search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சருமத்திற்கு சன் ஸ்க்ரீன் தேவையா?
    X
    சருமத்திற்கு சன் ஸ்க்ரீன் தேவையா?

    சருமத்திற்கு சன் ஸ்க்ரீன் தேவையா?

    சன் ஸ்கிரீன் சருமத்தைக் காக்கும். சன் ஸ்கிரீன் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
    கத்தரி வெயில் முடிந்தும் வெயில் இரக்கம் காட்டுவதாகத் தெரியவில்லை. வெயிலின் உக்கிரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. அதைக் காரணம் காட்டி யாரும் எந்த வேலையிலிருந்தும் விலகியிருக்க முடியாது. குளிர்ச்சியான, நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலைக் காக்கும். சன் ஸ்கிரீன் சருமத்தைக் காக்கும். சன் ஸ்கிரீன் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

    “வெயில் காலத்தில் மட்டுமே உபயோகிக்க வேண்டியதல்ல சன் ஸ்கிரீன். குளிர்காலத்திலும் சூரியக் கதிர்களின் தாக்கம் இருக்கும் என்பதால் அந்த நாள்களிலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம். காருக்குள் பயணம் செய்வோருக்கும் வெளியிலேயே வராமல் வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களுக்கும்கூட சன் ஸ்கிரீன் அவசியம்.

    சன் ஸ்கிரீன் உபயோகிப்பது மட்டுமே வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தைக் காப்பாற்றும் என நினைக்க வேண்டாம். அது ஓரளவுக்கு சருமத்துக்குக் கேடயம்போலச் செயல்படும்.  முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி  வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தினமும் மேக்கப் செய்துகொள்ளும் பழக்க முள்ள பெண்கள் பெரும்பாலும் சன் ஸ்கிரீன் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் மேக்கப் போடுவதற்கு முன் சன் ஸ்கிரீன் பயன் படுத்துவது பாதுகாப்பானது.

    முகத்துக்கு மட்டுமன்றி, கழுத்து, கைகால்கள், முதுகு என வெயில் படும் எல்லாப் பகுதிகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக்கொள்ள வேண்டும். இவ்வளவு ஏன்… உதடுகளுக்குக்கூட சன் ஸ்கிரீன் தேவை. வெயில் பட்டால் உதடுகளும் கறுத்துப்போகலாம். எனவே, அல்ட்ரா வயலட் பாதுகாப்புள்ள லிப் பாம் பயன்படுத்துங்கள்.

    நீச்சல் பழக்கமுள்ளவர்களுக்கு தண்ணீரில் உள்ள குளோரினும், நேரடியாக அடிக்கிற வெயிலும் சருமத்தைக் கறுத்துப்போகச் செய்யும்.  அவர்கள்  வாட்டர் ரெசிஸ்டன்ட் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதன் மூலம் சரும ஆரோக்கியத்தைக் காக்கலாம். பெரியவர்களுக்கு உபயோகிக்கிற அதே சன் ஸ்கிரீனையே குழந்தைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு ‘பாரா அமினோ பென்ஸாயிக் ஆஸிட்’, `ஆக்ஸிபென்ஸோன்’ போன்ற ரசாயனங்கள் உள்ள சன் ஸ்கிரீன் வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
    Next Story
    ×