என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை குறைவாக இருந்ததால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் வழிபாடு செய்ய தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி வார இறுதி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நேற்று முதல் வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாடு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கியது. அதைத்தொடர்ந்து நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நேற்று குறைந்த அளவிலான பக்தர்களே சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாததால் வேகமாக சென்று எளிதாக சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கொரோனா விதியை கடைபிடித்து கலந்து கொண்டு வழிபட்டனர்.
    கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி முதல் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுடன், ஞாயிறு முழு ஊரடங் கும் அமல்படுத்தப்பட்டது.

    இதையடுத்து வார இறுதி நாட்களில் கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவில் கள் முன்பு நின்று பலர் சாமி கும்பிட்டுவிட்டு சென்றனர். இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதுடன், வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப் பட்டது.

    இதை தொடர்ந்து கோவை ஈச்சனாரி மற்றும் புலியகுளம் விநாயகர், மருதமலை முருகன், பேரூர் பட்டீஸ்வரர், தண்டு மாரியம்மன், கோனியம்மன் கோவில்களில் நேற்று அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கொரோனா விதிகளை கடைபிடித்து மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்ததுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து நின்றனர்.

    இதுகுறித்து இந்து சமய அறநிலையதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப் படுகிறது. எனவே கோவிலுக்கு வரும் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், என்றார்.

    இதேபோல் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவையில் உள்ள மசூதிகளிலும் முஸ்லிம்கள் தொழுகைகளில் ஈடுபட்டனர்.

    கொரோனா பரவலால் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதியில் இருந்து திருப்பதியில் பக்தர்களுக்கு நேரில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.
    திருமலை :

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று பரவலால் திருமலையில் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்ெகட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது.

    கொரோனா பரவலால் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதியில் இருந்து திருப்பதியில் பக்தர்களுக்கு நேரில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டாலும், கிராமப்புறங்களில் உள்ள சாதாரணப் பக்தர்களுக்கு எந்தவொரு தரிசன டிக்கெட்டுகளும் கிடைக்கவில்லை.

    எனவே திருப்பதியில் சாதாரணப் பக்தர்களின் வசதிக்காக நேரில் (ஆப் லைனில்) இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க வேண்டும் என, பலமுறை யோசித்தாலும், கொரோனா தொற்று பரவினாலும் சாதாரணப் பக்தர்களுக்கு நேரில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது தவிர்க்க முடியாது.

    பிப்ரவரி மாதம் 15-ந்தேதிக்குள் ஒமைக்ரான் தொற்று பரவல் குறையும், என மருத்துவ நிபுணர்கள் கூறுவதால், தற்போது பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வரை ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை வழங்குகிறோம். பிப்ரவரி மாதம் 15-ந்தேதிக்கு மேல் சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை கவுண்ட்டர்களில் நேரில் வழங்க, பிப்ரவரி மாதம் 15-ந்தேதி ஆலோசனை நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பூர்வ ஜென்மத்தில் செய்ததால் இப்பிறவியில் துன்பங்களை அனுபவிப்பதாக நம்பும், கருதும் நபர்கள் தங்கள் செய்த பூர்வ ஜென்ம வினைகளுக்கான பயனை அனுபவித்தே தான் தீர வேண்டும்.
    நாம் இப்போது வாழும் வாழ்க்கை, அதில் ஏற்படும் பல வகையான இன்ப, துன்ப அனுபவங்கள் எல்லாமே முற்பிறவியுடன் தொடர்புடையது என இந்து மற்றும் புத்த, சமண மதங்களின் சாத்திரங்களும் கூறுகின்றன. பூர்வ ஜென்மத்தில் செய்ததால் இப்பிறவியில் துன்பங்களை அனுபவிப்பதாக நம்பும், கருதும் நபர்கள் தங்கள் செய்த பூர்வ ஜென்ம வினைகளுக்கான பயனை அனுபவித்தே தான் தீர வேண்டும். ஆனால் இப்பிறவியில் நமக்கு ஏற்படவிருக்கிற பூர்வ ஜென்ப வினை பயன்கள் தீவிர தன்மையை சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் நாம் குறைக்க முடியும்.

    பூர்வ ஜென்ம கர்ம வினைப்பயன்களின் கடுமைத்தன்மையை குறைக்க விரும்புபவர்கள் மாமிச உணவுகள், போதை வாஸ்து போன்றவற்றை உண்பதை அறவே நீக்கிவிடுவது உத்தமமான பரிகாரம் ஆகும். தினந்தோறும் உங்கள் இல்லங்கள் அல்லது வேறு எங்காவது பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ளவேண்டும். சிவபெருமானின் கோவில்களுக்கு மகாசிவராத்திரி, சனிப்பிரதோஷம் போன்ற தினங்களில் சென்று வழிபடுவதும் நன்மையை ஏற்படுத்தும்.

    வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை போன்றவற்றை கொடுத்து வரவேண்டும். எப்போதும் முதியவர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து, அவர்களிடம் ஆசிகளை பெறுவது சிறந்தது. குரு, துறவிகள், ஞானிகள் போன்றோருக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்வது உங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள், கர்மவினைகள் போன்றவற்றை போக்கும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.
    திருப்பதியில் வருகிற 8-ந்தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. மாடவீதிகளில் வாகன வீதிஉலா கிடையாது என்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.
    திருப்பதி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா தொற்று சற்று குறைந்து வரக்கூடிய நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது. உரிய நிபந்தனைகளை கடைபிடித்து ஏழுமலையானை தரிசிக்க குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தற்போது தடுப்பூசி பணிகள் வேகம் அடைந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் அனுமதிக்கப்பட்டது போன்று மீண்டும் இலவச தரிசனத்தை அனுமதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

    இதனால் பல மாதங்களாக ஏழுமலையானை தரிசிக்க முடியாத பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

    திருப்பதியில் வருகிற 8-ந்தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. அன்றுஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் வீதிஉலா வருவார்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற பிரம்மோற்சவ வாகன சேவையை போன்று கோவிலுக்கு உள்ளேயே கல்யாண மண்டபத்தில் ரதசப்தமிக்கான வாகன சேவை பக்தர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் உள்ள குபேர லிங்கத்தை, சுக்ர ஓரையில் வெண் பட்டாடை சாத்தி வழிபாடு செய்தால், வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும், குபேர லிங்கத்தை தரிசிக்கலாம். தன்னிடம் இருக்கும் சங்கநிதி, பதுமநிதிகள் நீங்காதிருக்க ஈசனை நோக்கி குபேரன் இங்கு தவமியற்றினான். ஈசனோ, ‘உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருப்பது என்பது, மகாலட்சுமியின் அருளால்தான் சாத்தியம்’ என்று சொல்லி மறைந்தார்.

    இதையடுத்து குபேரன் மகாலட்சுமியை நோக்கி தவமியற்றி திருமகளின் திருக்கரத்தால் சுயம்பு லிங்கத்தை பெற்று இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இங்குள்ள குபேர லிங்கத்தை, சுக்ர ஓரையில் வெண் பட்டாடை சாத்தி வழிபாடு செய்தால், வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 11-ந் தேதி நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருப்பள்ளி ஓடம் திருநாள் எனப்படும் தெப்பத்திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 4-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபம் அருகே நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம் மற்றும் மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, சுந்தர்பட்டர் மற்றும் ஊழியர்கள் நேற்று பகல் 12.30 மணியளவில் நட்டனர்.

    தெப்பத்திருவிழாவின் முதல் நாளான 4-ந்தேதி ஹம்ச வாகனத்திலும், 5-ந் தேதி அனுமந்த வாகனத்திலும், 6-ந்தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 7-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 8-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 9-ந்தேதி யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளுகிறார்.

    திருவிழாவின் 7-ம் நாளான 10-ந்தேதி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 11-ந் தேதி நடைபெறுகிறது. 9-ம் திருநாளான 12-ந் தேதி ஒற்றை பிரபை வாகனத்தில் பந்த காட்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஐயப்பனின் கையில் வில், வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும், அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதால் அவையே 18 படிக்கட்டுகளாக நிர்மானிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்கள்.
    சபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகளிலும், 18 திருநாமங்களுடன் ஐயப்பன் எழுந்தருளியுள்ளார். குளத்தூர் பாலன், ஆரியங்காவு ஆனந்த ரூபன், எருமேலி ஏழைப் பங்காளன், ஐந்து மலையவன், ஐங்கார சகோதரன், கலியுக வரதன், கருணாகரத்தேவன், சத்திரிய பரிபாலகர், சற்குணசீலன், சபரிமலைவாசன், வீரமணிகண்டன், விண்ணவர் தேவன், விஷ்ணு மோகினி பாலன், சாந்த சொரூபன், சற்குணநாதன், நற்குண ஜாலந்தன், உள்ளத்தமர்வான், ஐயப்பன் ஆகியவை ஆகும்.

    ஐயப்பனின் கையில் வில், வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும், அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதால் அவையே 18 படிக்கட்டுகளாக நிர்மானிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்கள். அத்துடன், இந்த படிக்கட்டுகளில் 18 தேவதைகள் அமர்ந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
    பிரமாண்டமான மாசாணியம்மன் சிலை அடுத்தமாதம் (பிப்ரவரி)16-ந்தேதி கீழ் புதுக்காடு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்ப‌ட்டுள்ளது.
    கொடைக்கானல் அப்சர்வேட்டரியிலுள்ள கீழ் புதுக்காடு பகுதியில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக 17 அடி உயரம் 9 அடி அகலத்தில் 11 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆன பிரமாண்டமான மாசாணியம்மன் சிலை சுமார் ஒரு வருட காலமாக பழனியில் உருவாக்கப்பட்டது.

    இதையடுத்து மாசாணியம்மன் சிலை பழனியில் இருந்து லாரி மூலம் கொடைக்கானலுக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ள கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழியில் செண்பகனூர், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, டிப்போ, அப்சர்வேட்டரி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் பக்தர்கள் மேள தாளத்துடன் சிலைக்கு மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து சிறப்புபூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    இந்த பிரமாண்டமான மாசாணியம்மன் சிலை அடுத்தமாதம் (பிப்ரவரி)16-ந்தேதி கீழ் புதுக்காடு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்ப‌ட்டுள்ளது.
    திருப்பதியில் தரிசன டிக்கெட் வெளியிட்ட சுமார் 30 நிமிடத்தில் 3.36 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
    திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

    ஒரு நாளைக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் என 28 நாட்களுக்கு 3.36 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்வதற்காக தேவஸ்தான இணையதளத்தை பயன்படுத்தினர்.

    இதனால் இணையதள சேவையை பயன்படுத்த முடியாமல் பக்தர்கள் தவித்தனர். பெரும்பாலானோர் தனியார் இன்டர்நெட் மையங்களில் தரிசனம் டிக்கெட்டுகளை பதிவு செய்தனர்.

    தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட நேரத்தில் இருந்து சுமார் 30 நிமிடத்தில் 3.36 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. டிக்கெட் கிடைக்காத பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வீதம் 2.80 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    விருத்தாசலம் மணவாளநல்லூரில் சித்திவிநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, மற்றும் பங்குனி உத்திரம், வசந்த உற்சவம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    இதனால் இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் அதிகளவு வந்து செல்வார்கள்.

    இந்நிலையில் இந்த கோவிலின் வளாகத்தில் அமைந்துள்ள பழுதடைந்த கொடிமரத்தை மாற்ற கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. பழைய கொடிமரம் அகற்றப்பட்ட நிலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கொடிமரத்திற்கான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டு சிவ மந்திரங்களை ஓதி மகா தீபாரதனையுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கொடிமரத்தின் உச்சியில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வழிப்பட்டனர். இதில் உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாலா, ஊராட்சி மன்ற தலைவர் நீதிராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர். நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்.
    நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு. பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான். நாரம் என்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது.

    நாராயணன் என்பதை நாரம்+அயணன் என பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடையவன். பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள். நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர். நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்.

    இவர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம். அவரது பிறப்புக்கு பின்தான் தண்ணீர் அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார் என்பர். நாரதர் போல நாமும் நாராயணன் பெயரை அதிகம் உச்சரித்தால் வெள்ளமாக அருள் மழை பெற முடியும். அதுவும் புரட்டாசியில் உச்சரித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

    ×