20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியான ரேகா

இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'.இப்படத்திற்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார்.
ரேகா
ரேகா
Published on

அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மிரியம்மா படக்குழு

ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யாத்திசை' புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார். பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.

மிரியம்மா படக்குழு

திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை ரேகா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக அழுத்தமான அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால், 'மிரியம்மா' படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com