திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.இவர் திருப்பதி, ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தியுள்ளார்.
வனிதா
வனிதா
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார், விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அதன்பின்னர் பல படங்களில் நடித்திருந்த வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் அக்காவும் ஆவார்.

இவர் தற்போது பல தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை செலுத்திய அவர் தொடர்ந்து ஏழுமலையானை மனம் உருவ பிரார்தனை செய்தார். கோவிலுக்கு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது, தமிழில் பல படங்களில் நடித்து முடித்துள்ளேன். வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக திருப்பதி வந்தேன். தற்போது நல்ல படங்கள் மற்றும் நல்ல கதாபாத்திரங்கள் அமைகின்றன இதுவே ஒரு பெரிய அதிர்ஷ்டமாக பார்க்கிறேன்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com