ஆல மரம் போல நின்று காக்கும் வீரன்.. கவனம் ஈர்க்கும் ஹிப்ஹாப் ஆதி பாடல்

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'.இப்படம் வருகிற ஜுன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வீரன்
வீரன்
Published on

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

சமீபத்தில் 'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து, இப்படத்தின் மூன்றாவது பாடலான வீரன் திருவிழா பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

வீரன் திரைப்படம் வருகிற ஜுன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com