எதிர்ப்புகளை கடந்து வசூலை குவிக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம்

இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தி கேரளா ஸ்டோரி
தி கேரளா ஸ்டோரி
Published on

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது, என்றாலும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனினும் இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியான 26 நாட்களில் ரூ.230 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com