதோடு மட்டுமல்ல நீங்கள் பயன்படுத்திய - நீங்கள் கைகளால் பற்றிய கருவிகளின் பகுதிகளை - இறுதியில் துடைத்துவிட்டுக் கிளம்புவதுதான் நாகரிகம்.
முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, அழகுக்காக அல்ல. உங்களின் உடல்நிலையை அறிந்து கொள்வதற்காகவும் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, அழகுக்காக அல்ல. உங்களின் உடல்நிலையை அறிந்து கொள்ளுங்கள். அடிக்கடி சளி, காய்ச்சல் என அவதிப்படுவோரின் உதட்டைப் பாருங்கள். அதிகம் தண்ணீர் அருந்தாதவர்கள் தங்களது உதட்டைப் பார்க்கவும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை உண்டாலே கருமை நிற உதடு சரியாகும்.
மரபியல் காரணம் ரத்தசோகை அதிகமாக காபி, டீ குடிப்பது ஈட்டிங் டிஸ்ஆர்டர் லிப் மேக்கப்பை முறைப்படி நீக்காதது, போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாமை, பற்பசை அலர்ஜி அலுமினியம், காப்பர், மெர்குரி போன்ற கெமிக்கல்களின் விளைவு புகைப்பழக்கம், சூரிய கதிர்களின் தாக்கம், விட்டமின் குறைபாடு, அதிகமான இரும்புச்சத்து உடலில் இருப்பது, மருந்துகள், ஹார்மோன் பிரச்சனை உதடு பராமரிப்பின்மை ஆகிய காரணங்களால் உதடு கருப்பாகிறது. உதடுதானே கருப்பானால் என்ன என்று அலட்சியமாக இருக்க வேண்டும். கருப்பான உதடுக்கு பின் பல உடல்நல பிரச்னைகள் மறைந்து இருக்க கூடும். அதை சரிபார்த்து தங்கள் உடல்நலத்தை சரி செய்து கொள்ளுங்கள்.
தினமும் மாதுளை, திராட்சை, விட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்கள், 2-3 லிட்டர் தண்ணீர், நீர் மோர், இளநீர், பசுநெய் கலந்த உணவுகள், கீரைகள், பழச்சாறுகளை எடுத்து கொள்ளுங்கள்.
வாரத்துக்கு 3 நாள் லிப் ஸ்கரப் செய்வது நல்லது. வெள்ளை சர்க்கரையை லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். அதாவது சர்க்கரை துகள்கள் இருக்க வேண்டும். அதுபோல. இதனுடன் காபி தூள் சேர்க்கவும். இதை உதட்டில் தடவி மசாஜ் செய்யுங்கள். குறைந்தது 5 நிமிடங்கள். பின்னர் கழுவி விட்டு தேய்காய் எண்ணெய் தடவலாம். இட்லி மாவு, தோசை மாவு தடவியும் ஸ்கரப் செய்யலாம். புளிச்ச கீரை சாறு, எலுமிச்சை சாறு, பொடித்த சர்க்கரை ஆகியவற்றை கலந்து விடவும். இதைக் கொண்டு ஸ்கரப் செய்யலாம்.
பெட்ரோலியம் ஜெல்லி உதட்டுக்கு நல்லதல்ல. தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர், கொகோ பட்டர், கற்றாழை, அவகேடோ கலந்த லிப் பாம் தேர்ந்தெடுக்கலாம். அடர்நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. நல்ல தரமான, கெமிக்கல்கள் இல்லாத லிப்ஸ்டிக், லிப் பாம் பயன்படுத்தலாம். முடிந்தவரை லேசான நிறம் கொண்ட நியூட் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும்போது, தேங்காய் எண்ணெய், நெய், லிப் பாம் பயன்படுத்தலாம். நிறமில்லாத லிப் பாம் பயன்படுத்துங்கள். லிக்விட் லிப்ஸ் ஸ்டிக் உங்களது உதட்டை ட்ரையாக்கும். எனவே முடிந்தவரைத் தவிர்க்கலாம். அல்லது லிப் பாம் பயன்படுத்திய பின் லிக்விட் லிப்ஸ் ஸ்டிக் பயன்படுத்தலாம். இரவில் தூங்கும் முன்னர் அவசியம் நீங்கள் போட்ட லிப் மேக்கப்பை நீக்கிவிட்டு வெறும் தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு தூங்குவது நல்லது.
எளிமையான வீட்டு வைத்தியங்கள்...
நெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய். இவை அனைத்தும் உதட்டுக்கு நல்லது. பகலில், இரவில் இதை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, உதட்டில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
இரவில் கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவலாம். அடுத்த நாள் கழுவி விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
வெள்ளரி சாறு, பீட்ரூட் சாறு, கேரட் சாறு, மாதுளை சாறு, கொத்தமல்லி கீரை சாறு ஆகியவற்றைத் தொடர்ந்து உதட்டில் தடவி வந்தாலும் விரைவில் பலன் கிடைக்கும்.
கிளசரினை பஞ்சில் நனைத்து உதட்டில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
இரவில் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து உதட்டில் தடவி மறுநாள் கழுவி விடலாம்.
தினமும் ஒரு ஐஸ் கியூப் எடுத்து உதட்டில் தடவி மசாஜ் செய்யுங்கள். பீட்ரூட் சாறு, கேரட் சாறு, வெள்ளரி சாறு போன்றவற்றைகூட ஐஸ் கியூப்பாக்கி உதட்டில் தடவலாம்.
ஒரு விட்டமின் இ காப்சூல் எடுத்து, அதன் எண்ணெயை உதட்டில் தடவி வருவதும் பலன் தரும்.