என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஏதாவது ஒரு தேய்பிறை அஷ்டமியில் விரதம் தொடங்கி, தொடர்ச்சியாக 11 தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளிப் பூ கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் குழந்தைபேறு கிடைக்கும்.
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், பைரவர் வடிவம் முக்கியமானது. பைரவருக்கு பல்வேறு தலங்களில் சன்னிதிகள் இருக்கின்றன. காசியில்தான் பைரவருக்கு தலைமைபீடம் அமைந்திருக்கிறது. அங்கு அவர் காலபைரவர் என்று போற்றப்படுகிறார். காரைக்குடி அடுத்த இலுப்பக்குடியில் சொர்ணாகர்ஷண பைரவர், சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்கள், ஸ்ரீவாஞ்சியத்தில் யோக பைரவர் என்று சிறப்புமிக்க பைரவர் வழிபாட்டு தலங்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், பைரவபுரம். இது அழிவிடைதாங்கி என்று அழைக்கப்படுகிறது.
கஷ்டங்களை போக்கும் சொர்ணகால பைரவர்
பழங்காலத்தில் இந்த ஊர் ‘அறவழித்தாங்கி’ என அழைக்கப்பட்டது. இந்த பகுதியை பல்லவர்களும் சோழர்களும் ஆட்சி செய்தபோது, இங்கு சைவ நெறி தழைத்தோங்கியது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு ஆட்சி செய்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான். இருவருக்கும் இடையே பெரும்போர் மூண்டது.
முதல் நாள் நடந்த போரில் சம்புவராயன் படைகள் சேதமடைந்தன. அன்று இரவு பைரவரை வேண்டி அடுத்த நாள் போரில் கலந்து கொண்டார். அடுத்தநாள் சம்புவராயன் பெரும் வெற்றி அடைந்தான். இந்த வெற்றியை அருளிய சொர்ண காலபைரவருக்கு பெரிய ஆலயம் ஒன்றை எழுப்பினான்.
இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதருகிறார். இங்கே பைரவரின் எட்டு கோலங்களையும் சுதை வடிவில் தரிசிக்கலாம். பிராம்மி சக்தியுடன் அசிதாங்க பைரவர், மகேஷ்வரியுடன் ருரு பைரவர், கவுமாரியுடன் சண்ட பைரவர், வைஷ்ணவியுடன் குரோதண பைரவர், வராகியுடன் உன்மத்த பைரவர், இந்திராணியுடன் கபால பைரவர், சாமுண்டியுடன் பீஷண பைரவர், சண்டிகையுடன் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்கள் அருள்கிறார்கள். ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்து நான்முகனாக ஆக்கினார், பைரவர். அந்த பிரம்மா வழிபட்ட தலம் இந்த ‘பைரவபுரம்’ என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கபாலம் ஆகியவற்றை தரித்தவராக மூன்று கண் கொண்டவராக பைரவர் தரிசனம் தருகிறார்.
வெள்ளிக்கிழமை மாலை வில்வத்தினால் அர்ச்சனை செய்துவந்தால், வறுமை நீங்கும். ஏதாவது ஒரு தேய்பிறை அஷ்டமியில் விரதம் தொடங்கி, தொடர்ச்சியாக 11 தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளிப் பூ கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் குழந்தைபேறு கிடைக்கும். 7 மிளகுகளை துணியில் கட்டி, நல்லெண்ணைய் விட்டு தீபம் ஏற்றினால், இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில், பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். நவக்கிரக தோஷங்களும் விலகும்.

திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ளது, அழிவிடைதாங்கி கிராமம். காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம்.
இதையும் படிக்கலாம்...நாளை இந்திரா ஏகாதசி: விரதம் அனுஷ்டிக்கும் முறையும்... கிடைக்கும் பலன்களும்
வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, கோபத்தை தவிர்த்தால், உங்கள் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள்.
அதிகாலையில் வீட்டின் முன்னால் சாணம் அல்லது தண்ணீர் தெளித்துக் கோலம் இடுங்கள். இதன்மூலம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். காலை எழுந்தவுடன் அஷ்டலட்சுமிகளின் பெயர்களோடு, போற்றி போற்றி என்று சொல்லலாம். பசுவின் முகத்தில் விழிப்பது அல்லது பசு கன்று வடிவ பொம்மைகளை படுக்கையறையில் வைத்துக்கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமைதோறும் ஐந்துமுக விளக்கேற்றுவது உகந்தது. பவுர்ணமி அன்று விஷ்ணுவிற்கு பழவகை நைவேத்தியம் செய்து அதை உட்கொள்வது நல்லது. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, கோபத்தை தவிர்த்தால், உங்கள் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள்.

நம்மால் முடிந்த பிரச்சினைகளை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கையில் ஒப்படைத்துவிட்டு, உனக்கான அடுத்த பணிகளைச் செய். நிம்மதி தானாக வரும்.
முனிவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தான், அந்த இளைஞன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவன், தன் வாழ்வில் அடிக்கடி சில பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே இருந்தான். அதனால் மனஉளைச்சலுக்கு ஆளானவன், தீர்வு வேண்டி முனிவரிடம் வந்திருந்தான்.
“சுவாமி.. தொடர் பிரச்சினைகளால் என் மனம் பலகீனம் அடைந்துள்ளது. என்னால் சரியாக தூங்கக்கூட முடியவில்லை. என் வாழ்வில் பிரச்சினைகளே வராமல் இருக்க வழி சொல்லுங்கள்” என்றான்.
“இங்குள்ள தோட்டத்தில் 100 ஒட்டகங்கள் உள்ளன. அவை என்ன செய்கின்றன என்று பார்த்துவிட்டு வா” என்றார், முனிவர்.
‘பிரச்சினைக்கு தீர்வு கேட்டால், வேலை வாங்குகிறாரே இந்த முனிவர்’ என்று நினைத்தபடியே ஒட்டகங்கள் இருந்த இத்திற்குச் சென்று திரும்பினான்.
வந்ததும், “சுவாமி.. 100 ஒட்டகங்களும் நின்று கொண்டு இருக்கின்றன” என்றான்.
அதற்கு முனிவர், “சரி.. அந்த ஒட்டகங்கள் அனைத்தும் தரையில் படுத்தவுடன், அங்குள்ள ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு, காலையில் திரும்பி வா” என்று அனுப்பிவைத்தார், முனிவர்.
காலையில் கண்களில் களைப்புடன் திரும்பி வந்தவனிடம் “என்ன நடந்தது?” எனக் கேட்டார் முனிவர்.
அதற்கு அந்த இளைஞன், “சுவாமி.. இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன. மற்றவைகளை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அதற்குள் வேறு சில ஒட்டகங்கள் எழுந்துவிட்டன. இப்படியே மாறி மாறி நடந்ததால், என்னால் தூங்கச் செல்ல முடியவில்லை” என்று பதிலளித்தான்.
முனிவர் சிரித்தபடியே, “வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளும் அப்படித்தான். சில பிரச்சினைகள் தானாகவே முடிந்துவிடும். சிலவற்றை நாம்தான் முடிக்க வேண்டும். ஆனால் ஒரு பிரச்சினை முடிந்தால் வேறு சில பிரச்சினைகள் எழத்தான் செய்யும். அனைத்து பிரச்சினைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால், இந்த உலகத்தில் யாராலும் தூங்க முடியாது.
நம்மால் முடிந்த பிரச்சினைகளை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கையில் ஒப்படைத்துவிட்டு, உனக்கான அடுத்த பணிகளைச் செய். நிம்மதி தானாக வரும்” என்றார், முனிவர்.
மனம் தெளிந்து வீடு திரும்பினான், இளைஞன்.

குளித்துமுடித்த பிறகு இறைவனை பூஜித்து விட்டு, குடும்ப பெரியோர்கள் மற்றும் உடனிருப்பவர்களை வணங்கி, பிறரிடம் மனம் நோகாதபடி பேசி அன்றைய காரியங்களைத் தொடங்க வேண்டும்.
அதிகாலையில் நாம் கண் விழித்தவுடன் நல்ல சிந்தனைகளை பற்றி மனதில் பதியவைக்க வேண்டும். நல்ல சொற்களைப் பேச வேண்டும். குறிப்பாக கண் விழித்ததும் விநாயகர் மற்றும் இஷ்ட தெய்வங்கள், குலதெய்வங்களை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பிறகு தாய் தந்தையர், பெரியோர், நமக்கு குருவாக விளங்குபவர்கள் ஆகியோரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.
இந்த மானசீக வழிபாடு தான் நமக்கு அன்றாட சூழ் நிலைகள் அனைத்தும் நன்றாக அமைய வழிவகுக்கும். குளித்துமுடித்த பிறகு இறைவனை பூஜித்து விட்டு, குடும்ப பெரியோர்கள் மற்றும் உடனிருப்பவர்களை வணங்கி, பிறரிடம் மனம் நோகாதபடி பேசி அன்றைய காரியங்களைத் தொடங்க வேண்டும். இறைவா இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய வேண்டும் என்று எழுந்தவுடன் மூன்று முறை உச்சரிப்பது நல்லது.

இந்த ஆலயத்தில் அனைத்துமே சாத்தாயி அம்மன் தான். அன்னைக்கு நான்கு கரங்கள். பாம்பு, பம்பை, சூலம், கிண்ணங்களை கரங்களில் தாங்கி, பீடத்தில் அமர்ந்த நிலையில் இன்முகத்துடன் அன்னை காட்சிதருகிறாள்.
அம்பாள் : ஸ்ரீ சாத்தாயி அம்மன்
மூர்த்தி : கருப்புசாமி, விநாயகர், ஸ்ரீ பிராமி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ கௌமாரி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ வராஹி, ஸ்ரீ இந்திராணி.
தலவிருட்சம் : ஆலமரம்.
தலச்சிறப்பு : அன்னை சாத்தாயி அம்மனின் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மகாமண்டப திருப்பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கருவறையில் சப்த மாதர்களான பிராமி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி ஆகியோருக்கு நடுநாயகமாக, சாமுண்டியே சாத்தாயி அம்மன் என்ற திருநாமத்தில், கருவறையில் வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள். வலது புறம் சாஸ்தாவும் இடது புறம் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் அனைத்துமே சாத்தாயி அம்மன் தான். அன்னைக்கு நான்கு கரங்கள். பாம்பு, பம்பை, சூலம், கிண்ணங்களை கரங்களில் தாங்கி, பீடத்தில் அமர்ந்த நிலையில் இன்முகத்துடன் அன்னை காட்சிதருகிறாள்.
அன்னை தன் கழுத்தில் தேள் மாலை அணிந்திருக்கிறாள். ஆம்! அன்னையின் விக்கிரகம் தேள் மாலையுடனேயே காணப்படுகிறது. பொதுவாக இந்த ஊரில் தேள் யாரையும் கடிப்பதில்லை என்றும், கண்ணில் படும் தேளை யாரும் அடிக்க மாட்டார்கள் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். தேள் கடித்தால் அன்னையின் குங்குமத்தையும், விபூதியையும் பூசினால் தேளின் விஷம் விரைவாக இறங்கி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அன்னையின் இடது புறம் மலையாள கருப்புசாமியின் சன்னிதி உள்ளது. ஆதியில் பூமியில் கிடைத்த கருப்புசாமியின் விக்கிரகம் சேதமடைந்ததால், புதியதாக சுதையில் உருவான கருப்புசாமி சிலை தற்போது மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஆதி கருப்புசாமியின் சிலை, அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு : இந்த கோவில் ஏறத்தாழ 1000 வருடம் பழமையானது. களத்து மேடு ஊரின் மேல் திசையில் எட்டிய தொலைவு வரை நெல் விளையும் பூமிதான். இந்த வயல் வெளிகளுக்கு இடையே ஒரு ஆலமரம். அந்த இடம் வயல் வெளிகளை விட சற்றே உயரமாகக் காட்சி தரும். திடல் போல் அமைந்திருக்கும் அந்த இடம்தான் ஊரின் களத்து மேடு. வயலில் விளையும் நெற்கதிர்களை அறுவடை செய்து, கட்டு கட்டாகக் கட்டி, இந்தக் களத்துக்கு கொண்டு வருவார்கள். பின், அதனை சிறு கட்டுகளாக கட்டி தரையில் அடித்து நெல் மணிகளை உதிரச் செய்வார்கள். பிறகு அந்த நெல் குவியலைத் தூற்றி, சாக்கு மூட்டைகளில் கட்டி வண்டியில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு செல்வார்கள். காலையில் தொடங்கும் இந்தப் பணி மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வரை நீடிக்கும். ஊர்மக்கள் அனைவரும் பரந்து விரிந்து கிடந்த அந்த களத்து மேட்டையே பயன்படுத்துவார்கள்.
அறுவடையான நெல்லை வீட்டிற்கு ஏற்றிச் சென்ற பின், சில பெண்கள் களத்து மேட்டில் நான்கு திசையிலும் சிதறிக் கிடக்கும் தானியத்தை கூட்டி ஒன்று சேர்த்து எடுத்துச் செல்வார்கள். அன்றும் அப்படித்தான். ஒரு பெண்மணி சிதறிக் கிடந்த நெல்லை கூட்டிக் கொண்டிருந்தாள். களத்தின் நடுவே ஒரு சிறு பள்ளம். அதில் நிறைய நெல் மணிகள். அந்தப் பெண் குனிந்து அந்த நெல்லை கைகளால் அள்ள முற்பட்டாள். திடீரென ஒரு குரல் அசரீரியாய் ஒலித்தது. அந்தப் பெண் திடுக்கிட்டாள். பயந்து போய் அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றாள். அம்மன் அசரீரி.. ‘பயப்படாதே!. நான் தான் சாத்தாயி பேசுகிறேன். ஆடி வெள்ளத்தில் கேரளாவில் இருந்து அடித்து வரப்பட்டு, இந்த களத்து மேட்டில் ஒதுங்கியிருக்கிறேன். என்னுடன் மலையாள கருப்புசாமியும் இருக்கிறார். எங்களுடன் என்னையும் சேர்த்து ஏழு பெண்கள் வந்தோம்’ என்று அந்தக் குரல் கூறியது. பதற்றம் அடைந்த அந்தப் பெண், "தாயே! நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள்.
"எங்களுக்காக ஒரு கோவில் கட்டச்சொல். உலக்கை சப்தம் காதில் விழாத தொலைவில், ஊருக்கு வெளியே அந்தக் கோவில் இருக்க வேண்டும். நான் ஊரையும் ஊர் மக்களையும் காப்பாற்றுவேன்" என்று கூறியதுடன் அந்த குரல் ஓய்ந்தது. பதற்றத்தில் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்து போயிருந்தது. அதே பயத்துடன் ஊருக்குள் ஓடிச் சென்று, ஊர் பெரியவர்களிடம் நடந்ததைக் கூறினாள். ஊர் கூடியது மறுநாள் மேளதாளம், தாரை, தப்பட்டை முழங்க ஊர் மக்கள் அந்த களத்து மேட்டுக்குச் சென்றனர். சாத்தாயி அம்மன் சுட்டிக்காட்டிய இடத்தை கவனமாகத் தோண்டினர். அங்கே அழகான அம்மன் சிலை ஒன்று இருந்தது. கூடவே, கருப்புசாமி சிலையும் கிடைத்தது. அந்த அம்மனே சாத்தாயி அம்மன். ஊர் மக்கள் சிறு ஆலயம் கட்டி அங்கு அம்மனை பிரதிஷ்டை செய்தனர். கூடவே ஆறு அம்மன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருப்புசாமி என்ற மலையாள கருப்புசாமியை தனியாக பிரதிஷ்டை செய்தார்கள்.
நடைதிறப்பு : காலை 6.00 முதல் இரவு 8.00 வரை.
கோயில் முகவரி :
ஸ்ரீ சாத்தாயி அம்மன் கோவில்,
நங்கைவரம்,
கரூர் மாவட்டம்.

விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில், எந்த காரியத்தை செய்யும் பொழுது எந்தப் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பதை, நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.
விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில், எந்த காரியத்தை செய்யும் பொழுது எந்தப் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பதை, நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை வருமாறு:-
சாப்பிடும் பொழுது ‘கிருஷ்ணா’ என்றும், படுக்கச் செல்லும் பொழுது ‘பத்மநாபா’ என்றும், யுத்தத்தின் போது ‘சக்ரதாரி’ என்றும், வெளியே கிளம்பும் பொழுது ‘திரிவிக்ரமா’ என்றும், கெட்ட கனவு கண்டால் ‘கோவிந்தா, கண்ணா’ என்றும், காட்டு வழியில்செல்லும்பொழுது ‘நரசிம்மா’ என்றும், சுபகாரியப் பேச்சு நடக்கும் பொழுது ‘நாராயணா’ என்றும், மருந்து உண்ணும் பொழுது ‘மகா விஷ்ணு’ என்றும், ஆரோக்கியம் சீராக ‘மாதவா’, ‘கேசவா’ என்றும் நாமங்களை உச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு உச்சரித்தால் ‘உரு’ ஏறத் திரு ஏறும் என்பது போல காக்கும் கடவுளாம் விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கண்ணபிரானை புரட்டாசி மாதச் சனியில் வழிபட்டு பொன்னான வாழ்க்கை அமைத்துக் கொள்ளுங்கள்.

ஆலயங்களுக்குச் செல்லும் போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக இங்கே அறிந்து கொள்ளலாம்.
ஆலயங்களுக்குச் செல்லும் போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை இங்கே பார்ப்போம்.
ஆடம்பரமற்ற தன்மையுடன் செல்ல வேண்டும். மணம் இல்லாத மலர்களை இறைவனுக்கு சமர்பிக்கக் கூடாது.
வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருட்களை, இறைவனுக்கு அர்ப்பணிக்கக்கூடாது. ஆலயத்திற்குள் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும்.
அர்ச்சகர்கள் தரும் விபூதி, குங்குமம் பிரசாதங்களைக் கீழே சிந்தக்கூடாது.
கோவிலுக்குள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல் போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி நவம்பர் மாதம் 29-ந் தேதி காலை லட்சங்குன் குமார்ச்சனையும், மாலையில் அங்குரார்ப்பணமும் நடைபெறுகிறது.
தொடர்ந்து 30-ந் தேதி காலையில் கொடியேற்றமும், இரவில் சிறிய வாகன சேவையும் நடக்கிறது. டிசம்பர் மாதம் 1-ந் தேதி பெரிய வாகனம், 2-ந் தேதி சிம்ம வாகனம், 3-ந் தேதி கல்ப விருட்ஷ வாகனம், அனுமன் வாகனம், 4-ந் தேதி பல்லக்கு உற்சவம், வசந்தோற்சவம் மற்றும் கஜ வாகனம் நடக்கிறது.
5-ந் தேதி காலை சர்வ சக்திகளின் வாகனம், மாலையில் தங்கத் தேர், இரவில் கருட வாகனம், 6-ந் தேதி சூரிய ஒளி வாகனம், நிலவொளி வாகனம், 7-ந் தேதி தேர் திருவிழா, சர்வபூபால வாகனம், குதிரை வாகனம், 8-ந் தேதி பஞ்சமிதீர்த்தம், கொடி இறங்குதல் நடக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை, மாலை இருவேளையும் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசமும், வைரகிரீடமும், சுந்தரேசுவரர் சுவாமிக்கு வைர நெற்றி பட்டையும் சாற்றுப்படி செய்யப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். அதில் ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் வருகிற 4-ந் தேதி தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் தினமும் மீனாட்சி அம்மன் ஆடி வீதியில் வலம் வந்து அம்மன் சன்னதி கொலுச்சாவடியில் காட்சி அளிப்பர். முக்கிய நிகழ்வான கோ ரதத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி 6-ந் தேதியும், வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சி தரும் நிகழ்ச்சி 9-ந் தேதியும் நடைபெறும்.
மேலும் வருகிற 4-ந் தேதி தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை, மாலை இருவேளையும் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசமும், வைரகிரீடமும், சுந்தரேசுவரர் சுவாமிக்கு வைர நெற்றி பட்டையும் சாற்றுப்படி செய்யப்படும். முன்னதாக ஐப்பசி பூரம் வருகிற 31-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு ஏற்றி இறங்குதல் என்னும் சடங்குகள் நடந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படைவீடு ‘சுவாமிமலை.’ தந்தை - மகன் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.
சூரபத்மனை வென்ற பிறகு, முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த இடம் ‘திருத்தணி.’ சினம்கொண்டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள்ளவும், செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.
தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படைவீடு ‘சுவாமிமலை.’ தந்தை - மகன் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.
சூரசம்ஹாரம் நடந்த இடம் ‘திருச்செந்தூர்.’ மறைமுக எதிர்ப்புகள் அகல, செல்ல வேண்டிய இடம் இந்த திருத்தலமாகும்.
ஆண்டியையும் அரசனாக மாற்றுவேன் என்று தெரிவித்து, முருகப்பெருமான் அமர்ந்த இடம் ‘பழநி.’ எனவே பணத்தேவைகள் பூர்த்தியாக இந்தத் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், கைங்கர்யம் நடக்கிறது. பின்னர் தங்க வாசல் எதிரே உள்ள மணி மண்டபத்தில் காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.
தீபாவளி ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் காண்ட மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி கருடாழ்வார் எதிரே வைக்கப்படுகிறார். மலையப்பசாமிக்கு அருகில் மற்றொரு பீடத்தில் சேனாதிபதியான விஸ்வக்சேனரை எழுந்தருள செய்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து மூலவர் ஏழுமலையானுக்கு பிரதான அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள் செய்தும், ஆரத்தி காண்பித்தும், பிரசாதம் வழங்கியும் தீபாவளி ஆஸ்தானத்தை நிறைவு செய்கிறார்கள். மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு சஹஸ்ர தீபலங்கார சேவை நடக்கிறது.
தீபாவளி ஆஸ்தானத்தால் கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்..திருப்பதியில் 2-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரம் தரிசனம் ரத்து
தூய ஆவியின் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய பண்புகளை இறைவன் அளிக்கிறார்.
இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.
அவர் சீடர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள். தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்)’’ என்று கற்பித்தார்.
மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார் “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே. ஏற்கனவே கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படுகிறது.
பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?, முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?, தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி’’ என்றார்.
உலகிலுள்ள நம் நண்பர் உறக்கத்தில் இருக்கிறார், நம் தேவையை அறிந்தும் உதவி செய்யவில்லை, தொல்லையைத் தாங்கமுடியாமல் உதவுகிறார். ஆனால் இறைவன் உறங்குவதில்லை, கேட்குமுன்னரே நம் தேவையை அறிவார். ஆனால், நாம் கதவைத் தட்டவேண்டும், இறைவனைத் தேடவேண்டும், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கிறார்கள் என்றே இயேசு கூறுகிறார்.
அதேபோல கேளுங்கள் தரப்படும் என்பது வாக்கு மட்டுமல்ல, அது நம் நம்பிக்கையை குறிக்கிறது.

நமது நம்பிக்கையை அழிக்கும் சோதனைகளும், பெரும் துன்பங்களும் நம் அனைவரின் வாழ்விலும் ஏற்படுகிறது. இந்நேரங்களில், இறைவேண்டல் நமக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும், வழிகாட்டுதலையும் தருகிறது. நற்செய்தியைக் கைக்கொண்டு, இறையாட்சியின்படி செயல்பட இறைவனிடம் நாம் வேண்டுதல் செய்யவேண்டும். தூய ஆவியின் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய பண்புகளை இறைவன் அளிக்கிறார். இந்த வெகுமதிகளை நாம் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
இதையும் படிக்கலாம்..கடன்பட்ட இருவர்