என் மலர்
நீங்கள் தேடியது "ayushmann khurrana"
- கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- 55% அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 60 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
திரைத்துறையின் உச்சபட்ச அமைப்பாக ஆஸ்கர் அகாடமிக்கு புதிய உறுப்பினர்களாக இணைய நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 26 அன்று அறிவிக்கப்பட்ட இந்த புதிய பட்டியலில், கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா மட்டுமின்றி, இந்தியாவைச் சேர்ந்த காஸ்டிங் டைரக்டர் கரண் மல்லி, ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ், காஸ்டியூம் டிசைனர் மாக்சிமா பாசு, ஆவணப்படத் தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் பாயல் கபாடியா ஆகியோரும் அடங்குவர்.
டேவ் பாட்டிஸ்டா, அரியானா கிராண்டே, செபாஸ்டியன் ஸ்டான், ஜேசன் மோமோவா, ஆப்ரி பிளாசா, கில்லியன் ஆண்டர்சன், ஜெர்மி ஸ்ட்ராங் போன்ற சர்வதேச நட்சத்திரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் உறுப்பினராக சம்மதித்தாள், அகாடமியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆகவும், வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆகவும் உயரும். கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

அகாடமியில் உறுப்பினராவதற்கு விண்ணப்பங்கள் இல்லை. மாறாக, வேட்பாளர்கள் அகாடமியின் இரண்டு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
2025 ஆம் ஆண்டிற்கான இந்த புதிய உறுப்பினர்களில் 41% பெண்கள், 45% பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் 55% அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 60 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
2026 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற உள்ளது. பரிந்துரைக்கான வாக்களிப்பு ஜனவரி 12 முதல் ஜனவரி 16 வரை நடக்கும். ஜனவரி 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வ பரிந்துரைகள் அறிவிக்கப்படும். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் கொனான் ஓ'பிரையன் ஆஸ்கர் விருதை தொகுத்து வழங்கவுள்ளார்.
- கங்குலி 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார்.
- கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. இவரை தாதா என்றும் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார். இதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்று அர்த்தம் ஆகும். இந்திய கிரிக்கெட் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி.
இவர் 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார். அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து கவனத்தை ஈர்த்தவர். 2000-ம் ஆண்டில் இந்திய அணிக்குள் சூதாட்ட விவகாரம் தலைதூக்கிய போது கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்குச் சிறந்த கேட்பனாக கங்குலி வலம் வந்தார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.
இதையடுத்து, கங்குலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் சமீபத்தில் கங்குலியை நேரில் சந்தித்து இதுகுறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் இதில் நாயகனாக ரன்பீர் கபூர் நடிக்க கங்குலி விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சில மாதங்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடவுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






