என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
அதிகபட்சமாக 13-ந் தேதி மோகினி அலங்காரத்தை 45,490 பக்தர்கள், சொர்க்கவாசல் திறப்பு தினமான 14-ந் தேதி 1லட்சத்து 37 ஆயிரத்து 497 பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகம் தொடங்கியது. 13-ந் தேதி மோகினி அலங்காரம், 14-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி வைபவமும், நேற்று காலை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி விழா துவங்கியது முதல் நேற்று இரவு வரை 10 லட்சத்து 91 ஆயிரத்து 71 பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 13-ந் தேதி மோகினி அலங்காரத்தை 45,490 பக்தர்கள், சொர்க்கவாசல் திறப்பு தினமான 14-ந் தேதி 1லட்சத்து 37 ஆயிரத்து 497 பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
17-ந்தேதி 94 ஆயிரத்து 389 பக்தர்கள், 19 -ந்தேதி 1 லட்சத்து 37 ஆயிரத்து 847 பக்தர்கள், 23-ந் தேதி 77,974 பக்தர்களும், விழாவின் நிறைவு நாளான நேற்று இரவு வரை 36,008 பக்தர்கள் என மொத்தம் 10 லட்சத்து 91 ஆயிரத்து 71 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

முருக பக்தர்கள் கந்த சஷ்டி காலத்தில் மவுன விரதம் இருப்பதுண்டு. ஒருவார காலம் மவுன விரதம் அனுசரித்து கந்த சஷ்டியன்று அவர்கள் மவுன விரதத்தைத் துறப்பார்கள்.
உண்ணாவிரதமும் மவுன விரதமும் ஆன்மிக முன்னேற்றத்திற்காக அனுசரிக்கப்படும் இரு முக்கியமான விரதங்கள்.
சஷ்டி, ஏகாதசி போன்ற தினங்களில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் பலர் உண்டு. ஆனால் மவுன விரதம் இருப்பவர்கள் குறைவு. உண்ணாவிரதமே கடினமானதுதான். ஆனால் மவுன விரதம் என்பது அதையும் விடக் கடினமானது.
உண்ணாவிரதம் உடலைப் பட்டினி போட்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது. மவுன விரதம் மனதைப் பட்டினி போட்டு அதன் ஆற்றலை மேம்படுத்துவது. மனதின் தீய எண்ணங்கள் மவுன விரதம் இருப்பதால் பெரிதும் குறையும்.
* தென்திசைக் கடவுள் எனப் போற்றப்படும் தட்சிணாமூர்த்தி சிவ பெருமானின் ஒரு வடிவம் ஆவார். அவர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு மவுனத் தாலேயே உபதேசம் நிகழ்த்துகிறார். பல கோயில்களில் இடம் பெற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக் கடவுள் சிலை, மவுனத்தின் சிறப்பை மவுனமாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.
* ரமண மகரிஷி பல நேரங்களில் மவுனமாகவே இருப்பார். அவரைத் தேடிவரும் அடியவர்கள் தங்களின் ஆன்மிக சந்தேகங்களை மனத்தில் நினைத்துக் கொண்டு அவரின் எதிரில் அமர்ந்து தியானம் செய்வார்கள். அப்போது மவுனத்தின் மூலமாகவே அவர்களுக்கு அவர் பதிலளித்துவிடுவார். பல வெளிதேசத்து அடியவர்கள் அவ்விதம் ஸ்ரீரமணர் சன்னிதியில் அமர்ந்து ஆன்மிக ஐயப்பாடுகளுக்குத் தெளிவு பெற்றிருக்கிறார்கள். ரமண மகரிஷியின் மவுனம் எத்தனை சிறப்பானது என்பது பற்றி அவரைச் சந்தித்து ஆன்மிக விளக்கங்கள் பெற்ற வெளி தேசத்தவரான பால்பிரண்டன் தான் எழுதிய நூலில் விவரித்திருக்கிறார்.
* ஸ்ரீஅரவிந்தர் ஒருநாள் இரண்டு நாள் அல்ல, பல மாதங்கள் மவுனமாய் இருந்ததுண்டு. தியானத்திலேயே ஆழ்ந்து அவர் மவுனமாய் இருக்கும்போது அடியவர்கள் தங்களின் ஆன்மிக சந்தேகங்களை அவருக்குக் காகிதத்தில் எழுதி அனுப்புவார்கள். ஸ்ரீஅரவிந்தர் தம் விளக்கங்களை எழுத்து மூலம் எழுதி அனுப்புவார்.
இந்து சமயம், பவுத்த சமயம், சமண சமயம் உள்ளிட்ட பல சமயங்கள் மவுன விரதத்தின் அவசியத்தையும் பெருமைகளையும் பற்றிப் பேசுகின்றன.
முருக பக்தர்கள் கந்த சஷ்டி காலத்தில் மவுன விரதம் இருப்பதுண்டு. ஒருவார காலம் மவுன விரதம் அனுசரித்து கந்த சஷ்டியன்று அவர்கள் மவுன விரதத்தைத் துறப்பார்கள்.
பதஞ்சலி முனிவர் எழுதிய யோக சூத்திரம் என்ற நூலில் மவுனத் தவம் இருப்பதால் பல்வேறு சித்திகளை அடைய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.`மவுனம் சர்வார்த்த சாதகம்` என்பார்கள். அதாவது எல்லாவற்றையும் நமக்கு சாதகமாக ஆக்கித்தரும் ஆற்றல் நாம் கடைப்பிடிக்கும் மவுனத்திற்கு உண்டு.
`மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி` என்றும் சொல்வதுண்டு. நாம் ஒரு கேள்வி கேட்டு அதற்கு ஒருவர் வாய்திறந்து எதுவும் பதிலாகத் தெரிவிக்காமல் மவுனமாய் இருப்பார் என்றால், அது நம் கேள்விக்கான உடன்பாட்டுப் பதிலை அவர் சொல்கிறார் என்பதற்கான அடையாளம்.
மவுன விரதம் இருப்பதன் முக்கியமான பயன்களில் ஒன்று பொய் பேசுவதை நாம் தவிர்த்துவிட முடியும் என்பது. பாவங்களில் மிகப் பெரிய பாவம் பொய்.
இன்றைய காலகட்டத்தில் பொய் பேசுவதைத் தவிர்க்க இயலாது என்ற சமாதானத்துடன் பலரும் சின்னதாகவும் பெரிதாகவும் பொய் களைப் பேசுவதை வழக்கமாய்க் கொண்டு விட்டார்கள். அதுபற்றிய குற்ற உணர்வு கூடக் குறைந்து விட்டது.
மவுன விரதம் இருந்தால் அந்த நேரத்தில் நாம் பொய் பேசமாட்டோம் என்பது மட்டுமல்ல, மெல்ல மெல்ல உண்மையை மட்டுமே பேசத் தொடங்குவோம்.
கோள் சொல்வது, புறம்பேசுவது, தேவையற்ற வெட்டி அரட்டைகளில் ஈடுபட்டுக் காலத்தைக் கொல்வது போன்றவையெல்லாம் கூட மவுன விரதம் அனுசரிப்பதால் நீங்கும். அவை நீங்குவதால் மனதின் ஆற்றல் மேலோங்கும்.
இதுவரை நாம் அனுபவித்தவை எல்லாம் புலன் இன்பங்கள் மட்டுமே என்பதையும் அமைதியான மனமும் எதிர்பார்ப்புகள் அற்ற வாழ்வுமே நிம்மதியைத் தரும் என்பதையும் மவுன விரதம் நமக்குப் புலப்படுத்தும். நாம் வாழ்வில் மேற்கொண்ட லட்சியங்களில் இருந்து விலகி வேறு திசைகளில் பயணம் மேற்கொள்வதை மவுன விரதம் நமக்குச் சுட்டிக் காட்டும். நம் வாழ்வைச் சரியான திசையில் செலுத்த மவுன விரதமே கைகொடுக்கும்.
இன்பத்தில் துள்ளாமலும் துன்பத்தில் துவளாமலும் இருக்கும் மனநிலையை மவுன விரதம் நம்மிடம் ஏற்படுத்தும். மனம் வலிமை பெறுவதால் நாம் நினைத்த செயல்கள் அனைத்திலும் நமக்கு வெற்றி கிட்டுவதை நாமே உணர முடியும்.
மவுன விரதம் நம் மனதைப் பற்றி நாம் ஆராயவும் நம் எண் ணங்களை நாம் கண்காணிக்கவும் பெரிதும் உதவுகிறது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்று வள்ளுவர் சொல்லும் உயர் நிலையை எட்ட மவுன விரதம் பெரிதும் உதவுகிறது. நாள்தோறும் ஓரிடத்தில் அமர்ந்து சிறிது நேரமாவது எதுவும் பேசாமல் மவுன விரதம் பழகுவது உள்ளத்திற்கு மிகவும் நல்லது. அலைபாயும் மனத்தை அடக்குவதற்கு மவுன விரதம் ஒரு கருவியாகப் பயன்படும்.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com

நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை விடவும், நமது பகைவர்களை மன்னித்து, ஏழைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களோடு சிறப்பித்தால் இவ்விழா அர்த்தமுள்ளதாக அமையும்.
கடவுள் வடிவில் விளங்கிய இறைமகன் இயேசு, மனிதர்களின் மீட்புக்காகத் தம்மையே வெறுமையாக்கி, கன்னி மரியாவின் வயிற்றில் மனித உடலேற்றார். இறைமகன் மனிதரான இந்த கிறிஸ்துமஸ் விழாவில், கடவுள் வெளிப்படுத்திய அன்பையும் தாழ்ச்சியையும் கற்றுக் கொள்ள அழைக்கப்படுகிறோம். மாட்சிமிகு கடவுள் தமது அன்பின் வெளிப்பாடாக தமது ஒரே மகனை இந்த உலகிற்கு பரிசாக அளித்தார் என்பது நம் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது.
தொடக்கத்தில் கடவுளோடு கடவுளாக இருந்த கடவுளின் வாக்கே மனித வடிவில் இயேசுவாகத் தோன்றினார். கடவுளின் வாக்கை மீறி கீழ்ப்படியாமையால் மனிதர் செய்த பாவம், மனித வடிவில் தோன்றிய கடவுளின் வாக்கான இயேசுவில் நம்பிக்கை கொண்டு அவருக்கு கீழ்ப்படிவதன் வழியாக நீக்கப்படுகிறது. இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டால் விண்ணக வாழ்வைப் பெறுவதற்கான மீட்பு நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.
கடவுள் தமது ஒரே மகனை, கன்னி மரியாளின் மகனாக சாதாரண பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார். இறைமகன் இயேசு மனிதராகப் பிறந்ததால் நமது மீட்பு உறுதியானது. இயேசுவின் பிறப்பு முதலில் இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்று பைபிள் கூறுகிறது. யூத சமூகத்தில் இடையர்கள் ஏழைகளாக இருந்ததுடன் பாவிகள் என்று ஒதுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்தார்கள். இத்தகைய மக்களுக்கு புதுவாழ்வு அளிப்பதே இயேசுவின் திருப்பணியாக அமைந்தது.
இயேசுவின் பிறப்பை விண்மீன் அடையாளத்தால் அறிந்த கீழ்த்திசை ஞானிகள், தங்களைத் தாழ்த்திக் கொண்டு இறைமகனை வணங்கச் சென்றார்கள். பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் என்று அவர்கள் இயேசுவுக்கு அளித்த காணிக்கைகள், அவரது மூன்று இயல்புகளைக் காட்டுகின்றன.
அரசர் என்பதைப் பொன்னும், கடவுள் என்பதை சாம்பிராணியும், மனிதர் என்பதை வெள்ளைப்போளமும் காட்டுகின்றன. இயற்கை அனைத்தின் அரசரான கடவுள் நம்மிடையே வந்து குடிகொள்ள மனிதராகப் பிறந்தார் என்ற செய்தியை ஞானிகள் உணர்த்துகின்றனர். இவ்வாறு இயேசுவின் அன்பையும், தாழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விழாவாக கிறிஸ்துமஸ் அமைந்துள்ளது. கடவுள் தமது ஒரே மகனை நமக்கு பரிசாக அளித்தப் பகிர்வின் மகிழ்ச்சியை அனைவருக்கும் வழங்குவதே கிறிஸ்துமஸ் விழாவின் நற்செய்தியாக இருக்கிறது.
நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை விடவும், நமது பகைவர்களை மன்னித்து, ஏழைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களோடு சிறப்பித்தால் இவ்விழா அர்த்தமுள்ளதாக அமையும். இறைமகன் இயேசுவில் வெளிப்பட்ட தாழ்ச்சியையும், அன்பையும் பிறருக்கு பகிர்வதன் வழியாக, நாம் சமத்துவ, சகோதரத்துவ சமூகத்தை உலகெங்கும் கட்டியெழுப்ப முடியும்.
-ஆக்னல் ஜோஸ், பணகுடி.

சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள்.
1. தலை குனியா வாழ்க்கை.
2. சுப மங்களம் ஊர்ஜிதம்.
3. தீயவினைகள் முற்றிலும் அழிவு.
4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.
5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.
6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.
7. கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.
8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.
9. இறைவனை எளிதாக உணர்தல்.
10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்.

மார்கழி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை துதிக்கும் திருமண வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் மனதிற்கினிய வாழ்க்கை துணை கிடைக்கும்.
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை
பொருள் : ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம் என்பதே இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.
இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வரலாம் எனினும் ஆண்டாளுக்குரிய மார்கழி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை துதிக்கும் திருமண வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் மனதிற்கினிய இல்வாழ்க்கை துணை வாய்க்க பெறுவார்கள். திருமணமான தம்பதிகளின் மனஸ்தாபங்கள், கருத்துவேறுபாடுகள் நீங்கி அந்நோன்யம் பெருகும். தங்களின் பிள்ளைகள் சார்பாக அவர்களின் பெற்றோர்களும் ஆண்டாளை வணங்கி இம்மந்திரத்தை துதிக்கலாம்.

இன்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை வரை கிறிஸ்துமஸ் வழிபாடுகள் ஆலயங்களில் நடக்கின்றன. கத்தோலிக்க திருச்சபைகளில் நள்ளிரவில் தொடங்கும் வழிபாடு அதிகாலை 2 மணி வரை நடைபெறும்.
சென்னை
ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகள் மிக எளிமையாக கொண்டாடப்பட்டன. இந்த வருடம் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் வழிபாடு நடத்துவதற்கு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதாலும் விமரிசையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே வீடுகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும், குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்தும் பண்டிகை கொண்டாட ஆயத்தமானார்கள்.
நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. அனைத்து ஆலயங்களும் அலங்கார மின் விளக்குகளால் நேற்று இரவு முதலே அலங்கரிக்கப்பட்டன.

தென் இந்திய திருச்சபை ஆலயங்கள், மெத்தடிஸ்ட், ஆர்க்காடு லூத்ரன், பெந்தேகோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்கி, காலை 6, 7 மணி வரை நடைபெறும்.
சென்னையில் சாந்தோம் தேவாலயம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ஆலயத்தின் வெளிபுறமும், உள்புறமும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப் பட்டு இருந்தன.
சென்னை- மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி கிறிஸ்துமஸ் சிறப்பு நற்செய்தி வழங்குகிறார்.
இதேபோல பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி ஆலயம், பாரிமுனை அந்தோணியார் ஆலயம், பரங்கிமலை மாதா ஆலயம், பெரம்பூர் லூர்துமாதா ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கத்தோலிக்க திருச்சபை ஆலயங்களில் இன்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
இதேபோல சி.எஸ்.ஐ. கதிட்ரல் பேராலயம், சூளை தூய பவுல் ஆலயம், சிந்தாதரிப்பேட்டை சியோன் ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி, டவுட்டன் ஹார்வுட்ரா, தூய ஆன்ட்ரூஸ், தக்கர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் அதிகாலை நடக்கிறது.
கதிட்ரல் பேராலயத்தில் சி.எஸ்.ஐ. சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்குகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கொட்டும் பனி மற்றும் குளிரிலும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இதில் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக பங்கேற்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் வழிபாடு முடிந்ததும், ஒருவருக்கொருவர் சமாதானத்தை தெரிவிக்கும் வகையில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.
தற்போது ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால், ஆலயங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அனைவரும் முகக்கவசம் அணிந்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆலயங்களும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
வழிபாட்டுக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தவும் கிருமிநாசினி நுழைவாயிலில் வைக்கப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று இரவு முதல் முக்கிய ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்...திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டு தரிசனம் ரத்து
மதுரையில் நடைபெறும் அஷ்டமி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. படியளக்கும் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-
படியளக்கும் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-
கயிலையில் சிவபெருமானை ஒருமுறை சோதிக்க பார்வதிதேவி முயன்றார். அனைத்து ஜீவராசிகளுக்கும் நீங்கள் சாப்பாடு கொடுத்து விடுவீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு இறைவன், ஆம் என்றும், எல்லா நேரத்திலும் என் கடமைகளை செய்து கொண்டிருப்பேன் என்றும் கூறினார். அப்போது, பார்வதிதேவி ஒரு குவளையில் எறும்பு ஒன்றை உள்ளே போட்டு மூடி விட்டார்.
மறுநாள் இறைவனிடம் அந்த குவளையை காண்பித்து இதில் அடைப்பட்டு கிடக்கும் இந்த ஜீவராசிக்கும் நீங்கள் சாப்பாடு கொடுத்து விட்டீர்களா? என்று கேட்டுள்ளார். அப்போது சிவபெருமான் ஆம் என்று கூறி அதனை திறக்க சொன்னார். பார்வதி தேவி அதனை திறந்து பார்த்த போது அதில் எறும்பு அரிசியை தின்று கொண்டிருந்தது.
அந்த லீலையை விளக்கும் நிகழ்வாகத்தான் அனைத்து சிவன் கோவில்களிலும் மார்கழி மாதம் அஷ்டமி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மதுரையில் நடைபெறும் அஷ்டமி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட தேவஸ்தான இணையதளம் சரி வர வேலை செய்யாததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 1 லட்சத்து 44 ஆயிரம் டிக்கெட்டுகளும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 2 லட்சம் டிக்கெட்டுகளும், 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 1.08 லட்சம் டிக்கெட்டுகள் என மொத்தம் 4.52 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்ட 20 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.
லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட தேவஸ்தான இணையதளம் சரி வர வேலை செய்யாததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
நாளை காலை 9 மணிக்கு 1 நாளைக்கு 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வீதம் ஒரு லட்சத்து 55 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இதேபோல் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக பக்தர்களுக்கு டிசம்பர் 31-ந்தேதி வழங்கப்படுகிறது.
இதற்காக பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசன் விசுவாசம் மற்றும் வழிப்பறி ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 34,035 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,891 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

இங்கு சிவபெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். ‘பிரம்ம சிரகண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர், பிரம்மநாதர், ஆதிவில்வ வனநாதர் என்பன இத்தல இறைவனின் திருப்பெயர்களாகும்.
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட தலங்களாக தமிழகத்தில் எட்டு சிவாலயங்கள் சொல்லப்படுகின்றன. இவை எட்டும்,‘அட்ட வீரட்ட தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றுதான், பிரம்மதேவனின் தலையை சிவபெருமான் கொய்த ‘பிரம்ம சிர கண்டீஸ்வரர் கோவில்’ ஆகும்.
தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற 274 சிவாலயங்களில், இது 75-வது தேவாரத் தலமாக போற்றப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 12-வது தலம் இது.
இங்கு சிவபெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். ‘பிரம்ம சிரகண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர், பிரம்மநாதர், ஆதிவில்வ வனநாதர் என்பன இத்தல இறைவனின் திருப்பெயர்களாகும்.
இங்குள்ள நவக்கிரக சன்னிதியில் நடுநாயகமாக இருக்கும் சூரியன் தன்னுடைய மனைவியர்களான உஷா, பிரத்யுஷாவுடன் இருக்கிறார். மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனைப் பார்த்தபடி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகின்றன.
ஆணவத்தால் மதியிழந்த பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவபெருமான் கொய்தார். இதனால் ஞானம் அடைந்த பிரம்மன், தன்னுடைய தவறை எண்ணி வருந்தி, இந்த ஆலயத்திலேயே தவம் செய்தார். அவருக்கு துணையாக சரஸ்வதியும் தவம் செய்தார். இதை உணர்த்தும் வகையில் இங்கு பிரம்மதேவனுக்கும், சரஸ்வதிக்கும் சன்னிதி உள்ளது.
பொதுவாக சிவன் கோவில்களில், கருவறையின் முன்பாக சண்டி, முண்டி என்ற துவார பாலகர்கள் இருப்பார்கள். ஆனால் இங்கு அவர்களுக்குப் பதிலாக முருகப்பெருமானே, ‘ஞானகுரு, ஸ்கந்தகுரு’ என்ற துவாரபாலகர்களாக வீற்றிருக்கிறார்.
வில்வ வனமாக இருந்த இடத்தில் கோவில் அமைந்திருக்கிறது. தல விருட்சமாகவும் வில்வமரமே இருக்கிறது. இந்த ஆலய ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக நிற்கிறது.
இந்த ஆலயத்தின் இறைவன் மீது, மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரியன் தன்னுடைய கதிர் ஒளியை வீசி வழிபடுகிறார்.
நந்திக்கு விருந்து
சிவபெருமானுக்குரிய சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகவும், திருக்கண்டியூர் திருக்கோவில் திகழ்கிறது. திருவையாறில் அவதரித்த நந்திக்கு, சதாசபரின் மகள் ஊர்மிளாவுடன் திருமழப்பாடியில் வைத்து திருமணம் நடந்தது. இந்த விழாவின் போது திருவையாறு ஐயாறப்பர், அறம்வளர்த்தநாயகி, நந்திதேவர், ஊர்மிளா ஆகியோர் இந்த ஆலயத்தில் எழுந்தருளினர். அப்போது நந்திக்கு புனித அபிஷேகம் செய்யப்பட்டு, கூடை நிறைய சாதம் வைத்து விருந்து படைக்கப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. இந்த நிகழ்வு இன்றளவும் இந்தக் கோவிலில் நடத்தப்பட்டு வருகிறது.
பிரதோஷ தலம்
இங்கு தங்கிருந்த சதாசபர் மகரிஷி, ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் காளகஸ்தி செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி செல்ல முடியாவிட்டால் தன்னுடைய உயிரை விடுவதாகவும் சபதம் செய்திருந்தார். அவரை சோதிக்க, ஒரு பிரதோஷ நாளில் பெரும் மழையை ஈசன் உண்டாக்கி, சதாசபரை தடுத்து நிறுத்தினார். இதனால் வருந்திய சதாசபர் கோவிலிலுக்குள் அக்னி வளர்த்து அதில் இறங்கி உயிரை மாய்க்கச் சென்றார். அப்போது ஈசன் தோன்றி, ‘எந்த தலமாக இருந்தாலும் அங்கு நான் இருக்கிறேன்’ என்றார். உண்மையை உணர்ந்த சதாசபர், பிரதோஷ வழிபாட்டை இங்கேயே மேற்கொண்டார்.
தஞ்சாவூரில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 55 கிலோமீட்டர் தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது, திருக்கண்டியூர்.

திருத்தணி முருகன் கோவிலில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதி ஆகிய 2 நாட்களில் கோவிலில் நடைபெறும் பஜனைகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில் மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 365 படிகள் உள்ளன. ஒரு வருடத்தை குறிக்கும் வகையில் இருப்பதால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் திருப்புகழ் திருப்படி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த விழாவில் பல்வேறு பஜனை குழுவினர் பங்கேற்று ஒவ்வொரு படியிலும் சிறப்பு பூஜைகள் செய்து பாடல்களை பாடியவாறு கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான திருப்புகழ் திருப்படி திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது. திருத்தணி கோட்டாட்சியர் சத்யா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவில் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவு புத்தாண்டு தரிசன நிகழ்ச்சியை ரத்து செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதி ஆகிய 2 நாட்களில் கோவிலில் நடைபெறும் பஜனைகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

டிசம்பர் 31-ந்தேதி காலை 11 மணிக்கும் ஜனவரி 1-ந்தேதி இரவு 8 மணிக்கும் தங்கத்தேர் வீதி உலா நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்கலாம்...திருமணத் தடையா?... 7-ம் வீட்டில் நிற்கும் பாவ கிரகங்களுக்கு பரிகாரம்
கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும். இல்லையென்றால் திரும்ப திரும்ப கடன் வாங்கி பெரிய கடன்காரர் ஆகிவிடும் நிலை ஏற்பட்டு விடும்.
கடன் வாங்கும்போது குளிகை நேரத்தில் வாங்கி விட்டால் திரும்ப திரும்ப கடன் வாங்கிபெரிய கடன்காரர் ஆகிவிடும் நிலை ஏற்பட்டு விடும். எனவே கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் இல்லாத நேரமாகவும் இருக்க வேண்டும்.
கடன் விரைவில் அடைபட செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30-க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம். ஏன் என்றால் ஒரு வேலையை திரும்ப திரும்ப செய்ய வைப்பதே குளிகை நேரமாகும்.

அஷ்டமி திருவிழா தேர் வெளிவீதிகளில் வலம் வரவேண்டும். ஆனால் மழையால் வெளிவீதி சாலைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. அதனை விரைவாக சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலை முத்தாய்ப்பானது. இந்த விழா தினத் தன்று சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை அடைவர்.
இதில் அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அஷ்டமி திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. மேலும் கீழமாசி வீதி தேர்முட்டி பகுதியில் மூங்கில் கம்பால் செய்யப்பட்ட மேற்கூரையை சப்பரத்தில் வைத்து அலங்கரிக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது.
அஷ்டமி திருவிழா தேர் வெளிவீதிகளில் வலம் வரவேண்டும். ஆனால் மழையால் வெளிவீதி சாலைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. அதனை விரைவாக சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில அமைப்பாளர் ஆதிசேஷன் கூறும் போது, அகிலத்தில் உள்ள தன் படைப்புகளுக்கு படியளக்க தானே தெருவில் இறங்கி நம்மை நாடி வந்து அரிசி கொடுத்து படியளக்கும் அற்புத நிகழ்வான அஷ்டமி சப்பரம் நிகழ்வு வருகிற 27-ந் தேதி காலை வெளிவீதியில் நடக்கிறது. எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அஷ்டமி சப்பரம் உலா வரும் வெளி வீதிகளில் உள்ள சாலைகள் மற்றும் மேடு பள்ளங்களை சரி செய்து தேர் சிறப்பாக பவனி வர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தேர் பவனி வரும் வீதிகளை நன்றாக சுத்தப்படுத்தி துப்புரவு பணிகளை செய்து தயாராகிக்கிட வேண்டும். தற்போது பனிக்காலமாக இருப்பதால் அதிகாலையில் அஷ்டமி சப்பரம் வரக்கூடிய வீதிகளில் தெரு விளக்குகள் காலை 6.30 மணிக்கு வரை ஔிர்ந்திட மின்சார வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.