என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண்களும் வைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் :
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 47 பெரிய கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது.
அன்னை தமிழில் அர்ச்சனை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண்களும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழில் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்து தரிசனம் செய்யலாம்.
வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டதால் நேற்று முதல் ஏராளமான பக்தர்கள் கோவில் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் முதல் நாளான இன்று பலர் தமிழில் அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே நேற்று முதல் கடற்கரை, சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமானவர்கள் குவிந்தனர். மேலும் நாழிக் கிணற்றிலும் பக்தர்கள் புனித நீராடினர். அதிகமானவர்கள் திரண்டதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடற்கரையில் வழக்கம் போல குளிக்க அனுமதி தொடர்கிறது.
இதையும் படிங்க... மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில், விரதங்களும் ஒன்று. எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது உறுதி என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில், விரதங்களும் ஒன்று. அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக இது பார்க்கப்படுகிறது.
‘விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது’ என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது, அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது, தண்ணீர், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது என பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது உறுதி என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. விரதத்துக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே, காரம் குறைவான, பருப்பு சாதம் மாதிரி நன்கு வேகவைக்கப்பட்ட உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் உண்பது ஆன்மிக வாழ்வுக்கு ஏற்றது.

குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள், தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.
இதையும் படிங்க...திருப்பதியில் செப்டம்பர் மாத முன்பதிவு தரிசன டிக்கெட் வெளியீடு
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படவில்லை. கடந்த 20-ந்தேதி தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் ரூ.300-க்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 5 ஆயிரம் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு வந்தது.
இந்தநிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் கடந்த 20-ந்தேதி வெளியிடப்பட இருந்தது.

இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான 8000 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட்டது. நேற்று 22,079 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11,250 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.32 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இதையும் படிங்க... ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பன்னிருதிருமுறைகள் விழாவை முன்னிட்டு நடராஜர் அபிஷேகம் மற்றும் 12 திருமுறைகள் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பன்னிருதிருமுறைகள் விழா ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் கடந்த 10-ந்தேதி விழா தொடங்கியது. விழாவில் நடராஜர் அபிஷேகம் மற்றும் 12 திருமுறைகள் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நிறைவு நாளான நேற்று அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யானை வாகனத்தில் பன்னிரு திருமுறைகள் கோவிலை சுற்றி வலம் வரும் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை இணை கமிஷனர் காவேரி செய்திருந்தார்.
மேலும் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தின் அருகில் பூணூல் மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. தெப்பக்குளத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததால், அதன் அருகில் கணபதி பூஜை செய்து திரளானவர்கள் பூணூலை மாற்றிக்கொண்டனர். மேலும் சென்னை தியாகராயநகரில் திருமண மண்டபத்தில் ஒன்றிலும் ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்தது.

‘ஒருவர் துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பப்பட்டவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்றே ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி).
இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறது:
‘நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது’. (திருக்குர்ஆன் 94:5)
எவரும் வாழ்நாள் முழுவதும் இன்பமாகவே வாழ்ந்தார் என்று வரலாறு கிடையாது. அல்லது ஒருவர் ஆயுள் முழுவதும் துன்பமாகவே வாழ்ந்தார் என்ற சரித்திரமும் கிடையாது.
மனித வாழ்க்கை ஒரு புத்தகத்தைப் போன்றது. ஒரு பக்கம் துன்பமும், மறுபக்கம் இன்பமும் நிறைந்தது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று மனிதனுக்கும் இன்பம்-துன்பம் என இரு பக்கங்கள் உண்டு.
இன்பமே இல்லாத வாழ்க்கை நரக வாழ்க்கை. துன்பமே இல்லாத வாழ்க்கை சொர்க்க வாழ்க்கை.
“சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்தபின்னர் பொது அறிவிப்பாளர் ஒருவர், ‘இனி நீங்கள் இன்பத்துடன் தான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் அடையமாட்டீர்கள்’ என்று அறிவிப்புச் செய்வார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
துன்பம் என்பது ஒருவகை வலியினால் ஏற்படும் சோகமான ஒரு உணர்வலை. அது தோல்வியால் வரலாம்; நஷ்டத்தால் ஏற்படலாம்; விருப்பமானதை இழப்பதினால் கூட நடக்கலாம்.
துன்பத்தை சந்திக்கும் ஒருவர் சகஜமான நிலைக்கு அப்பாற்பட்டு யாரிடமும் பேசாமல் மவுனமாகி விடுவார். தனிமையை விரும்புவார். மனஅழுத்தம் ஏற்பட்டு இளைப்பாற ஓய்வெடுப்பார். அடக்கமுடியாமல் அழுவார்.
இவருக்கு அப்போது தேவை மன ஆறுதலான நாலு வார்த்தைகள் தான்.
துன்பத்தில் ஆறுதல் கூறும் அழகிய வார்த்தை என்பது வலி நிவாரணி போன்றது. வலிகள் இருந்தாலும் இந்த வார்த்தையால் மூளை வலியை உணராமல் செய்து விடும்.
நீ துன்பத்தில் தவிக்கும்போது ஆறுதல் கூறுபவர் நீ விரும்பும் நபராக இருக்கமாட்டார். உன்னை விரும்பும் நபராக இருப்பார்.
துன்பத்தில் கூறப்படும் அழகிய ஆறுதல் வரிகள் உள்ளன. அவை வருமாறு:
‘இறைவன் உமக்கு மகத்தான சன்மானம் வழங்கட்டுமாக! அவன் அழகிய ஆறுதலை அளிக்கட்டுமாக! மரணித்தவருக்கு மன்னிப்பை வழங்குவானாக!’ - இவை அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய அழகிய ஆறுதல் வரிகள்.
‘இறைவன் உமக்கு கருணை பொழியட்டும்! துன்பத்திலிருந்து உம்மை விடுவிக்கட்டும்! உமது துன்பத்தை அகற்றிவிடட்டும்! என்பது போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்த வேண்டும்.
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களுடைய புதல்வியரில் ஒருவருடைய (ஸைனப் (ரலி) அவர்களுடைய) தூதுவர் அங்கு வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீ ஸைனபிடம் சென்று, “அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே! அவன் கொடுத்ததும் அவனுக்குரியதுதான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. ஆகவே, (அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக இருக்கச்சொல்” என்று சொல்லி அனுப்பினார்கள். (நூல்: புகாரி)
‘ஒருவர் துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பப்பட்டவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்றே ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி).
‘ஒரு இறைநம்பிக்கையாளர் துன்பத்தில் சிக்கிய தமது சகோதரருக்குப் பொறுமையும், ஆறுதலும் கூறி அவரைத் தேற்றினால், அவருக்கு மறுமைநாளில் இறைவன் சங்கை எனும் ஆடையை அணிவிப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸம் (ரலி), நூல்: இப்னுமாஜா)
துன்பத்தில் சிக்குண்டவரை சாதி, மத, இன, நிற, மொழி, தேசியம் பாராமல் அவருக்கு ஆறுதல் கூறுவது நபியின் வழிமுறையாகும். நபி (ஸல்) அவர்கள், நோய்வாய்ப்பட்டு மரண தருவாயில் இருக்கும் ஒரு யூத சிறுவனின் வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறிவிட்டு வந்த நிகழ்வு நெகிழ்ச்சியைத் தருகிறது.
துன்பத்திற்கு ஏது சாதி, மதம், ஆறுதலில் உள்ளது மனிதநேயம்.
துன்பத்தில் உள்ளவர்களுக்கு அழகிய வார்த்தைகளால் ஆறுதல் கூறி மனிதநேயம் வளர்ப்போம்.
அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.

ராமேசுவரத்தில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனிதநீராட தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீர்த்த கிணறுகள் திறக்கப்படுவது குறித்து அதிகார பூர்வமாக எந்த அறிவிப்பும் வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக 3-வது அலை பாதிப்பை தவிர்க்கும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
கோவில்களில் பக்தர்கள் அதிகளவு கூடுவார்கள் என்பதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டன. மேலும் திருவிழாக்கள், சுவாமி உற்சவம் ஆகியவை பக்தர்கள் இன்றி கோவிலுக்குள்ளேயே எளிதாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடற்கரைகளில் பொது மக்களுக்கு இன்று முதல் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 3 நாட்களுக்குப் பிறகு நேற்று ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நேற்று அதிகாலை முதலே வட மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கடற்கரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். இதனால் கடற்கரையில் மக்கள் கூட்டம் இருந்தது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆனால் ராமேசுவரத்தில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனிதநீராட தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீர்த்த கிணறுகள் திறக்கப்படுவது குறித்து அதிகார பூர்வமாக எந்த அறிவிப்பும் வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதேபோல் சேதுக்கரை நவபாசன கடற்கரையிலும் ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க... வருமானம் பெருக தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும்.

வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
ஓம் ........ஹ்ரீம்.......க்ளீம்சௌம்........ஸ்ரீம்......கும் குபேராய........... நரவாகனாயயக்ஷ ராஜாய...... தன தான்யாதிபதியே............ லக்ஷ்மி புத்ராய......ஸ்ரீம்........ ஓம்.......
குபேராய நமஹ.........!
மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன்
ஆகிவிடுவீர்கள்.

4 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் பெரும்பாலான வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடந்தது. பின்னர் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 26-4-2021 முதல் 4-7-2021 வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. எனினும் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன.
பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 5-7-2021 முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இருந்தாலும் கோவில் கடற்கரை, நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் கடற்கரைக்கு பக்தர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஊரடங்கில் மீண்டும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தினமும் வழிபடவும், கோவில் கடற்கரை, நாழிக்கிணற்றில் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். சுமார் 4 மாதங்களுக்கு பிறகு கோவில் கடற்கரை மற்றும் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் கோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் கோவிலில் பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபடவும், அபிஷேக பொருட்களை கொண்டு வரவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க.. இந்த வார விசேஷங்கள்: 24.8.21 முதல் 30.8.21 வரை
ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
24-ம் தேதி செவ்வாய் கிழமை :
* அமிர்த யோகம்
* சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்
* சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
25-ம் தேதி புதன் கிழமை :
* சங்கடஹர சதுர்த்தி
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம் - மகம், பூரம்
26-ம் தேதி வியாழக்கிழமை :
* சுபமுகூர்த்தம்
* அமிர்த யோகம்
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
* சந்திராஷ்டமம்- பூரம், உத்திரம்
27-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சித்தயோகம்
* திருச்செந்தூர் முருகப்பெருமான் உற்சவாரம்பம்
* ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு
* தேய்பிறை பஞ்சமி
* சந்திராஷ்டமம் - ஹஸ்தம்
28-ம் தேதி சனிக்கிழமை :
* இன்று கருட தரிசனம் நன்று
* திருப்போரூர் முருகபெருமான் அபிஷேகம்
* குச்சனூர் சனிபகவான் சிறப்பு ஆராதனை
* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம் - சித்திரை
29-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* கார்த்திகை விரதம்
* தேய்பிறை சப்தமி
* பழனி ஆண்டாள் புறப்படு
* சந்திராஷ்டமம் - சுவாதி
30-ம் தேதி திங்கள் கிழமை :
* தேய்பிறை அஷ்டமி
* கோகுலாஷ்டமி
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மூலவருக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம் - விசாகம்

கலியுகத்தில் பிறர்நலம் பேணி வாழ்கிறவர்கள் இருக்கமாட்டார்கள். தர்மத்தின் வழி நடக்கும் யுகமாக கலியுகம் இருக்காது. ஆனால் எவன் ஒருவன் தன்னை அறிந்து கொள்கிறானோ, அவன் கலியுகத்தில் உயர்ந்தவனாக மாறுவான்
துவாபர யுகம் முடியும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. அடுத்ததாக கலியுகம் பிறக்க இருந்தது. அந்த கலியுகம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று அறிந்துகொள்ள பலரும் பேராவல் கொண்டிருந்தனர். அதுபோலவே பாண்டவர்களில் தர்மனை தவிர்த்து மற்ற நால்வருக்கும் அந்த ஆர்வம் அதிகமாக இருந்தது.
பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய அந்த நால்வரும் கிருஷ்ணனிடம் சென்று, “மைத்துனரே.. துவாபர யுகம் முடிந்து கலியுகம் பிறக்கப்போவதாகச் சொல்கிறார்கள். அந்த கலியுகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று எங்களுக்கு விளக்க முடியுமா?” என்று கேட்டனர்.
“நீங்கள் நால்வரும் திசைக்கு ஒருவராக வனத்திற்குள் செல்லுங்கள். அங்கே நீங்கள் பார்க்கும் ஆச்சரியமான விஷயத்தை பற்றி என்னிடம் வந்து சொல்லுங்கள். அதில்தான் கலியுகம் என்ற எதிர்கால வாழ்வு அடங்கியிருக்கிறது” என்றார் கிருஷ்ணன்.
நால்வரும் திசைக்கு ஒருவராக வனத்திற்குள் சென்றனர். பீமன் தான் சென்ற திசையில் 5 கிணறுகள் இருப்பதைக் கண்டான். நடுவில் ஒரு கிணறும், அதைச் சுற்றி நான்கு கிணறுகளும் இருந்தன. சுற்றியிருந்த நான்கு கிணறுகளிலும் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. குடிப்பதற்கு இனிமையாகவும் இருந்தது. ஆனால் நடுவில் இருந்த கிணற்றில் ஒரு துளி நீர் கூட இல்லை.
அர்ச்சுனன் சென்ற திசையில் குயிலின் இனிமையான இசை கேட்டது. அதை ரசித்தபடியே ஒலி வந்த திசை நோக்கிச் சென்றான். அங்கு அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனிய குரலால் ஒலி எழுப்பிக்கொண்டிருந்த குயில், தன்னுடைய அலகால், ஒரு முயலை கொத்தி தின்று கொண்டிருந்தது.
சகாதேவனும் தான் சென்ற இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். ஒரு பசு, தன்னுடைய கன்றை அதன் அரவணைப்பில் வைத்திருந்தது. பாச மிகுதியால் தன்னுடைய கன்றை நாக்கால் தடவிக்கொடுத்துக் கொண்டே இருந்தது. ஆனால் பசு நாக்கால் தடவிக் கொடுத்த இடம் முழுவதும் புண் உண்டாகி, வலி பொறுக்க முடியாமல் கன்று கதறிக்கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாத பசு, மீண்டும் தன் நாக்கால் கன்றை தடவிக்கொண்டே இருந்தது.
நகுலன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு ராட்சதப் பாறை மலை உச்சியில் இருந்து உருண்டு வந்தது. மிகப்பெரிய மரங்கள், மிகப்பெரிய பாறை இடுக்குகள் என அனைத்தையும் தகர்த்து எறிந்து கொண்டே உருண்டோடி வந்த அந்த பாறை, கடைசியில் ஒரு சிறிய செடியில் தட்டி நின்றது. அதைக் கண்டு நகுலன் ஆச்சரியப்பட்டுப் போனான்.
இப்போது நால்வரும் கிருஷ்ணன் முன்பாக நின்றனர். பீமன் தான் கண்ட கிணறுகளைப் பற்றிச் சொன்னான். அதைக் கேட்ட கிருஷ்ணன், “பீமா கலியுகம் இப்படித்தான் இருக்கப்போகிறது. நான்கு கிணறுகள்தான், செல்வந்தர்கள். நடுவில் உள்ள கிணறு ஏழை. செல்வந்தர்களிடம் அந்த நான்கு கிணறுகளில் இருந்ததுபோலவே, தேவைக்கு அதிகமாக செல்வம் நிரம்பி இருக்கும். ஆனால் அதில் இருந்து சிறிதளவு கூட, வறுமையில் வாடும் ஏழைகளுக்குத் தர மாட்டார்கள். ஏழைகளைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே மாட்டார்கள்.
அர்ச்சுனன், தான் கண்ட காட்சியை கிருஷ்ணரிடம் சொன்னான். அதற்கு விளக்கம் அளித்த அவர், “அர்ச்சுனா.. கலியுகத்தில் உள்ள மத குருமார்கள், அந்த குயிலைப் போலத்தான் இருப்பார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது குயிலின் இனிமையான குரல் ஒலித்ததே, அதுபோலத்தான் இந்த மத குருமார்களும் இனிமையாக போதனை செய்வார்கள். ஆனால் அவர்கள் அருகில் சென்று பார்த்தால்தான் தெரியும், குயில் முயலைக் கொத்தியது போல, குருமார்களும் மக்களை அழித்துக் கொண்டிருப்பார்கள். மத குருமார்கள் உயர்ந்த பீடத்தில் இருந்தாலும், அதற்கேற்ற செயல்பாடுகள் அவர்களிடம் இருக்காது” என்று சொன்னார்.
தன் கன்றை தாய் பசுவே காயப்படுத்திய காட்சியைப் பற்றி சகாதேவன் கூறிவிட்டு, அதற்கு விளக்கம் கேட்டான். “சகாதேவா.. கலியுகத்தில் வாழும் பெற்றோர்கள் இப்படித்தான் இருப்பார்கள். ‘என் பிள்ளைகளை நான் கவனமாக பாதுகாக்கிறேன். அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக்குகிறேன்’ என்று சொல்லிச் சொல்லி அவர்களை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்பவர்களாகத்தான் கலியுகத்தில் பெற்றோர்கள் இருக்கப்போகிறார்கள்” என்றார் கிருஷ்ணன்.
இறுதியாக நகுலனின் முறை வந்தது. அவன் தான் கண்ட காட்சியை எடுத்துரைத்தான். “நகுலா நீ கண்ட ராட்சதப் பாறை போன்றுதான், கலியுகத்தில் வாழப்போகும் இளைஞர்கள் இருக்கப்போகிறார்கள். இளைஞர்களான அந்த ராட்சதப் பாறை, பெரிய மரங்களான ஆசிரியர்களுக்கும் அடங்காது. மிகப்பெரிய பாறை இடுக்குகளாக இருக்கும் பெற்றோருக்கும் அடங்காது. இப்படி எதற்கும் அடங்காமல், அனைவரையும் எடுத்தெறிந்து விட்டு தன் மனம் போன போக்கில் இளைஞர்கள் போவார்கள். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்த சிறிய செடியாக இருக்கக்கூடிய ஆன்மிகம்தான் உதவி செய்யும்” என்றார் கிருஷ்ணன்.
மேலும் கிருஷ்ணன் கூறும்போது, “கலியுகத்தில் பிறர்நலம் பேணி வாழ்கிறவர்கள் இருக்கமாட்டார்கள். தர்மத்தின் வழி நடக்கும் யுகமாக கலியுகம் இருக்காது. ஆனால் எவன் ஒருவன் தன்னை அறிந்து கொள்கிறானோ, அவன் கலியுகத்தில் உயர்ந்தவனாக மாறுவான்” என்றார்.

நந்தியும், சிவனும் பிரிக்க முடியாத சக்திகள். அப்படிப்பட்ட நந்தியே, ஒரு முறை கயிலாயத்தில் இருந்து ஈசனை பிரிந்து பூலோகம் வரும் நிலை ஏற்பட்டது. அந்தக் கதையைப் பார்ப்போம்...
சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுபவர்கள், அங்கிருக்கும் நந்தியை தரிசனம் செய்யாமல் வரமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், நந்தியை தரிசித்து அவரிடம் அனுமதி பெற்ற பிறகே, நாம் ஈசனை வணங்க வேண்டும் என்பது வழிமுறை. அந்த வகையில் நந்தியும், சிவனும் பிரிக்க முடியாத சக்திகள். அப்படிப்பட்ட நந்தியே, ஒரு முறை கயிலாயத்தில் இருந்து ஈசனை பிரிந்து பூலோகம் வரும் நிலை ஏற்பட்டது. அந்தக் கதையைப் பார்ப்போம்.
சிவ பக்தனான அடிலகன் என்பவன், தன் இறுதிகாலம் முடிந்து கயிலாயம் சென்றான். அங்கே பார்வதிதேவி, சிவபெருமானை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்தாள். கயிலாய வாசலில் நந்தியம்பெருமான் காவல் புரிந்து கொண்டிருந்தார். சிவ-பார்வதியை தரிசிக்க நினைத்து வந்த அடிலகன், நேராக பார்வதி தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். நந்திதேவரும், ஈசனின் பக்தன்தானே என்று அவனை உள்ளே விட்டு விட்டார்.
அடிலகன் உள்ளே சென்றதும், பார்வதியைக் கண்டு “தாயே..” என்று பெருங்குரலெடுத்து வணங்கினான். அந்த சத்தத்தில் பார்வதியின் தியானம் கலைந்தது. பக்தனை கடிந்துகொள்ள இங்கே வழியில்லை. அதனால் தன் பணியை சரிவர செய்யாத நந்தியை அழைத்தாள், பார்வதி. “நான் தியானத்தில் இருந்து எழுந்ததும், பக்தனை உள்ளே அனுமதித்திருக்கலாம். நீ உன்னுடைய பணியை முறையாகச் செய்யவில்லை” என்று கடிந்துகொண்டாள். அப்போது அங்கு வந்த ஈசன், நடந்ததை அறிந்துகொண்டு, “நந்தி.. பணியில் இருந்து தவறிய நீ.. பூலோகத்தில் பிறந்து சிலகாலம் வாழ்வாயாக” என்று சாபம் அளித்துவிட்டார்.
அந்த நேரத்தில் பூமியில் சிலாதர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவரது ஆசிரமத்திற்கு ஒரு முறை சப்தரிஷிகளும் வந்தனர். அவர்களுக்கு சிலாதரின் மனைவி உணவு பரிமாறினாள். ஆனால் சப்தரிஷிகளும், “குழந்தை இல்லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது” என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதனால் வருத்தம் அடைந்த சிலாதரும், அவரது மனைவியும், இறைவனிடம் மனமுருக வேண்டினர். இதனை அறிந்த ஈசன், நந்தியம்பெருமானை, அவர்களின் புதல்வனாக்க முடிவு செய்தார். அதன்படி நந்தியை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி சிலாதரின் ஆசிரமம் அருகே வைத்துவிட்டார். சிலாதரின் கண்ணில், அந்தப் பெட்டி தென்பட்டது. அவர் அதைத் திறந்து பார்த்தபோது, காளையின் முகம், மனித உடல் கொண்ட ஒரு குழந்தை அதற்குள் இருந்தது.
இறைவன் தனக்கு அளித்த பிள்ளை என்று கருதிய சிலாதர், “இறைவா.. நற்குழந்தை ஒன்றை தந்திருக்கக் கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தையை ஊரார் எப்படி ஏற்பார்கள்?” என்று ஈசனிடம் வேண்டினார்.
அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. “சிலாதா.. வந்திருப்பது என்னுடைய காவலன் நந்தி. ஒரு சாபத்தால் அவன் உன்னிடம் வளர வந்துள்ளான். அவனுக்கு அழகான முகம் தருகிறேன். ஆனால் அவனுடைய ஆயுள் காலம் வெறும் 12 ஆண்டுகள்தான் இருக்கும். அதன் பிறகு அவனோடு நீங்களும் கயிலாயம் வந்துவிடுங்கள்.”
அதைக்கேட்ட சிலாதர், தன் பிள்ளையின் ஆயுள் குறைவு என்றாலும், அவன்தான் நம்மை கயிலாயம் அழைத்துச் செல்லப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் அதனை ஏற்றுக்கொண்டார்.
தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்தார். சிவலோகத்தில் இருந்து கிடைத்த பிள்ளை என்பதால், அந்தக் குழந்தை பார்த்தவுடன், பலரின் நோய் நீங்கியது. பலரது பாவம் பறந்தோடியது. நந்தி தேவர், தினமும் பிரதோஷ வேளையில் தியானத்தில் ஈடுபடுவார். தான் வாழ்ந்த 12 ஆண்டுகளில் பல அற்புதங்களை நிகழ்த்திய நந்தியம்பெருமான், தன் பெற்றோருடன் கயிலாயம் சென்று, இழந்த பதவியை மீண்டும் பெற்றார்.

இன்று (21-ந்தேதி) இரவு 7.19 மணி முதல் நாளை (22-ந்தேதி) மாலை 6.17 மணி வரை பவுர்ணமி காலமாகும். இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலை
கொரோனா பரவியதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு மாறாக இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல இன்றும் நாளையும் அனுமதி கிடையாது.
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது முக்கிய கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருகிற 22-ந்தேதி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாது. எனவே பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து ஏமாற வேண்டாம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள். அதன் மூலம் பெரிய அளவில் வணிகம் நடைபெறும்.
மேலும் ரெயில், பஸ், சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்து மூலம் அந்த துறைகளுக்கும் கணிசமாக வருமானம் கிடைக்கும். அதுமட்டுமின்றி சிறு வியாபாரிகள் பலனடைந்து வந்தனர்.

பவுர்ணமி கிரிவல தடையால் அவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க.. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம்