ஐ.பி.எல். போட்டிக்காக பிரார்த்தனை செய்யும் விக்னேஷ் சிவன்.. அவரே பகிர்ந்த பதிவு

ஐ.பி.எல் இறுதிப்போட்டியை காண திரைப்பிரபலங்கள் பலர் சென்றிருந்தனர்.கனமழை காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறம் என அறிவிக்கப்பட்டது.
விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்
Published on

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் மே 21-ந் தேதியுடன் முடிந்தது. இதன் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. பிளே ஆப்' சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவில் குஜராத் - சென்னை அணிகள் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.

நரேந்திரமோடி மைதானம்

ஐபிஎல் இறுதிப்போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இறுதிப்போட்டியை காண வந்த திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதில் ரசிகர்கள் பலர் அகமதாபாத் ரெயில் நிலையத்தில் உறங்கினர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நரேந்திரமோடி மைதானத்தில் விக்னேஷ் சிவன்

இந்நிலையில் இன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டியை இயக்குனர் விக்னேஷ் சிவன் காணவுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "இன்று முழு போட்டி நடக்க பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். போட்டியின் போது மழை பெய்து, அது நின்றவுடன் ஓவர்கள் குறைவாக வைத்து விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com