என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குலசேகரன்பட்டினம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரமும் கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு பக்தர்களின்றி நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் நாளான 15-ந்தேதி இரவில் நடைபெறுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டும் தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு, காளி, சிவன், பார்வதி, பிரம்மன், விஷ்ணு, நாராயணர், ராமர், லட்சுமணர், அனுமார் உள்ளிட்ட வேடங்களை அணியும் பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளனர். அவர்கள், குலசேகரன்பட்டினம் சிதம்பரேசுவரர் கோவில் கடற்கரையில் புனித நீராடி, துளசிமாலையை கடலில் நனைத்து, கோவில் முன்பு வந்து அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.
வழக்கமாக துளசிமாலையை அம்மன் பாதத்தில் வைத்து பூசாரி எடுத்து கொடுத்த பின்னர் பக்தர்கள் அணிவார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணமாக, கோவில் முன்பு பெரியவர்கள் அல்லது குழந்தைகளிடம் துளசிமாலையை கொடுத்து பக்தர்கள் அணிந்து கொள்கின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குலசேகரன்பட்டினம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, நேற்று கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள், கடலில் புனித நீராடி, கோவில் வெளிப்பிரகார மண்டபத்தில் துளசிமாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.வருகிற 6-ந்தேதி தசரா திருவிழா கொடியேற்றம் நடந்ததும், விரதம் இருந்து வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலிப்பார்கள். பின்னர் 10-ம் நாளில் சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவிலில் செலுத்துவார்கள்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவ விழா 4-வது நாளில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகியோருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி, மகா ஆரத்தி நடந்தது.
அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் ஊர்வலமாக வந்து விநாயகர், செங்கல்வராயர், மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகியோருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
பின்னர் நைவேத்தியம், மகாதீபாராதனை, மந்த்ர புஷ்பம் நடந்தது. உற்சவத்தில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் மற்றும் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.

சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். இன்று சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும் மந்திரத்தை பார்க்கலாம்.
அகத்தியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி
போகர் மூல மந்திரம்
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி
திருமூலர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி
இடைக்காடர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி
கருவூரார் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி
கோரக்கர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி
குதம்பை சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி
சட்டைமுனி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி
சிவவாக்கியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி
சுந்தரானந்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி
கொங்கணர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி
வான்மீகர் மந்திரம்
ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி
கமலமுனி மந்திரம்
ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி
மச்சமுனி மந்திரம்
ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி
பதஞ்சலி மந்திரம்
ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி
இராமத்தேவர் மந்திரம்
ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி
தன்வந்த்ரி மந்திரம்
ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி
ஓம் குருவே போற்றி போற்றி

சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் இரவு வாடாயாத்து பிரம்மோற்சவ விழா கொடியிறக்க நிகழ்ச்சி உற்சவத்தில் விநாயகர் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 10-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம், மதியம் அபிஷேகம் ஆகியவை நடந்தது.
இரவு வாடாயாத்து உற்சவத்தில் விநாயகர் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து ஏகாந்த சேவை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 11-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை மூலவர், உற்சவருக்கு அபிஷேகம், இரவு அதிகார நந்தி வாகன உலா நடக்கிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உற்சவர் பத்மாவதி தாயார், பரிவார தெய்வங்களுக்கும், விமான கோபுரம், தங்கக் கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று அதிகாலை பத்மாவதி தாயாரை துயில் எழுப்பி சுப்ர பாத சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை செய்யப்பட்டது. காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை பவித்ர சமர்ப்பணம் நடந்தது.
அப்போது மூலவர் மற்றும் உற்சவர் பத்மாவதி தாயார், துணைச் சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பரிவார தெய்வங்களுக்கும், விமான கோபுரம், தங்கக் கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. மாலை 6 மணியில் இருந்து 7.30 மணி வரை யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடந்தன.
உற்சவத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி, கோவில் துணை அதிகாரி கஸ்தூரிபாய், உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி, கோவில் அர்ச்சகர் பாபுசுவாமி, கோவில் கண்காணிப்பாளர் மது ஆகியோர் பங்கேற்றனர்.

நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.
யானைத்தலை விளக்கம்
தலை என்பது உள் அவயங்களான மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு. அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை. யானைத்தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வுகிட்டும்.
இழந்த சொத்துக்கள் பெற
நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.
வல்லபை கணபதி
குழந்தைப் பேறுக்குத் தயாராகஇருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.
மாங்கல்ய தோஷம் மற்றும் திருமணத்தடை அகல
வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.
கூடுதுறையில் பக்தர்கள் புனித நீரட மற்றும் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை கடந்த 6 மாதமாக நீடித்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானியில் சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலை யொட்டி பவானி ஆறு, காவிரி ஆறு, அமுத நதி என மூன்று நதிகள் சங்க மிக்கும் கூடுதுறை ஆறு ஓடுகிறது.
பவானி கூடுதுறைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வருவார்கள். மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
கூடுதுறைக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வணங்கி விட்டு செல்வார்கள். மேலும் பொது மக்கள் ஆற்றில் குளித்து விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு ஆற்று பகுதியில் உள்ள மரத்தடி விநாயகரை வழிபடுவார்கள்.
இதற்காக ஆற்று பகுதியில் படித்துறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் ஆண்கள் குளிப்பதற்கு தனித்தனியே படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆற்றில் குளித்து விட்டு சங்கமேஸ்வரரை தரிசனம் செய்வார்கள்.
வெளி மாநில பக்தர்கள் வசதிக்காக குளிக்கும் இடம், கழிப்பிடம் மற்றும் ஓட்டல்களில் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மற்றும் நீர்நிலைகளில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் பவானி கூடுதுறை, பவானிசாகர் அணை பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதே போல் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கூடுதுறையில் பக்தர்கள் புனித நீரட மற்றும் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை கடந்த 6 மாதமாக நீடித்து வருகிறது.
இதனால் கூடுதுறைக்கு வரும் பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்து செல்கிறார்கள். மேலும் அமாவாசை, பவுர்ணமி நாட் களில் தங்கள் முன்னோர் களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் செய்வது அறியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை ராமபிரானும், சீதாதேவியும், அனுமனும் வழிபாடு செய்து அருள்பெற்றுள்ளனர். இந்த ஆலயம் பற்றிய சில தகவல்கள் இங்கே பார்ப்போம்..
ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தியானது, வாகனம், விக்கிரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் தங்கத்தால் ஆனது.
கோவிலின் முதல் பிரகாரத்தில் 144 விக்கிரகங்களும், இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கோவிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள் தோறும் பூஜை நடத்தப்படுகிறது.
நம் நாட்டில் புனிதத் தலங்களாக நான்கு தலங்கள் மட்டும் கருதப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ராம்நாத் என்ற ராமேஸ்வரம். எஞ்சிய மூன்று தலங்களும் வட நாட்டில் அமைந்து இருப்பன. அவை துவாரகநாத், பத்ரிநாத், கேதார்நாத். இவை மூன்றும் வைணவத் தலங்களாகும்.
இக்கோவிலுள்ள நந்தி வேலைபாடுமிக்க சுதையினாலான பெரிய உருவமுடையதாகும். இந்த நந்தி 23 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் கொண்டது.
தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற முப்பெரும் சிறப்புக்களைக் கொண்டது, ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாதர் கோவில், ராமபிரானால் வழிபடப்பட்ட பெருமையுடையது.
காசி யாத்திரை சென்றவர்கள், ராமேஸ்வரத்திற்கு சென்று தனுஷ்கோடியில் தீர்த்தமாடி ராமேஸ்வர லிங்கத்தை வழிபட்டால் தான், காசி யாத்திரை முழுமை பெறும் என்பது ஐதீகம்.
இத்தலத்து கோவிலில் எழுந்தருளியுள்ள ராமநாதப் பெருமானுக்கு, நாள்தோறும் கங்கையில் இருந்து கொண்டுவரப்படும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுவது தனிச் சிறப்புடையது.
ராமேஸ்வரம் கோவிலில் ஒரே சங்கினுள் அடுத்தடுத்து இரு சங்குகளைக் கொண்ட தெய்வீக திரிசங்கு உள்ளது. இது தவிர ராமநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காகவே இத்தலத்தில் பிரத்யேகமாக 1008 அபிஷேகச் சங்குகள் இருக்கின்றன.
ராமேஸ்வரம் கோவிலில் முழுக்க, முழுக்க மூலிகைகளால் உருவாக்கப்பட்ட புதுமையான ஒரு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்துக்கு `வைணலிங்கம்' என்று பெயர்.
ராமபிரான் சூரிய குலத்தைச் சேர்ந்தவர். அந்த குலத்தின் நேரடி வாரிசாக நேபாள மன்னர் குடும்பம் கருதப்படுகிறது. எனவே நேபாள மன்னர்களின் குல தெய்வமாக ராமேஸ்வரம் தலம் திகழ்கிறது.
ராமேஸ்வரம் ஆலயத்துக்குள் பூஜை செய்யும் ஒவ்வொருவரும் சிருங்கேரி மகா சன்னிதானத்திடம் சிவாச்சாரிய தீட்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனந்த பத்மநாபசாமி விரத பூஜையை முன்னிட்டு சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பாத்ரபாதம் மாதத்தில் சுக்ல பட்ச சதுர்த்தசி திதி அன்று அனந்த பத்மநாபசாமி விரத பூஜை நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான அனந்த பத்மநாபசாமி விரத பூஜை நேற்று காலை சதுர்த்தசி திதியில் நடந்தது.
விரத பூஜை முடிந்ததும் உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வராகசாமி கோவில் அருகில் புஷ்கரணி கரையில் வைக்கப்பட்டார். அங்கு சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புஷ்கரணி புனிதநீரில் சுதர்சன சக்கரத்தாழ்வாரை மூன்று முறை மூழ்கி எடுத்து சக்கர ஸ்நானம் செய்விக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 9-வதுநாள், வைகுண்ட துவாதசி, ரத சப்தமி மற்றும் அனந்த பத்மநாபசாமி விரத பூஜை ஆகிய நாட்களில் மட்டுமே ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஏக தின பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்து சேவை நிகழ்ச்சியும், சரநாராயண பெருமாள் கோவிலில் நடைபெறும் என்பது சிறப்பாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஏக தின பிரம்மோற்சவம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவரான சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் சரநாராயண பெருமாள், திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு தோமால சேவை நடந்தது. பின்னர் 7 மணிக்கு ஏகதின பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு ஹம்ச வாகனத்திலும், 9 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 10 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 11 மணிக்கு சேஷ வாகனத்திலும், மதியம் 12 மணிக்கு கருட வாகனத்திலும், 3 மணிக்கு யானை வாகனத்திலும், 4 மணிக்கு சூர்ணோத்சவமும், மாலை 5 மணிக்கு குதிரை வாகனத்திலும் உற்சவரான சரநாராயண பெருமாள் எழுந்தருளி, கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து மாலை 6 மணிக்கு கோவிலில் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த சிறிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சரநாராயண பெருமாள் எழுந்தருளினார். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட கோவில் உள்பிரகாரத்தை தேர் சுற்றி வந்தது. பின்னர் 7 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. இருப்பினும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு பூஜை நடைபெறும்.
அந்த வகையில் நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், பக்தர்கள் வெளியில் நின்றவாறு சாமிதரிசனம் செய்து விட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மோசே கர்த்தருடைய சன்னிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான். (யாத் 6:12)
பட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மீது போர்த் தொடுக்கப் போகும் பெரிய படைக்கு தலைமை தாங்கி செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக எலி ஒன்று குறுக்கிடவே வாளை எடுத்துக் கொண்டு அதனை வெட்ட துரத்தினான். அவன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் எலி தப்பியோடிவிட்டது. சோர்ந்து போன இளவரசன், கேவலம் ஒரு எலியை கூட வெட்ட இயலாத நான் எப்படி எதிரி நாட்டோடு சண்டையிட்டு வெற்றி பெற போகிறேன் என்று எண்ணி, யுத்தத்திற்கு போகாமல் பின்வாங்கினான்.
சில நேரங்களில் இந்த இளவரசனை போல நாமும் சிறு, சிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய், நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்துவிடுகின்றோம். இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும்படி எகிப்து சென்ற மோசேக்கு தொடக்கத்தில் அந்த மக்களே செவி கொடுக்கவில்லை. எனவே சோர்ந்து போன அவன், இவர்களே எனக்குச் செவி கொடுக்காதபோது, எகிப்தின் ராஜா எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்று தயங்கி நின்றான். ஆனாலும் அதே மோசேயின் முன்னால் தேவன் அந்த நாட்டு மன்னனையே அடங்கிப் போகவைத்தார்.
நாம் பெரிய பலசாலிகளாக இருந்தாலும், சில நேரங்களில் சில சின்ன விஷயங்களில் நாம் தோற்றுப் போய் விடக்கூடும். நாம் மிகப்பெரிய திறமை சாலிகளாக இருந்தாலும், சாதாரண சில காரியங்களில் அந்தத் திறமை நமக்கு கை கொடுக்காமல் போக முடியும். மிக வலிமையான ஆவிக்குரிய நிலைகளை உடைய பலர் சில சின்னக்காரியங்களில், சாதாரண மனிதன் அடையும் வெற்றியைக் கூட அடைய முடியாமல், தோல்வி அடையும் வேளைகள் உண்டு. ஆனாலும் இந்தச் சின்ன தோல்விகள், பெரிய வெற்றிகளுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்பதை முடிவு செய்துவிட முடியாது.
ஏசுவை சிலுவையின் பாதையில் பின்பற்ற விரும்பிய பேதுருவால் அது கூடவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வேளை வந்தபோது, பேதுரு அதை விட மிகக்கடுமையான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பலத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தான். முதல் தோல்வி, முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்படவில்லை.
சிறிய சபை கூடுகையில் சில நிமிடங்கள் சில வார்த்தைகளை பிரசங்கிக்க வலுவின்றி நின்ற பலர், பிற்காலத்தில் லட்சம் பேர்களுக்கு முன்னால் நின்று பவுலைப் போல தைரியமாகப் பிரசங்கித்திருக்கிறார்கள். ஆம், சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
– சாம்சன் பால்