என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் ஆர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
    • இப்படம் வருகிற ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

    சமீபத்தில் இந்த படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் ஆர்யா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் போஸ்டர்

    இந்நிலையில், 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.
    • மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக கூறினார்கள்.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.


    போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக கூறினார்கள். அத்துடன் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினர். கங்கையில் பதக்கங்களை வீசும் மல்யுத்த வீரர்களை தடுக்க மாட்டோம் என்று காவல்துறை கூறியது. பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கிடைத்த பதக்கங்களை வைத்துக்கொள்ளுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டனர்.

    மேலும், அங்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயித், பதக்கங்களை ஆற்றில் வீச வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுப்பதற்காக இறுதி அவகாசம் கொடுக்கலாம் என்றும் கூறினார். அத்துடன் பதக்கங்களை வாங்கிச்சென்றார். இதனால் கடைசி நேரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மனம் மாறி போராட்டத்தை கைவிட்டனர்.


    ரித்திகா சிங் பதிவு

    இந்நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ரித்திகா சிங் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மல்யுத்த வீரர்களை நடத்தப்படும் விதம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் மனநிலையை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. உலகத்திற்கு முன்பு அவர்களது சுயமரியாதை மறுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிற்காக விளையாடியவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவிற்கு பின்னால் இருப்பதுப்போல நாமமும் அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும். இவர்களின் குரல்களை மூடுவது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும், அதை அனுமதிக்காது ஒன்று சேருங்கள். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று உண்மையில் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    நடிகை ரித்திகா சிங் 'இறுதிச்சுற்று' திரைப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
    • படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது, என்றாலும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனினும் இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.


    இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியான 26 நாட்களில் ரூ.230 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நடிகர் சரத்குமார் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் 50 வயது வரை உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன் என்று கூறினார்.
    • அதனை 2026-ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன் என்று தெரிவித்தது சமூக வலைதளத்தில் பேசு பொருளானது.

    தமிழில் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சூரியன், நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சரத்குமார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். நடிகராக மட்டுமல்லாது சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.

    சமீபத்தில், சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், தற்போது எனக்கு 69 வயதாகிறது; இன்னும் 150 வயது வரை உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன். அதனை 2026-ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன் என்று தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளத்தில் பேசு பொருளானது.


    சரத்குமார்

    இந்நிலையில், 'போர் தொழில்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "ஒரு கூட்டத்தில் பேசும்போது, சுற்றியிருப்பவர்களின் இறுக்க நிலையை தளர்வுபடுத்த வேண்டும் என்பதற்காக காமெடியாக பேசினேன். நான் சொன்னது இவ்வளவு பெரிய செய்தியாகியுள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. யாராவது 150 வயது வரை வாழ முடியுமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

    ஒரு கட்சித் தொண்டர்களிடம், அவரது கட்சித் தலைவரை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை எனக்கும் உள்ளது. இதை மறுக்க முடியாது. எதற்கு பொய் சொல்ல வேண்டும். நான் அதற்கு முயற்சிப்பேன். யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்" என்று கூறினார்

    • இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா".
    • இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து "ரெஜினா" படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த டீசரை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.




    • நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ப்ரொஜெக்ட் கே’.
    • இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ப்ரொஜெக்ட் கே'(Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ப்ரொஜெக்ட் கே

    மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை விஜயசாந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பான் இந்திய படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    கமல்ஹாசன் -பிரபாஸ்

    அதாவது, இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவர் நடிக்கும் காட்சிகள் 20 நாட்களில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்காக கமல்ஹாசன் ரூ.120 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • அசோக் செல்வன் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றதைத்தொடந்து இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பெண்களை குறிவைத்து கொலை செய்யும் மர்ம நபரை போலீஸ் தேடுவது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    'போர் தொழில்' திரைப்படம் வருகிற ஜுன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் வருகிற ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் பிரபாஸ் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.


    இந்நிலையில், 'ஆதிபுருஷ்' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இத்திரைப்படம் ரூ.170 கோடிக்கு வெளியிடும் உரிமத்திற்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் பிபள் மீடியா கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தை கைப்பற்றியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப்போற்று' இந்தி ரீமேக் உருவாகி வருகிறது.
    • இதில், மாறன் கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இதையும் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.


    சூரரைப்போற்று படக்குழு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முடித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகை வனிதா விஜயகுமார் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
    • இவர் திருப்பதி, ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தியுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார், விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அதன்பின்னர் பல படங்களில் நடித்திருந்த வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் அக்காவும் ஆவார்.


    இவர் தற்போது பல தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை செலுத்திய அவர் தொடர்ந்து ஏழுமலையானை மனம் உருவ பிரார்தனை செய்தார். கோவிலுக்கு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


    பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது, தமிழில் பல படங்களில் நடித்து முடித்துள்ளேன். வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக திருப்பதி வந்தேன். தற்போது நல்ல படங்கள் மற்றும் நல்ல கதாபாத்திரங்கள் அமைகின்றன இதுவே ஒரு பெரிய அதிர்ஷ்டமாக பார்க்கிறேன்" என்று கூறினார்.

    • மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

    'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    மாவீரன்

    மாவீரன்

    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.


    மாவீரன்

    மாவீரன்

    இந்நிலையில் மாவீரன் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் விடுப்பட்ட சில காட்சிகளை நேற்று படமாக்கப்பட்டதாகவும் இதில் சிவகார்த்திகேயன் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம் படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அதீத உணர்வுகளை மையப்படுத்தி ஆக்ஷன் எண்டெர்டெயினர் உருவாகி வருவதாகவும் இரண்டாம் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    'மாவீரன்' படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் கார்த்தி தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    ஜப்பான்

    சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், 'ஜப்பான்' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் இன்னும் 25 நாள் படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×