என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும் நேற்று முதல் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் முதல் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும் நேற்று முதல் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் நாழிக்கிணறு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. எனினும் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் மட்டும் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க..வழிப்பாட்டு தலங்களுக்கு தளர்வு எப்போது?: பக்தர்கள் எதிர்பார்ப்பு
கோகூர் அந்தோணியாரின் திருவிழாவிற்கு நம்பிக்கையோடு வாருங்கள். உங்கள் வேண்டுதல்களை கோகூர் அந்தோணியார் நிச்சயம் நிறைவேற்றி தருவார்.
நாகப்பட்டினம் மறை வட்டத்திற்கு இரண்டு பெருமைகள் உண்டு, ஒன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலம், மற்றொன்று கோகூர் புனித அந்தோணியார் திருத்தலம். ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும், ஜூன் மாதம் நடைபெறும் கோகூரில் கோவில் கொண்டுள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் பெருவிழாவிலும் ஆயிரகணக்கான மக்கள் கூடுவதையும், ஜெபிப்பதையும் பார்ப்போர் பரவசம் அடைகின்றனர். கண்டோர் சாட்சி கூறுகின்றனர். நாகையிலிருந்து மேற்கே திருவாரூர் நெடுஞ்சாலையில் கீழ்வேளூரிலிருந்து வடக்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் கோகூர் புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளது. இந்த கிராமத்தில் தான் புனித அந்தோணியார் குடிகொண்டு அற்புதங்கள், அதிசயங்கள் செய்து வருகிறார்.
கோகூர் பெயர்காரணம் :
கோகூரின் பழைய பெயர் "பனந்தோப்பு". கோவூர் கிழார் என்னும் பெரியவர் இங்கு தங்கி இருந்ததால் காலப்போக்கில் அது மருவி அவர் பெயரிலே கோகூர் என பெயர்பெற்றது. இவருக்கு பிறகு "வெள்ளை புடவை கார அம்மா " என்னும் ஒருவர் இங்கு தங்கி அறப்பணிகள் செய்து வந்தார், ஆனால் காலப்போக்கில் இங்கிருந்து மறைந்துவிட்டார் என்பது செவிவழி செய்தி.
கோகூரில் கோவில் வந்தது எப்படி:
கி.பி 1837 ஆண்டு வளம் கொழிக்கும் வற்றா நதியான வெட்டாற்றில் முதியவர் ஒருவர் தூண்டில் போட்டுகொண்டு இருந்தார், அவ்வேளையில் புனித அந்தோணியார் சொருபம் ஒன்று நீரில் மிதந்து துண்டிலை சுற்றி சுற்றி வந்தது, அந்த முதியவர் அதை ஒதுக்கிவிட்டு தூண்டில் போட்டார், ஆனால் மீண்டும் மீண்டும் அந்த அந்தோணியார் சொருபம் தூண்டிலை சுற்றி வர வியப்படைந்த அவர் சொரூபத்தை தன் வீட்டுக்கு கொண்டுவந்தார், அன்று இரவு அவர் தூங்கும் போது, கனவில் அவர் பெயரை சொல்லி கோகூரில் தனக்கு ஒரு கோவில் கட்டவும், நான் அந்தோணியார் என்றும் கூறியது. கண் விழித்த அவர் காலையில் ஊர் மக்களிடம் நடந்ததை சொல்லி, எல்லோரின் உதவியுடன் முதன்முதலில் கீற்று கோவில் கட்டி புனித அந்தோணியார் சொருபத்தை அதில் வைத்து வழிபட்டு வந்தனர், அந்த புதுமை வழங்கும் புனித அந்தோணியார் சொருபம் இன்று ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக் கிழமைகளில் பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெறும். சனி, ஞாயிறு கிழமைகளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை முடிவு கொண்டுவர 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நோயின் தாக்கத்தை பொறுத்து ஒவ்வொரு முறையும் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது கொரோனா 2-வது அலை குறைந்துள்ள நிலையில் 3-வது அலையை தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
ஆடி மாதம் வழிபாட்டுத் தலங்களில் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பதால் மக்கள் கூட்டத்தை குறைக் கும் வகையில் ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வு களில் கோவில்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 கிழமைகளிலும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூடவும், வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெறவும் உத்தரவிடப்பட்டது.
இதன் காரணமாக 3 வாரமாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்தாலும் வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்வதால் கோயில் வாசலில் வைத்து திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முதல் பல்வேறு கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.
தியேட்டர்கள் திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் வருகிற 1-ந்தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் நடத்தும் மது கூடங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழிபாட்டுத் தலங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது.
வாரத்தில் 3 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் அனுமதி இல்லை என்பதால் மற்ற 4 நாட்களும் பக்தர்கள் கூட்டம் கோவில்களில் அதிகளவில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெறும். சனி, ஞாயிறு கிழமைகளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம்.
பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு வழிபாட்டு தலங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சாமி தரிசனம் மற்றும் பிரார்த்தனைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடுத்த தளர்வின் போது வழிபாட்டுத்தலங்கள் மீதான கட்டுப்பாடுகளையும் அரசு அகற்றும் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர்.
சுவாமி: அக்னீசுவரர்
அம்பாள்: கற்பகாம்பாள்
மூர்த்தி: அக்னீசுவரர்
தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்.
தலவிருட்சம்: பலாசம்.
தலச்சிறப்பு: இத்தலம் நவக்கிரக தலங்களில் சுக்கிரன் தலமாக விளங்குகிறது.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் சுக்கிரன் ஸ்தலத்தில் வைணவரான வாசுதேவருக்கு ஓர் குழந்தை பிறந்தது. அவர் நாராயணனே தனக்கு குழந்தையாக பிறந்ததாக கருதி குழந்தைக்கு சுதர்சனர் என பெயரிட்டனர்.
வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. சிறு வயதிலேயே சிவனின் மேல் ஈடுபாடு கொண்டு சிவ பக்தர்களோடே இருந்தது. வீட்டில் தாய் இட்ட நாமத்தையும் சூரனத்தையும் அழித்து விபூதி ருத்ராட்சம் அணிவதையே விரும்பியது. எப்போதும் சிவன் கோவிலிலேயே இருந்தது. விளையாடும் இடமே சிவன் கோவில் என தினமும் கோவிலிலேயே விளையாடியது.
சுதர்சனிடம் அவரது தந்தை எவ்வளவோ எடுத்து கூறியும் விபூதியும் ருத்ராட்சமுமே பிடித்ததாய் இருந்தது. பூணூல் கல்யாணம் செய்வித்து நாம் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமகா விஷ்ணு. நாமத்தையும் சூரனத்தையும் இட வேண்டும் என கறாராக சுதர்சனனின் தந்தை சொல்லியும் கேட்கவில்லை. மாலை நேரத்தில் வீடு திரும்பிய மகனை தூணில் கட்டி வைத்து அடித்தார், பயன் இல்லை. மாறாக சிவன் கோவிலுக்கே போனார்.
தன் பேச்சை கேட்காத வரை இனி வீட்டில் இடமில்லை, உணவளிக்க கூடாதென்று சொல்லி வீட்டை விட்டு குழந்தையான சுதர்சனரை வெளியே அனுப்புகிறார். நேராக அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரையும், கற்பகாம்பிகையையும் வலம் வந்து துதித்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு எதிரே தியானத்தில் அமர்ந்தான் சுதர்சன்.
சிவபெருமானை துதித்தான். தன் மீது கருணை காட்டி அருள்புரிய வேண்டினான். இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான். பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் சிவபெருமான் காட்சியளித்தார்
சிவபெருமான் சுதர்சனரிடம் “அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று சொன்னார். குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான். சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான். அவனுக்கு எல்லா கலைகளும் வருமாறு வரமருளினார். பின்னர் அவனை கருணையினால் நோக்கி, நீ உனது உடல் பொருள், ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீட்சா நாமம் தந்தோம். உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் என்று அருளினார்.
தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராட்ச மாலையணிவித்து பஞ்சாட்சர உபதேசம் செய்து, ஸ்படிக லிங்கம் கொடுத்து (ஹரதத்தர் பூஜித்த சிவலிங்கம் தனியாக கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது) சிவ பூஜா வித்யையும் தாமே உபதேசித்தார். வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார். தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார். தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியது, பொழுதும் விடிந்தது.
அந்த ஊரில் இருந்த வைணவர்கள் ஒன்று கூடி, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம். இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், சிவனே பரம்பொருள் என்று நிரூபிக்க வேண்டும். முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும் என்றார்கள்.
ஹரதத்தரும் அக்னீசுவரரை வழிபட்டு பெருமாள் கோவிலுக்குச் சென்று தீக்குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ளபடியால் இந்த முக்காலி அடியேனுக்குக் குளிரட்டும் என்று கூறி, சிவ பரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும் கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது. தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர்.
ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.
ஹரதத்தருக்கு திருவிளையாடல் புரிந்து அருளிய அக்னிஸ்வரர் - கற்பகாம்பிகை
ஒரு நாள் காவிரிக்கு நீராடச் சென்ற ஹரதத்தர் அங்கு ஓர் புலையனும் புலைச்சியும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார். தான் செய்த பாவத்தால் புலைச்சியானதாகக் கூறி, அப்பாவம் நீங்க வேண்டி காவிரியில் நீராட போவதாக கூறினாள். அவளை புலையன் தடுத்து நிறுத்தி விட்டு, இக்காவிரியாற்றிலுள்ள மணல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பதை அறிவாய். நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ லிங்கங்களை மிதிக்க நேரிடும். இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்த படியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் என்றான்.
இதனைக் கண்ட ஹரதத்தர், பார்க்கும் யாவும் சிவமயமாகக் காணும் இவனன்றோ சிவஞானி என்று எண்ணி அப்புலையனை நமஸ்கரித்து அவனது மிதியடியை தலை மீது வைத்துக்கொண்டார். அப்புலைய வடிவில் வந்தவர்கள் அக்னீசுவரரும், கற்பகாம்பிகையும் ஆவர். ஹரதத்தா, உனக்குத் திருவடி தீட்சை செய்யவே இப்படித் திருவிளையாடல் செய்தோம் என திருவாய் மலர்ந்து அருளினார் பெருமான்.
கோவில் நடை திறப்பு நேரம்
நடைதிறப்பு: காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் முகவரி
அருள்மிகு அக்னீசுவர சுவாமி திருக்கோவில்,
கஞ்சனூர் அஞ்சல்,
திருவிடை மருதூர் வட்டம்,

தஞ்சை மாவட்டம், 609 804.
கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
கோவில்பட்டி இந்து நாடார்உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்றுமுன்தினம் சிறப்பு பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காலை 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 9.30 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடந்தது. மாலை 5.30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை நடந்தது.
இன்று(புதன்கிழமை) காலை 7.25 மணிக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 11.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்படும். மாலை 5.30 மணிக்கு ஐந்தாம்கால யாகசாலை பூஜை நடக்கிறது.
நாளை (வியாழக்கிழமை) காலை 7.35 மணிக்கு விக்னேஷ்வர பூஜையை தொடர்ந்து 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 9.15 மணிக்கு தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்படும். காலை 9.45 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் பத்திரகாளியம்மன் கோவில் விமான கோபுரங்கள், மூலஸ்தானம் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காஞ்சீபுரம் தொண்டைமண்டல ஆதீனம் திருசிற்றம்பல ஞானபிரகாச தேசிய பரமாச்சார்ய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதினம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள், திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை தூத்துக்குடி ஆர். செல்வம் பட்டர் குழுவினர் நடத்தி வருகின்றனர்.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மண்டல பூஜை ஆரம்பமாகும்.
கோவில் கும்பாபிஷேகம் ஏற்படுகளை கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், துணை தலைவர் டி.கே.டி.திலகரத்தினம், செயலாளர் எம்.பி.சி.மாணிக்கம், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், கவுரவ ஆலோசகர்கள் எஸ்.எஸ்.டி.சி.ராஜதுரை, எஸ்.எஸ்.டி.கே.கணேஷ்பாபு, என்ஜினீயர் கே.ஜெயபால் மற்றும் உறுப்பினர்கள் செயது வருகிறார்கள்.

விநாயகர் விரதத்திற்குரிய மிக சிறந்த தினங்களில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினமும் ஒன்று. இன்று விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.
ஆவணி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்திற்கு பசும் பால் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோவிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.
ஆவணி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நீண்ட காலமாக நோய்களால் அவதிப்படுபவர்கள் நோய்கள் நீங்கி பூரண உடல் நலம் பெறுவார்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
திருப்புவனம் அருகே உள்ள திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரே உள்ள திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. அதன்படி சங்கடஹர சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு கோவில் நிர்வாகியும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார். பொதுவாக விநாயகர் ஆற்றங்கரை, குளத்தங்கரை, மரத்தடியில் தான் காட்சியளிப்பார். ஆனால் இந்த கோவிலில் தெற்குமுகமாக விநாயகர் அருள்பாலிக்கிறார்.
இங்குள்ள விநாயகரை வழிபட்டால் கடன் தொல்லை, முன்னோர் சாபங்கள், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

ஒருவரின் கிரக நிலை சரியாக இல்லை என்றாலும் கால நிலை சரியாக இல்லை என்றாலும் பைரவர் வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலன்களைத் தரும்.
கடன் பிரச்சனை என்பது நமது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் தெம்பு இல்லாமல் செய்து விடுகிறது. கடன் பிரச்சினையை எளிதில் தீர்க்கும் சக்தி பைரவருக்கு உண்டு. இதனால் கடன் பிரச்சினையைத் தீர்க்கும் பைரவர் பரிகாரத்தை எப்படி செய்வது என்று இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு சுத்தமான வெள்ளை நிற துணியில் 27 மிளகுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய மூட்டை போல கட்டி உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். பின்னர் பைரவரை நினைத்து அவர்கள் மந்திரங்களை சொல்லியவாறு பிரார்த்தனை செய்து வாருங்கள்.
அதேபோல் மாலையில் பைரவர் சன்னதிக்குச் சென்று அங்குள்ள பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வாருங்கள். பைரவர்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர் காலபைரவர் என்று சொல்வதுண்டு. கோடி கோடியாக எவ்வளவு கடன் இருந்தாலும் கால பைரவரை வணங்கி வரும் நிலையில் அந்தக் கடன்கள் அனைத்தையும் பைரவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒருவரின் கிரக நிலை சரியாக இல்லை என்றாலும் கால நிலை சரியாக இல்லை என்றாலும் பைரவர் வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலன்களைத் தரும். நமது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றும் சக்தியும், ஆற்றலும் பைரவ பகவானுக்கு உள்ளது. அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த மிளகு முடித்து வைத்து நன்கு நனைத்து தீபமேற்றி பைரவர் அஷ்டகம் வாசித்தால் போதுமானது. ஒன்பது வாரங்களில் உங்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி உங்கள் கடன் பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும்.
இதையும் படிக்கலாம்...அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்- பெண்ணாடம்
திருவெறும்பூர் காசி விசுவநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9-ந் தேதிகளில் 3 நாட்கள் மட்டும் மூலவர் காசிவிசுவநாதர் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுவது வழக்கம்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே திருச்சி-கல்லணை சாலையில் சர்க்கார்பாளையத்தில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த காசிவிசுவநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9-ந் தேதிகளில் 3 நாட்கள் மட்டும் மூலவர் காசிவிசுவநாதர் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுவது வழக்கம். இது சூரிய வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சூரிய வழிபாடு நேற்று அதிகாலை நடந்தது.
சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும்போது வழிபாடு நடத்தினால் நல்ல பலன்தரும் என்பதால், இந்த அரியநிகழ்ச்சியை காண கோவில் வளாகத்தில் அதிகாலையில் இருந்தே திரளான பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய ஒளி துல்லியமாக சிவலிங்கத்தின் மீது விழவில்லை. அதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) இந்த சூரிய வழிபாடு நடக்கிறது.

ஒருமுறை சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்தலால் இந்த ஊரில் கலிக்கம்ப நாயனார் தன்னுடைய மனைவியின் கையை வெட்டி விட்டார்.
இறைவன்: சுடர்க்கொழுந்துநாதர், பிரளயகாலேஸ்வரர்
இறைவி: கடந்தைநாயகி
தீர்த்தம்: பெண்ணை நதி
பாடியோர்: சம்பந்தர், அப்பர்
சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 2 வது ஆலயம். இந்திரன் தேவலோகத்துக்கு பூ வேண்டி இரண்டு தேவகன்னிகளை பூலோகம் அனுப்பி பூ கொண்டு வர சொன்னான். தேவகன்னிகைகள் பூத்தோட்டத்தில் இருந்த பூவை தேவலோகம் எடுத்து செல்வதற்கு பதில் அங்கே இருந்த சிவலிங்கத்திடம் பக்தி மேலிட அதற்கு பூஜை செய்தார்கள். கன்னியரை காணாத இந்திரன் முதலில் காமதேனு பசுவையும் பின்பு தன்னுடைய ஐராவாத யானையையும் அனுப்பி வைத்தான். அவைகளும் சிவலிங்கத்துக்கு தொண்டு செய்ய இந்திரன் அவைகளை காணாததால் கோபத்துடன் பூலோகம் வந்தான். தன்னால் அனுப்பப்பட்ட அனைவரும் சிவ பூஜை செய்வதை பார்த்து தானும் சிவபூஜை செய்து சிவன் அருள் பெற்று அனைவருடனும் இந்திராலோகம் சென்றான். பெண் (தேவகன்னியர்), ஆ (காமதேனு பசு) மற்றும் கடம் (வெள்ளையானை) இறைவனை வணங்கியதால் பெண்ணாகடம் என்று பெயர் பெற்றது.
ஒருமுறை சிவபெருமான் உலகத்தை அழித்தார். இந்த தலம் மட்டும் வெள்ளத்தால் முழுகவில்லை. தேவர்கள் சிவனிடம் உயிர்களை இந்த ஊரில் வைத்து காக்கும்படி வேண்டியதால் சிவன் நந்திக்கு வெள்ளத்தை தடுக்க ஆணை பிறப்பிக்க நந்தி ஊரை நோக்கி திரும்பி வெள்ளத்தை திசை மாற்றி உலக்த்தை காத்தது. இதனால்தான் இறைவன் பிரளயகாலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அப்பர் சுவாமிகள் இத்திருகோவிலில் திருப்பதிகம் பாடி தன் தோளின்மேல் சூலக்குறியும், இடபக்குறியும் பொறித்தருல பெற்ற தலம். மறைஞானசம்பந்தர் அவதார ஸ்தலம். மெய்கண்டதேவரின் தந்தை அச்சுத காளப்பர் வாழ்ந்த ஊர். இங்கு வயல்கள் நடுவே கார்காத்த வெள்ளாளர்கள் மெய்கண்டாருக்கு அழகிய திருகோவில் ஒன்றை அமைத்து உள்ளார்கள்.
ஒருமுறை சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்தலால் இந்த ஊரில் கலிக்கம்ப நாயனார் தன்னுடைய மனைவியின் கையை வெட்டி விட்டார். இறைவன் அருளுடன் அவரின் கையை திரும்பி அளித்தார். இத்தலத்தில் சிவனை வழிபட்டால் கை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 5.00 – 9.00
போக்குவரத்து:
விருதாச்சலத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. விருதாச்சலத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
கோவில் முகவரி:
அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருகோவில்,
பெண்ணாடம் அஞ்சல்
திட்டக்குடி வட்டம்,
விருத்தாசலம் வழி,

கடலூர் மாவட்டம். 606105.
இதையும் படிக்கலாம்..சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜை நிறைவு
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. 16-ந்தேதி, புகழ் பெற்ற நிறை புத்தரிசி பூஜை நடந்தது. தொடர்ந்து, 21-ந்தேதி திருவோண சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தது. கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆவணி மாத பூஜை நிறைவு நாளான நேற்று சபரிமலையில் சதயம் நாள் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன், 25 கலச பூஜை, களபாபிஷேகம், மாலையில் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து படி பூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவையும் நடந்தது. ஆவணி மாத பூஜைகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று இரவு 9 மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்பட்டது.
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின், 21-ந் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால், ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா? இதில் கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாருங்கள்.
இயேசு எருசலேம் கோவிலில் பரி சேயரையும், மறைநூல் அறிஞர்களையும், குருக்களையும், மக்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது, “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.
மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும், கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள் என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.
அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார். வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்று தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.
பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில்கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலரே’’ என்று உவமையை முடித்தார்.
இந்த உவமையை படிக்கும் நாமும் திருமண ஆடை எது என்று அறியாமல் திகைப்படைகிறோம். ஆனால், நம் அனைவருக்கும் திருமண ஆடையை அளிப்பதற்காகவே, இயேசு, விண்ணிலிருந்து உலகுக்கு வந்தார். அது அவருடைய அன்பின் புதிய உடன்படிக்கை.
நம் பழைய வாழ்வுக்குப் பாவ மன்னிப்பும், புது வாழ்வுக்குத் தூய ஆவியும் இயேசுவால் இலவசமாக வழங்கப்படுகின்ற திருமண ஆடையாகும். இயேசு அளித்த திருமண ஆடையை அக்காலத்திலிருந்த குருக்களும், மறைநூல் அறிஞர்களும், பரிசேயரும், யூதர்களும் அறியவோ, அணியவோ விரும்பவில்லை. எனவே அவர்களிடமிருந்து இறையாட்சி நீக்கப்பட்டது. அவர்களைப் போலவே, இப்போது திருச்சபையில் மீட்பு பெற்றவர் என்று எண்ணும் நம்மில் பலரும் அறியாமலும் அணியாமலும் இருக்கிறோம். நாம் அழைப்பு பெற்றவர்களாக இருந்தாலும், தெரிந்துகொள்ளப்பட்ட சிலராக இருக்கிறோமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.
திருத்தூதர் பவுல் நம்மைக் குறித்து, “இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது. இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டே இருந்தாலும் ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ள மாட்டார்கள்”, என்று கூறுகிறார். மேலும், அவர் பரிசேயரையும் நம்மையும் ஒப்பிட்டுக் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். “இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால், ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா? இதில் கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாருங்கள். தவறி விழுந்தவர்களின் மேல் கண்டிப்பும் உங்கள்மேல் பரிவும் அவர் காட்டுகிறார். நீங்கள் அவருடைய பரிவைப் பெறுபவர்களாக வாழாவிட்டால் நீங்களும் தறிக்கப்படுவீர்கள்”.