என் மலர்
சினிமா செய்திகள்
- மாமன்னன் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ், தனுஷை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.
- இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்திய நேர்காணலில் பேசியுள்ளார்.
கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு படங்களை இயக்கிய இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பிறகு கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார்.

தனுஷ் - மாரி செல்வராஜ்
இப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ், தனுஷை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படம் மூலம் தனுஷுடன் மாரி செல்வராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த படம் வரலாற்று படமாக உருவாகவுள்ளது. படத்தின் கதையை இறுதிப்படுத்தி விட்டோம். இந்த கதை எல்லாம் காலக்கட்டத்தையும் ஒன்றிணைக்க கூடியதாக இருக்கும் என்றார்.
- திரைப்பட விழாவின் இறுதி நாளின் போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஈரானிய நடிகை மஹ்லாக ஜபேரி.
- கடந்த ஆண்டு நடந்த திரைப்பட விழா ஒன்றில் உக்ரேனிய கொடியை உடலில் வரைந்து கொண்டு ரஷ்யாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்தார்.
கேன்ஸ் திரைப்பட விழாவின் இறுதி நாளின் போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஈரானிய நடிகை மஹ்லாக ஜபேரி. கடந்த ஆண்டு நடந்த திரைப்பட விழா ஒன்றில் உக்ரேனிய கொடியை உடலில் வரைந்து கொண்டு ரஷ்யாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்தார். அதே போல இந்த ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்ட மஹ்லாக ஜபேரி அணிந்திருந்த கருப்பு உடையில் கீழே மரண தண்டனையை நிறுத்து என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.

மஹ்லாக ஜபேரி
அவருடைய உடையைப் பார்த்த ஊடகத்தினர் பரபரப்பானார்கள். சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அவர் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் இந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதில் ஈரானிய மக்களுக்கு இதனை அர்ப்பணிக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். இதனால் ஈரானில் நடக்கும் மரண தண்டனைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- சித்தார்த் நடிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டக்கர்'.
- 'டக்கர்' திரைப்படம் வருகிற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

'டக்கர்' திரைப்படம் வருகிற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி ஹத்ரபாத்தை தொடர்ந்து படக்குழு இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
- இவர் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்
சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷும் துபாய் தொழில் அதிபர் பர்ஹான் என்பவரும் ஒரே மாதிரி நிறம் மற்றும் டிசைனில் உடை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இதையடுத்து பர்ஹானை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பானது.

குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ்
இதற்கு கீர்த்தி சுரேசின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "கீர்த்தி சுரேஷும் பர்ஹானும் நண்பர்கள். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பர்ஹான் இருக்கிறார். இதுபோன்ற தவறான தகவலை பரப்புவது எங்கள் குடும்பம் மட்டுமன்றி அவரது குடும்பத்தையும் பாதிக்க செய்யும். இதுபோன்ற ஆதாரம் இல்லாத தகவல்களை தயவு செய்து வெளியிட வேண்டாம். கீர்த்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டால் கண்டிப்பாக நானே முதலில் அறிவிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
- யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) கார் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் பரிசோதனை முடிந்த பின்னர், காவல் நிலையத்தில் இருந்து இர்பானின் வாகனம் விடுவிக்கப்படும் என கூறப்படுகிறது.
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி இரவு புத்தேரி அருகே உள்ள கோனாதி என்ற பகுதியைச் சேர்ந்த 55 வயதாகும் பத்மாவதி அவரது மகளை பார்ப்பதற்காக மறைமலை நகர் பகுதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

உயிரிழந்த பத்மாவதி - இர்பான்
அப்போது மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த இர்பானின் சொகுசு கார் பத்மாவதி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 20 அடிக்கு மேலாக தூக்கி வீசப்பட்ட பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில், காரை ஓட்டி வந்த இர்ஃபானின் உறவினர் அசாரூதின் மீது போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால், விபத்தின் போது யூடியூபர் இர்ஃபானும், அவரது மனைவியும் காரில் இருந்தது தெரியவந்தது. இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட இர்பானின் சொகுசு காரை, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டது.

இர்பான்
இந்நிலையில், முறையான ஆவணங்களை போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஒப்படைக்காததால், இர்பானின் சொகுசு கார் மீண்டும் காவல் நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) கார் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் பரிசோதனை முடிந்த பின்னர், காவல் நிலையத்தில் இருந்து இர்பானின் வாகனம் விடுவிக்கப்படும் என கூறப்படுகிறது.
- ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
- இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே பலப்பரீட்சை நடந்தன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது. ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கிரிக்கெட் உயரத்திற்கு ஏணியாக பலர்… ஆனால் தோணியாக சென்னையை வெற்றியின் கரையில் சேர்ப்பதில் அவரே ஆகச் சிறந்தவர்.வெற்றிக்கு ஆயிரம் சூத்திரம் இருக்கலாம்.ஆனால் வெற்றியே அடுத்ததை ஆரோக்கியமாக நகர்த்தும் சூத்திரம்.மகிழ்ச்சி மழையில் csk ரசிகர்கள்!!!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Cricket உயரத்திற்கு ஏணியாக பலர்… ஆனால் தோணியாக சென்னையை வெற்றியின் கரையில் சேர்ப்பதில் அவரே ஆகச் சிறந்தவர்.வெற்றிக்கு ஆயிரம் சூத்திரம் இருக்கலாம்.ஆனால் வெற்றியே அடுத்ததை ஆரோக்கியமாக நகர்த்தும் சூத்திரம்.மகிழ்ச்சி மழையில் csk ரசிகர்கள்!!! pic.twitter.com/xdnOhcpwLq
— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 30, 2023
- முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
- இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
சமீபத்தில் இந்த படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் ஆர்யா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் விளம்பரப்படுத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, இப்திரைப்படத்தின் டிரைலரை, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மாலில், ஆர்யா மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் வெளியிட்டனர். அப்போது, நடிகர் ஆர்யாவை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம், அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'.
- ஜுன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

வீரன்
'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து அளித்துள்ள பேட்டியில், "நான் அதிக படங்களில் நடிக்காததற்கு காரணம் உள்ளது. ஒரு படத்தில் ஒப்பந்தமான பிறகு அதன் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனகெடுவேன். இசையமைக்கும் வேலையும் இருக்கும். நட்பே துணை படத்துக்காக விளையாட்டு கற்றேன். வீரன் படத்தில் குதிரை இருப்பதால் குதிரை ஏற பயிற்சி எடுத்தேன். இரண்டு வருடம் கவுரவ டாக்டர் பட்டம் பெற படிக்கச் சென்றேன்.

வீரன்
இதனாலேயே அதிக படங்களில் நடிக்க முடியவில்லை தற்போது ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் நான் நடித்துள்ள வீரன் படம் உடலில் இருந்து மின் சக்தியை வெளிப்படுத்தும் மண் சார்ந்த சூப்பர் ஹீரோ கதை. குலசாமிகள் எல்லாமே சூப்பர் ஹீரோக்களாக இருந்தவர்கள்தான். ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் படத்தில் இருக்கும். வில்லனாக வினய் வருகிறார்'' என்றார்.
வீரன் திரைப்படம் வருகிற ஜுன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிய படம் ராக்கெட்டரி.
- இப்படத்திற்காக இயக்குனர் மாதவன் விருது வென்றுள்ளார்.
சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் மாதவன் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார். அவர் இயக்கி நடித்திருந்த ராக்கெட்டரி திரைப்படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மாதவன்
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்டரி படத்தை மாதவன் இயக்கியிருந்தார். உளவு பார்த்ததாக போலி குற்றச்சாட்டில் சிக்கி சிறை தண்டனை மற்றும் சித்ரவதையை அனுபவித்த நேர்மையான விஞ்ஞானியின் வாழ்க்கை சம்பவங்களை இந்த படத்தில் மாதவன் பதிவு செய்து இருந்தார்.

ராக்கெட்டரி
சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இப்படத்தை மாதவனே தயாரித்தும் இருந்தார். தற்போது ராக்கெட்டரி படத்துக்காக சிறந்த இயக்குனர் விருது பெற்றுள்ள நிலையில் மாதவனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்து ஜி.டி.நாயுடு வாழ்க்கை கதையிலும் மாதவன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாமன்னன்.
- இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான்
'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ராசா கண்ணு' மற்றும் 'ஜிகு ஜிகு ரெயில்' பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. மேலும், ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாமன்னன்
இந்நிலையில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள டிரைலர் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் லைவ் கான்சர்ட் (Live Concert) நடைபெறவுள்ளதாக புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
#MAAMANNAN Audio Live Concert by @arrahman on June 1st at Nehru Stadium
— Udhay (@Udhaystalin) May 30, 2023
@mari_selvaraj @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @SonyMusicSouth @NetflixIndia pic.twitter.com/GnI1Wa02ZE
- அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறது.
- இப்படத்தின் படப்பிட்ப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ்
இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நீண்ட முடி மற்றும் தாடியுடன் இருக்கும் தனுஷின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
- மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள படம் "ரெஜினா".
- இப்படத்தின் டீசரை நடிகர் ஆர்யா இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடவுள்ளார்.
மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்த்துள்ளார்.

ரெஜினா - ஆர்யா
தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்தது. ரெஜினா படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்த நிலையில் இந்த டீசரை நடிகர் ஆர்யா இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.






