என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சபரிமலையில் 26-ந்தேதி நடக்கும் மண்டல பூஜை விழாவில் ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மண்டல பூஜை முடிந்த பின்பு மகர விளக்கு திருவிழா தொடங்கும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது.
பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இவ்விழாவில் ஐயப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து நேற்று காலை ஊர்வலமாக புறப்பட்டது. 25-ந்தேதி மாலை 3 மணிக்கு தங்க அங்கி சபரிமலை சன்னிதானம் வந்து சேரும். அன்று மாலை 6 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
மறுநாள் 26-ந்தேதி மண்டல பூஜை விழா நடக்கும். அப்போதும் ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மண்டல பூஜை முடிந்த பின்பு மகர விளக்கு திருவிழா தொடங்கும்.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலை வருவார்கள். இந்த ஆண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்களுக்கு பாரம்பரிய பெருவழி பாதையும் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கவும், பம்பையில் புனித நீராடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏராளமான கன்னி சாமிகளும் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க வருகிறார்கள்.

திருப்பதியில் ஜனவரி 11 முதல் 14-ந்தேதி வரை 4 நாட்கள் அறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. பக்தர்கள் நேரடியாக வந்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜனவரி 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 12000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் கூடுதலாக 8 ஆயிரம் டிக்கெட் என 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மீண்டும் 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
ஏற்கனவே 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது. ஜனவரி மாதம் முதல் 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், 5 ஆயிரம் டிக்கெட்டுகள் நேரடியாகவும் வழங்கப்படுகிறது.
தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் திருப்பதி வந்து ஏமாற்றம் அடையும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தேவஸ்தானம் சார்பில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
இலவச தரிசனம் பெறும் பக்தர்களின் வசதிக்காக பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ நிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் திறக்கப்படுகின்றன. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் டிசம்பர் 30-ந்தேதி வழங்கப்படுகிறது.
கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவைகளை பக்தர்கள் ஆன்லைனில் கண்டுகளிக்க வரும் 26-ந்தேதி 5,500 நித்ய சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. 27-ந்தேதி வாடகை அறைகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
ஜனவரி 11 முதல் 14-ந்தேதி வரை 4 நாட்கள் அறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. பக்தர்கள் நேரடியாக வந்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதியில் கடந்த மாதம் கனமழை கொட்டித் தீர்த்து.
இதனால் கடந்த மாதம் 18-ந்தேதி முதல் டிசம்பர் 11-ந்தேதி வரை ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்து தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் ஜனவரி 10-ந்தேதி முதல் ஜூலை 10-ந்தேதி வரை 6 மாத காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் பழைய தரிசன டிக்கெட் எண் மூலம் ஆன்லைனில் புதிய தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 33,489 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 16,065 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தில் நேற்று நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான 14- ந்தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 9.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு பரமபதவாசல் கடக்கிறார். காலை 11 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். அங்கிருந்து புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். நம்பெருமாள் இன்று இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடத்தி காட்டப்படும்.
பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளிப்பார். அதன்பின் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பிப்பர்.
பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடுவர். அதன்பின் பல்வேறு வேதங்களை சொல்லியபடி நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றுவர்.
பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவிப்பர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்படும். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு வணங்குவர்.
பின்னர் காலை 8 மணிமுதல் காலை 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளிப்பார். காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்கும். அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் நாளை மறுதினம் (சனிக்கிழமை) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறும். அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றுமறையும் நடைபெறும். அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவுபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி, கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
ஏழாம் வீட்டில் நிற்கும் பாவ கிரகங்களுக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்தால் திருமண தடை அகலும். 7-ம் வீட்டில் எந்த கிரகம் இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஏழாம் வீட்டில் நிற்கும் பாவ கிரகங்களுக்கு பரிகாரம்.
7ல் சூரியன் திருவண்ணாமலையில் பாதாளலிங்க தரிசனம் செய்ய வேண்டும்.
7ல் செவ்வாய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பஞ்சலிங்க தரிசனம் செய்ய வேண்டும்.
7ல் சனி கும்பகோணம் அருகே உள்ள குத்தாலத்தில் பாதாள சனிபகவானை வழிபட வேண்டும். 7ல் ராகு ராமேஸ்வரத்தில் உள்ள பாதாள பைரவரை வழிபட வேண்டும்.
7ல் கேது காளஹஸ்தியில் உள்ள பாதாள விநாயகரை வழிபட வேண்டும்.
பணப் புழக்கம் அதிகரிக்க:
வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் பணப்புழக்கம் அதிகரிக்க சிகப்பு காட்டன் துணியில் சிறிது குங்குமப்பூ மற்றும் புதிதாக காலை வேளையில் பறித்த துளசி இலையை முடிந்து வைக்க, பணப்புழக்கம் அதிகரிக்கும். வார வாரம் இலைகள் மற்றும் குங்குமப்பூவை மாற்ற வேண்டும்.
சனியின் தாக்கம் குறைய:
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வர சனியினால் ஏற்படும் இன்னல்கள் குறையும். சனிதிசை, சனிபுத்தி, ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி நடப்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
குழந்தை பாக்கியம்:
குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் வியாழக்கிழமை இரவு 8-9 மணிக்குள் 21 மஞ்சள் நிற லட்டு தானம் தர குழந்தை பாக்கியம் உண்டாகும்.

ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது. மண்டலபூஜையையொட்டி அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் தங்க அங்கி ஊர்வலம் நேற்று காலையில் புறப்பட்டது.
முன்னதாக கோவிலில் தங்க அங்கிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன், உறுப்பினர்கள் மனோஜ், தங்கப்பன், மாவட்ட கலெக்டர் திவ்யா எஸ்.அய்யர் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்ட இந்த ஊர்வலம் இரவு ஓமல்லூரில் தங்கியது. இன்று (வியாழக்கிழமை) இரவு கோண்ணியிலும், நாளை (வெள்ளிக்கிழமை) இரவு பெரிநாட்டிலும் தங்கிய பிறகு தங்க அங்கி ஊர்வலம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு சென்றடையும்.
பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அன்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். தொடர்ந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து அலங்கார தீபாராதனை, வழக்கமான பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
26-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பகல் 11.55 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில்
மண்டல பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படுவதையொட்டி 25-ந் தேதி பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது.
41 நாட்கள் மண்டல பூஜை 26-ந் தேதி நிறைவடைகிறது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். அன்றைய தினம் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பிரசித்தி பெற்ற மகரஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெறும்.

இரவிபுத்தன்துறை புனித கேதரின் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித கேதரின் ஆலயம் புதிதாக புனரமைக்கப்பட்டு அதற்கான அர்ச்சிப்பு விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசை பாக்கியம், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்ள வந்த ஆயர்களை இரவிபுத்தன்துறை பங்கு மக்கள் மேளதாளங்களுடன் வரவேற்று ஆலயத்திற்கு அழைத்து சென்றார்.
பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசைபாக்கியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா நடந்தது. அதன்படி புனிதநீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து பேராயர் சூசைபாக்கியம் தலைமையில் முதல் திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் மறையுரையாற்றினார். ஆலயத்துக்குள் வைக்கப்பட்டுள்ள பீடம் மற்றும் சொரூபங்கள் அர்ச்சிக்கப்பட்டன. மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் வாழ்த்துரை வழங்கினார்.
இதையடுத்து ஆலயத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கு பணியாளர் இல்லம் மற்றும் ஆராதனை ஆலயம் ஆகியவை அர்ச்சிக்கப்பட்டன. தொடர்ந்து அன்பு விருந்து, ஒலி-ஒளி நிகழ்ச்சிகள் நடந்தது.
இதையடுத்து திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. விழாவானது இன்று தொடர்ந்து 31-ந்தேதி வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை, ஆலய கட்டுமான குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

நாகை மாவட்ட பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், நீலா மேல வீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வாய்மேட்டில் உள்ள பழனியாண்டவர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தியையொட்டி வல்லப கணபதிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பால், இளநீர், சந்தனம், நெய், தேன், தயிர் உள்ளிட்ட பொருட்களால் வல்லப கணபதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகர் கோவில், கற்பகவிநாயகர் கோவில், கட்சுவான் முனீஸ்வரர் கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார் கோவில் குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவில் விநாயகர் உள்ளிட்ட கோவில்களிலும் சங்கடஹர சதுர்ததி வழிபாடு நடந்தது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேகம் நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, கிறிஸ்துமஸ் மரம், குடில், ஸ்டார் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
சென்னை :
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகம் இழந்து காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நோய்ப் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்ட தொடங்கிவிட்டது. கீத பவனி, கிறிஸ்துமஸ் மரவிழா என தேவாலயங்களில் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருடைய நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் மரம், இயேசு பிறப்பு குறித்த குடில், ஸ்டார் மற்றும் ஒளிரும் விளக்குகள்தான். அதன்படி, கிறிஸ்தவர்கள் வீட்டில் ஸ்டார் மற்றும் ஒளிரும் விளக்குகளை தொங்கவிட்டு, குடில் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து வருகின்றனர்.
இதற்காக தேவையான பொருட்களை வாங்குவதற்காக அலங்கார பொருட்கள் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனை சற்று அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதுதவிர புத்தாடைகள் வாங்குவதற்காக ஜவுளி கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்தது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் இருந்தே தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும். பெரும்பாலான தேவாலயங்களில் நாளை மறுதினம் அதிகாலையில் ஆராதனை இருக்கும்.
கடந்த ஆண்டு நோய்ப்பாதிப்பு இருந்ததால், கடும் கட்டுப்பாடுகளுடன் தேவாலயங்களில் ஆராதனை நடந்தது. இந்த ஆண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆராதனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகவும், பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதுதான், ஹரிஷ்சந்திரகாட் கோவில். இது மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கிரேஷ்வர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவில் அதிசயங்களும், ஆச்சரியங்களும் மிகுந்த ஆலயங்கள் பல இருக்கின்றன. சில ஆலயங்கள் புராணங்களோடும், யுகங்களோடும், கலியுகத்தோடும் தொடர்புடையவையாகவும் அறியப் படுகின்றன. அப்படி ஒரு சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகவும், பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதுதான், ஹரிஷ்சந்திரகாட் கோவில். இது மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கிரேஷ்வர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்த ஆலயமானது கலாசூரி என்ற மன்னனால், கி.பி. 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன. இந்த கோவிலுக்கு அருகாமையில் ‘கேதாரேஸ்வரர்’ என்ற சிவலிங்கம் அமைந்த குகை ஒன்றும் இருக்கிறது. இது புராணக் கதைகளோடும், கலியுகத்தின் முடிவு பற்றிய குறிப்புகளைச் சொல்லும் அதிசயம் மிகுந்த கோவிலாகவும் பக்தர்களால் பார்க்கப்படுகிறது. இந்த கேதாரேஸ்வரர் சிவலிங்கம் அமைந்த குகையானது, நீரால் நிரம்பியதாக இருக்கிறது. இதில் எப்போதும் முழங்கால் அளவு நீர் நிரம்பிய நிலையிலேயே காணப்படும். மழை காலங்களில் இடுப்பளவு தண்ணீர் இருக்கும்.
நீர் நிரம்பிய இந்த குகையில் நீரின் மையத்தில் 5 அடி உயரத்தில் சிவலிங்கம் ஒன்று காணப்படுகிறது. இந்த சிவலிங்கத்தின் பெயர்தான், ‘கேதாரேஸ்வரர்’ என்பதாகும். இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. அந்த நான்கு தூண்களும், குகையின் மேல் பகுதியையும், பூமியின் அடிப்பகுதியையும் இணைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும், கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.
இந்த தூண்களில் தற்போது ஒற்றைத் தூண் மட்டுமே எந்தவித சேதாரமும் இன்றி முழுமையாக காணப்படுகிறது. மற்ற மூன்று தூண்களும் உடைந்து போய்விட்டன. ஒவ்வொரு யுகம் முடியும் போதும் ஒவ்வொரு தூண் அழிந்து விடுவதாகவும், தற்போது கலியுகத்தைக் குறிக்கும் தூண் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், கலியுகம் முடியும் தருவாயில், அந்த யுகத்தின் கடைசி நாளில் எஞ்சியிருக்கும் ஒற்றைத் தூணும் அழிந்துவிடும் என்பது இங்குள்ள ஐதீகமாக உள்ளது.
தூண்களுக்கு நடுவே அமைந்த சிவலிங்கத்தை சுற்றியுள்ள நீர் மிகவும் குளிர்ச்சியானது. இந்த நீருக்குள் இறங்கினால்தான், சிவலிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். மழைக்காலங்களில் இந்தக் குகைக்குள் இறங்கிச் சென்று சிவலிங்கத்தை தரிசனம் செய்வது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். கலியுகத்தைக் குறிக்கும் வகையில் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் அமைந்த இந்த ஆலயத்திற்கு சென்று வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய சிவபெருமானின் வடிவங்களைப் பற்றி இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கிரகங்களைக் கொண்டு ஒருவரின் ஜாதகத்தைக் கணிப்பதில், நட்சத்திரங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய சிவபெருமானின் வடிவங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன்
பரணி - சக்தியுடன் கூடிய சிவன்
கார்த்திகை - சிவபெருமான்
ரோகிணி - பிறை சூடிய பெருமான்
மிருகசீரிஷம் - முருகனுடன் இருக்கும் சிவன்
திருவாதிரை - நாகம் குடைபிடிக்கும் சிவன்
புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்
பூசம் - நஞ்சுண்ணும் சிவன்
ஆயில்யம் - விஷ்ணுவுடன் உள்ள சிவன்
மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்
பூரம் - அர்த்தநாரீஸ்வரர்
உத்ரம் - நடராஜ பெருமான்
ஹஸ்தம் - தியான கோல சிவன்
சித்திரை - பார்வதிதேவி, நந்தியுடன் சிவன்
சுவாதி - சகஸ்ரலிங்கம்
விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன்
உள்ள சிவன்
அனுஷம் - ராமர் வழிபட்ட சிவன்
கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்
மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்
பூராடம் - சிவ சக்தி கணபதி
உத்திராடம் - ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியுடன்
இருக்கும் சிவன்
திருவோணம் - விநாயகருடன், பிறைசூடிய சிவன்
அவிட்டம் - மணக்கோலத்தில் உள்ள சிவன்
சதயம் - ரிஷபம் மீது சக்தியுடன்
வீற்றிருக்கும் சிவன்
பூராட்டாதி - விநாயகரை மடியின் முன்புறமும்,
சக்தியை அருகிலும்
வைத்திருக்கும் சிவன்
உத்திராட்டாதி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்
ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்

தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்குடித்திட்டை கிராமத்தில் அமைந்துள்ள வசிஷ்டேஸ்வரர் கோவில் ஒன்பது அதிசயங்களை ஒருங்கே அமையப்பெற்றது.
1 ஒவ்வொரு யுகம் முடியும் போதும் பிரளயம் (வெள்ளப்பெருக்கு) ஏற்பட்டு, புதிய யுகம் தோன்றும். அப்படி ஒரு யுகத்தின் முடிவில் பூமியில் அதீத மழை பெய்து, வெள்ளப்பெருக்கு உண்டானது. உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அனைத்து பகுதிகளும் நீரில் மூழ்கிப் போயின. ஆனால் பூமியின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் மேடாக (திட்டு) காணப்பட்டது. ஏனெனில் அங்கு இறைவனின் அருள் இருந்தது. அந்த தலமே ‘தென்குடி திட்டை.’
2 பரம்பொருள் பல அல்ல.. ஒன்றுதான். ஆனால் அந்தப் பரம்பொருளே தன்னில் இருந்து ஒரு பகுதியை சக்தியாகப் பிரித்து உமாதேவியை உண்டாக்கினார். பரம்பொருளுக்கு நிகரானவள் சக்தி என்பதால், திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகரான உயர்ந்த பீடத்தில் அம்பாளும் வீற்றிருக்கிறார். இந்த அன்னையின் சன்னிதிக்கு மேல் உள்ள விதானத்தில் 12 ராசிக்கான கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தங்கள் ராசிக்குரிய கட்டத்தின் கீழ் நின்று வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
3 பிரளயத்தின் முடிவில் பரம்பொருளும், உமையும் இணைந்து மீண்டும் உலகையும், உயிரினங்களையும் படைக்க மும்மூர்த்திகளை தோற்றுவித்தனர். அவர்கள் இருண்ட பிரபஞ்சத்தைக் கண்டு அஞ்சினர். அலைந்து திரிந்து திட்டையை அடைந்து இறைவனை தொழுதனர். அப்போது பரம்பொருள், உடுக்கையை முழங்கினார். அதில் இருந்து வெளிப்பட்ட மந்திர ஒலிகள், மும்மூர்த்திகளின் அச்சத்தைப் போக்கி அமைதிப்படுத்தியது. அவர்களின் மாயை நீங்கி வேத அறிவை பெற்றனர். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழிலை செய்தனர்.
4 தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், தினம் ஒரு கலையாக தேய்ந்து வந்தார். அதில் இருந்து மீள திங்களூர் கயிலாசநாதரை வணங்கினார். இதையடுத்து சந்திரனின் சாபம் போக்கி, மூன்றாம் பிறையாக தன் சடைமுடியில் இறைவன் சூடிக்கொண்டார். சாபவிமோசனம் அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக, திட்டையில் அருளும் இறைவனுக்கு மேலே, சந்திரகாந்த கல்லாக சந்திரன் வீற்றுள்ளான். மேலும் காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு (24 நிமிடம்) ஒரு சொட்டு என்ற ரீதியில் இறைவனை நித்திய அபிஷேகம் செய்கிறான்.
5 ‘நமசிவய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவமே, சிவலிங்கம். திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆலயத்தின் மூலவரான வசிஷ்டேஸ்வரர், பிரதானமான ஐந்தாவது லிங்கமாக இருக்கிறார். எனவே இந்த ஆலயம் பஞ்ச லிங்க தலமாக போற்றப்படுகிறது. பஞ்ச பூதங்களும், பஞ்ச லிங்கங்களாக வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.
6 பொதுவாக ஒரு ஆலயத்தில் மூலவர் மட்டுமே பிரதானமாக வழிபடப்பட்டு, வரம் தரும் நாயகனாக விளங்குவார். ஆனால் திட்டை திருக்கோவிலில், சிவன், அம்பாள், விநாயகர், முருகப்பெருமான், குரு, பைரவர் ஆகிய 6 பேரும் தனித் தனியே அற்புதங்கள் நிகழ்த்தி, தனித்தனி வழிபாட்டுக்குரிய சன்னிதிகளோடு அருள்கிறார்கள். இவர்கள் பிரதான மூலவரைப் போல, பிரதான தெய்வமாக விளங்குவது சிறப்புக்குரியது.
7 பெரும்பாலான ஆலயங்களின் கட்டிடங்கள் கருங்கற்களாலும், சில செங்கற்களாலும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவற்றில் இருக்கும் கொடிமரம், விமானத்தில் உள்ள கலசம் போன்றவை உலோகங்களால் செய்யப்பட்டவையாக இருக்கும். ஆனால் இந்த திட்டை திருத்தலத்தில் கொடிமரம், விமானங்கள், கலசங்கள் கூட கருங்கற்களினால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
8 பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டார். அதன் ஒரு பகுதியாக திட்டைக்கு வந்து, மூலவரான வசிஷ்டேஸ்வரரை ஒரு மாத காலம் பூஜித்தார். இதையடுத்து அவரது தோஷம் நீங்கியது. எனவே இது காலபைரவ ஷேத்திரமாகவும் திகழ்கிறது. சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலக இந்த பைரவரை வணங்கலாம்.
9 நவக்கிரகங்களில் முதன்மையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். தான் பார்க்கும் இடங்கள் தோஷம் நிறைந்ததாக இருந்தாலும், தன் பார்வை பலத்தால் சுபமாக மாற்றுபவர். உலகத்தின் தனம், தான்யம், பொன், பொருள், பணம் உள்ளிட்டவற்றுக்கு அதிபதி. இப்படிப்பட்ட குரு, திட்டை தலத்தில் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி இங்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் ஆலயம், வைத்தீஸ்வரன் கோவில், காஞ்சிபுரம் கரகரேஸ்வர் கோவில்களில் இந்த சிற்பத்தை சுதை வடிவில் தரிசிக்க முடியும்.
சிவ நெறியின் பரம்பொருளாக போற்றப்படும் சிவபெருமானின் வடிவங்களில் முக்கியமானது, சதாசிவ வடிவம். சிவனுடைய 64 மூர்த்தங்களில் இதுவும் ஒன்று. வெண் நிறத்துடன் ஐந்து முகங்கள், பத்து கரங்கள், பதினைந்து கண்கள் கொண்டு காட்சி தருபவர் என்று இவரைப் பற்றி புராணங்கள் சொல்கின்றன.
நீங்கள் இங்கே படத்தில் பார்ப்பதும் சதாசிவ மூர்த்தியின் வடிவம்தான். இவரை ‘மகாசதாசிவ மூர்த்தி’ என்பார்கள். இவருக்கு 25 தலைகள், 50 கரங்கள், 75 கண்கள் இருக்கும். இதுவும் 64 திருவடிவங்களில் ஒன்றுதான். இவர் கயிலையில் வீற்றிருப்பவராக அறியப்படுகிறார். இவரைச் சுற்றி 25 மூர்த்திகளும் காணப்படுவர். இவரை கயிலையில் இருந்தபடி ருத்திரர்ளும், சித்தர்களும், முனிவர்களும் வணங்குவர்.
இந்த மகாசதாசிவ மூர்த்தியின் வடிவம், சிவபெருமானின் மற்ற வடிவங்களைப் போல, கோவில்களில் சிலை வடிவாக இருப்பதில்லை. பெரும்பாலும் இவை கோவில் கோபுரங்களில் சுதை வடிவில்தான் காணப்படும். தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் ஆலயம், வைத்தீஸ்வரன் கோவில், காஞ்சிபுரம் கரகரேஸ்வர் கோவில்களில் இந்த சிற்பத்தை சுதை வடிவில் தரிசிக்க முடியும்.