என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஆனைமலை உப்பாற்றங்கரையில் சயன நிலையில் இருந்து அருள்பாலித்து வரும் மாசாணியம்மனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் உள்பட பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. ஆனைமலை உப்பாற்றங்கரையில் சயன நிலையில் இருந்து அருள்பாலித்து வரும் மாசாணியம்மனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் உள்பட பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா தை அமாவாசை நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி தை அமாவாசை நாளான வருகிற 1-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் காலை 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து 18 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
ஆனைமலை ஆழியாற்றங் கரையில் உள்ள மயானத்தில் வருகிற 14-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடக்கிறது. 15-ந்தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜை, 16-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சித்திரத்தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. மறுநாள் 17-ந்தேதி காலை 9.30 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
18-ந்தேதி காலை 9 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையையும் நடக்கிறது. 19-ந்தேதி பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றனர்.

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் கமலவல்லி நாச்சியார், அழகியமணவாள பெருமாள் ஆகியோர் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இங்கு திருஅத்யயன உற்சவம் எனப்படும் பகல் பத்து கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி கடந்த 27-ந்தேதி வரை நடைபெற்றது. நேற்று பகலில் ஆகம விதிப்படி பூஜைகள், ஆராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. இதில் கமலவல்லி நாச்சியார் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் நடைகண்டருளல் சேவை நடைபெற்றது. மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம், சடகோபம் சாதித்தல் நடைெபற்றது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முதல் தடைவிலக்கப்பட்டதால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பரமபத வாசல் வழியாக சென்றனர். மேலும் வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் நடைபெறும். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைப்பதியில் தை பெருந்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிப்பார்.
அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைப்பதியில் தை பெருந்திருவிழாவிற்காக நேற்று காலை கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக அய்யா வைகுண்டர் ஸ்ரீமன் நாராயண சாமிக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் இந்திரன், அனுமன், நாகம், கருடர், காளை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிப்பார். 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மதியம் உச்சிபடிப்பு மற்றும் அன்னப்பால் கஞ்சி தர்மமும், இரவு 7 மணிக்கு அன்னதர்மமும் நடைபெறும்.
10-ம் திருநாள் அன்று முந்திரிக்கிணற்றில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தனகுடம், பால்குடம் மற்றும் அங்கப்பிரதட்சணம் நடைபெறும். 11-ம் திருநாள் அன்று மதியம் 3 மணிக்கு தேரோட்டமும், அன்று காளை வாகனத்தில் சப்பர பவனியாக வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் அய்யாவழி அன்புக்கொடி மக்களும், வாகைகுளம் பகுதியை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.

கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியை வணங்கிட ஆயகலைகள் அறுபத்து நான்கும் நமக்கு கிடைக்கும்.
01 ஓம் ஸரஸ்வத்யை நமஹ
02 ஓம் மஹா பத்ராயை நமஹ
03 ஓம் மஹா மாயாயை நமஹ
04 ஓம் வரப்ரதாயை நமஹ
05 ஓம் ஸ்ரீ ப்ரதாயை நமஹ
06 ஓம் பத்ம நிலயாயை நமஹ
07 ஓம் பத்மாக்ஷ்யை நமஹ
08 ஓம் பத்ம வக்த்ராயை நமஹ
09 ஓம் சிவானுஜாயை நமஹ
10 ஓம் புஸ்தக ப்ருதே நமஹ
11 ஓம் ஜ்ஞாந முத்ராயை நமஹ
12 ஓம் ரமாயை நமஹ
13 ஓம் பராயை நமஹ
14 ஓம் காமரூபாயை நமஹ
15 ஓம் மஹா வித்யாயை நமஹ
16 ஓம் மஹாபாதக நாசின்யை நமஹ
17 ஓம் மஹாச்ரயாயை நமஹ
18 ஓம் மாலிந்யை நமஹ
19 ஓம் மஹாபோகாயை நமஹ
20 ஓம் மஹாபுஜாயை நமஹ
21 ஓம் மஹாபாகாயை நமஹ
22 ஓம் மஹோத்ஸாஹாயை நமஹ
23 ஓம் திவ்யாங்காயை நமஹ
24 ஒம் ஸூரவந்திதாயை நமஹ
25 ஓம் மஹாகாள்யை நமஹ
26 ஓம் மஹாபாஷாயை நமஹ
27 ஓம் மஹாகாராயை நமஹ
28 ஓம் மஹாங்குஸாயை நமஹ
29 ஓம் பீதாயை நமஹ
30 ஓம் விமலாயை நமஹ
31 ஓம் விஸ்வாயை நமஹ
32 ஓம் வித்யுந்மாலாயை நமஹ
33 ஓம் வைஷ்ணவ்யை நமஹ
34 ஓம் சந்த்ரிகாயை நமஹ
35 ஓம் சந்த்ரவதநாய நமஹ
36 ஓம் சந்த்ரலோகா விபூஷிதாயை நமஹ
37 ஓம் ஸாவித்ர்யை நமஹ
38 ஓம் ஸூரஸாயை நமஹ
39 ஓம் தேவ்யை நமஹ
40 ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நமஹ
41 ஓம் வாக்தேவ்யை நமஹ
42 ஓம் வஸூதாயை நமஹ
43 ஓம் தீவ்ராயை நமஹ
44 ஓம் மஹாபத்ராயை நமஹ
45 ஓம் மஹாபலாயை நமஹ
46 ஓம் போகதாயை நமஹ
47 ஓம் பாரத்யை நமஹ
48 ஓம் பாமாயை நமஹ
49 ஓம் கோவிந்தாயை நமஹ
50 ஓம் கோமத்யை நமஹ
51 ஓம் சிவாயை நமஹ
52 ஓம் ஜடிலாயை நமஹ
53 ஓம் விந்த்யவாஸாயை நமஹ
54 ஓம் விந்த்யாசலவிராஜிதாயை நமஹ
55 ஓம் சண்டிகாயை நமஹ
56 ஓம் வைஷ்ணவ்யை நமஹ
57 ஓம் ப்ராஹ்மீயை நமஹ
58 ஓம் ப்ரஹ்மஜ்ஞாஸாதநாயை நமஹ
59 ஓம் ஸூதாமூர்த்யை நமஹ
60 ஓம் ஸூபத்ராயை நமஹ
61 ஓம் ஸெளதாமன்யை நமஹ
62 ஓம் ஸூரபூஜிதாயை நமஹ
63 ஓம் ஸூவாஸின்யை நமஹ
64 ஓம் ஸூநாஸாயை நமஹ
65 ஓம் விந்த்ராயை நமஹ
66 ஓம் பத்மலோசனாயை நமஹ
67 ஓம் வித்யாரூபாயை நமஹ
68 ஓம் விசாலாக்ஷ்யை நமஹ
69 ஓம் ப்ரம்ஹஜாயாயை நமஹ
70 ஓம் மஹாபலாயை நமஹ
71 ஓம் த்ரயீமூர்த்யே நமஹ
72 ஓம் த்ரிகாலஜ்ஞாயை நமஹ
73 ஓம் த்ரிகுணாயை நமஹ
74 ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நமஹ
75 ஓம் கம்பாஸூரப்ரமதிந்மையை நமஹ
76 ஓம் சுபதாயை நமஹ
77 ஓம் ஸ்வராத்மிகாயை நமஹ
78 ஓம் ரக்த பீஜ நிஹந்த்ர்யை நமஹ
79 ஓம் சாமுண்டாயை நமஹ
80 ஓம் அம்பிகாயை நமஹ
81 ஓம் முண்டகாயப்ரஹரணாயை நமஹ
82 ஓம் தூம்ரலோசன மர்தனாயை நமஹ
83 ஓம் ஸர்வதேவ ஸ்துதாயை நமஹ
84 ஓம் ஸெளம்யாயை நமஹ
85 ஓம் ஸீராஸீர நமஸ்க்ருதாயை நமஹ
86 ஓம் காளராத்ர்யை நமஹ
87 ஓம் கலாதாராயை நமஹ
88 ஓம் ரூபஸெள பாக்யதாயின்யை நமஹ
89 ஓம் வாக்தேவ்யை நமஹ
90 ஓம் வராரோஹாயை நமஹ
91 ஓம் வாராஹ்யை நமஹ
92 ஓம் வாரிஜாஸனாயை நமஹ
93 ஓம் சித்ராம்பராயை நமஹ
94 ஓம் சித்ரகந்தாயை நமஹ
95 ஓம் சித்ரமால்ய விபூஷிதாயை நமஹ
96 ஓம் காந்தாயை நமஹ
97 ஓம் காமப்ரதாயை நமஹ
98 ஓம் வித்யாயை நமஹ
99 ஓம் வித்யாதர ஸுபூஜிதாயை நமஹ
100 ஓம் ஸ்வேதாநநாயை நமஹ
101 ஓம் நீலபுஜாயை நமஹ
102 ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நமஹ
103 ஓம் சதுராநநஸாம் ராஜ்யாயை நமஹ
104 ஓம் ரக்தமத்யாயை நமஹ
105 ஓம் நிரஞ்ஜனாயை நமஹ
106 ஓம் ஹம்ஸாஸனாயை நமஹ
107 ஓம் நீலஜங்க்காயை நமஹ
108 ஓம் பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நமஹ
109 ஓம் துர்காலஷ்மி ஸரஸ்வதீப்யோ நமஹ
110 ஓம் நானாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி!

ஒவ்வொரு கிழமைகளிலும் கடைபிடிக்கப்படும் விரதத்திற்கு ஒவ்வொரு பலன் உண்டு. அந்த வகையில் எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில் விரதம் என்பது, அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறுவதுடன், நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
திங்கட்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்பத்தில் பரஸ்பர அன்பும், அமைதியும் நிலவும்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.
புதன்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும்.
வியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கிய தடைகள் நீங்கி சத்புத்திர பாக்கியம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் தம்பதியர்களுக்கு ஆயுள் தோஷங்கள் விலகப்பெறும்.
சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் வேலை, தொழில் ஆகியவை விருத்தி பெற்று செல்வம் பெருகும்.

திருப்பரங்குன்றம் கோவிலில் உள்திருவிழாவாக தெப்பத்திருவிழா நடக்கிறது. வருகின்ற 1-ந்தேதி கொடியேற்றப்படுகிறது. திருவிழாவில் சுவாமி புறப்பாட்டின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும் திருவிழா நடைபெற்று வருகிறது.இதில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான தெப்பத் திருவிழா வருகின்ற 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இதே சமயம் கொரோனா வைரஸ் 3-வது அலை பரவல் காரணமாக உள்திருவிழாவாக தெப்பத்திருவிழா நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளையில் சுவாமி புறப்பாட்டின்போது பக்தர்களுக்கு அனுமதி தவிர்க்கப்படுகிறது.
வருகின்ற 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.45 மணி முதல் 11 மணிக்குள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. திருவிழாவின் 9-வது நாளாக வருகின்ற 9-ந்தேதி தைக்கார்த்திகை தினமாகும். திருவிழாவின் 10-வது நாள் வழக்கப்படி தெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறவேண்டும். ஆனால் அரசின் நெறிமுறைப்படி கோவிலுக்குள் (தெப்ப உற்சவம்) சுவாமி புறப்பாடு நடக்கிறது.
தெப்பத்திருவிழாவை பொறுத்தவரை முன்பு காலையிலும் மாலையிலுமாக வித, விதமான வாகனங்களில் சுவாமி எழுந்தருளி நகரின் முக்கிய 4 வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் 9-வதுநாள் காலையில் ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பமுட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். மேலும் இதே நாளில் 16 கால் மண்டபம் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாரான சிறிய வைரத்தேரில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். இதனையடுத்து நகரின் 4 முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்வார்கள்.
திருவிழாவின் 10-வது நாள் தெப்ப உற்சவத்தையொட்டி ஜி.எஸ்.டி ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாரான தெப்ப மிதவையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அப்போது ஏராளமான பக்தர்கள் தெப்ப மிதவையில் இணைக்கப்பட்ட வடத்தினை பயபக்தியுடன் இழுப்பார்கள். தெப்பகுளத்திற்குள் 3 முறை தெப்ப மிதவையானது வலம் வரும். இதேபோல இரவில் மின்னொளியில் வானவேடிக்கைகளுடன் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
அப்போதும் ஏராளமான பக்தர்கள் திரளாக கூடி நின்று அரோகரா கோஷம் முழங்க தெப்ப மிதவையின் வடத்தை பிடித்து இழுத்து தரிசனம் செய்வார்கள். இதனை தொடர்ந்து சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் வளாகத்தில் சூரசம்கார லீலை நடைபெறும். ஆனால் அரசின் நெறிமுறைக்கு உட்பட்டு தெப்பமுட்டுதள்ளுதல், தேரோட்டம், தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவமான தெப்பம் வலம்வருதல், சன்னதி தெருவில் சூரசம்காரம் லீலை தவிர்க்கப்பட்டுள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவில் ஊரடங்கு, வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கோவில் மூடல் தவிர்ப்பு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்குள் உள்திருவிழாவாக தெப்பத்திருவிழா என்பதும் திருவிழா சுவாமி புறப்பாட்டில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதும், தேரோட்டம், தெப்பக்குளத்தில் தெப்பம் வலம் வருதல் தவிர்க்கப்பட்டு இருப்பதும் பக்தர்களிடையே மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடைபெறும் தெப்பத்திருவிழாவின் போது சுவாமி புறப்பாட்டின் போது பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குதிரை வாகனம் இன்றி, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா சென்றார். அப்போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும், பெருமாளுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர்.
திருமங்கை நாட்டின் சிற்றரசனாக முடிசூட்டப்பட்ட திருமங்கையாழ்வார், ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிச்சென்று, சோழ மன்னனோடு போரிட்டு படைகளை விரட்டினாராம். இந்த புராண நிகழ்ச்சியை விளக்கும் வகையில் வெட்டும் குதிரை வாகனத்தில் வெங்கடேசப்பெருமாள் போலகம் பகுதியில் உள்ள அம்புத்திடலில் பரிவேட்டை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குதிரை வாகனம் இன்றி, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா சென்றார். அப்போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும், பெருமாளுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். வீதிஉலாவுக்கு பிறகு பெருமாள் கோவிலுக்கு திரும்பினார். தொடர்ந்து நேற்று இரவு அலர்மேலு மங்கைத்தாயார் சமேத வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் ஆண்டாளுடன் சேர்த்து வழிபாடாக சாற்றுமுறை ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலுக்குள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மனிதரால் வெல்லமுடியாத எதிரிகளையும் தடைகளையும் வெல்ல இயேசுவுக்கு அதிகாரம் இருந்ததை அவர் செய்த அற்புதங்கள் மெய்ப்பித்துக் காட்டின.
சாதாரண மனிதரால் சாதிக்க முடியாதவற்றைச் சாதிக்க இயேசுவுக்குக் கடவுள் தமது சக்தியை அருளினார். இயேசு அநேக அற்புதங்களைச் செய்தார், பெரும்பாலும் மக்களின் முன்னிலையில். அபூரண மனிதரால் வெல்லமுடியாத எதிரிகளையும் தடைகளையும் வெல்ல இயேசுவுக்கு அதிகாரம் இருந்ததை அவர் செய்த அற்புதங்கள் மெய்ப்பித்துக் காட்டின. சில உதாரணங்களைக் கவனிக்கலாம்.
பசி பட்டினி : தண்ணீரைத் தித்திக்கும் திராட்சை மதுவாக மாற்றியதே இயேசு செய்த முதல் அற்புதம். வேறு இரண்டு சந்தர்ப்பங்களில், சில ரொட்டிகளையும் மீன்களையும் கொண்டு ஆயிரக்கணக்கானோரின் பசியை ஆற்றினார், இத்தனைக்கும் எல்லாரும் சாப்பிட்டதுபோக மீதமும் இருந்தது.
வியாதிகள் : “எல்லா விதமான நோய்களையும் உடல் பலவீனங்களையும்” இயேசு குணப்படுத்தினார். (மத்தேயு 4:23) குருடு, செவிடு, தொழுநோய், காக்காய்வலிப்பு போன்ற அனைத்து உபாதைகளிலிருந்தும் மக்களுக்கு விடுதலை அளித்தார். கைகால் முடமானவர்களையும் சுகப்படுத்தினார். அவருடைய வல்லமைக்கு மிஞ்சிய வியாதி எதுவுமே இருக்கவில்லை.
இயற்கை சீற்றங்கள் : ஒருமுறை இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் கலிலேயாக் கடலைக் கடந்துகொண்டிருந்தபோது பலத்த புயல்காற்று வீசியது. சீடர்கள் திகிலடைந்தார்கள். இயேசுவோ புயல்காற்றைப் பார்த்து, “உஷ்! அமைதியாக இரு!” என்றார். அப்போது மிகுந்த அமைதி உண்டானது. (மாற்கு 4:37-39) மற்றொரு சந்தர்ப்பத்தில், கடும் புயல்காற்று வீசியபோது அவர் தண்ணீர்மீது நடந்து வந்தார்.—மத்தேயு 14:24-33.
பேய் பிசாசுகள் : மனிதர்களைவிட பேய்கள் சக்தி வாய்ந்தவை. கடவுளுடைய கொடிய எதிரிகளான இந்தப் பேய்களின் கோரப்பிடியிலிருந்து—அன்றும் சரி இன்றும் சரி—ஜனங்களால் வெளியே வரமுடியவில்லை. ஆனால் இயேசு பல சந்தர்ப்பங்களில், மனிதர்களைப் பிடித்த பேய்களை வெளியே வரும்படி கட்டளையிட்டார். அதன்பின் அந்தப் பேய்களால் அவர்களை ஆட்டிப்படைக்க முடியவில்லை. பேய்களைக் கண்டு இயேசு அஞ்சவில்லை, மாறாக அதிகாரமுள்ள இயேசுவைக் கண்டு அந்தப் பேய்கள்தான் அஞ்சி நடுங்கின.
மரணம் : “கடைசி எதிரி” என பொருத்தமாகவே அழைக்கப்படும் மரணத்தை எந்த மனிதனாலும் வெல்ல முடியாது. (1 கொரிந்தியர் 15:26) ஆனால், இறந்தவர்களை இயேசு உயிர்ப்பித்தார். ஒரு விதவையின் இளம் மகனையும், ஒரு சிறு பெண்ணையும் உயிர்ப்பித்து அவர்களுடைய பெற்றோரின் நெஞ்சில் பால் வார்த்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில், துக்கத்தில் ஆழ்ந்திருந்த ஜனக்கூட்டத்தின் கண்முன்னாலேயே தமது நெருங்கிய நண்பன் லாசருவை உயிர்த்தெழுப்பினார், அதுவும் அவர் இறந்து கிட்டத்தட்ட நான்கு நாட்கள் கழித்து! இயேசுவைக் கொலைசெய்ய துடியாகத் துடித்துக்கொண்டிருந்த எதிரிகளும்கூட அவர் செய்த இந்த அற்புதத்தை மறுக்கவில்லை.—யோவான் 11:38-48; 12:9-11.
இயேசு ஏன் இந்த அற்புதங்களையெல்லாம் செய்தார்? அவரால் சுகம் பெற்றவர்களும் சுவாசம் பெற்றவர்களும் கடைசியில் இறந்துதானே போனார்கள்!
உண்மைதான், ஆனால் இயேசு செய்த அற்புதங்கள் மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்தன. ஆம், மேசியாவின் ஆட்சியைப் பற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கு அத்தாட்சி அளித்தன. ஆகவே, பசி பட்டினி, வியாதிகள், இயற்கை சீற்றங்கள், பேய் பிசாசுகள், மரணம் ஆகிய அனைத்தையும் கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவால் ஒழிக்க முடியும் என்பதைக் குறித்து சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இவை அனைத்தையும் செய்ய கடவுள் தமக்கு முழு அதிகாரம் அளித்திருக்கிறார் என்பதை இயேசு ஏற்கெனவே நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
—ஆதாரம்: மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் புத்தகங்கள்.

காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிலுக்கு வர அனுமதியில்லை. அதேபோல இரவு நேரத்தில் கோவிலில் தங்க அனுமதி இல்லை.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
வருகிற 31-ந் தேதி தை மாதம் அமாவாசை என்பதால் சுந்தரமகாலிங்கசுவாமிக்கு பால், பழம் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தை அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால் காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிலுக்கு வர அனுமதியில்லை.
அதேபோல இரவு நேரத்தில் கோவிலில் தங்க அனுமதி இல்லை. நீர் ஓடையில் குளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். பிரதோஷத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

சதுரகிரியில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் உள்ள நுழைவுவாயிலில் பக்தர்களுக்கு சேவை கட்டணமாக வனத்துறை சார்பில் ரூ. 5 வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேவை கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்...பூர்வ ஜென்ம பாவம் நீங்க பரிகாரங்கள்
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் கல்யாண உற்சவ சேவையை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
சீனிவாசமங்காபுரம் கோவிலில் கல்யாண உற்சவ சேவை வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் கல்யாண உற்சவ சேவையை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் பெற வேண்டும்.
கல்யாண உற்சவ சேவை வருகிற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி வசந்த பஞ்சமி அன்று தொடங்குகிறது. பிப்ரவரி 12-ந்தேதி ஏகாதசி, ஏப்ரல் மாதம் 2-ந்தேதி யுகாதி பண்டிகை, ஏப்ரல் 16-ந்தேதி சைத்ரா பூர்ணிமா, மே மாதம் 21-ந்தேதி சிரவண நட்சத்திரம் ஆகிய நாட்களில் கல்யாண உற்சவ சேவை நடக்கிறது.
மேலும் ஜூன் மாதம் 11-ந்தேதி துவாதசி, 18-ந்தேதி சிரவண நட்சத்திரம், 25-ந்தேதி துவாதசி, ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி ரோகிணி நட்சத்திரம், செப்டம்பர் மாதம் 10-ந்தேதி பவுர்ணமி, அக்டோபர் மாதம் 22-ந்தேதி துவாதசி, நவம்பர் மாதம் 5-ந்தேதி துவாதசி ஆகிய நாட்களில் கல்யாண உற்சவ சேவை நடக்கிறது.
கல்யாண உற்சவ சேவை நிகழ்ச்சிகள் அனைத்தும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. பக்தர்கள் அதில் முன்பதிவு செய்து, தங்களின் வீடுகளில் இருந்தே பக்தி சேனலில் ஒளிப்பரப்புவதை தரிசிக்கலாம்.
கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்ற மூன்று மாதங்களுக்குள் ஒரு தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் 2 பேர் வந்து சீனிவாசமங்காபுரம் கோவிலில் இலவசமாக சாமி தரிசனம் செய்யலாம். அந்தப் பக்தர்களுக்கு ஒரு மேல்துண்டு, ஜாக்கெட் துணி, அட்சதை ஆகியவை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சபரிமலை செல்பவர்கள், ஐயப்பன் குடிகொண்டுள்ள மேலும் சில கோவில்களையும் தரிசிப்பது சிறப்பு. அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று கூட அழைக்கிறார்கள்.
சபரிமலையில் தர்மசாஸ்தாவான ஐயப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, பக்தர்கள் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக அருள்பாலிக்கிறார். சபரிமலை செல்பவர்கள், ஐயப்பன் குடிகொண்டுள்ள மேலும் சில கோவில்களையும் தரிசிப்பது சிறப்பு. அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று கூட அழைக்கிறார்கள்.
எருமேலி:- ஐயப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். (கோவில் கேரளாவில் உள்ளது)
ஆரியங்காவு:- ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன்
அரசராக காட்சித் தருகிறார் ஐயப்பன். (தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் உள்ளது.)
அச்சன்கோவில்:- வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திக் காட்சித் தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். (செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.)
பந்தளம்:- இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப்பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்குதான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திருஆபரணங்கள் உள்ளன. மகரவிளக்கின் போது ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும்.
குளத்துப்புழா:-இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறிய அளவிலேயே கட்டப்பட்டு உள்ளது. (செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது.)
சபரிமலை:-ஐயப்பனை மணந்து கொள்ள விரும்பிய மகிஷி மாளிகப்புரத்து அம்மனாக சபரிமலையில் ஐயப்பனின் இடது பக்கத்தில் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். தன்னை மணிகண்டன் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார் என்ற பூரண நம்பிக்கையில், அவள் இன்றும் காத்திருப்பதாக நம்பப்படுகிறது.

அலங்கரிக்கப்பட்ட அழகிய பூத்தேரில் வீற்றிருந்த கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்களை காணிக்கையாக வழங்கினர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி திண்டுக்கல் பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திண்டுக்கல் அய்யப்பன் பூச்சொரிதல் விழாக்குழுவினர் சார்பில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அழகிய பூத்தேரில் வீற்றிருந்த கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதிஉலா தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பூக்களை காணிக்கையாக வழங்கினர். அவ்வாறு பெறப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்மனுக்கு படைக்கப்பட்ட பிறகு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக, கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாக பூத்தேர் வீதிஉலாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இந்து முன்னணியினர் சிலர் பூத்தேர் வீதி உலா நடத்த வேண்டும் என கோவில் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். இதையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி அனுமதி வாங்கினர். அதன்பிறகு பூத்தேர் வீதிஉலா நடத்தப்பட்டது.