என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    மாமன்னன்

    'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ராசா கண்ணு' மற்றும் 'ஜிகு ஜிகு ரெயில்' பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. மேலும், ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 1) சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


    மாமன்னன்

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ளவுள்ளார். இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
    • இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்கு ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது . மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் டுவிட்டர் கணக்குகளை இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்து டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.


    சீமான் -வைரமுத்து

    சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சீமானுக்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வன்மையாகக் கண்டிக்கிறேன்

    சுட்டுரையை முடக்கிவிட்டால்

    சீமான் தீர்ந்து போவாரா?

    வெயிலுக்கு எதிராகக்

    குடைபிடித்தால்

    காணாமற் போகுமோ கதிரவன்?

    கருத்தைக்

    கருத்தால் எதிர்கொள்ளுங்கள்;

    கை கால்களைக் கட்டாதீர்கள்

    கருத்துரிமை இன்னும்

    உயிரோடு இருப்பதாக

    நம்புகிறவர்களுள்

    நானும் ஒருவன்" என்று பதிவிட்டுள்ளார்.



    • ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நாளை வெளியாகவுள்ள திரைப்படம் ‘வீரன்’.
    • இப்படம் ‘மின்னல் முரளி’ படத்தின் காப்பியா? என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    வீரன் -மின்னல் முரளி

    'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து 'வீரன்' திரைப்படம் மலையாளத்தில் பசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'மின்னல் முரளி' படத்தின் காப்பியா? என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.


    பசில் ஜோசப் -ஏ.ஆர்.கே.சரவணன் -ஹிப்ஹாப் ஆதி

    இந்நிலையில், இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'மின்னல்' முரளி இயக்குனர் பசில் ஜோசப்புக்கு நேரடியாக வீடியோ கால் செய்து அவரிடமே விளக்கம் பெற்று வெளியிடப்பட்டுள்ளது. ஜாலியாக உருவாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    'வீரன்' திரைப்படம் நாளை (ஜூன் 2) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து.
    • இவர் பாடல்கள் மட்டுமல்லாமல் கவிதை, நாவல் என பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

    1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.


    வைரமுத்து

    கவிஞர் வைரமுத்துவின் படைப்பில் 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'. வைரமுத்துவின் இந்த படைப்பு வணிக ரீதியிலும் வாசகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த புத்தகம் 2003-ம் ஆண்டு 'சாகித்ய அகாடமி' விருதை பெற்றது.


    கள்ளிக்காட்டு இதிகாசம் மொழிப்பெயர்ப்பு

    இந்நிலையில், 'கள்ளிக்காட்டு இதிகாசம்' தற்போது பஞ்சாபி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை மன்ஜித் சிங் என்பவர் மொழிப்பெயர்த்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

    அதில், "பஞ்சாபி மொழியில்

    கள்ளிக்காட்டு இதிகாசம்

    உலகில்

    12கோடி மக்களால் பேசப்படும்

    பெருமொழி பஞ்சாபி

    பரீதுதீன் முதல்

    அம்ரிதா ப்ரீத்தம் வரை

    11 நூற்றாண்டுகள்

    செழுமைப்படுத்தப்பட்டது

    பஞ்சாபின் பஞ்ச நதிகளோடு

    வைகை சங்கமிப்பது பெருமை

    மொழிபெயர்ப்பு

    மன்ஜித் சிங்

    நன்றி சாகித்ய அகாடமி" என்று பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    மாமன்னன் 

    'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ராசா கண்ணு' மற்றும் 'ஜிகு ஜிகு ரெயில்' பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. மேலும், ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 1) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


    மாமன்னன் போஸ்டர்

    இதையடுத்து டிரைலர் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் லைவ் கான்சர்ட் (Live Concert) நடைபெறவுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை உறுதி செய்யும் விதமாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. உதயநிதி காரை ஓட்டுவது போன்றும் வடிவேலு பின்னால் இருந்து பயணிப்பது போன்றும் உருவாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'.
    • இப்படத்திற்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார்.

    அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


    மிரியம்மா படக்குழு

    ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யாத்திசை' புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார். பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.


    மிரியம்மா படக்குழு

    திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை ரேகா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக அழுத்தமான அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால், 'மிரியம்மா' படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • நடிகர் அசோக் செல்வன் 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற ஜுன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றதைத்தொடந்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.


    இதையடுத்து 'போர் தொழில்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டின் பிரமோத் செருவய்யா, சுனில் சாய்னானி, E4 எக்ஸ்பிரிமென்ட்ஸின் முகேஷ் மேத்தா, எப்ரியாஸ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த சந்தீப் மெஹ்ரா, விநியோகஸ்தர் சக்திவேலன், இயக்குனர் விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவாளர் கலைச்செல்வம் சிவாஜி, இணை கதாசிரியர் ஆல்பிரட் பிரகாஷ், நடிகர்கள் ஆர். சரத்குமார், அசோக் செல்வன், நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில், நடிகர் சரத்குமார் பேசியதாவது, '' இயக்குனர் விக்னேஷ் என்னை சந்தித்து கதை சொல்லும் போது ஒரு சிறிய அளவிலான ஸ்பீக்கரை டேபிளில் வைத்தார். அதிலிருந்து இசை ஒலிக்க பின்னணி இசையுடன் ஒரு கதையை முழுவதுமாக விவரித்தார். இப்படத்தின் கதையை நேர்த்தியாக விவரிக்க, முழுமையாக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய திட்டமிடல் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குனராக உயர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


    நான் கூட படப்பிடிப்பின் போது வேறு ஏதேனும் கதைகள் இருக்கிறதா? என்று கேட்டபோது, 'இருக்கிறது, முதலில் இதை நான் நிறைவு செய்கிறேன்' என உறுதிப்பட தெரிவித்தார். இதில் அவர் ஒரு முழுமையான கலைஞர் என்பதை உணர முடிந்தது. இதுவரை 150- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாகிவிட்டது. 40-க்கும் மேற்பட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்தாகிவிட்டது. இதில் என்ன வித்தியாசம்? என்றால், மூத்த அதிகாரியாக பணியாற்றுவதுடன் மட்டுமல்லாமல், புதிதாக பயிற்சிக்கு வரும் இளம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியாகவும் நடித்திருக்கிறேன்.

    எலியும், பூனையுமாக இருக்கும் இரண்டு கதாபாத்திரங்கள், எப்படி உச்சகட்ட காட்சியில் ஒன்றிணைந்து குற்றவாளியை கண்டறிகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தை காவல்துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் காண வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் குற்றவாளியின் மூளைக்குள் ஊடுருவி அவன் ஏன்? இந்த குற்றத்தை செய்தான் என்பதை கண்டறிய வேண்டும் என்பதை மிக விரிவாக இப்படத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.


    இந்த திரைப்படம், ஒரு சீரியஸான படமல்ல. அசோக் செல்வன் ஆங்காங்கே சில நடிப்பையும் வசனங்களையும் பேசுவார். அது சிரிப்பை வரவழைக்கும். இன்று மக்கள் திரையரங்கிற்கு வருகை தந்து திரைப்படங்களை பார்த்து ரசிப்பது குறைந்து வருகிறது. ஒரு மாதம் காத்திருந்தால் ஓ டி டி யில் பார்த்து விடலாம் என எண்ணுகிறார்கள். ஆனால் இந்த 'போர் தொழில்' திரைப்படம் திரையரங்கிற்கு சென்று ரசிக்க வேண்டிய திரைப்படம் " என்றார்.

    • கங்குலி 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார்.
    • கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. இவரை தாதா என்றும் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார். இதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்று அர்த்தம் ஆகும். இந்திய கிரிக்கெட் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி.

    இவர் 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார். அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து கவனத்தை ஈர்த்தவர். 2000-ம் ஆண்டில் இந்திய அணிக்குள் சூதாட்ட விவகாரம் தலைதூக்கிய போது கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்குச் சிறந்த கேட்பனாக கங்குலி வலம் வந்தார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.

    இதையடுத்து, கங்குலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் சமீபத்தில் கங்குலியை நேரில் சந்தித்து இதுகுறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் இதில் நாயகனாக ரன்பீர் கபூர் நடிக்க கங்குலி விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், தற்போது இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சில மாதங்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடவுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’.
    • இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகை அனுஷ்கா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.


    தற்போது இவர் இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் புதிய பாடலான 'என்னடா நடக்குது'பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் ராதன் வரிகளில் தனுஷ் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.




    • விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
    • விஜய் ஆண்டனி ஆதரவற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் விருந்தளித்தார்.

    விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    சில தினங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி, திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஆண்டி பிகிலி கிட்டை வழங்கி, அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா, சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிச்சைக்காரர்களை அழைத்து படம் பார்க்க வைத்ததுடன், அவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


    இதைத்தொடர்ந்து, விஜய் ஆண்டனி ஆதரவற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அசைவ உணவுகள் தன் கைகளினாலே பரிமாறி விருந்தளித்தார். இந்நிலையில், அடுத்ததாக இவர் புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளார்.

    அதாவது, புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி தேவைப்படுவோர் (antibikiligsl@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ள ஜி.எஸ்.எல்.மருத்துவமனையுடன் சேர்ந்து இந்த புதிய முயற்சியை விஜய் ஆண்டனி தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகர் சூரி தற்போது 'கொட்டுக்காளி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான 'விடுதலை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் சூரி 'கூழாங்கல்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் 'கொட்டுக்காளி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    சூரி

    இதில், மலையாள நடிகை அன்னா பென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் நடைபெற்று வருகிறது.


    ரசிகர் வீட்டிற்கு சென்ற சூரி

    இந்நிலையில், நடிகர் சூரி தனது ரசிகர் ஒருவரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று அவர் தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். பின்னர் அந்த பெண்மணியிடம் பேசிய சூரி, "என் அன்பு தம்பிகள். என்னை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். என் பெயரை சொல்லி பல உதவிகள் செய்கிறார்கள். என்னால் எதுவும் இல்லை. என் ரசிகரின் அம்மாவை என் அம்மாவாக பார்க்க வந்திருக்கிறேன் இதுவே எனக்கு பெருமை" என்று பேசினார்.

    • ஹாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் அல் பசினோ.
    • இவர் நடித்த ‘தி காட் பாதர்’திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஹாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் அல் பசினோ (83). இவர் நடிப்பில் வெளியான 'தி காட் பாதர்'திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கான இடத்தை பெற்றுக் கொடுத்தது. 50-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் அல் பசினோ அடுத்ததாக ஜானி டெப் இயக்கப்போகும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் அல் பசினோ 29 வயதாகும் நூர் அல்பல்லா என்பவரை காதலித்து வருகிறார். தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் நூர் அல்பல்லா விரைவில் அல் பசினோவின் நான்காவது குழந்தைக்கு தந்தையாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    அல் பசினோ -நூர் அல்பல்லா

    நடிகர் அல் பசினோ கடந்த ஆண்டு முதல் நூர் அல்பல்லாவை காதலித்து வருகிறார். இருவரும் ஜோடியாக சாப்பிட சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி இருவரும் காதலித்து வருவதாக ரசிகர்கள் தகவலை பரப்பி வந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில் தான் அல் பசினோ, நூர் அல்பல்லா இடையே காதல் ஏற்பட்டதாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் அல் பசினோ மற்றும் முன்னாள் காதலியான நடிப்பு பயிற்சியாளர் ஜான் டாரண்ட் என்பவருக்கும் ஜூலி மேரி (33) என்கிற மகள் இருக்கிறார். மேலும் இன்னொரு முன்னாள் காதலியான நடிகை பெவர்லி டி ஆஞ்சலோ மூலம் ஆண்டன் ஜேம்ஸ் , ஒலிவியா ரோஸ் (22) என்கிற இரட்டை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×