search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அம்பை வாகைப்பதியில் தை திருவிழா கொடியேற்றம்
    X
    அம்பை வாகைப்பதியில் தை திருவிழா கொடியேற்றம்

    அம்பை வாகைப்பதியில் தை திருவிழா கொடியேற்றம்

    அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைப்பதியில் தை பெருந்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிப்பார்.
    அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைப்பதியில் தை பெருந்திருவிழாவிற்காக நேற்று காலை கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக அய்யா வைகுண்டர் ஸ்ரீமன் நாராயண சாமிக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் இந்திரன், அனுமன், நாகம், கருடர், காளை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிப்பார். 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மதியம் உச்சிபடிப்பு மற்றும் அன்னப்பால் கஞ்சி தர்மமும், இரவு 7 மணிக்கு அன்னதர்மமும் நடைபெறும்.

    10-ம் திருநாள் அன்று முந்திரிக்கிணற்றில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தனகுடம், பால்குடம் மற்றும் அங்கப்பிரதட்சணம் நடைபெறும். 11-ம் திருநாள் அன்று மதியம் 3 மணிக்கு தேரோட்டமும், அன்று காளை வாகனத்தில் சப்பர பவனியாக வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் அய்யாவழி அன்புக்கொடி மக்களும், வாகைகுளம் பகுதியை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×