பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ப்ரொஜெக்ட் கே’.இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Published on

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ப்ரொஜெக்ட் கே'(Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ப்ரொஜெக்ட் கே

மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை விஜயசாந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பான் இந்திய படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் -பிரபாஸ்

அதாவது, இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவர் நடிக்கும் காட்சிகள் 20 நாட்களில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்காக கமல்ஹாசன் ரூ.120 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com