ஆர்யா படத்திற்கு தணிக்கை குழு இந்த சான்றா அளித்தது?

நடிகர் ஆர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.இப்படம் வருகிற ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆர்யா
ஆர்யா
Published on: 

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

சமீபத்தில் இந்த படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் ஆர்யா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் போஸ்டர்

இந்நிலையில், 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com