search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பஞ்சாபி மொழியில் கள்ளிக்காட்டு இதிகாசம்.. வைரமுத்து நெகிழ்ச்சி
    X

    வைரமுத்து

    பஞ்சாபி மொழியில் கள்ளிக்காட்டு இதிகாசம்.. வைரமுத்து நெகிழ்ச்சி

    • நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து.
    • இவர் பாடல்கள் மட்டுமல்லாமல் கவிதை, நாவல் என பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

    1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.


    வைரமுத்து

    கவிஞர் வைரமுத்துவின் படைப்பில் 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'. வைரமுத்துவின் இந்த படைப்பு வணிக ரீதியிலும் வாசகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த புத்தகம் 2003-ம் ஆண்டு 'சாகித்ய அகாடமி' விருதை பெற்றது.


    கள்ளிக்காட்டு இதிகாசம் மொழிப்பெயர்ப்பு

    இந்நிலையில், 'கள்ளிக்காட்டு இதிகாசம்' தற்போது பஞ்சாபி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை மன்ஜித் சிங் என்பவர் மொழிப்பெயர்த்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

    அதில், "பஞ்சாபி மொழியில்

    கள்ளிக்காட்டு இதிகாசம்

    உலகில்

    12கோடி மக்களால் பேசப்படும்

    பெருமொழி பஞ்சாபி

    பரீதுதீன் முதல்

    அம்ரிதா ப்ரீத்தம் வரை

    11 நூற்றாண்டுகள்

    செழுமைப்படுத்தப்பட்டது

    பஞ்சாபின் பஞ்ச நதிகளோடு

    வைகை சங்கமிப்பது பெருமை

    மொழிபெயர்ப்பு

    மன்ஜித் சிங்

    நன்றி சாகித்ய அகாடமி" என்று பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×