என் மலர்
ஆரோக்கியம்
கர்ப்பக்காலம் முழுவதுமே என்ன செய்தாலும் மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் தூங்கும் போது இந்த பக்கமாக படுத்தால் கருவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கர்ப்பக்காலம் முழுவதுமே என்ன செய்தாலும் மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வதுண்டு. இன்பமான கால கட்டம் என்றாலும் அதிகப்படியான உபாதையால் அவை மன அழுத்தம் வரை கொண்டு சென்றுவிடும் என்பதால் தான் உணவு முதல் அன்றாட பழக்க வழக்கங்கள் வரை ஒவ்வொன்றிலும் கவனமாக இருக்கும்படி மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு அவசியமானது. சாதாரணமாக ஒருவர் உறங்கும் போது, இடது புறமாக படுத்து உறங்குவது சிறந்தது என்பார்கள். கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்கக் கூடாது. இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு பிறகு உறங்க செல்லலாம்.
பெண்கள் கருவுற்றிருக்கும் போது உறங்குவது என்பதே கடினமான ஒன்று. அப்படி நீங்கள் படுக்கும் போதும், வெப்பமாகவும், அசௌகர்யமாகவும், இடுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் அதிகப்படியான நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.
மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் தூங்கும் போது இடது பக்கமாக தூங்கினால், இதயம், கருப்பைக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இடது பக்கத்தில் தூங்கும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், இது கால்களில் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.
இடதுபக்கத்திலிருந்து அவ்வப்போது ஒரு மணி நேரம் என்ற கணக்கில் வலது புறம் படுக்கலாம். ஆனால் பெரும்பாலும் கர்ப்பிணிகள் இடது பக்கம் தூங்குவதே நல்லது.

சில நேரங்களில் தேநீர் அல்லது காபி கைதவறி ஆடையில் பட்டுவிட்டால் உங்களுக்கு பிடித்த ஆடையை நீங்கள் இழக்கக்கூடும். ஒரு சில வீட்டு குறிப்புகளை பின்பற்றினால் இக்கறைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.
சில நேரங்களில் தேநீர் அல்லது காபி கைதவறி ஆடையில் பட்டுவிட்டால் உங்களுக்கு பிடித்த ஆடையை நீங்கள் இழக்கக்கூடும். ஏனெனில் இந்த கறைகள் விரைவில் மறையாது. ஒரு சில வீட்டு குறிப்புகளை பின்பற்றினால் இக்கறைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
ஒரு கோப்பையில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கறை மீது நேரடியாக ஊற்றவும். தொடர்ந்து 10-15 விநாடிகளுக்கு மெதுவாக ஊற்றிக் கொண்டே இருங்கள், பின்னர் சலவை சோப்பு கொண்டு துவையுங்கள். கறை மங்கிவிடும் வரை சோப்பு தேய்க்கவும். கடைசியாக, சாதாரண தண்ணீரில் அலசுங்கள், கறை மறைந்துவிடும்.
வினிகர் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி உங்கள் துணிகளில் படிந்திருக்கும் கறைகளை அகற்றவும் உதவுகிறது. ஒரு ஸ்ப்ரே பாட்டில் ½ கப் வினிகர் மற்றும் ½ கப் தண்ணீர் எடுத்து நன்கு கலக்கவும். பின்னர் இந்த கலவையை கறை மீது நேரடியாக தெளிக்கவும். 5-7 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மீண்டும் தெளிக்கவும். இப்போது உங்கள் துணியை தண்ணீரில் நனைத்து, நன்கு தேய்த்து அலசவும். தேநீர் அல்லது காபி கறைகள் சுத்தமாக நீங்கி விடுவதை நீங்கள் காண்பீர்கள்.
பேக்கிங் சோடா ஒரு இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. உண்மையில், பிடிவாதமான தேநீர் கறையில் இருந்து விடுபட பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இருப்பினும், மென்மையான துணிகளில் இதை முயற்சிக்க வேண்டாம். இதற்கு முதலில் அரை வாளி தண்ணீரை மிதமாக சூடு செய்து கொள்ளவும். இந்த தண்ணீரில் உங்கள் கறை துணியை 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதில் 1 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை நேரடியாக கறை மீது போடவும். கறையை அகற்ற துணியை நன்கு இரண்டு கைகளால் தேய்க்கவும். பின்னர் அந்த துணியை சாதாரண தண்ணீரில் அலசி விடுங்கள் கறை மறைந்துவிடும்.

உணவை தவிர நாம் கொடுக்கும் நொறுக்கு தீனிகளிலும் குழந்தைகளுக்கு தேவையான சத்து இருந்தால் மிகவும் நல்லது. அடிக்கடி இவற்றை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பாக்கெட்டில் அடைத்த திண்பண்டகளின் ஞாபகமே வராது.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - அரை கப்
கேழ்வரகு மாவு - அரை கப்
பீனட் பட்டர் - 50 கிராம்
நாட்டுச்சார்க்கரைத்தூள் - 1 கப்
உடைத்த முந்திரி பருப்பு - 50 கிராம்
நெய் - 250 மிலி
பாதாம் பருப்பு வறுத்து பொடித்தது - 3 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
கலர் சீரக மிட்டாய் - 50 கிராம்
செய்முறை
வாணலியில் சிறிது நெய்விட்டு சூடானதும் கோதுமை மாவையும், ராகி மாவையும் தனித்தனியே வாசனை வரும் அளவு வறுத்து எடுத்துவைத்து கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் வறுத்த மாவுகளை போட்டு அத்துடன் நாட்டுச்சர்க்கரைத்தூள், ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு மற்றும் வறுத்து பொடித்த பாதாம் பருப்பை சேர்த்து பிசைய வேண்டும்.
வாணலியில் நெய் ஊற்றி உருகியதும் சற்று ஆறவிட்டு கைபொறுக்கும் சூட்டில் பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக சேர்த்து மாவை உருண்டைகளாக பிடிக்கவும். மாவை அழுத்தமாக உருண்டை பிடிக்க வேண்டும். இல்லையேல் உதிர்ந்து விடும்.
பீனட் பட்டர் சிறிதளவு எடுத்து உருண்டையின் மேல் ஒரு பக்கம் மட்டும் தடவ வேண்டும். அதன் மேல் சீரக மிட்டாய் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

கலர்புல்லான சத்தான உருண்டை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு பயமும், உற்சாகமும், கலந்த உணர்வு இருப்பது இயல்பானது. மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை கடைப்பிடிக்கக் கூடாதவை குறித்து இங்கே காண்போம்.
கொரோனா கால முழு அடைப்பு முடிந்து படிப்படியாக பள்ளி கல்லூரிகள் திறக்கத் தொடங்கி உள்ளன. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு பயமும், உற்சாகமும், கலந்த உணர்வு இருப்பது இயல்பானது. உங்களுக்கு இருக்கும் அதே உணர்வு உங்களின் சக மாணவருக்கும் இருக்கும். எனவே அனைவருடனும் சகஜமாக பழகுங்கள். குறிப்பாக முதலாம் ஆண்டு செல்லும் கல்லூரி மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை கடைப்பிடிக்கக் கூடாதவை குறித்து இங்கே காண்போம்.
உயர்நிலைப்பள்ளி வரை ஆசிரியர்கள் சிறு சிறு விஷயங்களிலும் உங்களை வழி நடத்தி வந்தனர். ஆனால் கல்லூரியை பொறுத்தவரை ஒவ்வொன்றுக்கும் நீங்களாகவே தயாராக வேண்டும்.
படிப்பதற்கு என்று பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களின் ஓய்வு அறை அல்லது நூலகம் போன்ற எந்த இடத்தையும் படிப்பதற்கு தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
வகுப்புகளை புறக்கணிக்காமல் செல்வது மிக மிக முக்கியமானது. சக மாணவர்களின் தூண்டுதல் காரணமாக வகுப்புகளை புறக்கணித்தால் பாடங்களை புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.
பள்ளிப்படிப்பை முடித்த போதிலும், பல மாணவர்களுக்கு திறம்பட படிப்பது எப்படி என்பது தெரியாதது வருத்தத்திற்குரியது. மனப்பாடம் செய்து எழுதும் முறையை தவிர்த்து கேள்விகள் கேட்டு புரிந்து கொண்டு படிக்க வேண்டும். வகுப்புகளில் கூறப்படும் குறிப்புகளை எடுத்துக்கொண்டு தெளிவில்லாத விஷயங்களை பற்றி விவாதித்து பேராசிரியர்களிடம் விளக்கம் கேட்டுப் படிக்க வேண்டும்.
வகுப்புகளில் அலைபேசிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வகுப்பு நேரங்களில் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களை சரி பார்ப்பது போன்ற கவனத்தை சிதற செய்யும் செயல்களை தவிர்க்க வேண்டும்.
முதலாம் ஆண்டு மாணவர்கள் பெரும்பாலும் அதிக அளவில் செலவு செய்கிறார்கள் என்று புகார் கூறப்படுவதுண்டு . வீட்டில் இருந்து விலகி வாழ்வதால் கிடைத்த சுதந்திரம், நண்பர்களின் தூண்டுதல் போன்றவையே அதிகமாக செலவு செய்ய வைக்கிறது. எனவே தேவையானவற்றுக்கு மட்டுமே செலவு செய்யப்பழக வேண்டும்.
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் கால தாமதமாக தூங்குவதை தவிர்க்க வேண்டும். தூக்கம் சீர்கெடும் போது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போக நேரிடும். படிப்பிலும் கவனம் குறையும்.

உறவுகளில் வாக்குவாதம் முற்றிலும் இயல்பானது என்றாலும், மோதலைக் கையாள்வதற்கும், புரிந்துணர்வோடு சண்டையை நிறுத்துவதற்கும் வழிகள் உள்ளன. உறவில் வாக்குவாதத்தை குறைக்க மற்றும் சமாளிக்க ஆரோக்கியமான வழிகள்....
உளவிலாளர்களின் கூற்றுப்படி உறவுகள் தோல்வியடைய பல காரணங்கள் உள்ளன. இதில் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிகை, இழப்பு ஆகியவை அடங்கும்.
எல்லா நேரத்திலும் சண்டையிடுவது உறவில் மிகவும் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் பிரச்சனைகள் சரியாக கையாளப்படாவிட்டால் உறவு முடிவுக்கு வரக்கூடும்.
உறவுகளில் வாக்குவாதம் முற்றிலும் இயல்பானது என்றாலும், மோதலைக் கையாள்வதற்கும், புரிந்துணர்வோடு சண்டையை நிறுத்துவதற்கும் வழிகள் உள்ளன. உறவில் வாக்குவாதத்தை குறைக்க மற்றும் சமாளிக்க ஆரோக்கியமான வழிகள்....
வாக்குவாதங்கள் நடைபெறுவது இயல்பானது. ஆனால் அந்த நேரத்தில் கோபத்தை கையாளத் தெரிந்திருக்க வேண்டும். எதிரில் இருப்பவரின் கூற்றுக்கு, உடனடியாக கோபத்தோடு செயல்படாமல் பகுத்தறிவோடு அதை மதிப்பிட வேண்டும். அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அமைதியோடும், மரியாதையோடும் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.
வாக்குவாதம் ஏற்படும் நேரங்களில் அமைதியாக யோசித்தால் வாக்குவாதம் சண்டையாக மாறாது.
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வாக்குவாதம் செய்வது விளைவுகளை மோசமானதாக்கும். ஏனெனில் அந்த நேரத்தில் நம்மை மீறி தேவையற்ற வார்த்தைகளை உபயோகிக்கவோ, வருத்தப்படக்கூடிய செயலை செய்யவோ வாய்ப்பு உள்ளது. அதனால் பின்னர் வருத்தப்பட நேரிடும். வாக்குவாதம் முற்றும் நிலைக்கு செல்லும் போது நாம் விட்டு கொடுப்பது தேவையற்ற சண்டைகளை தவிர்க்க உதவும்.
தொலைபேசி குறுஞ்செய்திகள் வாயிலாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நாம் கூறவரும் கருத்துக்களை குறுஞ்செய்தியில் தவறாக புரிந்து கொள்ள நேரிடும். எனவே முடிந்தவரை தொலைபேசியில் பேசுவதோ அல்லது நேரில் பேசித்தீர்த்து கொள்வதோ தான் சிறந்தது.
சிறிய விஷயங்களை பெரிய பிரச்சனைகளாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற காரியங்களை விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

ஆப்பிள் வினிகரை அதிகம் உட்கொள்வதும் ஆபத்தானது. முதலில் உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா? ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுமா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஆப்பிளில் இருக்கும் சர்க்கரையை நொதிக்க வைத்து ஆப்பிள் வினிகர் தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை ஆப்பிளை அசிடிக் அமிலமாக மாற்றுகிறது. ஆப்பிள் வினிகர் உடல் எடையை குறைப்பதற்கும், சருமம் சார்ந்த தொற்று நோய்களை தடுப்பதற்கும் உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் ஆப்பிள் வினிகரை உபயோகிக்கலாம். கூந்தலை வலுப்படுத்தலாம். எனினும் ஆப்பிள் வினிகரை பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன.
பல் துலக்கியதும் ஆப்பிள் வினிகர் கலந்த பானங்கள், உணவு பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். பல்துலக்கியதும் ஆப்பிள் வினிகரை பயன்படுத்தினால் பற்சிதைவு ஏற்படக்கூடும். பற்களின் எனாமலுக்கு சேதம் ஏற்படக்கூடும்.
இரவில் சாப்பிட்ட பிறகு ஆப்பிள் வினிகரை உட்கொள்ளக்கூடாது. அது உணவு குழாய்க்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும். அதில் இருக்கும் அமிலங்கள் செயல்புரிவதற்கு அரை மணி நேரம் ஆகக்கூடும்.
சாப்பிட்ட பிறகு ஆப்பிள் வினிகரை உட்கொள்வதும் சரியானதல்ல. செரிமானத்தை மேம்படுத்துவதற்கு சாப்பிடுவதற்கு முன்பு பருகுவதுதான் சிறந்தது. குறிப்பாக வெறும் வயிற்றில் உட்கொள்வதுதான் நல்லது.
ஆப்பிள் வினிகரை அதிகம் உட்கொள்வதும் ஆபத்தானது. முதலில் உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா? ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுமா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆப்பிள் வினிகரை அதிகம் எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஆப்பிள் வினிகரை அப்படியே பருகவும் கூடாது. அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ஆப்பிள் வினிகரை மூக்கின் அருகில் கொண்டு நுகர்வதையும் தவிர்க்க வேண்டும். அது மூக்கு, கண்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

பெண்கள் இப்போது பத்து வயதில்கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். சிறுவயதிலே உங்கள் மகள் வயதுக்கு வருவதை தவிர்க்கவேண்டும் என்றால், நாலைந்து வயதில் இருக்கும் உங்கள் மகள்களை இப்போதே கவனித்து வளருங்கள்.
பெண்கள் தங்கள் அழகை ஆராதித்தாலும், அத்தகைய அழகுக்காக தங்கள் உடல் எத்தகைய மாற்றங்களை சந்தித்திருக்கிறது? ஒவ்வொரு உறுப்புகளும் வளர்ச்சியை பெற என்ன காரணம்? அந்த வளர்ச்சியால் உடலுக்கு என்ன பலன்? திருமணத்திற்கு பின்பு வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க பெண்களின் உடல் உறுப்புகள் எப்படி காரணமாக இருக்கின்றன? தாய்மை அடைய அந்த உறுப்புகள் அவளுக்கு எப்படி உதவுகின்றன? என்பதெல்லாம் பெரும்பாலான பெண்களுக்கு தெரியாத ரகசியங்களாகவும், அதிசயங்களாகவும்தான் இருக்கின்றன.
பெண்களின் உடலில் அதிசயிக்கத்தக்க அளவில் பெரிய மாற்றங்கள் அவர்கள் வயதுக்கு வரும்போதுதான் நிகழ்கிறது. இப்போது பத்துவயதிலே சில சிறுமிகள் வயதுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் 20 வயதுக்குரிய உடல் வளர்ச்சியை பெற்றிருக்கிறார்கள். 10 வயது பெண்ணுக்கு, 20 வயதுக்குரிய உடல் வளர்ச்சி ஏற்படுவது அவளுக்கான பிரச்சினையாக மட்டும் இல்லாமல் சமூகத்திற்கான பிரச்சினையாகவும் மாறிவிடுகிறது.
இப்போது பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு குழந்தையே போதும் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். அந்த ஒரே ஒரு குழந்தையும் பெண்ணாக இருந்தால், அதை செல்லக் குழந்தையாக்கி விரும்பியதை எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள். ருசிக்காக அளவுக்கு அதிகமான கொழுப்பு அடங்கிய உணவை சிறுமிகள் சாப்பிடும்போது அவர்களது உடல், தேவைக்கு அதிகமான வளர்ச்சியை பெற்றுவிடுகிறது. அப்போது அவர்களது கொழுப்பில் இருந்து ‘லெப்டின்’ என்ற ஹார்மோன் உருவாகும். அதுவே மூளையில் தூண்டுதலை உருவாக்கி, பால்ய வயதிலேயே சிறுமிகள் பருவமடைந்துவிடும் சூழலை உருவாக்குகிறது.
பருவமடைதல் என்பது திடீரென்று உடலுக்குள் நடக்கும் ‘மேஜிக்’ போன்ற நிகழ்வு அல்ல. உடலுக்குள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அதற்குரிய வளர்ச்சி மாற்றங்கள் படிப்படியாக நடந்துகொண்டிருக்கும். அவை அத்தனையும் இயற்கையான முறையில் நடந்து முடிந்துவிட்டது என்பதை பருவமடைதல் வெளிப்படையாக உணர்த்துகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் மார்பக வளர்ச்சி, மறைவிடங்களில் ரோம வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புகளின் மேம்பாடு, உடல் உயரமாகுதல், பூசி மெழுகினாற்போன்று அழகு கூடுதல் போன்றவைகள் அவர்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகளாக அமைகின்றன.
ஒரு சிறுமி வயதுக்கு வந்துவிட்டாள் என்றால், அப்போதே அவளது இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி நிலையை அடைந்துவிட்டன என்று அர்த்தம். அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் அந்த உறுப்புகள் முழு வளர்ச்சியை எட்டிவிடும். அப்போது அவளது உடலும், எண்ணங்களும் குழப்பத்துடன் காணப்படும். அவளது குழப்பத்தை ஒருசிலர் தவறாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும். அதனால்தான் 13, 14 வயதிலேயே ஒருசில சிறுமிகள் கர்ப்பிணியாகிவிடும் சமூக அவலமும் நடக்கிறது.
ஒரு சிறுமி எத்தனை வயதாக இருந்தாலும், அவள் உடல் பிரமிக்கவைக்கும் வளர்ச்சியை பெற்றிருந்தாலும், பெற்றோர் மட்டும்தான் அவளை எப்போதும் தங்கள் மகளாகப் பார்ப்பார்கள். ஆனால் சமூகமும் தன் கண்களால் அப்படித்தான் பார்க்கும் என்று பெற்றோர்கள் கருதுவது தவறு. சிறிய வயதிலேயே அதிக உடல் வளர்ச்சியை பெற்றிருக்கும் சிறுமிகளை சமூகத்தின் எல்லா கண்களும் நல்லவிதமாக பார்ப்பதில்லை.
முன்பு 15 வயதுகளில் பெண்கள் பருவமடைந்தார்கள். இப்போது பத்து வயதில்கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். அது அவர்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிறுவயதிலே உங்கள் மகள் வயதுக்கு வருவதை தவிர்க்கவேண்டும் என்றால், நாலைந்து வயதில் இருக்கும் உங்கள் மகள்களை இப்போதே கவனித்து வளருங்கள்.
மகள்களுக்கு கண்ட உணவுகளையும் வாங்கிக்கொடுக்கவேண்டாம். சிறுவயதிலே வயதுக்கு வரும் சிறுமிகளில் பெரும்பாலானவர்கள் உயரம் குறைந்தவர்களாக, குட்டையாக, பருத்த உருவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், குண்டான சிறுமிகளை மைதான வெளி விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் பொருத்தமான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிக்கச்செய்யுங்கள்.
பொருத்தமான வயதில் பருவமடையும் பெண்களின் உடல் நலமும், மனநலமும் சிறப்பாக இருக்கும். அவர்களது உடலும் கட்டுக்கோப்பான அழகுடன் காணப்படும். திருமணத்திற்கு பிறகு அவர்கள் தாய்மை அடைவதிலும் நெருக்கடிகள் தோன்றாது.

பெண்களே உதடுதானே கருப்பானால் என்ன என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். கருப்பான உதடுக்கு பின் பல உடல்நல பிரச்னைகள் மறைந்து இருக்க கூடும்.
முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, அழகுக்காக அல்ல. உதடுதானே கருப்பானால் என்ன என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். கருப்பான உதடுக்கு பின் பல உடல்நல பிரச்சனைகள் மறைந்து இருக்கக் கூடும். அதை சரிபார்த்து தங்கள் உடல்நலத்தை சரி செய்து கொள்ளுங்கள்.
வாரத்துக்கு 3 நாள் லிப் ஸ்கரப் செய்வது நல்லது. வெள்ளை சர்க்கரையை லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். அதாவது சர்க்கரை துகள்களாக இருக்க வேண்டும். இதனுடன் காபி தூள் சேர்க்கவும். இதை உதட்டில் தடவி மசாஜ் செய்யுங்கள். குறைந்தது 5 நிமிடங்கள். பின்னர் கழுவி விட்டு தேங்காய் எண்ணெய் தடவலாம். இட்லி மாவு, தோசை மாவு தடவியும் ஸ்கரப் செய்யலாம். புளிச்ச கீரை சாறு, எலுமிச்சை சாறு, பொடித்த சர்க்கரை ஆகியவற்றை கலந்து இதைக் கொண்டும் ஸ்கரப் செய்யலாம்.
பெட்ரோலியம் ஜெல்லி உதட்டுக்கு நல்லதல்ல. தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர், கொக்கோ பட்டர், கற்றாழை, அவகேடோ கலந்த லிப் பாமை தேர்ந்தெடுக்கலாம். அடர்நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. நல்ல தரமான, கெமிக்கல்கள் இல்லாத லிப்ஸ்டிக், லிப் பாம் பயன்படுத்தலாம். முடிந்தவரை லேசான நிறம் கொண்ட நியூட் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும்போது, தேங்காய் எண்ணெய், நெய், லிப் பாம் பயன்படுத்தலாம். நிறமில்லாத லிப் பாம் பயன்படுத்துங்கள். லிக்விட் லிப்ஸ் ஸ்டிக் உங்களது உதட்டை டிரையாக்கும். எனவே இதை முடிந்தவரைத் தவிர்க்கலாம். அல்லது லிப் பாம் பயன்படுத்திய பின் லிக்விட் லிப்ஸ் ஸ்டிக் பயன்படுத்தலாம். இரவில் தூங்கும் முன்னர் அவசியம் நீங்கள் போட்ட லிப் மேக்கப்பை நீக்கிவிட்டு வெறும் தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு தூங்குவது நல்லது.
நெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவை அனைத்தும் உதட்டுக்கு நல்லது. பகலில், இரவில் இதை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, உதட்டில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
இரவில் கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவலாம். அடுத்த நாள் கழுவி விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
வெள்ளரி சாறு, பீட்ரூட் சாறு, கேரட் சாறு, மாதுளை சாறு, கொத்தமல்லி கீரை சாறு ஆகியவற்றைத் தொடர்ந்து உதட்டில் தடவி வந்தாலும் விரைவில் பலன் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
வல்லாரை கீரை - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
பெருங்காய தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 1 மேஜை கரண்டி
தாளிக்க
கடுகு, சீரகம், கறிவேப்பிலை
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கிய பின்பு உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.
கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
சத்தான வல்லாரை கீரை பொரியல் ரெடி.
வல்லாரை கீரை - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
பெருங்காய தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 1 மேஜை கரண்டி
தாளிக்க
கடுகு, சீரகம், கறிவேப்பிலை
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கிய பின்பு உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.
கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
சத்தான வல்லாரை கீரை பொரியல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நம் வீட்டில் பெண்களை மரியாதையாக பாலின பேதங்கள் பார்க்காமல் நடத்தினால் ஆண் குழந்தைகள் இயல்பாகவே வெளியிடங்களில் பெண்களை கண்ணியமாக நடத்துவார்கள்.
இன்றைய சமூக சூழலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க பெண்களை பற்றிய நம் மதிப்பீடுகளை குழந்தை பருவத்திலேயே ஆண்களின் மனதில் பதிய வைக்க வேண்டியது அவசியம். இதனை மையமாக வைத்தே சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களை மதிக்க ஆண் குழந்தைகளுக்கு எப்படி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
பெணகளை மதிக்கும் பழக்கம் வீட்டு பெரியர்களிடம் இருந்து தான் துவங்க வேண்டும். அப்போது தான் வளரும் குழந்தைகளுக்கும் அந்த உணர்வு இயற்கையாக வரும். இது கற்பிக்கும் விஷயமல்ல. குழந்தைகள் நம்மை பார்த்து கற்றுக்கொள்ளும் விஷயம். பேசும் விஷயங்களில் இருந்து, அவர்களை அணுகும் விதம் வரை அனைத்தும் ஒவ்வொரு பருவத்திலும் ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் நல்ல தொடுதல் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும்.
குடும்பமாகட்டும், சமுதாயமாகட்டும் பெண்களுக்கு சம உரிமை தர வேண்டும் என்பதை ஆண்களுக்கு அடிப்படையிலேயே கற்றுத்தர வேண்டும். வீட்டில் எந்த கருத்து கேட்பதாக இருநதாலும் ஆண் குழந்தைகளின் கருத்துக்கு மட்டுமல்ல பெண் குழந்தைகளின் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட வயது வந்ததும் பெண் குழந்தைகளிடம் பேசும் போதே மரியாதையுடன் பேச வேண்டும் என்று சொல்லி தரவேண்டும்.
எங்கு சென்றாலும் எந்த இடத்திலும் பெண்களை மரியாதை குறைவாக பேசக்கூடாது என்பதை சொல்லித்தர வேண்டும்.
சமூகத்தில் ஊடகங்களில் திரைப்படங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி உங்கள் மகனுடன் தொடர்ந்து உரையாட வேண்டும். மிக முக்கியமாக பெண்களை இழிவாக சித்தரிக்கும் சில திரைப்படங்களை ஆண் குழந்தைகளை பார்க்க விடக்கூடாது.
நம் வீட்டில் பெண்களை மரியாதையாக பாலின பேதங்கள் பார்க்காமல் நடத்தினால் ஆண் குழந்தைகள் இயல்பாகவே வெளியிடங்களில் பெண்களை கண்ணியமாக நடத்துவார்கள்.
பெண்களை தவறான கண்ணோத்தில் பார்க்கக்கூடாது. அது பாவச்செயல் எனவும், சக பெண்களை நல்ல தோழியாக கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் சொல்லி வளர்க்க வேண்டும்.

சத்தம் இல்லாமல் பல்வேறு சாதனைகளை செய்து வரும் டாக்டர் நந்திதா அருணின் சிறப்பு பேட்டி, மகளிர் தினமான இன்று மாலை 5 மணிக்கு மாலைமலர் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர் நந்திதா அருண், கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். 13 வருடங்களாக நீரிழிவு சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் இவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் தனது அன்பான கவனிப்பு மற்றும் ஆலோசனைகள் மூலம் அவர்களின் பயத்தை போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறார். நீரிழிவு நோயாளிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை எளியமுறையில் புரியும் வகையில் சொல்லி வருகிறார். இவர் நீரிழிவு நோய் குறித்த ஆராய்ச்சிக்காக, ஜேபிஇஎப் பி.கேசவதேவ் இளம் ஆராய்ச்சியாளர் விருதை வென்றுள்ளார்.
மருத்துவத் துறை மட்டுமின்றி உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்டவர் டாக்டர் நந்திதா அருண். குறிப்பாக, பவர் லிஃப்டிங் போட்டிகளில் சத்தம் இல்லாமல் சாதனையை பதிவு செய்துவருகிறார்.

நீரிழிவு நிபுணராக, டாக்டர் நந்திதா எப்போதும் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளில் வலுவான நம்பிக்கை கொண்டவர். உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் முக்கியம் என்கிறார் டாக்டர் நந்திதா.
ஒட்டுமொத்த ஆரோக்கிய வாழ்வுக்கும், பெரும்பாலான நோய்களைத் தடுப்பதற்கும் தசை வலுப்படுத்துதல் உள்ளிட்ட உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது என்றும் உறுதிபட கூறுகிறார் டாக்டர் நந்திதா.
சத்தம் இல்லாமல் பல்வேறு சாதனைகளை செய்து வரும் டாக்டர் நந்திதா அருணின் சிறப்பு பேட்டி, மகளிர் தினமான இன்று மாலை 5 மணிக்கு மாலைமலர் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
வாசகர்கள் நீரிழிவு நோய் பற்றிய உங்களது சந்தேகங்களையும், கேள்விகளையும் பேஸ்புக் நேரலையில் டாக்டர் நந்திதா அருணிடம் கேட்கலாம்.

சென்னையில் பிப்ரவரி 7-ம் தேதி மாவட்ட பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட டாக்டர் நந்திதா அருண் தங்கப் பதக்கத்தையும் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். 57 கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டியில் 82.5 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். ஸ்குவாட் மற்றும் பெஞ்ச் பிரஸ் பிரிவில் மொத்தம் 172.5 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

நீரிழிவு நிபுணராக, டாக்டர் நந்திதா எப்போதும் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளில் வலுவான நம்பிக்கை கொண்டவர். உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் முக்கியம் என்கிறார் டாக்டர் நந்திதா.
ஒட்டுமொத்த ஆரோக்கிய வாழ்வுக்கும், பெரும்பாலான நோய்களைத் தடுப்பதற்கும் தசை வலுப்படுத்துதல் உள்ளிட்ட உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது என்றும் உறுதிபட கூறுகிறார் டாக்டர் நந்திதா.
சத்தம் இல்லாமல் பல்வேறு சாதனைகளை செய்து வரும் டாக்டர் நந்திதா அருணின் சிறப்பு பேட்டி, மகளிர் தினமான இன்று மாலை 5 மணிக்கு மாலைமலர் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
வாசகர்கள் நீரிழிவு நோய் பற்றிய உங்களது சந்தேகங்களையும், கேள்விகளையும் பேஸ்புக் நேரலையில் டாக்டர் நந்திதா அருணிடம் கேட்கலாம்.
எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கக் கூடிய பெண்களுக்கும், சிறந்த இல்லத்தரசிகளுக்கும் சர்வதேச மகளிர்தின வாழ்த்துக்களைக் கூறுவதோடு சவாலைத் தேர்வு செய் என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளோம்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தினங்களில் மகளிர்தினம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததும், முக்கியம் வாய்ந்ததும் என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்றைய காலகட்டத்தில் மகளிர்தினம் என்பது வெறும் வார்த்தைகளால் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் தினமாக இல்லாமல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள், அதன் முக்கியத்துவம் மற்றும் அதன் பின்னணியைச் சிறிது திரும்பிப் பார்ப்போம்.
உலக மகளிர் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி கொண்டாடப்படுகின்றது.
மகளிர் தின வரலாறு:-
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்கள் இன்று ஆணுக்கு நிகராக ஆட்டோ முதல் வாணுர்தி ஓட்டுவதாகட்டும், பல்வேறு பன்நோக்கு நிறுவனங்களில் உயர் பதவியை வகிப்பதாகட்டும், அரசியல், கல்வி, தொழில், சமுதாயப் பணி என அனைத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும்.
ஆணுக்கு நிகராக இந்தச் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிமை, வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை எனப்பல கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் போராடினார்கள்.
பாரிஸ் நகரத் தெருக்களில் ஆயிரக்கணக்கில் கூடிய பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்டுத் தீ போல இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. அந்நாட்டுப் பெண்களும் தங்களின் உரிமைகளுக்காகப் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இத்தாலி நாட்டுப் பெண்களும், தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
பிரான்ஸ், புரூஸ்லியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம் பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் அளித்தார். அந்தநாள் தான் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதியாகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, மகளிர்தினக் கொண்டாட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது. பின்னர், ஒரு மாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித் தலைவியான க்ளாரா ஜெட்கின், போராட்டம் வெற்றி பெற்ற நாளான மார்ச் 8-ந் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடுவதற்கான யோசனையை முன் வைத்தார்.
1910-ம் ஆண்டு பதினேழு நாடுகளிலிருந்து வந்த அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை வரவேற்றனர். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 1975-ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
இந்தியாவிலும் மகளிர் தினமானது மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்திற்கான கருவானது தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த 2021-ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருவானது சவால்களைத் தேர்வு செய் என்பதாகும். பெண்கள் தங்கள் சொந்த எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு ஒவ்வொரு நாளும் பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அன்றாடம் உலகிற்கு சவால் விடுகிறார்கள் என்றும் இது கூறுகிறது. உலகில் பாலின சார்பு மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை தேர்வு செய்து அவற்றை சவாலாக ஏற்கலாம் என்பதையும் இக்கரு நமக்கு குறிக்கின்றது. வீடுகளில் மட்டுமல்லாது பெண்கள் சமுதாயத்திலும் தங்களது பங்களிப்பை மிகச்சிறப்பாகச் செய்து வருகிறார்கள். குறிப்பாக நோய்த் தொற்று காலங்களில் சுகாதாரப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், சமூக அமைப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் முன்மாதிரியான மற்றும் பயனுள்ள தேசியத் தலைவர்களாகவும் முன் வரிசையில் பெண்கள் நிற்கிறார்கள்.