search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் மூடல்
    X
    கோவில் மூடல்

    வழிப்பாட்டு தலங்களுக்கு தளர்வு எப்போது?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

    வெள்ளிக் கிழமைகளில் பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெறும். சனி, ஞாயிறு கிழமைகளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம்.
    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை முடிவு கொண்டுவர 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நோயின் தாக்கத்தை பொறுத்து ஒவ்வொரு முறையும் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    தற்போது கொரோனா 2-வது அலை குறைந்துள்ள நிலையில் 3-வது அலையை தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

    ஆடி மாதம் வழிபாட்டுத் தலங்களில் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பதால் மக்கள் கூட்டத்தை குறைக் கும் வகையில் ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வு களில் கோவில்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

    வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 கிழமைகளிலும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூடவும், வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெறவும் உத்தரவிடப்பட்டது.

    இதன் காரணமாக 3 வாரமாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்தாலும் வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்வதால் கோயில் வாசலில் வைத்து திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்று முதல் பல்வேறு கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.

    தியேட்டர்கள் திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் வருகிற 1-ந்தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தனியார் நடத்தும் மது கூடங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழிபாட்டுத் தலங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது.

    வாரத்தில் 3 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் அனுமதி இல்லை என்பதால் மற்ற 4 நாட்களும் பக்தர்கள் கூட்டம் கோவில்களில் அதிகளவில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெறும். சனி, ஞாயிறு கிழமைகளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம்.

    பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு வழிபாட்டு தலங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சாமி தரிசனம் மற்றும் பிரார்த்தனைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    அடுத்த தளர்வின் போது வழிபாட்டுத்தலங்கள் மீதான கட்டுப்பாடுகளையும் அரசு அகற்றும் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×