search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கருப்பு உளுந்து லட்டு
    X
    கருப்பு உளுந்து லட்டு

    குழந்தைகளின் எலும்பை வலுவாக்கும் ஸ்நாக்ஸ்

    எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான தாதுஉப்புக்களைக் கொண்டுள்ள உளுந்தினை அடிக்கடி எல்லா வயதினரும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    தேவையான பொருட்கள்

    கருப்பு உளுந்து மாவு - 1 கப்
    தேங்காய் துருவல் - 1 கப்
    நாட்டு சர்க்கரை - 1 கப்
    சாக்கோ சிரப் - 100 மில்லி
    வெள்ளை எள்ளு  பொடித்து வறுத்தது - 1 டீஸ்பூன்
    நெய் - சிறிதளவு

    செய்முறை

    முதலில் வாணலியில் கருப்பு உளுந்து மாவை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து  மணி நேரம் வைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் அடுப்பை குறைந்த தணலில் வைத்து சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்த கலவையை கொட்டி நன்கு கிளறவும். அத்துடன் கருப்பு உளுந்தம்மாவை போட்டு கிளறி சிறிதளவு நெய் சேர்க்கவும்.

    இப்போது மாவு வெந்ததும் அடுப்பை அணைத்து உருண்டையாக பிடிக்கவும்.

    சாக்லேட் சிரப்பில் உருண்டைகளை பாதியளவு முக்கி எடுத்து பரிமாறவும்.

    குழந்தைகளின் எலும்பை வலுவாக்கும் கருப்பு உளுந்து லட்டு தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×