search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிரமாண்ட மாசாணி அம்மன் சிலை
    X
    பிரமாண்ட மாசாணி அம்மன் சிலை

    கொடைக்கானலில் பிரதிஷ்டை செய்ய பிரமாண்ட மாசாணி அம்மன் சிலை

    பிரமாண்டமான மாசாணியம்மன் சிலை அடுத்தமாதம் (பிப்ரவரி)16-ந்தேதி கீழ் புதுக்காடு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்ப‌ட்டுள்ளது.
    கொடைக்கானல் அப்சர்வேட்டரியிலுள்ள கீழ் புதுக்காடு பகுதியில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக 17 அடி உயரம் 9 அடி அகலத்தில் 11 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆன பிரமாண்டமான மாசாணியம்மன் சிலை சுமார் ஒரு வருட காலமாக பழனியில் உருவாக்கப்பட்டது.

    இதையடுத்து மாசாணியம்மன் சிலை பழனியில் இருந்து லாரி மூலம் கொடைக்கானலுக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ள கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழியில் செண்பகனூர், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, டிப்போ, அப்சர்வேட்டரி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் பக்தர்கள் மேள தாளத்துடன் சிலைக்கு மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து சிறப்புபூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    இந்த பிரமாண்டமான மாசாணியம்மன் சிலை அடுத்தமாதம் (பிப்ரவரி)16-ந்தேதி கீழ் புதுக்காடு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்ப‌ட்டுள்ளது.
    Next Story
    ×