search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சொர்க்கவாசல் திறக்கப்பட்டதையும், பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் வெளியே வந்ததையும் படத்தில் காணலாம்.
    X
    சொர்க்கவாசல் திறக்கப்பட்டதையும், பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் வெளியே வந்ததையும் படத்தில் காணலாம்.

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் கமலவல்லி நாச்சியார், அழகியமணவாள பெருமாள் ஆகியோர் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இங்கு திருஅத்யயன உற்சவம் எனப்படும் பகல் பத்து கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி கடந்த 27-ந்தேதி வரை நடைபெற்றது. நேற்று பகலில் ஆகம விதிப்படி பூஜைகள், ஆராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. இதில் கமலவல்லி நாச்சியார் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் நடைகண்டருளல் சேவை நடைபெற்றது. மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம், சடகோபம் சாதித்தல் நடைெபற்றது.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முதல் தடைவிலக்கப்பட்டதால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பரமபத வாசல் வழியாக சென்றனர். மேலும் வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் நடைபெறும். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×