என் மலர்
வழிபாடு

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.
26-ந்தேதி மண்டல பூஜை: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
சபரிமலையில் 26-ந்தேதி நடக்கும் மண்டல பூஜை விழாவில் ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மண்டல பூஜை முடிந்த பின்பு மகர விளக்கு திருவிழா தொடங்கும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது.
பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இவ்விழாவில் ஐயப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து நேற்று காலை ஊர்வலமாக புறப்பட்டது. 25-ந்தேதி மாலை 3 மணிக்கு தங்க அங்கி சபரிமலை சன்னிதானம் வந்து சேரும். அன்று மாலை 6 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
மறுநாள் 26-ந்தேதி மண்டல பூஜை விழா நடக்கும். அப்போதும் ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மண்டல பூஜை முடிந்த பின்பு மகர விளக்கு திருவிழா தொடங்கும்.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலை வருவார்கள். இந்த ஆண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்களுக்கு பாரம்பரிய பெருவழி பாதையும் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கவும், பம்பையில் புனித நீராடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏராளமான கன்னி சாமிகளும் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க வருகிறார்கள்.

Next Story