search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பணிபுரியும் பெண்களுக்கான நேர மேலாண்மை
    X
    பணிபுரியும் பெண்களுக்கான நேர மேலாண்மை

    பணிபுரியும் பெண்களுக்கான நேர மேலாண்மை

    பணிக்கு செல்லும் பெண்கள் நேரத்தை மேலும் திட்டமிட்டு நிர்வகிக்க வேண்டியது மிகவும் அவசியம். நேர நிர்வாகத்தை மேம்படுத்த இங்கே இடம்பெற்றுள்ள குறிப்புகள் உதவும்.
    நேர நிர்வாகம் பெண்களுக்கு இயற்கையிலேயே கை வந்த கலை. வீட்டை நிர்வகிப்பது, பல்வேறு பொறுப்புகளை கையாள்வது, பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவது போன்ற எல்லாவற்றையும் நேர நிர்வாகம் மூலமே பெண்கள் நடத்துகின்றனர். இதில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பொறுப்புகள் இரட்டிப்பாக இருக்கும். எனவே பணிக்கு செல்லும் பெண்கள் நேரத்தை மேலும் திட்டமிட்டு நிர்வகிக்க வேண்டியது அவசியம். நேர நிர்வாகத்தை மேம்படுத்த இங்கே இடம்பெற்றுள்ள குறிப்புகள் உதவும்.

    காலை வேளையில் சீக்கிரம் எழுவதால் மனம் புத்துணர்வோடு இருக்கும். இதனால் அன்றைய நாளில் பணிகளை சிறப்பாக திட்டமிட முடியும். முதலில் முடிக்க வேண்டிய பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டமிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபட நேரம் கிடைக்கும்.

    அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடிப்பதால் மாலை வீடு திரும்பியவுடன் குடும்பத்துடன் செலவழிக்க தேவையான நேரம் கிடைக்கும். எல்லா வீட்டு வேலைகளையும் நீங்களே செய்ய வேண்டி இருக்கும் போது வேலைக்கு ஆட்களை நியமிப்பதில் தவறு இல்லை. இதனால் நேரம் மிச்சம் ஆவதோடு பயனுள்ள பல வேலைகளை செய்ய முடியும். ஆடம்பரமான உணவுகளை சமைப்பதை விட சத்துள்ள எளிமையான உணவுகளை சமைப்பது சிறந்தது, பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை விட சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருந்தால் போக்குவரத்துக்கான நேரம் மிச்சமாகும்.

    வார இறுதி நாட்களில் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் திட்டமிட வேண்டும்.  செய்ய வேண்டிய பணிகள், ஒழுங்கமைக்க வேண்டிய பணிகள் என்று பிரித்து திட்டமிடுதல் நல்லது. இத்தகைய திட்டமிடல் எதையும் மறக்காமல் சிறப்பாக செய்து முடிக்க பயனுள்ளதாக இருக்கும். தற்போது திட்டமிடுவதற்கான ஏராளமான செயலிகள் கைப்பேசிகளில் இருக்கின்றன. அவற்றை பயன்படுததி கொள்ளலாம்.

    மல்டி டாஸ்கிங் எனப்படும் இந்த முறை மூலம் நேரத்தை சிறப்பாக கையாள முடியும். உதாரணத்திற்கு சமையல் செய்யும் போது சலவை இயந்திரத்தில் துணிகளை துவைக்கலாம். இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் போது நேரம் மிச்சம் ஆவதோடு அதிக பணிகளை விரைவாக செய்ய முடியும்.

    இரவு உறங்க செல்வதற்கு முன்பு அடுத்த நாள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளை திட்டமிடுதல் நல்லது. அதாவது சமைக்க வேண்டிய உணவு. அணிய வேண்டிய ஆடை போன்றவற்றை முன்கூட்டியே திட்டமிடுவது கடைசி தருணங்களில் ஏற்படும் பதற்றத்தை போக்கும்.

    பணிகளை மற்றொரு நேரத்துக்கு ஓத்திவைப்பது நேர மோலண்மைக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது. கடைசி நேரத்தில் பணிகளை நிறைவு செய்வது, மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கும். எல்லா வேலைகளையும் முக்கியத்துவத்துக்கு ஏற்ப சீராக செய்து விடுவது நல்லது.

    Next Story
    ×