என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி, தாமரை, சம்பங்கி, துளசி ஆகியவை உள்பட பல வண்ணமலர்களால் 9 வகையான அலங்காரம் செய்யப்பட்டது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று வரலட்சுமி விரத பூஜை நடந்தது. கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை வைத்து, விஷ்வசேனர் வழிபாடு நடத்தி வரலட்சுமி விரத பூஜை தொங்கியது. அதைத்தொடர்ந்து புண்யாவதனம், கலச ஸ்தாபனம், ஆராதனை, லட்சுமி சஹஸ்ர நாமார்ச்சனை, அஷ்டோத்ர சத நாமாவளி ஆகியவை நடந்தது.

    உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி, தாமரை, சம்பங்கி, துளசி ஆகியவை உள்பட பல வண்ணமலர்களால் 9 வகையான அலங்காரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அலங்காரமும் ஒவ்வொரு தெய்வத்தின் அடையாளமாக இருந்தன. அப்போது ஆகம வேதப் பண்டிதர்கள், வரலட்சுமி விரதத்தின் மகிமை, பக்தர்கள் வழிபட வேண்டிய முறையை பற்றி விளக்கினார்கள்.

    பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு 12 வகையான பிரசாதம், 5 வகையான நைவேத்தியம் செய்யப்பட்டது. உற்சவர் மற்றும் மூலவருக்கு மகா மங்கள ஆரத்தி நடந்தது. அத்துடன் வரலட்சுமி விரத பூஜை நிறைவடைந்தது. வரலட்சுமி விரத பூைஜ நிகழ்ச்சிகள் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, மாநில மந்திரி வேணுகோபால்கிருஷ்ணா, திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பிரத்யங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் பாராயாணம் செய்து, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி.
    பிரத்யங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமத்தை சொன்னாலே நிவாரணம் கிடைத்துவிடும். சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். பிரத்யங்கிரா தேவி நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும், எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள். இந்து தொன்மவியலின் படி பிரத்யங்கிரா தேவி விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். பிரத்யங்கிரா தேவியை மனதார வேண்டி, தரிசித்து வந்தாலே நம் எதிர்ப்புகள் அனைத்தும் துரத்தியருள்வாள். எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் என்பது ஐதீகம்.

    பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீங்க செய்வாள் என்பதும் ஐதீகம். ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலம் மாலை 4.30 முதல் 6.00 மணிவரை. இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி அலங்கரியுங்கள்.

    பிரத்யங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் பாராயாணம் செய்து, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி. பிரத்யங்கிரா தேவி, சக்தி வாய்ந்தவள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கருணையே உருவாகி அருள்பாலிப்பவள். தொடர்ந்து தேவியை வழிபடுங்கள். தடைகள் அனைத்தும் தகர்த்து, முன்னேற்றப் பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து அருளுவாள் பிரத்யங்கிரா தேவி.

    ஓணம் பண்டிகையில் உணவுக்கும் முக்கியமான இடம் அளிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவுகளை தயாரிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
    அத்தப்பூக் கோலம்

    10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகையில், மலர்களுக்கு மிகவும் முக்கியமான இடம் உண்டு. மலர்களால் அலங்கரிக்கப்படும் கோலங்களுக்கு ‘அத்தப்பூ கோலம்’ என்று பெயர். இந்தக் கோலத்தை போடுவதற்கு ஒரு நடைமுறை உள்ளது. இந்த காலகட்டத்தில் அதை அதிகம் பேர் கடைப்பிடிப்பதில்லை என்றாலும் சிலர் அதை முறையாக செய்துவருகிறார்கள்.

    அதாவது மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூக் கோலம் போடப்படும். ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால் ஓணத்தை அப்பகுதி மக்கள், ‘பூக்களின் திருவிழா’வாகவும் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவார்கள். பூக்கோலத்தில் அதைத் தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று என்று தொடரும் இந்த பூக்கோலம், 10-ம் நாளில் பத்து வகையான பூக்களால் அழகுபடுத்தப்படும்.

    ஓணம் சத்யா

    ‘கானம் விற்றாவது ஓணம் உண்’ என்பது பழமொழி. இதற்கு ஏற்றவாறு, ஓணம் பண்டிகையில் உணவுக்கும் முக்கியமான இடம் அளிக்கப்படுகிறது. 10 நாள் விழாவில், 4-வது நாளில் ‘ஓணம் சத்யா’ என்ற பெயரில் ஒரு உணவுத் திருவிழாவே நடத்தப்படும். இந்த நிகழ்வில் அனைத்து சுவைகளிலும் உணவு பதார்த்தங்கள் செய்யப்படும். குறைந்த பட்சம் 64 வகையான உணவுகளை தயாரிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

    ஓணம் பண்டிகை

    புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு, முதலில் இறைவனுக்கு படைத்து வழிபடுவார்கள். பின்னர் அவை மக்களுக்கு பரிமாறப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் போன்றவற்றின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். இப்படி வகை வகையாக சாப்பிடும் உணவு பதார்த்தங்கள் செரிமானம் ஆவதற்காகத்தான், உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி போன்றவை சேர்க்கப்படுகின்றன.

    களியாட்டம்

    மலையாளத்தில் ‘களி’ என்பது நடனத்தைக் குறிக்கும். பெரும்பாலானவர்களுக்கு ‘கதகளி’ என்ற வார்த்தை தெரிந்திருக்கும். தமிழ்நாட்டில் கூத்துக்கட்டும் போது போடப்படும் ராஜா - ராணி வேடங்களைப் போலத்தான் என்றாலும், அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஆண், பெண் போல வேடமிட்டு, முகம் முழுவதும் வண்ண வண்ண நிறங்களை பூசி அந்த ஆட்டத்திற்கு தங்களை அழகுபடுத்துவார்கள். இது தவிர ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ என்று அழைக்கப்படும் நடனமும் ஓணம் பண்டிகையில் மிகவும் பிரபலம். இந்த நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி ஊர்வலமாக வருவார்கள். புலிக்களி நடனம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்பவரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.

    இது தவிர கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனம் என 10 நாட்களும் பல போட்டிகள் நடத்தப்படும். இதில் படகுப்போட்டியின் போது அனைவரும் மலையாள பாடலை பாடியபடி துடுப்பை செலுத்துவார்கள்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவில் முன்பு நின்றவாறு அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கோவில் முன்பு நின்றவாறு அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். நேற்று முகூர்த்த நாள் என்பதால் கோவிலுக்கு வந்த மணமக்கள் வெளியே நின்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

    ஓணம் பண்டிகை சமயத்தில் கோவை மலையாளி சமாஜம் சார்பில், பூக்கோலப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
    கோவை

    கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய இடைங்களில் ஆயிரக்கணக்கான கேரள மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை அவர்கள் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக உற்சாகமின்றி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

    முன்னதாக பாதுகாப்பான முறையில் அரசின் வழிகாட்டு நெறிமுறையின்படி ஓணம் பண்டிகையை கொண்டாட கேரள மக்கள் முடிவு செய்திருந்தனர்.

    இதையடுத்து கோவை, பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் அஸ்தம் நட்சத்திரம் தினம் தொடங்கி 10 நாட்கள் ஓணத்தை கொண்டாடினர். 10-வது நாளான இன்று மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு, கேரள மக்கள் மகிழ்ந்தனர்.

    கொரோனா அச்சம் காரணமாக வழக்கமான உற்சாகமின்றியும், உறவினர்களை விருந்துக்கு அழைக்க முடியாமலும், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமலும் ஓணம் பண்டிகையை இன்று எளிமையாக கொண்டாடியதாக கோவையில் வசிக்கும் கேரள மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    அதேபோல ஓணம் பண்டிகை சமயத்தில் கோவை மலையாளி சமாஜம் சார்பில், பூக்கோலப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக போட்டிகள் நடத்தப்படவில்லை என கோவை மலையாள சமாஜம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஓணம் பண்டிகையை ஒட்டி கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. சுவாமி முன்பு 40 டன் பூக்களால் அத்தப்பூ கோலமிடப்பட்டு இருந்தது.

    கொரோனா நடத்தை விதிமுறைகள் காரணமாக இன்று கோவிலில் பக்தர்கள் யாரும் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கேரள மக்கள் வழக்கம்போல் ஐயப்பன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் வாசலில் நின்றபடியே ஐயப்பனை தரிசித்து விட்டுச் சென்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். ஓணத்தை முன்னிட்டு இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்ப்பட்டு உள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமி தங்க சப்பரம், அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று விறகு விற்ற திருவிளையாடல் லீலை நடந்தது. அதில் சுந்தரேசுவரர் விறகு விற்ற லீலையை பட்டர்கள் நடித்து காண்பித்தனர். அதை தொடர்ந்து சுவாமி தங்க சப்பரம், அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

    விறகு விற்ற திருவிளையாடல் புராண வரலாறு வருமாறு:-

    வரகுண பாண்டியன் ஆட்சி காலத்தில் ஏமநாதன் என்னும் புலவன் பாண்டிய நாட்டிற்கு வந்தான். யாழ் வாசிப்பதில் வல்லவனான அவன் அரசன் முன் யாழ் மீட்டினான். யாழிசையில் மயங்கிய அரசன் ஏமநாதனை பாராட்டினான். ஏமநாதனும், அவனது சீடர்களும் மிகவும் செருக்கடைந்தார்கள். பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டியிட யாராவது உள்ளார்களா? என ஆணவத்துடன் சவால் விட்டான். அவனை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராத காரணத்தால், பாண்டிய மன்னன் அரசவை ஆஸ்தான வித்துவானான பாணபத்திரனை அழைத்து ஏமநாதனுடன் போட்டியிட பணித்தார். தெருவெங்கும் ஏமநாதன் சீடர் களின் யாழிசையை கேட்ட பாணபத்திரன் ஏமநாதனை வெல்லும் வழியறியாமல் சோமசுந்தரரை வேண்டி நின்றார்.

    இறைவனும் ஒரு முதியவர் உருவம் கொண்டு விறகு விற்பவராக ஒரு யாழை எடுத்து கொண்டு ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து யாழினை வாசித்து கொண்டே பாடினார். அந்த தெய்வ கானத்தை கேட்ட ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரை நீ யார் என்று வினவ, அவரும் பாணபத்திரரால் வயோதிகர் என்று ஒதுக்கப்பட்ட ஆள் என்று கூறினார். ஒதுக்கப்பட்ட ஆளுக்கே இவ்வளவு திறமை என்றால் தன்னால் பாணபத்திரரை வெல்ல முடியாது என அஞ்சிய ஏமநாதன் இரவோடு இரவாக மதுரையை விட்டே சென்றான் என்று வரலாறு கூறுகிறது.

    காலை அல்லது மாலை நேரத்தில் திருமணமாக வேண்டிய இளைஞர்களும், கன்னிகைகளும் இத்துதியை பாராயணம் செய்தால், வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு திருமணம் கை கூடும். மங்களங்கள் பெருகும்.
    ய: ஸ்வாமீ ஸரஸஸ்தடே விஹரதோ
    ஸ்ரீஸ்வாமி நாம்ன: ஸதா
    ஸௌவர்ணாலய மண்டிதோ
    விதிமுகைர்பர்ஹிர்முகை: ஸேவித:
    ய: சத்ரூன் ஹனயன்னிஜானவதி
    ச ஸ்ரீபூவராஹாத்மக:
    ஸ்ரீமத் வேங்கட பூதேந்த்ரரமண:
    குர்யாத்தரிர் மங்களம்.

     - மங்கள ஸ்லோகம்

    பொதுப்பொருள்: திருப்பதி-திருமலையில் உள்ள ஸ்வாமி புஷ்கரணி என்னும் குளத்தின் கரையில் வீற்றிருக்கிறார் வராஹமூர்த்தி. மஹாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் இவர். தங்கமயமான கோயிலை அலங்கரித்துக் கொண்டிருப்பவரும், பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுகிறவரும், பகைவர்களிடமிருந்து கைதூக்கி விடுபவரும், யக்ஞவராஹமூர்த்தியாய் விளங்குபவருமான, வெங்கடாஜலபதிக்கு இடமளித்த திருமாலான வராஹர் எனக்கு எல்லா மங்களங்களையும் அருளுமாறு வேண்டிக்கொள்கிறேன். காலை அல்லது மாலை நேரத்தில் திருமணமாக வேண்டிய இளைஞர்களும், கன்னிகைகளும் இத்துதியை பாராயணம் செய்தால், வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு திருமணம் கை கூடும். மங்களங்கள் பெருகும்.

    மருதமலை முருகன் கோவில் மலைக்கு மேல் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் மலைக்கு மேல் ஏறும் படிக்கட்டு கதவின் முன்பு நின்று வழிபட்டனர்.
    கோவை மாவட்டத்தில் கொரோனாபரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் முக்கிய வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே நேற்று மருதமலை முருகன் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

    இதில் கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மலைக்கு மேல் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் மலைக்கு மேல் ஏறும் படிக்கட்டு கதவின் முன்பு நின்று வழிபட்டனர். மேலும் அவர்கள், தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். நேற்று முகூர்த்த தினம் என்பதால் மலை அடிவாரத்திலுள்ள திருமண மண்டபங்களில் மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களும் உறவினர்களும் மலைக்கு கீழே இருந்து வழிபாடு செய்தனர்.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில் கோவையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கோவிலுக்குள் சென்று பக்தர்கள் வழிபடும் நிலை உருவாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம் என்றார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை அர்ச்சகர்கள் ஹோம பூஜையை நடத்தினர். காலை 9 மணியில் இருந்து பகல் 11.00 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம், சந்தனத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் யாகசாலையில் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை பவித்ர பூர்ணாஹூதியோடு வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.

    உற்சவத்தில் பெரியஜீயர்சுவாமி, சின்னஜீயர்சுவாமி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வு மட்டுமல்ல, தானியேல் சிங்கக் குகையில் தூக்கி போடப்பட்ட போது, அவர் உள்ளே விழுந்த பிறகு அல்ல, அதற்கு முன்பே சிங்கத்தின் வாய்கள் தேவனால் கட்டப்பட்டிருந்தன.
    “நம்முடைய தேவன், நம் மீது அன்பும் அருளும் மிக்கவராய் இருக்கிறார். எப்போதும் நம் மீது அவர் நோக்கமாய் இருக்கிறார். நாம் கடந்து செல்லும் சூழ்நிலைகள் அனைத்தையும் பற்றி அவர் எப்போதும் சிந்திப்பவராய் இருக்கிறார். எப்போதும் அவருடைய பார்வையை நம்மீது வைத்தபடியே இருக்கிறார்” என்று சங்கீதம் 139 கூறுகிறது.

    ஆம், நாம் எந்த ஒரு ஆபத்தையோ அல்லது பிரச்சினையையோ கடந்து செல்லும் போது, இயேசு நமக்கு உதவி செய்வதுடன் அதில் இருந்து தப்பிக்கவும் வைக்கிறார். பல சமயங்களில் ஆபத்து நேரத்தில் அல்லாமல், அதற்கு முன்பே அவர் நம்மைக் காக்க விரைந்து வருகிறார். துன்பம் வரும்போது காக்கவும் செய்கிறார்.

    விவிலியத்தில் தானியேல் 3-ம் அதிகாரத்தில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. தான் செய்து வைத்த சிலையை வணங்க மறுத்ததால், சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத் நெகோ ஆகிய மூன்று பேரையும் நெபுகத்னேசர் அரசன் தீச்சூளையில் போடும்படி கட்டளையிட்டான். அந்த தீச்சூளையையும் வழக்கத்தை விட ஏழு மடங்கு சூடாக்கும்படி ஆணை பிறப்பித்திருந்தான்.

    படைவீரர்களில் பலசாலியான சிலர், அரசரின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக சாத்ராக்கு, மோசாக்கு, ஆபேத் நெகோ மூன்று பேரையும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளோடு அவர்களை கட்டி, தீச்சூளையில் போட தூக்கிக்கொண்டு சென்றனர். ஆனால் சூளை ஏழு மடங்கு அதிகமாய் சூடாக்கப்பட்டிருந்த படியால் மூன்று பேரையும் தூக்கிச்சென்றவர்களை அந்த தீப்பிழம்புகள் சுட்டெரித்துக் கொன்றது.

    தேவனுடைய கரம் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகிய மூன்று பேருடன் இருந்தபடியால், தூக்கிச் சென்றவர்களை கொன்ற தீச்சூளையின் நெருப்பு பிழம்புகள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரை ஒன்றும் செய்யவில்லை. அவர்கள், மூன்று பேரும் எந்தவித பாதிப்பும் இன்றி தீச்சூளையின் நடுவில் போய் விழுந்தார்கள்.

    கட்டப்பட்டவர்களாய் விழுந்த அவர்களின் கட்டுகளை விடுவித்த தேவன், அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர்களோடு நெருப்பின் நடுவில் உலாவி அவர்களை அரவணைத்தார். இதனைக் கண்டு நெபுகத்னேசர் அரசன், அவர்கள் மூன்று பேரையும் தீச்சூளைக்குள் இருந்து வெளியே வரும்படி கூறினான்.

    அரசரின் அழைப்பின்படி அவர்கள் அந்த நெருப்பு பிழம்பைக் கடந்து வெளிவரும் போதும் கூட, அந்த நெருப்பு சூளை அணைக்கப்படவில்லை. எரிந்து கொண்டுதான் இருந்தது. தேவன் அவர்களோடு இருந்து பாதுகாத்தபடியால், கொட்டும் அருவி தண்ணீரின் ஒருபுறம் இருந்து மறுபுறம் ஊடாக கடந்து வருவது போல், அந்த நெருப்பு பிழம்புகளை கடந்து வந்தனர். அவர்கள் வெளியே வந்தபோது அவர்கள் மீது நெருப்புப் புகையின் நாற்றம் கூட இல்லை. அவர்களுடைய தலைமுடி மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை விவிலியத்தின் வாயிலாக அறிகிறோம்.

    இந்த நிகழ்வு மட்டுமல்ல, தானியேல் சிங்கக் குகையில் தூக்கி போடப்பட்ட போது, அவர் உள்ளே விழுந்த பிறகு அல்ல, அதற்கு முன்பே சிங்கத்தின் வாய்கள் தேவனால் கட்டப்பட்டிருந்தன.

    இதற்குக் காரணம் அவர்களுடைய பிரச்சினையின் போதல்ல, அதற்கு முன்பே தேவனுடைய கரம் அவர்களுடன் இருந்து பாதுகாத்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது. இன்றும் தேவன் தாமாகவே நம்முடைய பிரச்சினையின் போது அல்ல, அதற்கு முன்பிருந்தே நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார். அதனால்தான் எத்தகைய பிரச்சினைகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும், அவை நம்மை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இயேசு நம்மை காப்பார் என்பதை உணர்ந்தவர்களாய், இன்னும் அதிகமாய் தேவனோடு நெருங்கி வாழ்வோம்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் முன்பதிவு செய்த 26 திருமணங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி வாரத்தில் 3 நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் நேற்றுமுன்தினம் வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இதையடுத்து இக்கோவிலில் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு கோவில் கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதத்தில் வரும் முதல் சுபமுகூர்த்த தினம் நேற்று என்பதால் அதிகாலை முதல் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் அலங்கார வாகனத்தில் மணமக்கள் ஊர்வலம் போன்றவை நடைபெற்றது.

    திருவண்ணாமலை நகரில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் நேற்று காலை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமண நிகழ்ச்சிக்கு வந்த வெளியூர் மக்கள் நேற்று முன்தினம் அருணாசலேஸ்வரர் கோவிலில் பலர் சாமி தரிசனம் செய்தனர். நேற்று வந்த வெளியூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் முன்பதிவு செய்து இருந்த 26 திருமணங்கள் கோவிலில் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது.

    அப்போது மணமக்களின் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மட்டும் சமூக இடைவெளியுடன் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் மண்டபங்களில் திருமணம் செய்த மணமக்கள் கோவில் ராஜகோபுரம் முன்பும், 16 கால் மண்டபம் முன்பும் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் நேற்று வரலட்சுமி விரதம் என்பதால் அதற்கான பூஜை பொருட்களை வாங்கவும் பொதுமக்கள் திருவண்ணாமலை நகரில் உள்ள கடை வீதிகளில் குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    ஓணம் புடவை கட்டி, அத்தப்பூ கோலம் போட்டு, ஓண சத்யா என்ற விருந்துடன் உலகம் முழுவதும் வசிக்கும் மலையாளிகள் இன்று (சனிக்கிழமை) ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
    சென்னை :

    தென் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க திருவிழா ஓணம் பண்டிகை. உலகம் முழுவதும் வசிக்கும் மலையாளிகள் ஓணம் பண்டிகையை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    மகாபலி சக்கரவர்த்தியின் அகங்காரத்தை அடக்க திருமால் வாமனராக அவதரித்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி அனுமதி அளித்ததுடன் முதல் அடியில் பூமியையும், 2-ம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், 3-ம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவரை அழிக்க முற்பட்டார். அப்போது மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினார். இதை ஏற்று அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், மக்களை காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் 10 நாட்கள் மலையாளிகள் கொண்டாடுகின்றனர்.

    ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, ஓணப் புடவை கட்டிக் கொண்டு வீட்டு முற்றத்தில் தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களால் அத்தப்பூ கோலம் போடுவார்கள். இது மகாபலி சக்கரவர்த்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக நம்பிக்கையாகும்.

    வீட்டு வரவேற்பறையிலும் மலர்களால் அத்தப்பூ கோலம் போட்டு, அதன் நடுவில் குத்துவிளக்கு ஏற்றி பழங்கள் காய்கறிகளை வைத்து வணங்குவார்கள். தொடர்ந்து

    உலக்கையால் ஊஞ்சல் கட்டி, அத்தப் பூ பூத்தல்லோ... ஓணம் வந்தல்லோ... என்ற ஓணம், பாடல்களைப் பாடி விளையாடி மகிழ்வார்கள்.

    கானம் விற்றாவது ஓணம் உண்... என்ற பழமொழி ஓண சத்யா என்ற விருந்தின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான ஓண சத்யா என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், மோர், கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, உப்பேரி, பப்படம், சீடை, ஊறுகாய் உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.

    மாலையில் கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    ×