என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூர் அல்பல்லா"

    • ஹாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் அல் பசினோ.
    • இவர் நடித்த ‘தி காட் பாதர்’திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஹாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் அல் பசினோ (83). இவர் நடிப்பில் வெளியான 'தி காட் பாதர்'திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கான இடத்தை பெற்றுக் கொடுத்தது. 50-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் அல் பசினோ அடுத்ததாக ஜானி டெப் இயக்கப்போகும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் அல் பசினோ 29 வயதாகும் நூர் அல்பல்லா என்பவரை காதலித்து வருகிறார். தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் நூர் அல்பல்லா விரைவில் அல் பசினோவின் நான்காவது குழந்தைக்கு தந்தையாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    அல் பசினோ -நூர் அல்பல்லா

    நடிகர் அல் பசினோ கடந்த ஆண்டு முதல் நூர் அல்பல்லாவை காதலித்து வருகிறார். இருவரும் ஜோடியாக சாப்பிட சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி இருவரும் காதலித்து வருவதாக ரசிகர்கள் தகவலை பரப்பி வந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில் தான் அல் பசினோ, நூர் அல்பல்லா இடையே காதல் ஏற்பட்டதாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் அல் பசினோ மற்றும் முன்னாள் காதலியான நடிப்பு பயிற்சியாளர் ஜான் டாரண்ட் என்பவருக்கும் ஜூலி மேரி (33) என்கிற மகள் இருக்கிறார். மேலும் இன்னொரு முன்னாள் காதலியான நடிகை பெவர்லி டி ஆஞ்சலோ மூலம் ஆண்டன் ஜேம்ஸ் , ஒலிவியா ரோஸ் (22) என்கிற இரட்டை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×