என் மலர்

  வழிபாடு

  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 10.91 லட்சம் பக்தர்கள் தரிசனம்
  X
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 10.91 லட்சம் பக்தர்கள் தரிசனம்

  வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 10.91 லட்சம் பக்தர்கள் தரிசனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிகபட்சமாக 13-ந் தேதி மோகினி அலங்காரத்தை 45,490 பக்தர்கள், சொர்க்கவாசல் திறப்பு தினமான 14-ந் தேதி 1லட்சத்து 37 ஆயிரத்து 497 பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகம் தொடங்கியது. 13-ந் தேதி மோகினி அலங்காரம், 14-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி வைபவமும், நேற்று காலை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

  அதன்படி விழா துவங்கியது முதல் நேற்று இரவு வரை 10 லட்சத்து 91 ஆயிரத்து 71 பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 13-ந் தேதி மோகினி அலங்காரத்தை 45,490 பக்தர்கள், சொர்க்கவாசல் திறப்பு தினமான 14-ந் தேதி 1லட்சத்து 37 ஆயிரத்து 497 பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

  17-ந்தேதி 94 ஆயிரத்து 389 பக்தர்கள், 19 -ந்தேதி 1 லட்சத்து 37 ஆயிரத்து 847 பக்தர்கள், 23-ந் தேதி 77,974 பக்தர்களும், விழாவின் நிறைவு நாளான நேற்று இரவு வரை 36,008 பக்தர்கள் என மொத்தம் 10 லட்சத்து 91 ஆயிரத்து 71 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
  Next Story
  ×