தனுஷ்-மாரி செல்வராஜ் இரண்டாவது முறையாக இணைந்த படத்தின் புதிய தகவல்

மாமன்னன் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ், தனுஷை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்திய நேர்காணலில் பேசியுள்ளார்.
தனுஷ் - மாரி செல்வராஜ்
தனுஷ் - மாரி செல்வராஜ்
Published on

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு படங்களை இயக்கிய இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பிறகு கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார்.

தனுஷ் - மாரி செல்வராஜ்
தனுஷ் - மாரி செல்வராஜ்

தனுஷ் - மாரி செல்வராஜ்

இப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ், தனுஷை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படம் மூலம் தனுஷுடன் மாரி செல்வராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த படம் வரலாற்று படமாக உருவாகவுள்ளது. படத்தின் கதையை இறுதிப்படுத்தி விட்டோம். இந்த கதை எல்லாம் காலக்கட்டத்தையும் ஒன்றிணைக்க கூடியதாக இருக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com