

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
வீரன்
'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து அளித்துள்ள பேட்டியில், "நான் அதிக படங்களில் நடிக்காததற்கு காரணம் உள்ளது. ஒரு படத்தில் ஒப்பந்தமான பிறகு அதன் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனகெடுவேன். இசையமைக்கும் வேலையும் இருக்கும். நட்பே துணை படத்துக்காக விளையாட்டு கற்றேன். வீரன் படத்தில் குதிரை இருப்பதால் குதிரை ஏற பயிற்சி எடுத்தேன். இரண்டு வருடம் கவுரவ டாக்டர் பட்டம் பெற படிக்கச் சென்றேன்.
வீரன்
இதனாலேயே அதிக படங்களில் நடிக்க முடியவில்லை தற்போது ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் நான் நடித்துள்ள வீரன் படம் உடலில் இருந்து மின் சக்தியை வெளிப்படுத்தும் மண் சார்ந்த சூப்பர் ஹீரோ கதை. குலசாமிகள் எல்லாமே சூப்பர் ஹீரோக்களாக இருந்தவர்கள்தான். ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் படத்தில் இருக்கும். வில்லனாக வினய் வருகிறார்'' என்றார்.
வீரன் திரைப்படம் வருகிற ஜுன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.