என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இதைத்தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

    விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.


    வெங்கட் பிரபு -விஜய்

    இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் குடும்ப படமாகவும் அப்பா-மகன் உறவுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் இதே கதைக்களத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.
    • சமீபத்தில் ரசிகர்கள் ரவீந்தர் -மகாலட்சுமி தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரியவுள்ளதாக சலசலத்து வந்தனர்.

    தமிழில் நட்புன்னா என்ன தெரியுமா, சுட்டக்கதை, முருகைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தனது லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். சினிமா தயாரிப்பளராக மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சகராகவும் தன்னை முன்நிலைப் படுத்திகொண்டார்.


    ரவீந்தர் சந்திரசேகர் -மகாலட்சுமி

    இவர் கடந்த ஆண்டு தனியார் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் சின்னத்திரை சீரியல் நடிகையுமான மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தார். சமீபத்தில் ரவீந்தர் சந்திரசேகர் தனியாக இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு "வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே. ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'' என்று பகிர்ந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ரவீந்தர் -மகாலட்சுமி தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரியவுள்ளதாக சலசலத்து வந்தனர்.


    ரவீந்தர் சந்திரசேகர் -மகாலட்சுமி

    இதனை மறுத்துள்ள நடிகை மகாலட்சுமி இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "புருஷா...சமூக வலைதளத்தில் தனி புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது. நாம் பிரிந்து விட்டோம் என்று அத்தனை சமூக வலைத்தளங்களும் பேசுகின்றன. மீண்டும் இந்த தவறை செய்ய வேண்டாம்.

    யூடியூப் சேனல்களுக்கு எனது மைண்ட் வாய்ஸ். இன்னுமா நாங்க டிரெண்டு. இதுக்கு இல்லையா ஒரு எண்டு. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்'' என்று பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்த்.
    • ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது நடிகர் சர்வானந்தின் கார் விபத்துக்குள்ளானது.

    தமிழில் எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, கணம் உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்துக்கு சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து வருகிற ஜூன் 3-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.


    சர்வானந்த் -ரக்ஷிதா ரெட்டி

    இந்த நிலையில் நேற்று (மே 28) காலை ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது நடிகர் சர்வானந்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த சர்வானந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில தினங்களில் திருமணம் ஆகவுள்ள நிலையில் சர்வானந்த் விபத்திற்குள்ளானது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    சர்வானந்த் -ரக்ஷிதா ரெட்டி

    இந்நிலையில் இந்த விபத்து குறித்து சர்வானந்த் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று காலை என்னுடைய கார் விபத்துக்குள்ளான செய்திகள் வெளியாகின. இது ஒரு சிறிய விபத்துதான். உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் நான் வீட்டில் நலமுடன் இருக்கிறேன். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. என் மீது வைத்துள்ள உங்கள் அக்கறைக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    • இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
    • இப்படம் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது, என்றாலும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனினும் இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.


    தி கேரளா ஸ்டோரி

    சமீபத்தில் இப்படம் குறித்த நடிகர் கமல்ஹாசன், "பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான். வெறுமனே லோகோவுக்கு பக்கத்தில் 'இது உண்மைக் கதை' என எழுதினால் மட்டும் போதாது. அதில் உண்மை இருக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல" என்று விமர்சித்திருந்தார்.

    கமல்ஹாசனின் இந்த விமர்சனத்துக்கு 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் இயக்குனர் சுதிப்டோ சென் பதிலளித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "இது போன்ற விமர்சனங்களுக்கு ஆரம்பத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று, அப்படி செய்வதை நான் நிறுத்திவிட்டேன். ஏனெனில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பிரச்சாரப் படம் என்று கூறியவர்கள் படம் பார்த்த பிறகு தங்கள் மனதை மாற்றிக் கொண்டனர். படம் பார்க்காதவர்கள்தான் அதனை விமர்சித்து வருகின்றனர். நம் நாட்டில் மிகவும் முட்டாள்தனமான ஸ்டீரியோடைப்கள் உள்ளன.


    சுதிப்டோ சென்

    பாஜகவினருக்கு படம் பிடிக்கிறது என்பதால் இது அவர்களுடைய படம் என்று அர்த்தம் அல்ல. உலகம் முழுவதும் 37 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இந்தப் படம் பிடித்துள்ளது. அவர்கள் விமர்சிக்க வேண்டுமென்றால், அவர்கள் என்னிடம் நேரடியாக போன் செய்து அதுகுறித்து விவாதிக்கிறார்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒருவர் படம் பார்த்துவிட்டு கருத்து சொல்லாமல் அதை பிரசார படம் என்று சொல்லி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பாசாங்கு, அற்பத்தனம் என்பதைத் தவிர வேறு என்ன வார்த்தைகளைச் சொல்வது? விமர்சிப்பவர்களுக்கு நான் விளக்கம் கொடுப்பதில்லை" என்று கூறியுள்ளார்.

    • இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'.
    • இப்படம் வருகிற ஜுன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    சமீபத்தில் 'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து, இப்படத்தின் மூன்றாவது பாடலான வீரன் திருவிழா பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

    வீரன் திரைப்படம் வருகிற ஜுன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • யூடியூபரான இர்பான் கார் மோதி பெண் ஒருவர் பலியானார்.
    • இந்த சம்பவத்தின் போது இர்பான் இந்த காரில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    செங்கல்பட்டு மாவட்டம் புத்தேரி அருகே உள்ள கோனாதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (55). இவர் புத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிப்புரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி இரவு அவரது மகளை பார்ப்பதற்காக மறைமலை நகர் பகுதிக்கு சென்றுவிட்டு கோனாதியில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பும் போது மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று பத்மாவதி மீது மோதி விபத்துக்குள்ளானது.


    பத்மாவதி -இர்பான்

    இந்த விபத்தில் சுமார் 20 அடிக்கு மேலாக தூக்கி வீசப்பட்ட பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் பிரபல யூடியூபர் இர்பானின் கார் என்பது தெரியவந்தது.

    மேலும், இந்த சம்பவத்தின் போது இர்பான் இந்த காரில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக 304 (ஏ) என்ற பிரிவின் கீழ் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் இர்பானின் மைத்துனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில், இர்பானின் காரை பறிமுதல் செய்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கூடுவாஞ்சேரி போலீசார் உரிய ஆவணங்களை ஆர்டிஓ அலுவலகத்தில் வழங்காததால் அதிகாரிகள் காரை திருப்பியனுப்பியுள்ளனர். தற்போது காரானது மீண்டும் போலீஸ் நிலையத்திற்கே வந்துள்ளது.

    • நடிகர் சிவகார்த்திகேயன் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.


    இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், சிவகார்த்திகேயன் 'வீரமே ஜெயம்' என டப்பிங்கை தொடங்குகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    • நடிகர் துல்கர் சல்மான் தற்போது நடிக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • இப்படத்தின் ஸ்டண்ட் பயிற்சியாளர் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.



    'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 95 நாட்கள் நடைபெற்று பின்னர் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்யு பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. அதில், 2 வாரங்கள் தூக்கமில்லாமல் நடைபெற்ற படப்பிடிப்பு. இந்த வருடம் முழுவதும் சர்ப்ரைஸ். துல்கர் சல்மானுடன் அற்புதமான படப்பிடிப்பு என்று பதிவிட்டுள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த்.
    • இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ரஜினி

    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.


    சத்ய நாராயண ராவ் -ரஜினி

    இந்நிலையில், நடிகர் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. கடவுளின் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும். ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார். வயதாகிவிட்டது அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பில்லை" என்று கூறினார்.

    • சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் பல்லேடியம் அரங்கில் நியூயார்க் ‘கோச்’ பிராண்டின் புதிய டேபி (Tabby) கைப்பைகள் அறிமுக விழா நடைபெற்றது.
    • இதில் நடிகைகள் ஜனனி, பார்வதி நாயர், யாஷிகா ஆனந்த், சம்யுக்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் பல்லேடியம் அரங்கில் புகழ் பெற்ற நியூயார்க் 'கோச்' பிராண்டின் புதிய டேபி (Tabby) கைப்பைகள் அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்கள் ஜனனி, பார்வதி நாயர், யாஷிகா ஆனந்த், சம்யுக்தா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பிற துறையைச் சேர்ந்த பிரபலங்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.



    புகழ்பெற்ற ஆடம்பர பிராண்டான 'கோச் நியூயார்க்' என்பது கோச் என அழைக்கப்படுகிறது. அதன் அதிநவீன லெதர் கைப்பைகள், சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்கள் என அனைத்தும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவையாகும். அமெரிக்க பிரீமியம் ரக பிராண்டான இதன் பொருட்கள் கடந்த பல ஆண்டுகளாக பலரின் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

    பல்லேடியத்தில் மே 27–ந்தேதி மாலை நடந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் இறுதி வரை 'கோச்' பிராண்டின் அதி-ஆடம்பரத்தின் மிக உயர்ந்த பொருட்கள் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதன் பிரத்யேக லெதர் டெபி கைப்பைகளின் புதிய தொகுப்பை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முழுமையாக ரசித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நவநாகரீகத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த பிராண்டின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

    • தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு'.
    • இந்த நிகழ்ச்சியில் திருவாரூரை சேர்ந்த நர்மதா என்பவர் போட்டியாளராக இருக்கிறார்.

    தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் திருவாரூரை சேர்ந்த நர்மதா என்பவர் 'இட ஒதுக்கீடு எனது உரிமை' என்ற தலைப்பில் இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இவரின் உரையை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான-பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் "தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது.


    நர்மதா

    நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்" என வாழ்த்தினேன்.

    எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய நர்மதாவின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடை வெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்! அனைவரும் சொல்வோம்-இடஒதுக்கீடு நமது உரிமை!" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


    • ஐ.பி.எல் இறுதிப்போட்டியை காண திரைப்பிரபலங்கள் பலர் சென்றிருந்தனர்.
    • கனமழை காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறம் என அறிவிக்கப்பட்டது.

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் மே 21-ந் தேதியுடன் முடிந்தது. இதன் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. பிளே ஆப்' சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவில் குஜராத் - சென்னை அணிகள் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.


    நரேந்திரமோடி மைதானம்

    ஐபிஎல் இறுதிப்போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இறுதிப்போட்டியை காண வந்த திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதில் ரசிகர்கள் பலர் அகமதாபாத் ரெயில் நிலையத்தில் உறங்கினர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    நரேந்திரமோடி மைதானத்தில் விக்னேஷ் சிவன்

    இந்நிலையில் இன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டியை இயக்குனர் விக்னேஷ் சிவன் காணவுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "இன்று முழு போட்டி நடக்க பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். போட்டியின் போது மழை பெய்து, அது நின்றவுடன் ஓவர்கள் குறைவாக வைத்து விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


    ×