search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodimaram"

    • ஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்தருகே நமஸ்கரிக்க வேண்டும்.
    • கை இரண்டையும் மேல் தூக்கி தான் ஈஸ்வரரை வணங்க வேண்டும்.

    ஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்தருகே நமஸ்கரிக்க வேண்டும்.

    மும்முறை வலம் வரவேண்டும். அபிஷேக காலத்தில் பிரதட்சணம் செய்யக்கூடாது.

    கொடிமரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    ஆலயத்தை விட்டு வெளிவரும்போது கொடி மரத்தருகில் நமஸ்கரிக்க வேண்டும்.

    ஈஸ்வரர் சன்னதிக்கு உள்ளே நுழையும் முன்பு துவாரபாலகரை வணங்கிவிட்டு ஈஸ்வரரை தரிசிக்கவும்.

    கை இரண்டையும் மேல் தூக்கி தான் ஈஸ்வரரை வணங்க வேண்டும்.

    வணங்கி விட்டு தட்சிணாமூர்த்தி சுவாமியையும் மற்றும் பிரகாரத்தில் சுற்றியுள்ள சுவாமிகளையும் தரிசித்துவிட்டு அம்மன் சன்னதிக்கு சென்று அம்மன் தரிசனத்தை முடித்து கொண்டு நவகிரக சன்னதிக்கு வந்து நவகிரஹங்களை இடமிருந்து வலமாக 9 முறை சுற்றி வரவும்.

    ஒரு போதும் வலமிருந்து இடமாக சுற்றக்கூடாது. சிலர் வலம் இருந்து இடமாக சுற்றி வருவார்கள்.

    இதன் பொருள் முக்தி வேண்டுதல்.

    • கோபுரம் ஸ்தூலலிங்கம் ஆகும்.
    • கொடி மரம் சூட்சமலிங்கமாகும்.

    ஆலய கொடி மரம் மிகப்பெரிய தத்துவங்களை தன்னுள் கொண்டுள்ளது. கோபுரம் ஸ்தூலலிங்கம் ஆகும். கொடி மரம் சூட்சமலிங்கமாகும். நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடிமரம் என்று நம் ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

    நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை,பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க, மனம் ஒரு நிலைப்படும். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

    கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அதுபோல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன. இது கோவிலுக்கு கோவில் மாறுபட்டாலும், கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள்.

    அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும் இதற்கு சமபீடத்தில், சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப் பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும். இதன்மூலம் கொடி மரம், மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது.

    • கும்பாபிஷேகம் முன்னாள் எம்.பி பி.ஆர்.எஸ். வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ பி.கே.என். கணேசமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.
    • சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் சாமி வீதியுலா நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே பூண்டியாங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத புனிதவேல் திருமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை 25-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முன்னாள் எம்.பி பி.ஆர்.எஸ். வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ பி.கே.என். கணேசமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை கணபதி ஹோமத்துடன், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள் மற்றும் பூர்ணாஹிதி நடைபெறுகிறது. பின்னர் சிகர விழாவான கும்பாபிஷேக விழா 25-ந்தேதி காலை கோ பூஜை , 2-ம் கால யாகசாலை பூஜை மற்றும் ஹோமங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடாகி காலை 10.10 மணிக்கு புனித வேல் திருமுருகன் ராஜகோபுரம், கொடிமரம் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடை பெறுகிறது. பின்னர் மாலை சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் சாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம தலைவர் அன்பழகன், அறங்காவலர் பரமாநந்தம், திருப்பணிக்குழு தலைவர் துரைராஜ், செயலாளர் குணசேகர், ஆடிட்டர் செந்தில்குமார், திருப்பணிக்குழு துணைத் தலைவர்கள் சம்பத்குமார், சாம்பசிவம் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், கிராம வாசிகள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    • மார்ச் 13-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
    • கருடாழ்வார் கொடி கம்பம் நவதான்ய மற்றும் நவரத்னங்களுடன் நிறுவப்பட்டது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஜி.என். செட்டி சாலையில் புதிதாக பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு புதிய கொடிக்கம்பம் நிறுவும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான பஞ்ச ராத்ர ஆகம ஆலோசகர் சீனிவாசாச்சாரியுலு மேற்பார்வையில், விஸ்வக்சேன ஆராதனை, புண்யாஹவச்சனம், கும்ப ஆரத்தி நடந்தது.

    கருடாழ்வார் கொடி கம்பம் நவ தான்ய மற்றும் நவ ரத்னங்களுடன் நிறுவப்பட்டது. மேலும் குபேர, கூர்ம, லட்சுமி யந்திரங்களும் நிறுவப்பட்டன. அடுத்த மாதம் (மார்ச்) 13-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் தொடங்கி நடக்கின்றன.

    நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், சென்னை உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி, தேவஸ்தான என்ஜினீயர் நாகேஸ்வர ராவ், என்ஜினீயர்கள் சத்தியநாராயணா, மனோகரன், துணை அதிகாரிகள் குணபூஷன்ரெட்டி, சுப்பிரமணியம், செல்வம், பறக்கும் படை அதிகாரி மனோகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகிறது.
    • கொடி மரமும் தற்போது பெய்த மழையின் காரணமாக முறிந்து விழுந்து விட்டது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ராமாயணம் காலத்திற்கு முன்பே உள்ளதாக கூறப்படுகிறது.

    ராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த கோவிலில் உள்ள திருமாலை வழிபட்டதாகவும், கோவிலின் முகப்பில் அவர் பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்ததாகவும் கூறப்படுகிறது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, சொர்க்கவாசல் திறப்பு, கஜேந்திர மோட்சம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறும். இந்த கோவில் குடமுழுக்கு விழா கடந்த 2005-ம் ஆண்டு நடந்தது.

    அப்போது இந்த கோவில் கொடிமரம் பழுதடைந்தது. இதனால் புதிய கொடி மரம் அமைக்க பக்தர் ஒருவர் பல லட்சம் ரூபாய் மதிப்பில் தேக்கு மரம் வாங்கி கொடுத்துள்ளார்.

    தேக்கு மரம் வாங்கி கொடுத்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கொடி மரம் அமைக்கவில்லை. கோவில் உள்பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த மரம் மழை, வெயிலில் கிடந்தது வீணாகும் நிலையில் உள்ளது.

    அறநிலையத்துறையின் அனுமதி பெற்று கொடிமரம் அமைக்க வேண்டும் என்ற காரணத்தால் 4 ஆண்டுகளாக அந்த மரம் அப்படியே கிடக்கிறது. கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகிறது என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் முன்பு கோவிலில் இருந்த சிறிய கொடி மரமும் தற்போது பெய்த மழையின் காரணமாக முறிந்து விழுந்து விட்டது. இதனால் ஆண்டு பெருவிழாவிற்கு புதிதாக சிறிய அளவில் தைல மரத்தில் கொடிமரம் நட்டு அதில் கொடியேற்றம் நடந்தது.

    பக்தர் காணிக்கையாக அளித்த மரத்தில் கொடிமரம் அமைக்க அறநிலையத்துறையின் காலதாமதத்தால் கொடி மரம் அமைக்க முடியாமல் உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே இனிமேலும் கால தாமதம் செய்யாமல் உடனடியாக கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவிழா காலங்களில் தற்காலிக கொடிமரம் நாட்டி கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெறும்.
    • கோவிலில் நிரந்தர கொடி மரம் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது.

    அதங்கோடு மாயா கிருஷ்ணசாமி கோவிலில் நிரந்தர கொடி மரம் அமைக்க கேரள மாநிலத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பிரமாண்ட தேக்கு மரத்திற்கு, ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோடு மாயா கிருஷ்ணசாமி கோவிலில் திருவிழா காலங்களில் தற்காலிக கொடிமரம் நாட்டி கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெறும். இந்த நிலையில் கோவிலில் நிரந்தர கொடி மரம் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது.

    அதன் படி கோவிலின் தந்திரியும், சபரிமலை கோவில் முன்னாள் தந்திரியுமான தெக்கேடத்து மனை நாராயணன் விஷ்ணு நம்பூதிரி வழிகாட்டுதலின் படி, கோவில் நிர்வாகிகள் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் மான்னானம் என்ற பகுதியில் இருந்து 45 அடி நீளம் கொண்ட தேக்கு மரத்தை தேர்வு செய்து, அங்குள்ள நரசிம்ம மூர்த்தி கோவிலில் பூஜைகள் செய்து லாரி மூலம் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த கொடி மரத்துக்கு களியக்காவிளை பகுதியில் இருந்து பக்தர்கள் வரவேற்பு அளித்து ஊர்வலமாக கிருஷ்ணசாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆலய நிர்வாக தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் நேற்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக கொடிமரத்துக்கு அா்ச்சகா்கள் சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து, தீபாராதனை காண்பித்தனர்.

    நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக பூதலப்பட்டு தொகுதி எம்.எஸ். பாபு எம்.எல்.ஏ. மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன்ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு, மாநில அறநிலையத்துறை ஸ்தபதி பரமேஷ்வரப்பா, கோவில் செயற்பொறியாளர் வெங்கட்நாராயணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பழுதடைந்த கொடிமரம் அகற்றப்பட்ட நிலையில் நேற்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழுதடைந்த கொடிமரத்தை மாற்ற கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி பாலாலயம் நடந்தது.

    தொடர்ந்து பழைய கொடிமரம் அகற்றப்பட்ட நிலையில் நேற்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாலா, ஊராட்சி மன்ற தலைவர் நீதிராஜன், அரசு வக்கீல் விஜயகுமார், வள்ளலார் குடில் இளையராஜா, உபயதாரர் கனகசபை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் 40 அடி உயர புதிய கொடிமரம் நிறுவப்படுகிறது.
    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.24 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்ட திருமலை திருப்பதி ே-்தவஸ்தான பட்ஜெட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. அதன்பிறகு கோவில் கட்டுமான பணி தொடங்கியது. தற்போது இந்த கோவில் 2 தளமாக கட்டப்பட்டு உள்ளது.

    கீழ்தளத்தில் சீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம், அலுவலகம் போன்றவைகளும் மேல்தளத்தில் ஏழுமலையான் வெங்கடாசலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள்அம்மாள் சன்னதி, கருடபகவான் சன்னதி போன்ற சன்னதிகளும் சுவாமிக்கு நிவேத்தியம் தயாரிப்பதற்கான மடப்பள்ளியும் லிப்ட் வசதியும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. கோவிலை சுற்றி தேர் ஓடுவதற்காகவும், வாகன பவனிக்காகவும் 4 மாடவீதிகள் கட்டப்பட்டு உள்ளன.

    கோவிலின் மூலஸ்தானத்தில் நிறுவப்பட உள்ள ஏழுமலையான் வெங்கடாசலபதி சிலை 6½ அடி உயரத்திலும் பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்மாள் ஆகியோருக்கு 3 அடி உயர சிலைகளும் வடிவமைக்கும் பணி திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான சிற்ப கலை கல்லூரியில் நடந்து வருகிறது. கருவறையில் ஏழுமலையான் கால் பாதத்தில் ஆண்டுதோறும் சித்திரை விசு தினமான ஏப்ரல் 14-ந் தேதி அபூர்வ சூரிய ஒளி விழும் வகையில் பொறியியல் வல்லுனர்கள் வடிவமைத்து கட்டி உள்ளனர். கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவிலில் நிறுவப்பட உள்ள தேக்கு மரத்தினாலான 40 அடி உயர புதிய கொடிமரம் நிறுவ தூத்துக்குடியில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் நேற்று விவேகானந்த கேந்திராவுக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த கொடிமரம் திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயற்பொறியாளர் சந்திரமவுலி ரெட்டி, உதவி பொறியாளர் அமர்நாத்ரெட்டி ஆகியோர் தூத்துக்குடி சென்று இந்த கொடிமரத்துக்கான தேக்கு மரத்தடியை தேர்வு செய்து கொண்டு வந்தனர். அங்கு அந்த கொடிமரம் ராட்சத கிரேன் மூலம் கன்டெய்னர் லாரியில் இருந்து இறக்கி வைக்கப்பட்டது. இந்த கொடிமரம் விரைவில் வடிவமைக்கப்பட்டு கோவில் மேல்தளத்தில் நிறுவப்படும் என்று தெரிகிறது. இதில் 7 அடி உயரம் கொடிமரத்தின் அஸ்திவாரத்தில் இருப்பதற்கு வசதியாகவும் மீதம் உள்ள 33 அடி உயரம் மேலே தெரியும்படியும் நிறுவப்பட உள்ளது. 
    ×