என் மலர்
ஆரோக்கியம்
திருமணமான புதிதில் பெண்களிடம் உறவினர்கள், தோழிகள் கேட்கும் சில கேள்விகள் அவர்களை எரிச்சல் அடைய செய்யலாம். அதனால் புது பெண்ணிடம் என்னென்ன கேள்விகளெல்லாம் கேட்கக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
திருமணத்திற்கு முன்பு மணப்பெண் வேலைக்கு சென்றிருப்பார். திருமணத்திற்கு பிறகும் வேலையை தொடர்வதற்கு விரும்புவார். அதற்கு கணவரும் ஒப்புக்கொண்டிருப்பார். சில உறவினர்களோ, தோழிகளோ, ‘நீ ஏன் வேலைக்கு செல்ல வேண்டும்? இனிமேலாவது வீட்டில் நிம்மதியாக இருக்கலாமே?’ என்று ஆலோசனை கொடுப்பார்கள். அவரின் நலன் கருதி ஆலோசனை வழங்கினாலும் முடிவெடுக்கும் உரிமை சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத்தான் இருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வது புது இடத்தில் எதிர்கொள்ளும் தனிமையையும், மன இறுக்கத்தையும் போக்கும் என்று புதுப்பெண் கருதலாம். சம்பாதிக்கும் பணமும் குடும்ப தேவையை பூர்த்தி செய்யும் என்ற எண்ணம் கணவர்- மனைவி இருவருக்கும் இருக்கலாம். திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வதா? வேண்டாமா? என்பது புதுமண தம்பதியர் சுயமாக எடுக்கும் முடிவு என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற கேள்விகள் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.
நன்றாக சமைக்க தெரியுமா? என்ற கேள்வி புதுப்பெண்ணை ரொம்பவே எரிச்சல்பட வைக்கும். என்னென்ன சமைக்க தெரியும்? கணவருக்கு உன் சமையல் பிடித்திருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பமாட்டார்கள். சமையல் என்பது பெண்களின் சுய விருப்பத்தை பொறுத்தது என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
திருமணமாகி ஓரிரு மாதங்கள் கடந்த நிலையில் ஏதேனும் நல்ல செய்தி உண்டா? எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாய்? என்பது போன்ற கேள்விகள் புதுப்பெண்ணை மன வேதனைக்குள்ளாக்கும். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கணவர்-மனைவியின் தனிப்பட்ட விருப்பம். அதில் மற்றவர்கள் மூக்கை நுழைப்பது அதிருப்தியையும், எரிச்சலையும் உண்டாகும். எந்த பெண்ணும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பமாட்டார். செக்ஸ் போலவே இதுவும் அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சில பெண்கள் திருமணமான சில மாதங்களில் உடல் பருமனாகிவிடுவார்கள். சிலர் உடல் மெலிந்துபோய்விடுவார்கள். ‘ஏன் இப்படி மெலிஞ்சுபோய்விட்டாய்? கணவருக்கும் உனக்கும் ஏதேனும் பிரச்சினையா? கணவரின் குடும்பத்தினர் நன்றாக பழகுகிறார்களா?’ என்பது போன்ற கேள்விகள் புதுப் பெண்களை எரிச்சல்படுத்தும். உடல் எடை குறைவது, கூடுவது என்பது உடல் சார்ந்த செயல்பாடு. அப்படியே கணவருடன் மனஸ்தாபம் இருந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டிருக்கலாம். சில நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம். தங்கள் குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடுவதை பெண்கள் விரும்பமாட்டார்கள்.
உன் குடும்பத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்? மாமியாரா? கணவரா? இல்லை வீட்டில் இருக்கும் மற்றவர்களா? என்பது போன்ற கேள்விகளும் புதுப்பெண்ணுக்கு பிடிக்காது. குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை அடுத்தவர் தெரிந்துகொள்ள விரும்புவது அவசியமில்லை என்றே கருதுவார்கள்.
கணவர் உன் மேல் அக்கறை காட்டுகிறாரா? நீ கேட்பதை வாங்கிக்கொடுக்கிறாரா? சந்தோஷமாக வைத்துக்கொள்கிறாரா? வெளி இடங்களுக்கு அழைத்து செல்கிறாரா? உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கண்ணியமாக நடத்துகிறாரா? போன்ற கேள்விகளை புதுபெண்கள் ரசிக்கமாட்டார்கள். இதுபோன்ற கேள்விகளை அவர்களால் தாங்கிக்கொள்ளவும் முடியாது. எரிச்சலூட்டுவதாக அமையும்.
உன் தோழிகள், நண்பர்களிடம் பேசுவதற்கு கணவர் அனுமதிக்கிறாரா? திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையை பற்றி சந்தேக கண்ணோட்டத்துடன் கேள்வி கேட்கிறாரா? போன்ற கேள்விகள் எரிச்சலை அதிகப்படுத்திவிடும். அவரின் நேர்மை, நடத்தையை பற்றி கேள்வி எழுப்புவதாக அமைந்துவிடும். ஒருபோதும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பமாட்டார்கள்.
கணவருக்கும், உனக்கும் இடையே எப்போதாவது சச்சரவு ஏற்பட்டிருக்கிறதா? அவர் நல்லவர்தானா? என்பது போன்ற கேள்விகள் ரொம்பவே காயப்படுத்திவிடும். அதுவும் கேள்வி கேட்பவர் நெருங்கி பழகுபவராக இல்லாதபட்சத்தில் எரிச்சல் அடைந்துவிடுவார்கள். இதுபோன்ற கேள்விகளை புதுப்பெண்ணிடம் கேட்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகமான கருமுட்டைகளை இடமாற்றம் செய்து வைப்பதால் கருவுறும் வாய்ப்பு, இயற்கையாக கருவுறும் வாய்ப்பைவிட, பல மடங்காகிறது.
குழந்தையின்மை குறித்து மகப்பேறு நிபுணர் டாக்டர் மினிகோபால் கூறியதாவது:-
குழந்தையின்மைக்கு 45 சதவீத காரணம் உயிரணு, கருமுட்டை உற்பத்தி தொடர்பான பிரச்சனைகள்தான். இவை எளிதில் சரி செய்யக்கூடியவை ஆகும்.
ஆண் சம்பந்தப்பட்ட கருவூட்டும் திறனின்மை (மலட்டுத் தன்மை) பிரச்சினைகளை சரி செய்ய உதவும் இனவிருத்தி செய்யும் தொழில் நுட்பம் ‘‘இன்ட்ரோ சைட்டோ ப்ளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜக்சன்’’ ஆகும். சிறப்பான முறையில் உருவாக்கப்பட்ட நுண்ணோக்கியின் உதவியுடன் உயிரணுவை முதிர்ச்சியடைந்த முட்டையினுள் செலுத்தி உடலுக்கு வெளியே கருவுறும் வாய்ப்பை அதிகப்படுத்த ஐ.சி.எஸ்.ஐ. பயன்படுகிறது. சோதனைக்குழாயில் சினையுற்ற முட்டை பின்னர் பெண்ணின் கர்ப்பப்பையினுள் வைக்கப்படுகிறது.
இயற்கையான முறையில் உயிரணுவை எடுக்க முடியாவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் விதைப் பையில் இருந்து எடுக்கப்படுகிறது. உயிரணு குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் ஆண்கள் இந்த ஐ.சி.எஸ்.ஐ. முறையை பின்பற்றும் முன் மரபியல் சோதனை செய்து கொள்ள வேண்டும்.
கருமுட்டை சேகரிக்க வசதியாக கர்ப்பப்பையில் அதிக அளவில் முட்டை உருவாகுதலை தூண்டும் வகையில் தினசரி ஊசிகள் போடப்பட்டு ஸ்கேன் கருவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
உயர்திறன் கொண்ட உருப்பெருக்கி (ஐ.சி.எஸ்.ஐ. மைக்ரோஸ்கோப்) உதவியுடன் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட பிப்பெட்டில் இருந்து ஐ.வி.எப். சோதனைக்கூடத்தில் ஒரு உயிரணு ஒரு அண்டத்தினுள் செலுத்தப்படுகிறது. சிறந்த மருந்துகளால் சோதனைக் கூடத்தில் மேம்படுத்தப்பட்ட கருமுட்டைகளில் கருத்தரித்தலுக்கான அறிகுறிகள் உள்ளதா என சோதிக்கப்படுகிறது. வெற்றிகரமாக கருவுற்ற இரண்டு அல்லது மூன்று முட்டைகள் தேர்வு செய்யப்பட்டு, கர்ப்பப்பைக்குள் அலட்ரா சவுண்ட் வழிகாட்டுதலுடன் வைக்கப்படுகிறது. கரு இடமாற்றம் நடந்த 14-வது நாள் ரத்த பரிசோதனை மூலம் முடிவை அறிந்து கொள்ளலாம்.
இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகமான கருமுட்டைகளை இடமாற்றம் செய்து வைப்பதால் கருவுறும் வாய்ப்பு, இயற்கையாக கருவுறும் வாய்ப்பைவிட, பல மடங்காகிறது.
இவ்வாறு டாக்டர் மினிகோபால் தெரிவித்தார்.

கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் எடை அதிகம் கொண்டவர்கள் கொய்யா இலை தேநீர் அருந்துவதன் மூலம் எடையைக் குறைக்க முடியும்.
தேவையான பொருட்கள்
கொய்யா இலை - 5
டீத்தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
ஏலக்காய் - 2
நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.
செய்முறை
பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்து கொண்டு அதை கொதிக்க விடுங்கள்.
கொதித்து வரும் போது அதில் சிறிதளவு டீத்தூள் மற்றும் எடுத்து வைத்துள்ள கொய்யா இலை போட்டு அதன் பின் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடுங்கள்.
நன்றாக கொதித்து இலையின் சாறு இறங்கியதும் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி ஏதாவது ஒன்று சேர்த்து கலந்து வடிகட்டி பருகலாம்.

இதை மூன்று மாதங்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறையும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளின் வளர்ச்சியில் நான்கு மாதம் முதல் இரண்டு வயது வரையுள்ள காலகட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் எத்தகைய வளர்ச்சிகள் உருவாகும் என்பதை இங்கு காணலாம்!
குழந்தை கவிழ்ந்து கிடக்கும்போது தலை நிலையாக நிமிர்ந்து நிற்கும்.
குழந்தையின் பெயரைக் கூறி அழைக்கும்போது குரல் வந்த திசைக்கு திரும்பி புன்னகைத்து எதிர்வினையாற்றும்.
விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். கைகளைகொண்டு முகத்தை மூடித்திறக்கும் விளையாட்டில் ரசிப்புக்காட்டும்.
குடும்பத்தினரின் முகபாவத்திற்கு ஏற்ப எதிர்வினையாற்றும். மகிழ்ச்சி, கவலை, வலி போன்றவைகளை சத்தத்தில் வெளிப்படுத்த முயற்சிக்கும்.
அருகில் உள்ள பொருட்களை பற்றிப்பிடிக்க முயற்சிசெய்யும். கண்களையும், கைகளையும் ஒரே திசையில் செலுத்தும்.
கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தால் ரசித்து சிரிக்கும்.
சுயமாக கவிழ்ந்து விழுவது, பின்பு நிமிர்ந்து இயல்பு நிலைக்கு வருவது போன்றவைகளில் அடிக்கடி ஈடுபடும்.
சுயமாக அமர முயற்சிக்கும். சப்போர்ட் கொடுத்தால் நிமிர்ந்து நிற்கும்.
ஏழு மாதம் முதல் ஒரு வருடம் வரை
கவிழ்ந்து, தவழ்ந்து செல்லும். யாருடைய துணையும் இன்றி உட்காரும். கட்டில், இருக்கை போன்றவைகளை பிடித்துக்கொண்டு எழ முயற்சிக்கும்.
பெரியவர்கள் செய்வதை போன்று தானும் செய்ய விரும்பும். கண்ணடித்தால் அதுவும் கண்ணடிக்கும். கைதட்டினால் அதுவும் கைதட்டும்.
வீட்டில் உள்ள பொருட்களின் உபயோகத்தை உற்றுப்பார்க்கும். சீப்பால் முடியை சீவவும், கப்பில் தண்ணீர் பருகவும் முயற்சி செய்யும்.
தலையை இருபுறமும் ஆட்டி, மறுப்பை வெளிப்படுத்தும். டாடா காட்டும்போது பதிலுக்கு கையை வீசும்.
அம்மா, அப்பா போன்ற வார்த்தைகளை பேசத் தொடங்கும்.
பெற்றோரோ, தாத்தா- பாட்டி போன்றவர்களோ தன் அருகில் இருந்து விலகிச்செல்லும்போது அழும்.
பொம்மைகளை பற்றிப் பிடித்து தூக்கும். ஒரு கையில் இருந்து மறு கைக்கு அதனை மாற்றவும் செய்யும்.
ஒன்று முதல் இரண்டு வயது வரை
தானாகவே எழுந்து நிற்கும். துணையின்றி மெல்ல மெல்ல அடிவைத்து நடந்துசெல்லும்.
மற்ற குழந்தைகளோடு நெருக்கம் காட்டவும், அவர்களோடு சேர்ந்து விளையாடவும் விரும்பும்.
நிறங்கள், வடிவங்களை அடையாளங்காணத் தொடங்கும்.
குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களை உணர்ந்துகொள்ளும். அந்தந்த பெயர்களை கூறும்போது அவர்களது முகத்தைப் பார்த்து சிரிக்கும்.
`இங்கே வா..', `அதை செய்யாதே..' போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கு உடன்பட்டு நடக்கும்.
வீட்டில் இருக்கும் பொருட்களின் பெயர்களை கூறும்போது அதனை சுட்டிக்காட்டும்.
வீட்டில் உள்ள பெரியவர்கள் செய்யும் செயலை தானும் செய்ய விரும்பும். நாளிதழ்களை படிப்பவர்களின் அருகில் இருந்து தானும் அதனை பார்க்கும். துணிகளை மடிக்கும்போது தானும் அதை செய்ய முயற்சிக்கும்.
மற்றவர்கள் பேசும் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கும். மூன்று நான்கு வார்த்தைகளை சேர்த்து பேசும்.
இயங்கும் பொம்மைகளைவைத்து விளையாட விரும்பும். அதனை தூக்கிக்கொண்டு நடக்கும். பந்து விளையாட்டில் ஆர்வம் தோன்றும்.
(இவை அனைத்தும் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி நிலையாகும். அந்தந்த காலகட்டத்தில் அது அதற்குரிய வளர்ச்சி நிலையை குழந்தைகள் எட்டாவிட்டால் உடனடி கவனம் செலுத்துங்கள். தேவைப்பட்டால் குழந்தை நல நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்)

கொய்யா பழம் உடல் நலத்திற்கு பல நன்மைகளை தருகிறது எனில் அதன் இலைகள் சருமத்தைப் பாதுகாக்க பல நன்மைகளை தருகின்றன. கொய்யா இலையை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
முகப்பருக்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து அதன் பரவலை தடுக்க கொய்யா இலைகளை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து வர பருக்கள் மறையலாம்.
கொய்யா இலை, சிட்டிகை மஞ்சள் மற்றும் கற்றாழை மூன்றையும் சேர்த்து மைய அரைத்து அதை முகம் கழுத்து என தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் 2 முறை செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.
எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இருக்கும் பெரிய தொல்லை எண்ணெய் பிசுபிசுப்புதான். அதை அகற்ற கொய்யா இலைகள், எலுமிச்சை சாறு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து என தடவி 30 நிமிடங்கள் காய்ந்ததும் கழுவி விடுங்கள் எண்ணெய் பிசுக்கு போய்விடும்.
கொய்யா இலைகளை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். அதனை நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் முகச்சுருக்கங்கள் மறையும். இளமை ததும்பும்.
கொய்யா இலைகளை ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இவ்வாறு தொடர்நது செய்து வந்தால் அழகு அள்ளும்.
கற்றாழை சாறுடன் கொய்யா இலையை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
கொய்யா இலை, பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து பூசி வந்தால் முகத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி அழகு கூடும்.

அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை செய்ய ஏற்றது. அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. அரிசியில் இருந்து வெள்ளை அவல், சிகப்பு அவல் போன்றவைகளுடன் தற்போது திணை அவல், கம்பு அவல், சோளஅவல், கேழ்வரகு அவல் என்று விதவிதமான அவல்கள் கிடைக்கின்றன. அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். தனித்து உண்ணும் போதே நல்ல ருசியாக இருக்கும் அவலை விதவிதமான உணவு வகைகளாகவும் சமைத்து உண்ணலாம்.
சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும் சிகப்பு அவல் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. சிகப்பு அவல் கொண்டு கஞ்சி, பாயாசம், புட்டு போன்றவை செய்து உண்ணப்படுகிறது.
வெள்ளை நிறத்தில் இருக்கும் அவலில் உடலுக்கு தேவைப்படும் கார்போ ஹைட்ரேட், கலோரி உள்ளது. நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதில் இது முதலிடம் வகிக்கின்றது. மேலும் இது உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது.
சிவப்பு அவலில் நார்ச்சத்து , கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை காணப்படுகின்றது. பொதுவாக அவலை தண்ணீர் அல்லது பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்! அவலோடு பாலும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும். அவலும் மோரும் கூட சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் அதிக தாகம் உண்டாவது தீரும். ஆனால்... அவலும் தயிரும் சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் மந்தம் உருவாகும்.
அவலில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள சிவப்பணுக்களை அதிகப்படுத்தும். அவலை இனிமேல் ஒதுக்காதீர்கள். வாரம் ஒரு முறையாவது அவலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

வந்த கருவளையத்தை போக்க அன்றாட உணவில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும். அதனுடன் இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் ஒரே வாரத்தில் கருவளையத்தை விரட்டி அடிக்கலாம்.
உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. அதற்கு காரணம் கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையம்.
உருளைக்கிழங்கை அரைத்து கண்களை சுற்றி பூசி வந்தால் கருவளையம் படிப்படியாக மறையும்.
கண்களை குளிர்விக்கும் வகையில் கேரட் அல்லது வெள்ளரிக்காய் பிஞ்சை நறுக்கி வாரம் ஒன்றிரண்டு முறை கண்களின் மேல் வைத்தால் நல்ல பலனளிக்கும்.
தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறை கலந்து கருவளையத்தின் மீது பூசி வர வேண்டும். பூசிய 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் படிப்படியாக கருவளையம் நீங்கி அழகு பெறலாம்.
இரவில் கண்களை சுற்றி பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களை கழுவி வந்தால் கருவளையத்திலிருந்து விடுதலை பெறலாம்.
வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும். அதன் பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நல்ல தூக்கமும், கண்களுக்கு தேவையான அளவு ஓய்வும் கொடுத்தால் கருவளையத்திற்கு சீக்கிரமே டாட்டா சொல்லிவிடலாம்.

எந்த ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தினாலும் தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை கூட கவனமாக தவிர்த்து விடுவது நல்லது.
தாய்மொழி தான் நம்முடைய உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தவும், கலை, பண்பாடு, பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுக்கவும் நமக்கு உதவும் கருவியாகும். பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி தமிழை கற்றுக்கொடுக்கிறார்கள் என கேட்ட போது கிடைத்த வழிமுறைகள் இதோ...
எந்த ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தினாலும் தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை கூட கவனமாக தவிர்த்து விடுவது நல்லது. ஸ்கூல் என்பதை பொதுவாக எல்லோரும் பயன்படுத்தினாலும் பள்ளிக்கூடம் என்று சொல்லிக்கொடுக்கலாம்.
கதைகளை தமிழில் அதிகம் சொல்லிக்கொடுக்கலாம். இலக்கியங்களில் முக்கியத்துவம் பெற்ற கதாபாத்திரங்களை பற்றிய கதைகளை அதிகம் கூறலாம். புத்தகத்தில் இருக்கும் நல்ல தமிழ் வார்த்தைகளை தொடர்ந்து கதைகளில் ஊடாகவே சொல்லி குழந்தைகள் அந்த வார்த்தைகளை பேச்சு மொழியில் பொருத்தி பார்க்க உற்சாகப்படுத்தலாம்.
குழந்தைகள் தமிழ் மொழியை ஆர்வமாக கற்க வேண்டும் என்பதற்காக குட்டி குட்டி கதைகளை சொல்லி வரலாம்.
வீட்டில் சமைக்கும் போது தமிழில் காய்கறிகள் மற்றும் சமையல் பொருள்களின் பெயர்களை அறிமுகப்படுத்தலாம். சில நேரங்களில் படக்கதைகள் உள்ள புத்தகங்களை வாங்கிக்கொடுத்து எழுத்துக்களை வாசிக்க சொல்லி கற்றுக்கொடுக்கலாம். பிள்ளைகளை தமிழில் கதை சொல்ல பழக்கலாம்.
வீட்டில் முடிந்த வரை தமிழிலிலேயே பேச வேண்டும் என்பதை வலியுறுத்தலாம். டின்னர், பிரேக்பாஸ்ட் என்று ஆங்கிலத்தில் சொல்கிற வார்த்தைகளை கவனமாக தவிர்க்கலாம். எங்கெல்லாம் யாரிடமெல்லாம் தமிழில் பேச முடியுமோ அங்கெல்லாம் தமிழிலேயே பேசச் சொல்லலாம்.
பாடல்கள் மூலம் இன்றைய குழந்தைகள் எளிதில் தமிழ்மொழியை கற்று கொள்கிறார்கள். எழுதுவது, பார்ப்பது, கேட்பது என்ற மூன்று வகையான கற்றல் வகைகளில் கேட்பதன் மூலம் குழந்தைகள் எளிதாக உள்வாங்கி கொள்கிறார்கள். கூடியவரை தான் நினைப்பதை தாய்மொழியிலேயே கூறுவதற்கு குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம்.
பிள்ளைகள் தனது தாய் மொழியான தமிழை நன்கு கற்க வேண்டும் என்பதில் பெற்றோர் உறுதியாக இருக்க வேண்டும். வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க, உட்காருங்க அப்படியென்று தமிழில் வரவேற்று உபசரிக்கவும் சொல்லிக் கொடுக்கலாம்.
நண்பர்கள் வட்டத்தில் உள்ளவர்களை கூட தமிழில் உறவுமுறை சொல்லி மாமா, அத்தை, அண்ணன், அக்கா எனறு தான் அழைக்க வேண்டும் என்று சொல்லி தரலாம். தினமும் 10 நிமிடமாவது திருப்பாவை போன்ற தமிழ் இலக்கியங்களை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்..
எந்த ஒரு குழந்தைக்கும் பாடத்தின் மூலம் மட்டுமே ஒரு மொழியை கற்பித்து விட முடியாது. தமிழ் மொழியை கற்பிப்பதை விட உள்வாக்கும் சூழ்நிலைகளை அமைத்து தருவதே அதை கற்பிப்பதற்கான சிறந்த வழிமுறையாகும்.
முதலில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி உரையாடுவது மிக முக்கியமானது. சிறு குழந்தைகள் பொதுவாகவே கதைகளை அதிகம் விரும்புவார்கள். ஆங்கிலம் கலக்காமல் கதை சொல்வதன் மூலம் அவர்கள் நிறைய வார்த்தைகளை கற்று கொள்வார்கள். கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள் என்றால் புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்லலாம்.
பேசுவது, கதை சொல்வது மட்டுமல்லாமல், பொங்கல், தீபாவளி என்று விழா நாட்களில் அவை சார்ந்த இலக்கியங்களை அறிமுகப்படுத்தி வாசிக்க சொல்வது, போட்டிகள் நடத்தி பரிசளிப்பது என தமிழ் மொழி சார்ந்த ஆர்வத்தை தூண்டலாம்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான தாதுஉப்புக்களைக் கொண்டுள்ள உளுந்தினை அடிக்கடி எல்லா வயதினரும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து மாவு - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
நாட்டு சர்க்கரை - 1 கப்
சாக்கோ சிரப் - 100 மில்லி
வெள்ளை எள்ளு பொடித்து வறுத்தது - 1 டீஸ்பூன்
நெய் - சிறிதளவு
செய்முறை
முதலில் வாணலியில் கருப்பு உளுந்து மாவை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து மணி நேரம் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் அடுப்பை குறைந்த தணலில் வைத்து சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்த கலவையை கொட்டி நன்கு கிளறவும். அத்துடன் கருப்பு உளுந்தம்மாவை போட்டு கிளறி சிறிதளவு நெய் சேர்க்கவும்.
இப்போது மாவு வெந்ததும் அடுப்பை அணைத்து உருண்டையாக பிடிக்கவும்.
சாக்லேட் சிரப்பில் உருண்டைகளை பாதியளவு முக்கி எடுத்து பரிமாறவும்.

குழந்தைகளின் எலும்பை வலுவாக்கும் கருப்பு உளுந்து லட்டு தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
திருமணத்திற்கு முன்பு மணமகனும், மணமகளும் செய்ய வேண்டிய அத்தியாவசியமான மருத்துவ பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்.
திருமண பந்தத்தில் இணையும் ஆண்-பெண் இருவருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இருவரில் யாராவது ஒருவருக்கு தோஷம் இருந்தாலும் அதனை போக்குவதற்கும் முயற்சி எடுப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் மருத்துவ ரீதியான சில பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும் இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். ரத்த பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். திருமணத்திற்கு முன்பு மணமகனும், மணமகளும் செய்ய வேண்டிய அத்தியாவசியமான மருத்துவ பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்.
எச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய்கள்
எச்.ஐ.வி-எய்ட்ஸ், சிபிலிஸ், கோனோரியா, ஹெர்பெஸ், சான்கிராய்டு போன்றவை பால்வினை நோய்கள்(எஸ்.டி.டி) என்று அழைக்கப்படுகின்றன. இவை பாலியல் உறவுகள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவிவிடக்கூடும். அதிலும் எய்ட்ஸ் ஆபத்தானது. இத்தகைய பரிசோதனைகள் செய்வதன் மூலம் திருமணத்திற்கு பிந்தைய பாதிப்புகளில் இருந்து தப்பித்துவிடலாம்.
ரத்த வகை
திருமணத்திற்கு முன்பு துணையின் ரத்த வகையை அறிந்து கொள்வதும் நல்லது. அது பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். மனைவிக்கு ஆர்.எச் நெகட்டிவ் ஆகவும், கணவருக்கு ஆர்.எச் பாசிட்டிவ்வாகவும் இருந்தால் அது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதனால் அதனை முதலிலேயே கண்டறிந்து அதற்குரிய ஊசி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
கருவுறுதல் சோதனை
இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் தாமதமாகத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி தாமதமாக திருமணம் செய்வது கருத்தரிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆதலால் ஆண், பெண் இருவரும் கருவுறுதலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக் கின்றார்கள் என்பதற்கான பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.
மரபணு சோதனை
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகம், கல்லீரல் நோய், மார்பக புற்றுநோய் போன்ற பல நோய்கள் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். திருமணத்திற்கு முன்பே இருவரும் அவரவர் குடும்பத்தினரின் மருத்துவ நிலையையும், நாள்பட்ட நோய்கள் பற்றிய விவரத்தையும் தெரிந்து கொள்வதன் மூலம் பின்னாளில் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மனநல பரிசோதனை
ஆண், பெண் இருவருமே நல்ல மன நிலையில் இருந்தால்தான் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக அமையும். அதனால் இருவருக்கும் தேவைப்பட்டால் மன நலம் சார்ந்த பரிசோதனைகளும் அவசியம்.

பணிக்கு செல்லும் பெண்கள் நேரத்தை மேலும் திட்டமிட்டு நிர்வகிக்க வேண்டியது மிகவும் அவசியம். நேர நிர்வாகத்தை மேம்படுத்த இங்கே இடம்பெற்றுள்ள குறிப்புகள் உதவும்.
நேர நிர்வாகம் பெண்களுக்கு இயற்கையிலேயே கை வந்த கலை. வீட்டை நிர்வகிப்பது, பல்வேறு பொறுப்புகளை கையாள்வது, பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவது போன்ற எல்லாவற்றையும் நேர நிர்வாகம் மூலமே பெண்கள் நடத்துகின்றனர். இதில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பொறுப்புகள் இரட்டிப்பாக இருக்கும். எனவே பணிக்கு செல்லும் பெண்கள் நேரத்தை மேலும் திட்டமிட்டு நிர்வகிக்க வேண்டியது அவசியம். நேர நிர்வாகத்தை மேம்படுத்த இங்கே இடம்பெற்றுள்ள குறிப்புகள் உதவும்.
காலை வேளையில் சீக்கிரம் எழுவதால் மனம் புத்துணர்வோடு இருக்கும். இதனால் அன்றைய நாளில் பணிகளை சிறப்பாக திட்டமிட முடியும். முதலில் முடிக்க வேண்டிய பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டமிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபட நேரம் கிடைக்கும்.
அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடிப்பதால் மாலை வீடு திரும்பியவுடன் குடும்பத்துடன் செலவழிக்க தேவையான நேரம் கிடைக்கும். எல்லா வீட்டு வேலைகளையும் நீங்களே செய்ய வேண்டி இருக்கும் போது வேலைக்கு ஆட்களை நியமிப்பதில் தவறு இல்லை. இதனால் நேரம் மிச்சம் ஆவதோடு பயனுள்ள பல வேலைகளை செய்ய முடியும். ஆடம்பரமான உணவுகளை சமைப்பதை விட சத்துள்ள எளிமையான உணவுகளை சமைப்பது சிறந்தது, பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை விட சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருந்தால் போக்குவரத்துக்கான நேரம் மிச்சமாகும்.
வார இறுதி நாட்களில் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் திட்டமிட வேண்டும். செய்ய வேண்டிய பணிகள், ஒழுங்கமைக்க வேண்டிய பணிகள் என்று பிரித்து திட்டமிடுதல் நல்லது. இத்தகைய திட்டமிடல் எதையும் மறக்காமல் சிறப்பாக செய்து முடிக்க பயனுள்ளதாக இருக்கும். தற்போது திட்டமிடுவதற்கான ஏராளமான செயலிகள் கைப்பேசிகளில் இருக்கின்றன. அவற்றை பயன்படுததி கொள்ளலாம்.
மல்டி டாஸ்கிங் எனப்படும் இந்த முறை மூலம் நேரத்தை சிறப்பாக கையாள முடியும். உதாரணத்திற்கு சமையல் செய்யும் போது சலவை இயந்திரத்தில் துணிகளை துவைக்கலாம். இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் போது நேரம் மிச்சம் ஆவதோடு அதிக பணிகளை விரைவாக செய்ய முடியும்.
இரவு உறங்க செல்வதற்கு முன்பு அடுத்த நாள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளை திட்டமிடுதல் நல்லது. அதாவது சமைக்க வேண்டிய உணவு. அணிய வேண்டிய ஆடை போன்றவற்றை முன்கூட்டியே திட்டமிடுவது கடைசி தருணங்களில் ஏற்படும் பதற்றத்தை போக்கும்.
பணிகளை மற்றொரு நேரத்துக்கு ஓத்திவைப்பது நேர மோலண்மைக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது. கடைசி நேரத்தில் பணிகளை நிறைவு செய்வது, மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கும். எல்லா வேலைகளையும் முக்கியத்துவத்துக்கு ஏற்ப சீராக செய்து விடுவது நல்லது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? என்பது குறித்து டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை காலம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் உள்ள தர்பூசணி மற்றும் குளிர்பானங்களை அருந்தி வெப்பத்தை தணித்து வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் மனிதனுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை உடுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது தொப்பி அல்லது குடை, கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர், தர்பூசணி மற்றும் ஓ.ஆர்.எஸ். கலவை நீர் ஆகியவற்றை அருந்த வேண்டும்.
குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை வெப்ப தாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்க வேண்டும். வீட்டில் பகல் நேரங்களில் திரைச்சீலைகள், கூடாரங்கள், மறைப்பான்கள் ஆகியவற்றால் மறைத்தும், இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்தும் காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருக்குமாறும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
வெட்ட வெளியில் பணியாற்றுபவர்கள் ஈரமான உடைகளை பயன்படுத்த வேண்டும். கடும் வெயில் நேரத்தில் (மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை) சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும். கால்நடைகளை (ஆடு, மாடு) நிழலில் வைத்து பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தேவையான அளவு குடிநீரை வழங்க வேண்டும்.
வெயில் நேரத்தில் சமைப்பதை தவிர்க்கவும். அடர் வண்ணம் கொண்ட (குறிப்பாக கருமை வண்ண) ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. வெயிலில் கடுமையான பணிகளை செய்யக்கூடாது. உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்த கூடிய காபி, தேநீர் மற்றும் மது ஆகியவற்றை அருந்தக்கூடாது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழவகைகளை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.