துல்கர் சல்மானுடன் அற்புதமான படப்பிடிப்பு.. ஸ்டண்ட் மாஸ்டர் நெகிழ்ச்சி

நடிகர் துல்கர் சல்மான் தற்போது நடிக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.இப்படத்தின் ஸ்டண்ட் பயிற்சியாளர் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
துல்கர் சல்மானுடன் அற்புதமான படப்பிடிப்பு.. ஸ்டண்ட் மாஸ்டர் நெகிழ்ச்சி
Published on

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.

'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 95 நாட்கள் நடைபெற்று பின்னர் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்யு பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. அதில், 2 வாரங்கள் தூக்கமில்லாமல் நடைபெற்ற படப்பிடிப்பு. இந்த வருடம் முழுவதும் சர்ப்ரைஸ். துல்கர் சல்மானுடன் அற்புதமான படப்பிடிப்பு என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com