என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ராமன்புதூர் கார்மல் நகர் திருக்குடும்ப ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், ராமன்புதூர் கார்மல் நகரில் திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை திருப்பலியும், மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும் நடைபெறும்.

    தொடர்ந்து 6.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. ஆலஞ்சி பங்குதந்தை மரிய சூசை வின்சென்ட் கொடியை அர்ச்சித்து ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்குகிறார். தேவசகாயம் மவுண்ட், மறைவட்ட முதல்வர் அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் மறையுரையாற்றுகிறார்.

    இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெறும்.

    25-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது.

    26-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். அன்று காலை முதல் மாலை வரை நற்கருணை ஆராதனை நடக்கிறது. மாலையில் 6 மணிக்கு ஜெபமாலையும், 6.30 மணிக்கு திருப்பலியும் நடைபெறும்.

    27-ந் தேதி காலை 6.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. 28-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலி, மதியம் 12 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6.30 மணிக்கு திருப்பலி, மறையுரை ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை போன்றவையும் நடக்கிறது.

    வருகிற 31-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு நன்றி வழிபாடும், 11.30 மணிக்கு புத்தாண்டு திருப்பலியும் நடைபெறும். ஜனவரி 1-ந் தேதி காலை மற்றும் மாலையில் திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருக்குடும்ப ஆலய திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் ஜான் பெனிட்டோ தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சகாய ஆனந்த் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 2 மணிக்கு தேர்ப்பவனியும், மாலை 6 மணிக்கு திருப்பலி, கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சகாய பிரபு, கார்மல் நகர் பங்கு தலைவர் ஜோசப் ஆன்றனி, செயலாளர் டூரிங் ஆன்றனி தனிஷ், பொருளாளர் லியோன் ஜேசுரெத்னம் ஆகியோரின் வழிகாட்டுதலில் பங்கு செயற்குழு உறுப்பினர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும்.
    ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். அதற்கு வசதிப்படாதவர்கள் புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடலாம். ஸ்ரீஆஞ்சநேயரின் திருவுருவப் படத்தையோ அல்லது ராமர் பட்டாபிஷேகத்தையோ பூஜையில் வைத்து, அவருக்கு நைவேத்தியமாக அவரவர் வசதிக்கேற்ப பழங்களையும், வடை போன்ற இன்ன பிறவற்றையும் சமர்ப்பிக்கலாம்.

    துளசி மாலையும், வெற்றிலைச்சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விசேஷமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ‘ஸ்ரீராமஜெயம்’ அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம என்ற மந்திரத்தை 54 முறை அல்லது 108 முறை தியானிக்க வேண்டும். அதன்பிறகு தமது பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டினால் அர்ச்சனை செய்ய வேண்டும். கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

    ஓம் ஹம் ஹனுமதே நம... என்ற மந்திரத்தைச் சொல்லி அனுமனின் தலையில் துளசிகளும் வாசனை மலர்களும் வைத்தால் கஷ்டங்கள் யாவும் பறந்து போகும். அனுமனின் ஆரத்தியின்போது 5, 11, 50, 108 நெய் நிரப்பிய சிவப்பு திரியைப் பயன்படுத்த வேண்டும்.

    கோதுமையில் செய்த ரொட்டியைப் பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம், வாழைப்பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.

    ஆஞ்சநேயரின் சரீரத்தில் தைலம் கலந்த செந்தூரத்தைப் பூச வேண்டும். இவ்வாறு செய்வதால் விரும்பிய பலன்களைப் பெறலாம்.

    ஆஞ்சநேய விரதம் இருந்தால் பிரிந்து சென்ற கணவன்-மனைவி வாழ்வில் ஒற்றுமையாக இருப்பர். பகை மாறி வெற்றி உண்டாகும். தாய், தந்தை, அண்ணன், தம்பி உறவு பலம்பெறும். ஆத்ம பலம், சம்பத் பலம் ஆகிய ஆறு வகையான பலன்களும் நிரந்தரமாக கிடைக்கப்பெறுவர்.

    அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம்.
    தனம், தான்யம் என்ற அஷ்ட ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியான மகாலட்சுமி அஷ்டலட்சுமியாக விளங்குகிறாள். அவர்கள் வீற்றிருக்கும் திசைகள் பின்வருமாறு:-
    தனம், தான்யம் என்ற அஷ்ட ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியான மகாலட்சுமி அஷ்டலட்சுமியாக விளங்குகிறாள். வித்யாலட்சுமி, தனலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, மோட்சலட்சுமி, வீரியலட்சுமி, ஜெயலட்சுமி, சௌபாக்கிய லட்சுமி என்று அஷ்டலட்சுமிகள். அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வீற்றிருக்கும் திசைகள் வருமாறு:-

    கிழக்கில் - வித்யாலட்சுமி
    தென்கிழக்கில் - தனலட்சுமி
    தெற்கில் - சந்தானலட்சுமி
    தென்மேற்கில் - தைரியலட்சுமி
    மேற்கில் - மோட்சலட்சுமி
    வடமேற்கில் - வீரயலட்சுமி
    வடக்கில் - ஜெயலட்சுமி
    வடகிழக்கில் - சௌபாக்கியலட்சுமி என்று அஷ்ட திக்குகளில் அஷ்ட லட்சுமிகளாக வாசம் புரிகின்றாள்.
    ஆஞ்சநேயர் கோவில்களில் கொடுக்கப்படும் மூன்று நிறக் கயிறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
    ஆஞ்சநேயர் கோவில்களுக்குச் சென்றால் மூன்று நிறங்களில் கயிறுகளைக் கொடுப்பர். இக்கயிறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

    கருப்புக்கயிறு - தீய சக்திகளிடம் சிக்காமல் நம்மைக் காக்கும்.

    சிவப்புக்கயிறு - வெளியில் செல்லும் போது பயந்து விடாமல் பாதுகாக்கும்.

    பச்சைக்கயிறு - இக்கயிறு செல்வத்தை வழங்குவது.

    எத்தனையோ லீலைகளை நடத்திக் காட்டிய கண்ணன், துளசியின் சிறப்பையும் ஒரு லீலை மூலம் உலகறிய செய்தார். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    துளசி என்றால் ‘தன்னிகரில்லாதவள்’ என்று அர்த்தமாகும்.

    துளசி என்பது ஒரு வகை செடியின் இலையாகும். இதை துள + சி என்பார்கள். இதற்கு ‘ஒப்பில்லாத செடி’ என்று பொருள். துளசிக்கு ‘திருத்துழாய்’ என்றும் ஒரு பெயர் உண்டு. வைணவக் கோவில்களில் துளசிக்கு தனி இடம் உண்டு. துளசி கலந்த நீரைத்தான் தீர்த்தமாக வழங்குகிறார்கள்.

    மகாலட்சுமியின் சொரூபமான துளசி, எப்போதும் திருமாலின் மார்பை அலங்கரிக்கும் சிறப்புப் பெற்றது. இதன் மூலம் மகாவிஷ்ணு எப்போதும் துளசியில் வாசம் செய்வதாக சொல்கிறார்கள்.மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய துளசி தோன்றியதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.

    தர்மவத்வசன் எனும் அரசனின் மனைவி மாதவி 100 ஆண்டுகள் கர்ப்பம் தரித்து அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். ஒப்பில்லாத அழகுடன் திகழ்ந்தால் அந்த குழந்தைக்கு துளசி என்று பெயரிட்டனர். அந்த குழந்தை வளர்ந்து பெரியவள் ஆனவதும் நாராயணனை திருமணம் செய்ய வேண்டும் என்று தவம் செய்தாள். பிரம்மன் அவள் முன் தோன்றி, பூமியில் நீ துளசி விருட்சமாக பிறந்து கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்வாய்’ என்ற வரம் கொடுத்தார்.

    அதன்படி துளசியை விஷ்ணு மணந்து வைகுண்டம் அழைத்து சென்றார். எத்தனையோ லீலைகளை நடத்திக் காட்டிய கண்ணன், துளசியின் சிறப்பையும் ஒரு லீலை மூலம் உலகறிய செய்தார். ஒரு தடவை கண்ணன் மீது அதிக அன்பு வைத்திருப்பவர் யார் என்று சத்தியபாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதை உறுதிபடுத்த கண்ணன் தராசில் ஒரு பக்கம் அமர்ந்து கொள்ள, மறுபக்க தராசில் சத்தியபாமா பொன்னும் மணியுமாக குவித்தார்.
    தராசு சமநிலைக்கு வரவில்லை. அடுத்து வந்த ருக்மணி, ஒரு சிறு துளசியை எடுத்த தராசு தட்டில் வைக்க, தராசு சமநிலைக்கு வந்தது. துளசியின் பெருமையை சொல்ல இந்த ஒரு புராண நிகழ்வே போதுமானதாகும்.
    ஏழுமலையான கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுஜர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது.
    திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது. தாயார் சன்னதி கூடக் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது. திருமலையின் ஆதிமூர்த்தியான வராகசாமி தெப்பக் குளக்கரையில் தான் இருக்கிறார். ஆழ்வார்களுக்கும் இடம் கிடையாது. இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு, ராமானுஜர் மட்டுமே. திருவேங்கடத்தான் கோவிலுக்குள் இவருக்கு தனி சன்னதி இருக்கிறது.

    ராமானுஜர் 1017-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். 1137-ம் ஆண்டு வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த இவர் வியக்கும் அளவுக்கு திருப்பதிக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார். திருப்பதியை வைணவத்தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுசர் தான். அவர் காலத்தில் வேங்கடமலை மீது இருப்பது சைவக் கோவிலா? வைணவக் கோவிலா? சிவன் சிலையா? பெருமாள் சிலையா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.

    ராமானுசர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார். ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் நடைமுறைகளை இங்கும் கொண்டு வந்தார். காடு திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார். அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது. இன்றும் அங்கு ராமானுசர் வீதி இருக்கிறது. கோவில் நந்தவனம் அமைத்து அழகுபடுத்தினார். அது ராமானுசர் நந்தவனம் என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.

    ஏழுமலை ஏறித் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார். அதுவே ராமானுசக் கூடம் ஆனது. இன்றும் அங்கு பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக அன்றே சமபந்தி சாப்பாட்டை ராமானுசர் தொடங்கி வைத்து விட்டார். ஏழுமலையான் மார்பில் திருமகள் திருமேனியைத் தொங்க விட்டவரும், ராமானுசரே!

    ஏழுமலையானுக்குப் பச்சைக் கற்பூர நாமம் சாத்தவும் ராமானுசரே ஏற்பாடு செய்தார். சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார். இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரியபட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.

    வெள்ளி தோறும் திருமஞ்சனக் காப்பு நடத்தவும், அலங்காரம் செய்யும் முறையையும், நித்திய பூசையையும் ராமானுசர் வகுத்துக் கொடுத்தார். மலை அடிவாரத்தில் கீழ்த் திருப்பதி ஊரையும் உருவாக்கினார்.

    இப்படி ஏழுமலையான கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுஜர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது. ராமானுசர் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் விழா கொண்டாடுகிறார்கள்.

    விஷ்ணு ஆலயங்களுக்கு செல்லும் ஒவ்வொருவரும் எல்லா சன்னதிகளிலும் ஸ்ரீசடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான் அந்தந்த சன்னதிகளில் வழிபாடு பூர்த்தியானதாக கருதுவர்.
    வைணவ ஆலயங்களில் எம்பெருமான் திருவடிக்கு முன்பாக இருக்கும் பாதுகைகள் கொண்ட திருவடி ‘மகுடம்’ சடாரி எனப்படுகிறது.

    அஞ்ஞானத்துக்குப் பகையாக இருப்பது சடாரி ஆகும். இதில் பெருமாளின் பாதம் பதிக்கப்பட்டிருக்கும். பெருமாளைச் சரணடைந்தவர்கள் அஞ்ஞானம் நீங்கப் பெறுவர்.

    விஷ்ணு ஆலயங்களுக்கு செல்லும் ஒவ்வொருவரும் எல்லா சன்னதிகளிலும் தீர்த்தம், துளசி, மஞ்சள்காப்பு, குங்குமம் முதலிய பிரசாதங்களைப் பெற்று கொள்வதுடன் ஸ்ரீசடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான் அந்தந்த சன்னதிகளில் வழிபாடு பூர்த்தியானதாக கருதுவர்.

    கோவில்களுக்குச் செல்லும்போது அனைத்துச் சந்நதிகளிலும் சடாரி பெற்றுக்கொண்டு நம்மை புனிதப்படுத்திக் கொள்வது நமக்கு நல்ல கதியை அளிக்கும்.
    கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் தீப மை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இந்த தீப மையை வைத்துக் கொள்வதால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா முடிவடைந்ததும் மகா தீப கொப்பரையில் சேமிக்கப்பட்ட தீபம் பக்தர்களுக்கு பிரசாதமாக விற்பனை செய்யப்படும். மேலும் நெய் காணிக்கை வழங்கியவர்களுக்கு இலவசமாக தீப மை வழங்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி மகாதீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் பக்தர்களுக்கு காட்சி அளித்தது. அதன் பின்னர் பரிகார பூஜைகள் செய்து தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் ஆருத்ரா தரிசனத்தன்று தீப மையால் நடராஜருக்கு திலகமிட்டு பக்தர்கள் நெற்றியில் வைத்துக் கொள்ள தீப மை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பேக்கிங் செய்யப்பட்ட தீப மை இன்று காலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. ரூ.10 க்கு விற்பனை செய்யப்படும் இந்த தீப மையை வெளியூர் பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். உள்ளூர் பக்தர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாங்கி சென்றனர்.

    கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் தீப மை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இந்த தீப மையை வைத்துக் கொள்வதால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
    கோவிந்தா என்ற சொல்லுக்கு போனது வராது என்று அர்த்தம் இருப்பதாக சொல்கிறார்கள். கோவிந்தாவுக்கு இன்னொரு பொருளும் உண்டு. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கோவிந்தா என்ற சொல்லுக்கு போனது வராது என்று அர்த்தம் இருப்பதாக சொல்கிறார்கள். கோவிந்தாவுக்கு இன்னொரு பொருளும் உண்டு.

    இதை கோ இந்தா என்பர். கோ என்றால் பசு, இந்தா என்றால் வாங்கிக் கொள் என்ற பொருளில் இது வரும்.

    கோவிந்தா... கோவிந்தா என சொல்லச் சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
    இறைவனையே முதன்மையாக வைத்து வழிபாடு செய்தாலும், அவர்களை வழிபடுவதற்குரிய சாதனம், தேவதைகள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்..
    இறைவனையே முதன்மையாக வைத்து வழிபாடு செய்தாலும், அவர்களை வழிபடுவதற்குரிய சாதனங்களாகவும், தேவதைகளாகவும் சில இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்..

    ஈரேழு உலகங்கள் (மேலே)

    * கயிலாய மலை
    * இமயமலை
    * ஏமகூட மலை
    * கந்தமாதன மலை
    * நீலகிரி மலை
    * நிமிடத மலை
    * மந்தர மலை
    * விந்தியமலை

    சூரிய புத்திரர்கள்

    * கர்ணன்
    * காளந்தி
    * சுக்ரீவன்
    * எமதர்மன்
    * சனி
    * நாதன்

    தச தானங்கள்

    * மனு
    * கண்ணாடி
    * கொடி
    * சாமரம்
    * நிறைகுடம்
    * விளக்கு
    * முரசு
    * ராஜசின்னம்
    * இணைக்கயல்

    நவ நாகங்கள்

    * ஆதிசேஷன்
    * கார்க்கோடகன்
    * அனந்தன்
    * குளிகன்
    * தட்சகன்
    * சங்கபாலன்
    * பதுமன்
    * மகாபதுமன்
    * வாசுகி

    நந்தியின் அருள் பெற்றோர்

    * சனகர்
    * சனாதனர்
    * சனந்தகர்
    * சனத்குமாரர்
    * வியாக்கிரபாதர்
    * பதஞ்சலி
    * சிவயோக முனிவர்
    * திருமூலர்

    அஷ்ட ஐஸ்வர்யங்கள்

    * தனம்
    * தான்யம்
    * பசு
    * அரசு
    * புத்திரர்
    * தைரியம்
    * வாகனம்
    * சுற்றம்

    மங்கலப் பொருட்கள்

    * நெல்
    * எள்
    * உப்பு
    * தீபம்
    * மணி
    * வெள்ளி
    * வஸ்திரம்
    * சந்தனக்கட்டை
    * தங்கம்
    * நீர்ப்பாத்திரம்

    ஏழுவகை பிறப்பு

    * தேவர்
    * மனிதர்
    * விலங்குகள்
    * பறப்பவை
    * ஊர்பவை
    * நீர்வாழ்பவை
    * தாவரம்
    * சொர்க்கலோகம்
    * மஹர்லோகம்
    * ஜனோலோகம்
    * சத்யலோகம்
    * தபோலோகம்
    * புவர்லோகம்
    * பூமி

    ஈரேழு உலகங்கள் (கீழே)

    * பாதாளம்
    * மகாதலம்
    * தவாதலம்
    * ரசாதலம்
    * சுதலம்
    * கிதலம்
    * அதலம்

    வாசனைப் பொருட்கள்

    * சந்தனம்
    * கோட்டம்
    * கஸ்தூரி
    * கற்பூரம்
    * குங்குமம்
    * பச்சிலை
    * அகில்
    * விளாமிச்சை வேர்

    குபேரனின் நவநிதிகள்

    * சங்கநிதி
    * பதுமநிதி
    * கற்பநிதி
    * கச்சபநிதி
    * நந்தநிதி
    * நீலநிதி
    * மஹாநிதி
    * மஹாபதுமநிதி
    * முகுந்த நிதி

    எண்வகை போகங்கள்

    * அணிகலன்
    * தாம்பூலம்
    * ஆடை
    * பெண்
    * பரிமளம்
    * சங்கீதம்
    * பூப்படுக்கை
    * போஜனம் (உணவு)
    மூதாட்டியின் பக்தியை உணர்ந்து கண்ணே தேரில் வந்து தன் பக்தையை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்ற காட்சி அர்ச்சகரின் கண்களுக்கு மட்டுமே புலப்பட்டது.
    பதைபதைக்கும் மனதுடன் ஆலயத்தின் கருவறையை திறந்தார், அர்ச்சகர். ‘எந்த அசம்பாவிதமும் நேர்ந்திருக்கக்கூடாது’ என்ற வேண்டுதலை முன்வைத்துக் கொண்டிருந்தது அவரது மனம். ஆனால் கடந்த சில நாட்களாகவே, அர்ச்சகரை வாட்டி வதைத்து வரும் காட்சி அன்றும் காணப்பட்டது. கருவறைக்குள் இருந்த கிருஷ்ணர் விக்கிரகத்தின் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம் ஒட்டியிருந்தது.

    ‘ஒரே ஒரு சாவிதான் இருக்கிறது. அதையும் தன்னுடைய தலைக்கு அடியில் வைத்து தூங்குகிறேன். பூட்டிய அறை பூட்டியபடியே இருக்க, தினமும் ஆலயத்தைத் திறந்து இந்த அசம்பாவிதச் செயலைச் செய்பவர்கள் யாரோ?’ என்று மனம் வருந்தினார், அர்ச்சகர். அவர் தினமும் சந்தனக்காப்பு சாத்தி, இறைவனுக்கு இராப்பூஜை முடித்து ஆலயத்தை பூட்டிவிட்டுச் செல்வதும், மறுநாள் கோவிலை திறக்கும்போது, இறைவனின் விக்கிரகத்தில் சாணம் இருப்பதும் வாடிக்கையாகவே போய்விட்டது.

    யாரிடம் இதுபற்றிச் சொல்வது?, யார் நம்புவார்கள்? அனைவரும் தன்னைத்தானே சந்தேகம் கொள்வார்கள்? போன்ற கேள்விகள் மனதை துளைத்துக் கொண்டிருக்க, சாணத்தை துடைத்து விக்கிரகத்தை சுத்தப்படுத்தினார், அர்ச்சகர். சிறிது நேரத்தில், தினமும் ஆலயத்திற்கு வரும் மூதாட்டி அன்றும் வந்திருந்தாள்.

    தளர்ந்த தேகம் கொண்ட மூதாட்டி, கண்ணில் பரவசம் பொங்க கருவறை முன்பாக அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் அவளது உற்சாகம் அர்ச்சகரையும் தொற்றிக்கொண்டது. “என்ன பாட்டி.. என்ன வேண்டிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார்.

    அதற்கு மூதாட்டி, “நேற்று நான் கண்ணனுக்கு வெண்ணெய் படைத்தேன். அதை அதிகமாக தின்று விட்டான். அது ஜீரணமாக வேண்டும் என்று வேண்டினேன்” என்றாள்.

    “அதில்லை பாட்டி.. உனக்காக என்ன வேண்டிக்கொண்டாய்?” என்று கேட்டார், அர்ச்சகர்.

    “போகப்போற காலத்தில் எனக்கென்ன தேவை இருக்கிறது. என் பிள்ளை கண்ணன் சவுக்கியமாக இருக்க வேண்டும் என்றுதான் பிரார்த்திக்கொண்டிருக்கிறேன். தினமும் தன்னை வழிபடுபவர்களை, வலது கரம் உயர்த்தி ஆசிர்வதித்துக் கொண்டே இருக்கிறான். அவனுக்கு கை வலிக்காதா? கொஞ்சம் நிறுத்தி ஓய்வெடுக்கச் சொன்னால் கேட்பதில்லை. நம் பேச்சை அவன் கேட்பானா? அவன் பேசிய கீதை பேச்சை கேட்டுதான் உலகம் இயங்குகிறது. இதில் எனக்காகவும் அவனிடம் வேண்டி, அதற்காக அவன் ஆசிர்வதிக்க வலது கரத்தை உயர்த்தி மேலும் வலியை உண்டாக்குவதில் எனக்கு விருப்பமில்லை” என்றாள், மூதாட்டி.

    அவளது பேச்சு வேடிக்கையாக இருந்தாலும், கண்ணனின் மீது அவள் கொண்ட பக்தி அதில் வெளிப்பட்டது. அதை அர்ச்சகர் ரசித்தார்.

    அன்று இரவு பூஜை முடிந்து, வீட்டிற்கு வந்து உணவருந்தி விட்டு படுத்த அர்ச்சகருக்கு உறக்கமே வரவில்லை. `நாளைய பொழுதிலும் கண்ணன் விக்கிரகத்தில் பசுஞ்சாணம் இருக்குமே?’ என்பதை நினைத்து அவரது மனம் புழுங்கித் தவித்தது.

    அப்போது அவர் முன்பாக தோன்றிய கண்ணபிரானைக் கண்டு ஆனந்தத்தில் வாயடைத்துப் போனார், அர்ச்சகர்.

    ‘அர்ச்சகரே.. நீங்கள் என் உடலில் பட்டிருக்கும் பசுஞ்சாணத்தை எண்ணி வருந்தத் தேவையில்லை. அது என் பக்தையின் அதீத பக்தியால் எனக்கு கிடைக்கும் பரிசு. அதை நான் விருப்பத்துடன் தான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களுக்கு அந்த காட்சியைப் பார்த்தால்தான் விளங்கும்” என்றவர், அங்கு ஒரு காட்சியை ஒளிரச் செய்தார்.

    அதில் தெரிந்தது, தினமும் ஆலயத்திற்கு வரும் மூதாட்டியின் வீடு. அர்ச்சகர் மூதாட்டியின் செய்கையை கவனித்தார். வீட்டு வேலைகளைச் செய்த படியே கண்ணனோடு பேசிக்கொண்டிருந்தாள், அந்த மூதாட்டி. ‘கண்ணா.. இன்று குளிர் அதிகமாக இருக்கிறது. போர்வை போர்த்திக் கொண்டு உறங்கு’ என்று கூறியபடியே வீட்டை பசுஞ்சாணத்தால் மொழுகினாள். பின்னர் கையில் ஒட்டியிருந்த சிறிதளவு சாணத்தை சாளரத்தின் வழியாக ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லியபடி வெளியே வீசினாள். அந்த சாணம்தான் தினமும் கண்ணனின் விக்கிரகத்தில் படிகிறது என்பதை அர்ச்சகர் உணர்ந்துகொண்டார்.

    மறுநாள் கோவிலைத் திறந்த அர்ச்சகர், கண்ணன் விக்கிரகத்தில் ஒட்டியிருந்த பசுஞ்சாணத்தை ஒரு இலையில் மடித்து, தன் இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டார். மூதாட்டிக்காக காத்திருந்தார். ஆனால் அவள் வரவில்லை. அன்று இரவு அர்ச்சகர் கனவில் வந்த கண்ணன், “அர்ச்சகரே.. நீங்கள் எடுத்துவந்த சாணம் உன்னதமான பிரசாதம். ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். இனி அது கிடைக்காது. ஏனெனில் நாளை என் பக்தை என்னை வந்து சேரப்போகிறாள். அவள் உடல் நலமில்லாத காரணத்தால்தான் இன்று ஆலயம் வரவில்லை” என்றார்.

    மறுநாள் மூதாட்டியின் இல்லத்திற்கு அர்ச்சகர் சென்றபோது, அவளது உயிர் பிரிந்திருந்தது. அங்கு தேவதூதர்களுக்குப் பதிலாக, கண்ணனே தேரில் வந்து தன் பக்தையை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்ற காட்சி அர்ச்சகரின் கண்களுக்கு மட்டுமே புலப்பட்டது. மூதாட்டியின் பக்தியையும், அதற்கு இறைவன் செய்த பிரதிபலனையும் நினைத்து மனமுருகி நின்றார் அர்ச்சகர்.
    மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
    1. உற்பத்தி (ஏகாதசி),- மார்கழி கிருஷ்ண (பக்‌ஷம்)-சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
    2. மோட்ச மார்கழி-சுக்ல வைகுண்டம் கிடைக்கும்.
    3. சபலா தை -கிருஷ்ண-பாபநிவர்த்தி.
    4. புத்ரதா -தை சுக்ல--புத்ர பாக்கியம் கிடைக்கும்.
    5. ஷட்திலா - மாசி - கிருஷ்ண- அன்னதானத்திற்கு ஏற்றது.
    6. ஜயா -மாசி -சுக்ல--பேய்க்கும் மோட்சம் உண்டு.
    7. விஜயா பங்குனி- கிருஷ்ண-ராமர் சீதையை மீட்க, பக தாப்யர் எனும் முனி வரின் உபதேசப்படி, விரதம் இருந்த நாள்.
    8. ஆமலதி -பங்குனி -சுக்ல- கோ தானம் செய்ய ஏற்றது.
    9. பாப மோசனிகா -சித்திரை -கிருஷ்ண-பாவங்கள் அகலும்.
    10. காமதா -சித்திரை -சுக்ல- நினைத்த காரியம் நடக்கும்.
    11. வருதிந் - வைகாசி கிருஷ்ண-பிரம்மகத்தி தோஷம் நீங்கும்.
    12. மோகினி - வைகாசி--சுக்ல பாவம் நீங்கும்.
    13. அபார - ஆனி - கிருஷ்ண-குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்.
    14. நிர்ஜலா (பீம) -ஆனி சுக்ல--எல்லா ஏகாதசி பலனும் உண்டு.
    15. யோகினி -ஆடி- கிருஷ்ண-நோய் நீங்கும்.
    16. சயிநீ - ஆடி - சுக்ல-தெய்வ சிந்தனை அதிகமாகும்.
    17. சாமிகா - ஆவணி கிருஷ்ண- விருப்பங்கள் நிறை வேறும்.
    18. புத்ரஜா - ஆவணி - சுக்ல-புத்ர பாக்கியம் கிடைக்கும்.
    19. அஜா - புரட்டாசி கிருஷ்ண- இழந்ததை பெற லாம்.
    20. பத்மநாபா புரட்டாசி -சுக்ல-பஞ்சம் நீங்கும்.
    21. இந்திராப்பசி - கிருஷ்ண-பித்ருக்கள் நற்கதி பெறுவர்.
    22. பாபாங்குசாப்பசி சுக்ல-கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாவங்கள் அகலும்.
    23. ரமா -கார்த்திகை கிருஷ்ண-உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்.
    24. பிரபோதின் கார்த்திகை சுக்ல-பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்.
    25. கமலா-மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

    ×